என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல நடிகை புகார் தெரிவித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட தொழிலதிபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வங்காளதேசத்தை சேர்ந்த புகழ் பெற்ற இளம் நடிகை போரி மோனி. 28 வயதாகும் இவர் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். பிரபல போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த ஆண்டு வெளியிட்ட ஆசியாவின் சிறந்த 100 திரை நட்சத்திரங்களின் பட்டியலில் போரி மோனி இடம் பிடித்தார்.

    இந்நிலையில், வங்காளதேசத்தின் மிகப்பெரும் தொழில் அதிபர்களில் ஒருவரான நசீர் முகமது தன்னை கற்பழித்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் நடிகை போரி மோனி பேஸ்புக் மூலம் பரபரப்பு புகார் தெரிவித்தார். 

    போரி மோனி
    போரி மோனி

    மேலும் அவர் இது தொடர்பாக தான் சட்ட அமலாக்க துறையை அணுகியபோது தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும், எனவே தனக்கு நீதி கிடைக்க உதவி செய்ய வேண்டும் எனவும் பேஸ்புக் பதிவு மூலம் பிரதமர் ஷேக் ஹசீனாவிடம் கோரிக்கை விடுத்தார்.

    நடிகை போரி மோனியின் இந்த பேஸ்புக் பதிவு வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து வங்காளதேச போலீசார் தொழிலதிபர் நசீர் முகமதை கைது செய்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியாமணி, சினிமா துறையில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
    பருத்திவீரன் படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்று முன்னணி நடிகையாக உயர்ந்த பிரியாமணி, திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். அவர் சினிமாவில் தான் சந்தித்த இன்னல்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். 

    அவர் அளித்த பேட்டி வருமாறு: “சினிமா துறை போட்டி நிறைந்தது. நான் சினிமாவுக்கு வந்த புதிதில் கடினமாக உழைத்து மெதுவாக முன்னேறினேன். நேர்மையாக உழைத்தால் என்றாவது வெற்றி வரும். திருமணம் எனக்கு நடிக்க தடையாக இல்லை. கணவர் உதவியாக இருப்பதால் தொடர்ந்து நடிக்க முடிகிறது. 

    பிரியாமணி
    பிரியாமணி

    திருமணத்துக்கு பிறகுதான் அதிக வாய்ப்புகள் வருகிறது. திருமணமான காஜல் அகர்வால், சமந்தா போன்றோர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சீனியர் நடிகையான நயன்தாராவும் நல்ல கதைகளில் நடிக்கிறார். திருமணம் ஆனவர் ஆகாதவர் என்ற வித்தியாசம் சினிமாவில் இல்லை. 

    திறமை இருந்தால் ஜெயிக்கலாம். எனக்கு வயதாகிவிட்டது என்றும் குண்டாக இருக்கிறேன், கருப்பாக இருக்கிறேன் என்றும் விமர்சிக்கின்றனர். அப்படி பேசுவது மனதுக்கு கஷ்டமாக உள்ளது. யாரையும் தரம் தாழ்த்தி பேசாதீர்கள். கருப்பும் அழகுதான்”. இவ்வாறு பிரியாமணி கூறினார்.
    நடிகைகள் திரிஷா, ஹன்சிகா, சுருதிஹாசன், அனுஷ்கா ஆகியோர் வெப் தொடர்களில் நடிக்க கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
    கொரோனா சினிமா துறையை முடக்கி உள்ளதால், ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு மவுசு கூடி உள்ளது. இந்த தொடர்கள் திரைப்படங்களைப்போல் காதல், ஆக்‌ஷன், மர்மம், பிரம்மாண்டம் என்று ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன.

