என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    இசையமைப்பாளர், நடிகர் ஜிவி.பிரகாஷின் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து இருக்கிறார்கள்.
    தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் ஜிவி.பிரகாஷ். இவர் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து இருந்தார்கள்.

    ஜி.வி.பிரகாஷ் ரசிகர் மன்றத்தின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் கொரானா கட்டுப்பாடுகளை பின்பற்றி ஏழை எளிய மக்களுக்கும், முதியோர் இல்லங்களுக்கும், ஆதரவற்ற இல்லங்களுக்கும் உணவுகள், உடைகள் வழங்கினர்.

    ஜிவி பிரகாஷ்
    ஆதரவற்ற முதியோர்கள்

    மேலும் பொது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான அரிசி, மளிகை சாமான்கள், பழங்கள், காய்கறிகள் வழங்கியும் மரக் கன்றுகளை கொடுத்தும், அதனை நட்டும் ஜி.வி.பிரகாஷ்குமார் பிறந்த நாளை ரசிகர் மன்றத்தினர் சிறப்பாக கொண்டாடினர்.
    புகழ்மணி இயக்கத்தில் யோகி பாபு, ராம் சுந்தர், பிரியங்கா நடிப்பில் உருவாகும் ’காவி ஆவி நடுவுல தேவி’ படத்தின் முன்னோட்டம்.
    பதினொரு கெட்டப்புகளில் யோகி பாபு நடிக்கும் வி.சி.குகநாதன் கதையில் புகழ்மணி இயக்கத்தில் "காவி ஆவி நடுவுல தேவி" படம் உருவாகிறது. யோகி பாபு, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து கலக்கும் படம் தான் "காவி ஆவி நடுவுல தேவி". மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது. 

    யோகிபாபு
    யோகிபாபு

    இப்படத்தின் மூலம் ராம் சுந்தர் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். "காதலை சேர்த்து வைக்கும் கேரக்டரில் வரும் யோகிபாபு அதற்காக பதினொரு விதமான கெட்டப்புகளில் நடித்துள்ளார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியை கவனிக்கிறார். இப்படத்திற்கு கணேசன் ஒளிப்பதிவு செய்ய உள்ளார். படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும், பாடல்களை டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் எழுத நடன பயிற்சியை சிவசங்கரும், சிவராக் சங்கரும் கவனித்துள்ளனர். 
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிரபாஸ், ராதே ஷ்யாம், ஆதிபுருஷ், சலார் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
    கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

    பிரபாஸ்

    கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாம். மேலும் இப்படத்தில் ஒரே மாதத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். ஆகஸ்ட் மாதம் முதல் ஆதிபுருஷ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு படங்களும் பான்-இந்தியா படங்களாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.
    இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கிய பிரபல நடிகர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    கன்னட திரையுலகை சேர்ந்தவர் சஞ்ஜாரி விஜய். சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2015-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். பெங்களூருவில் வசித்து வந்த இவர், கடந்த சில தினங்களுக்கு முன்னர் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கினார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் சஞ்ஜாரி விஜய், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தார்.

    சஞ்ஜாரி விஜய்
    சஞ்ஜாரி விஜய்

    இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 38. நடிகர் சஞ்ஜாரி விஜய், மூளைச் சாவு அடைந்ததை அடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உள்ளதாக உறவினர்கள் அறிவித்துள்ளனர். அவரின் திடீர் மறைவு கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிச்சா சுதீப் உள்ளிட்ட பிரபலங்கள் சஞ்ஜாரி விஜய்யின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    முதல்வர் மு.க.ஸ்டாலினின் அதிரடி நடவடிக்கைக்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
    முக்கிய பிரமுகர்கள் செல்லும் போது, சாலைகளில் 50 அடிக்கு ஒருவர் வீதம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். அதுபோன்ற பாதுகாப்பு பணியில் பெண் போலீசாரும் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். அவ்வாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெண் போலீசார் சில சமயம் பலமணி நேரம் சாலைகளில் கால்கடுக்க நிற்கவேண்டியது வரும். 

    அது போன்ற சமயங்களில் இயற்கை உபாதையால் பெண் போலீசார் அவதிப்படும் நிலை இருந்தது. இதை கருத்தில் கொண்டு இனி பெண் போலீசாரை சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதையடுத்து சாலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட பெண் போலீசாருக்கு விலக்கு அளித்து டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

    ராகவா லாரன்ஸ்
    ராகவா லாரன்ஸ்

    முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “சாலையில் பாதுகாப்பு பணிகளில் இருந்து பெண் போலீசாருக்கு விலக்கு அளிக்கப்பட்ட செய்தியை அறிந்தேன். 

    பலமுறை நான் என் தாயுடன் பயணம் செய்யும்போது இவ்வாறு பாதுகாப்பு பணியில் இருக்கும் பெண்கள் இயற்கை உபாதைக்காக, அவசரத் தேவைகளுக்காகவும் என்ன செய்வார்கள் என்பது பற்றி என் அம்மா என்னிடம் சொல்லி வருத்தப்பட்டு இருக்கிறார், நானும் வருந்தி இருக்கிறேன். அந்தவகையில் இந்த ஆணையை கண்டு மன நிம்மதி அடைகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.


    தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு, தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்.
    இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

    அந்த வகையில், தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகிபாபு, தற்போது கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறும், பாதுகாப்பாக இருக்குமாறும் அறிவுறுத்தி உள்ளார். 

    நடிகர் யோகிபாபு கைவசம் விஜய்யின் தளபதி 65, அஜித்துடன் வலிமை, சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மற்றும் அயலான், டக்கர், பேய் மாமா, அரண்மனை 3 போன்ற படங்கள் உள்ளன. 
    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
    தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்‌ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்‌ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.

    சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்‌ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

    சாக்‌ஷி அகர்வால்
    சாக்‌ஷி அகர்வால்

    அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, புதிய நாள், புதிய லுக், புதிய தொடக்கம் என குறிப்பிட்டிருந்தார். மேலும் இது விளம்பர ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படம் என்று ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டிருந்தார் சாக்‌ஷி, இதை கவனிக்காத ரசிகர்கள், அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கருதி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 


    சாலை விபத்தில் சிக்கிய பிரபல நடிகர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
    கன்னட திரையுலகில் நடிகராக இருந்து வருபவர் சஞ்ஜாரி விஜய். சுமார் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர், கடந்த 2015-ம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றுள்ளார். பெங்களூருவில் வசித்து வரும், நடிகர் சஞ்ஜாரி விஜய், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கி உள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

    சஞ்ஜாரி விஜயின் தலையில் பலத்தகாயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி இருப்பதால், அதற்காக தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். 

    சஞ்ஜாரி விஜய்
    சஞ்ஜாரி விஜய்

    பெங்களூருவில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதிகாலையில் நடிகர் சஞ்ஜாரி விஜய், நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன் ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது, இப்படத்தை சிவா இயக்கி உள்ளார்.
    நடிகர் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்த பின், சிறிது காலம் ஓய்வு எடுக்கவும் திட்டமிட்டுள்ளாராம். கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் அமெரிக்கா செல்ல உள்ளாராம் ரஜினி. அவரது குடும்பத்தினரும் உடன் செல்ல உள்ளார்களாம். இதற்காக மத்திய அரசுடன் பேசி நடிகர் ரஜினி, சிறப்பு அனுமதியும் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 

    ரஜினிகாந்த்
    ரஜினிகாந்த்

    நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ‘அண்ணாத்த’ திரைப்படம் உருவாகி உள்ளது. சிவா இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுவிட்டன. விரைவில் ரஜினி டப்பிங் பணிகளையும் முடித்துவிடுவார் என கூறப்படுகிறது. ‘அண்ணாத்த’ படம் வருகிற தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
    பிரபல ஆபாச பட நடிகை வீட்டில் பிணமாக கிடந்ததை அறிந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அமெரிக்காவை சேர்ந்த நடிகை டகோடா ஸ்கை, ஆபாச படங்களில் நடித்து பிரபலமானார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவர், வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். டகோடா ஸ்கை மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று தெரியவந்துள்ளது.

    டகோடா ஸ்கை
    டகோடா ஸ்கை 

    அண்மையில் டகோடாவின் தாத்தாவும், பாட்டியும் கொரோனா பாதிப்பினால் இறந்துள்ளனர். அதன்பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. நடிகை டகோடா ஸ்கை, போலீசாரால் கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு ஓவியத்தின் முன்னால், கடந்த மே மாதம் ஆடையில்லாமல் போஸ் கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இன்றுடன் ஓராண்டாவதால் அவர் குறித்து ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.
    கிரிக்கெட் வீரர் தோனி வாழ்க்கை கதையான ‘எம்.எஸ்.தோனி: தி அன்ட்டோல்டு ஸ்டோரி’ படத்தில் தோனியாக நடித்து பிரபலமானவர் சுஷாந்த் சிங். இவர் கடந்த வருடம் ஜூன் மாதம் 14-ந் தேதி மும்பையில் உள்ள வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகினரை உலுக்கியது. 

    வாரிசு நடிகர்களுக்கு பட வாய்ப்புகள் அளித்து தன்னை ஒதுக்கியதால் மன அழுத்தத்தில் அவர் உயிரை மாய்த்ததாக கூறப்பட்டது. சுஷாந்த் சிங் தற்கொலைக்கு சல்மான்கான், இயக்குனர் கரன் ஜோகர், தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உள்ளிட்டோர் காரணம் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.

    டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்
    டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்

    சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பான வழக்கை மும்பை காவல்துறை, பீகார் காவல்துறை, போதைப் பொருள் தடுப்பு பிரிவினர், அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ ஆகிய ஐந்து அமைப்புகள் விசாரித்தன. இருப்பினும் அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்ற மர்மத்திற்கு இதுவரை அவர்களால் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.

    நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டு இன்றுடன் ஓராண்டாகிறது. இதையொட்டி #SushantSinghRajput என்ற ஹேஷ்டேக்கை டுவிட்டரில் டிரெண்டாக்கி வரும் ரசிகர்கள், அவர் குறித்து உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாக தங்களது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
    நடிகை ராஷி கண்ணா, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
    நடிகை ராஷி கண்ணா, கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ எனும் இந்தி படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின்னர் தெலுங்கு படங்களில் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் எண்ட்ரி கொடுத்தார். பின்னர் அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

    தற்போது நடிகை ராஷி கண்ணா, கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் இவர் கைவசம், அரண்மனை 3, துக்ளக் தர்பார், மேதாவி, சைதான் கா பச்சா, சர்தார் போன்ற படங்கள் உள்ளன. அதேபோல் தெலுங்கில் பக்கா கமர்ஷியல், தேங்க் யூ ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 

    ராஷி கண்ணா
    ராஷி கண்ணா

    இதுதவிர மலையாளத்தில் பிரம்மம், இந்தியில் 2 வெப் தொடர்கள், 2 படங்கள் என படு பிசியாக நடித்து வருகிறாராம். பட வாய்ப்பு குவிவதால், நடிகை ராஷி கண்ணா சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.   
    ×