    இதில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. சமீபத்தில் நடிகை சமந்தா நடிப்பில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த தொடரில் நடிக்க அவர் ரூ.4 கோடி வரை சம்பளம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

    சமந்தா
    சமந்தா

    அடுத்து இன்னொரு வெப் தொடரில் நடிக்க சமந்தாவுக்கு ரூ.8 கோடி சம்பளம் கொடுக்க பேசி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. நடிகை சமந்தா, சினிமாவில் ஒரு படத்தில் நடிக்க அதிகபட்சமாக ரூ.1 கோடியே 50 லட்சம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    அதிக சம்பளம் காரணமாக நடிகைகள் பார்வை வெப் தொடர்கள் பக்கம் திரும்பி உள்ளது. ஏற்கனவே மீனா, காஜல் அகர்வால், நித்யா மேனன், ரம்யா கிருஷ்ணன், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் வெப் தொடர்களில் நடித்துள்ளனர். இந்த நிலையில் முன்னணி கதாநாயகிகளான திரிஷா, ஹன்சிகா, சுருதிஹாசன், அனுஷ்கா ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்க கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது.
    தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர்.
    தன்னுடன் சேர்ந்து நடிக்கும் பட வாய்ப்பை விஜயகுமாருக்கு வழங்கினார் எம்.ஜி.ஆர்.

    "இளைய தலைமுறை'' படப்பிடிப்பின்போது 9 அடி உயரத்தில் இருந்து தவறி விழுந்த விஜயகுமாருக்கு தோள்பட்டை பிசகி, சில நாட்கள் ஓய்வில் இருந்தார். புதிய பட வாய்ப்பு கிடைத்து சத்யா ஸ்டூடியோ சென்றபோது, எதிர்பாராதவிதமாக எதிரில் எம்.ஜி.ஆர். வந்து கொண்டிருந்தார்.

    தான் நேசிக்கும் எம்.ஜி.ஆர். எதிரில் வந்ததும் ஒரு கணம் செய்வதறியாது திகைத்து விட்டார், விஜயகுமார். "வணங்கிச் செல்வதா? வழி விடுவதா?'' என்று அவர் முடிவெடுத்து செயல்படுவதற்குள் எம்.ஜி.ஆரே அவரை நெருங்கி கைகளைப் பற்றிக்கொண்டு நலம் விசாரித்தார்.

    இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-

    அண்ணன் எம்.ஜி.ஆர். நான் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் என் கைகளை பற்றிக்கொண்டு, "கை எப்படி இருக்கிறது விஜயகுமார்?'' என்று கேட்டதும் ஒரு கணம் திகைத்துப் போனேன். வார்த்தைகள் உடனடியாக வரவில்லை. இருந்தாலும் பதட்டத்தைத் தவிர்த்து, "பரவாயில்லை. வலி குறைந்து விட்டது'' என்று தெரிவித்தேன்.

    அப்போதும் அவர் போய்விடவில்லை. "சினிமாவில் இந்த மாதிரி ரிஸ்க்கெல்லாம் எடுக்கக் கூடாது. எந்த வகை அதிரடி காட்சி என்றாலும் அதை ஒரிஜினல் மாதிரி வெளிப்படுத்த தெரிந்து கொள்ள வேண்டும்'' என்றார்.

    அதன் பிறகு எந்த மாதிரி சிகிச்சைகள் தரப்பட்டன என்பது பற்றி கேட்டார். சொன்னேன். `பிஸியோதெரபி' சிகிச்சை மூலம், கைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவது பற்றியும் விவரித்தேன்.

    பொறுமையாக கேட்டவர், "எனக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கிறது. இதற்கு நாட்டு மருந்து நல்ல பலன் தரும். மைலாப்பூர் கச்சேரி ரோட்டில் நாட்டு மருந்துக்கடை இருக்கிறது. அங்கே `கரியபவளம்' என்ற நாட்டு மருந்து கேட்டால் தருவார்கள். அதை உரசி, சதைப் பிடிப்பு இருக்கிற இடத்தில் போட்டால் தசைப்பிடிப்பில் ஏற்பட்டு இருக்கும் இறுக்கம் சரியாகி விடும். இன்றைக்கே வாங்கி போட்டுப் பாருங்கள்'' என்று சொல்லிவிட்டு, விடைபெற்றுச் சென்றார்.

    அவருக்கும் அன்றைய தினம் சத்யா ஸ்டூடியோவில்தான் படப்பிடிப்பு இருந்தது. அதனால் மதியம் `லஞ்ச் பிரேக்'கின்போது எனக்கு அழைப்பு விடுத்தார். நான் கொஞ்சம் தயக்கத்துடன் போய் சந்தித்தபோது, "என்னுடன் சாப்பிடுங்கள்'' என்று கூறினார். அந்த அன்பை தவிர்க்க முடியுமா? பாக்கியமாக எண்ணிக்கொண்டேன்.

    ஒருவரை பிடித்துவிட்டால், அவர் விஷயத்தில் தனி அக்கறை செலுத்துவது எம்.ஜி.ஆருக்கு உரிய பண்பாடு என்று பிறர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை என் விஷயத்திலும் பரிபூரணமாய் உணர்ந்தேன்.

    டைரக்டர் கே.சங்கர் இயக்கத்தில் வி.டி.எல்.எஸ். என்ற படக்கம்பெனி "இன்று போல் என்றும் வாழ்க'' என்ற படத்தை தயாரித்தார்கள். எம்.ஜி.ஆர்.தான் கதாநாயகன். படம் தொடங்க இருந்த நேரத்தில், திடீரென ஒருநாள் அந்த கம்பெனியின் தயாரிப்பு நிர்வாகி என்னை சந்தித்தார். "இந்தப்படத்தில் நீங்கள் இருக்கிறீர்கள். `சின்னவர்' உங்களை அவரது தங்கை கணவர் கேரக்டரில் போடச் சொன்னார்'' என்றார்.

    எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. `சின்னவர்' என்றால் யார் என்று தெரியாததுதான் இதற்குக் காரணம். அப்புறம் தான் எம்.ஜி.ஆரை எல்லாரும் `சின்னவர்' என்றுதான் சொல்வார்கள் என்று சொன்னார்கள்.

    (எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்ரபாணி `பெரியவர்' என்று அழைக்கப்பட்டார்)

    அப்போது என் சம்பள விஷயம் பற்றி எதுவும் அந்த தயாரிப்பு நிர்வாகி பேசவில்லை. முதல் படத்தில் நான் வாங்கிய சம்பளம் ஆயிரம் ரூபாய்தான். அதுவும் முதலில் 200. பிறகு 300. பிறகு ரிலீசுக்கு முந்தின நாள் 500 என்று கொடுத்தார்கள்.

    பிறகு தொடர்ந்து படங்கள் வரவர, சம்பளமும் 5 ஆயிரம்,

    7 ஆயிரம் என்று கூடியது. தொடர்ந்த வாய்ப்புகளில் 10 ஆயிரத் தில் நின்று கொண்டிருந்தது.

    சிவாஜி  சாருடன் நடித்த பிறகு 12 ஆயிரம் வாங்கினேன்.

    எம்.ஜி.ஆர். பட தயாரிப்பு நிர்வாகி என்னிடம், "என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டார்.

    பதிலுக்கு நான், "சம்பளம் இருக்கட்டும் சார்! எந்த தேதிகள் வேண்டும் என்று சொல்லுங்க. கால்ஷீட் போட்டுக்கலாம்'' என்றேன்.

    நான் என் சம்பள விஷயம் சொல்லத் தயங்குகிறேன் என்பதை புரிந்து கொண்ட அந்த நிர்வாகி, "சரி! இப்ப பத்தாயிரம் ரூபாய் அட்வான்சாக வைத்துக் கொள்ளுங்கள். மற்றதை அப்புறம் பேசிக்கொள்ளலாம்'' என்று பணத்தை கொடுத்தார்.

    எனக்கு அதிர்ச்சி. அட்வான்சே பத்தாயிரமா? அதுவரை நான் வாங்கிய மொத்த சம்பளமே கிட்டத்தட்ட இதே அளவில்தான்!

    எனக்கு 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து என் சம்பளத்தை அதிகமாக்கியவரே அண்ணன் எம்.ஜி.ஆர்.தான்.

    "இன்று போல் என்றும் வாழ்க'' படப்பிடிப்பில் அவரை சந்தித்தேன். என்னைப் பார்த்ததும் அருகில் அழைத்தவர், பக்கத்தில் உட்கார வைத்துக்கொண்டார். படப்பிடிப்பில் மற்ற எல்லாருமே 50 அடி தூரத்தில்தான் அவருக்கு முன்பாக நின்று கொண்டிருந்தார்கள்.

    அப்போது அவர் அ.தி.மு.க.வை தொடங்கியிருந்த நேரம். காங்கிரஸ் ஆதரவுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திக்கவும் தயாராக இருந்தார். அவர் "எம்.பி.'' தேர்தலில் போட்டியிட தேர்ந்தெடுத்த 40 பேர், படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்திக்க வந்திருந்தார்கள். அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

    அன்று மாலை `பாம்குரோவ்' ஓட்டலில் கட்சி பொதுக்குழுவை கூட்டியிருந்தார். "ஒருவேளை படப்பிடிப்பு முடிய நேரமாகி விட்டால் என்னை எதிர்பார்க்காதீர்கள். எனக்கு பதிலாக இந்த தம்பியை அனுப்பி வைக்கிறேன்'' என்று என்னை அவர்களிடம் சுட்டிக்காட்டிச் சொன்னார். அந்த அளவுக்கு அவர் என் மீது நம்பிக்கை வைத்திருந்தார் என்பதற்காக இதைச்      சொன்னேன்.''

    இவ்வாறு கூறினார், விஜயகுமார்.
    ஊரடங்கில் சாலையோர மக்கள், கால்நடைகளுக்கு உதவி வரும் சுபிக்‌ஷாவை குட்டி அஞ்சலி என்று நெட்டிசன்கள் பலரும் அழைத்து வருகிறார்கள்.
    தமிழில் கடுகு, கோலிசோடா 2, வேட்டை நாய் போன்ற படங்களில் நடித்தவர் சுபிக்‌ஷா. இவர் கொரோனாவால், உணவின்றி கஷ்டப்படும் சாலையோர மக்கள், கால்நடைகள் ஆகியவற்றிற்கு உதவி வருகிறார்.

    சபிக்ஷா

    இந்நிலையில் குட்டி டவுசருடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார் சுபிக்‌ஷா. இதைப்பார்த்த நெட்டிசன்கள், அஞ்சலி போல் இருப்பதாகவும், குட்டி அஞ்சலி என்றும் அழைத்து வருகிறார்கள்.
    புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்காக நடிகர் விஷால், ஐதராபாத்தில் சண்டை போட இருக்கிறார்.
    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவருடைய 31வது படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும்படத்தை இயக்கி பல விருதுகளை பெற்றார்.

    விஷாலின் பதிவு
    விஷாலின் பதிவு

    இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் திரைப்பட படப்பிடிப்பிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அங்கு விஷால் 31 படத்தின் படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். அங்கு சண்டைக்காட்சிகள் உள்பட படத்தின் அனைத்து காட்சிகளை ஒரே கட்டத்தில் முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    தமிழ் சினிமாவில் நூற்றுக்கணக்கான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் செந்தில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
    தமிழ் சினிமாவின் சிறந்த நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் செந்தில். இவர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வரும் செந்தில் அரசியலிலும் தீவிரமாக உள்ளார்.

    இந்நிலையில் நடிகர் செந்தில், தனது பெயரில் டுவிட்டரில் உலா வரும் போலி கணக்கு குறித்து கமிஷனர் அலுவலகத்தில் வக்கீலுடன் வந்து புகார் அளித்துள்ளார்.

    செந்தில்

    இதனால் தனது நிம்மதியே போய்விட்டதாக கூறியுள்ளார். மேலும் தன்னுடைய பெயரில் போலி கணக்கு தொடங்கிய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது பெயரில் உள்ள போலி டுவிட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்றும் செந்தில் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    தனக்கு கணக்கே வராது... இதில் எங்கிருந்து டுவிட்டர் கணக்கு என்றும் செய்தியாளர்களிடம் கூறி இருக்கிறார்.
    காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி படங்களில் நடித்த இளம் நடிகை, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

    வெண்பா
    நடிகை வெண்பா

    அந்த வகையில், காதல் கசக்குதய்யா, பள்ளி பருவத்திலே, மாயநதி படங்களில் நடித்த நடிகை வெண்பா, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். மேலும், அனைவரும் வெகு விரைவில் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்றும், நம்மை சுற்றி இருக்கும் மக்களுக்கு அதுவே பாதுகாப்பு. கட்டாயம் முக கவசம் அணியுங்கள் என்று சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

    தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் இசையமைப்பாளராக இருக்கும் பிரேம்ஜி அமரன், வாயில் சிகரெட் கையில் சரக்கு பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
    ஜஸ்வந்த் சூப்பர் சின்மாஸ் சார்பில் கே.பிச்சாண்டி தயாரித்துள்ள படம் ‘தமிழ் ராக்கர்ஸ்’. பரணி ஜெயபால் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்ததோடு முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். 

    அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயராகி வரும் நிலையில், இப்படத்தின் பிரேம்ஜி அமரன் வாயில் சிகரெட், கையில் சரக்கு பாட்டிலுடன் இருக்கும் போஸ்டர் ஒன்று வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

    பிரேம்ஜி

    இப்படத்தில் பிரேம்ஜியுடன் எஸ்.பி.பி.சரண், விடிவி கணேஷ், இயக்குநர் சரவண சுப்பையா, நாஞ்சில் சம்பத், தேவதர்ஷினி, மீனாக்‌ஷி திக்‌ஷித் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    தமிழ் சினிமாவில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக பிரபல இயக்குனர் ஒருவர் புகைப்படம் வெளியிட்டு உள்ளார்.
    தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதையடுத்து தொடர்ந்து சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் 5 படங்களில் நடிக்க இருக்கிறார்.

    சில தினங்களுக்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தனது மகளுடன் தான் உருவாக்கி வரும் தோட்டத்தின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

    ரவிகுமார்
    இயக்குனர் ரவிகுமார் பதிவு

    இதே போல், சிவகார்த்திகேயன் வைத்து அயலான் படத்தை இயக்கியிருக்கும் இயக்குனர் ரவிக்குமார், எங்கள் வீட்டு மாடி தோட்டத்தில் என்று பதிவு செய்து புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் பலருடைய கவனத்தை ஈர்த்திருக்கிறது.
    தமிழில் முன்னணி நடிகர்களான கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா என பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை, தனது மகளுக்கு நடனத்தை கற்றுக் கொடுத்து வருகிறார்.
    ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் கேரள நாயகி கதாபாத்திரமாக அறிமுகமாகிய அசின் அந்த படத்தில் ஜெயம் ரவியிடம் பேசும் ‘அய்யடா..’ எனும் வசனம் அப்போது பிரபலமாகியது. தொடர்ந்து கஜினி, சிவகாசி, போக்கிரி, தசாவதாரம் என பெரும் ஹீரோக்களின் வெற்றிப்படங்களில் அசின் நடித்தார்.

    இதனைத் தொடர்ந்து அப்படியே பாலிவுட்டில் தடம் பதித்த அசின், பின்னர் மைக்ரோமேக்ஸ் துணை நிறுவனரான ராகுல் சர்மாவை காதலித்து கடந்த 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் திருமணம் செய்தார். இந்த தம்பதியருக்கு தற்போது மூன்று வயதில் அரின் ரயின் என்கிற பெண் குழந்தை இருக்கிறார். 

    மகளுடன் அசின்
    அசினுடன் மகள்

    இந்நிலையில் நடிகை அசின் தனது மகளுக்கு கதக் நடனம் கற்றுக் கொடுத்து வருகிறார். இந்த புகைப்படத்தை தமது சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அசின், தமது 3 வயது குழந்தையின் வார இறுதி கதக் பயிற்சி என குறிப்பிட்டுள்ளார்.
    நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமான யாஷிகா ஆனந்தை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.
    கவலை வேண்டாம் படம் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இவர் கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். 

    தற்போது கடமையை செய், ராஜபீமா, பாம்பாட்டம், சல்பர் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா அவ்வப்போது வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.

    யாஷிகா ஆனந்த்,

    இந்நிலையில் கிழிந்த ஜீன்ஸ் அணிந்து இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த உடையுடன் அவர் கொடுத்துள்ள சில வித்தியாசமான புகைப்படங்கள் ரசிகர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த புகைப்படத்தையும், வீடியோவையும் நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வருகிறார்கள்.


    ×