என் மலர்
சினிமா செய்திகள்
மிருகங்களை மையமாக வைத்து பல வெற்றிப் படங்களை எடுத்துக் குவித்தவர், சாண்டோ சின்னப்பத்தேவர். அவரது தயாரிப்பில் எடுக்கப்பட்ட "தாயில்லாக் குழந்தை'' படத்தில் நிஜமாகவே முரட்டுக்காளைகளுடன் மோதினார், விஜயகுமார்.

பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்த காளைச் சண்டையில் உயிரைப் பணயம் வைத்து காளைகளை அடக்கினார்.
இதுபற்றி விஜயகுமார் கூறியதாவது:-
"சிங்கம், புலி, கரடி, யானை போன்ற மிருகங்களை வைத்து மட்டுமல்ல, சாதுவான ஆட்டைக்கூட வைத்துக்கூட படம் எடுத்தவர் சின்னப்பத் தேவர். இந்தப் பின்னணியில் அமைந்த படங்கள் பெரும்பாலும் வெற்றிப்படங்களே.
இவரது "தாயில்லாக் குழந்தை'' படத்தில் என்னை ஹீரோவாக `புக்' பண்ணும்போதே, "விஜயகுமார்! நீங்க பெரிய வீரர்னு கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்துல 2 காளை மாடுகளோட நீங்க மோத வேண்டியிருக்கும். அதுக்கு இப்பவே உங்களை தயார்படுத்திக்குங்க, என்றார்.
நான் கிராமத்தில் வளர்ந்தவன். எனவே, தேவர் இப்படிச்சொன்னபோது எனக்குள் ஒரு துளி பயம் கூட ஏற்படவில்லை.
"தாயில்லாக் குழந்தை'' படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தது. 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கூடியிருந்த இடத்தில்தான், காளைகளை அடக்கும் காட்சியை படமாக்க ஏற்பாடு செய்திருந்தார்கள். 2 காளைகள் வந்தன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காளைகளைப்போல திடகாத்திரமாக, பெரிய திமிலுடன் பார்க்கவே கம்பீரத்துடன் காணப்பட்டன.
காளையுடன் நான் மோதுகிற இடத்தைச் சுற்றி வேலி போடப்பட்டிருந்தது.
முதலில் ஒரு மாட்டுடன் மோதவேண்டும். அந்த மாடும் வந்தது. நான் நின்றிருந்த பகுதியில் விடப்பட்டது. என்னிடம் வந்த தேவர், "விஜயகுமார்! 2 இடத்தில் 2 கேமரா இருக்கு. டைரக்டர் சொன்னதும் கேமரா ஓடத்தொடங்கும். `நீயா... மாடா...'ன்னு பார்த்துக்க'' என்றார், தேவர்.
ஏற்கனவே கிராமத்து காளைகளுடன் கொஞ்சம் விளையாடிய அனுபவம் இருந்ததால், கேமரா ஓடத்தொடங்கியதும் நான் எந்தவித பதட்டமும் இல்லாமல் காளையை நெருங்கினேன்.
என்னிடம் பிடிகொடுக்காத அந்த காளை, ஒரு கட்டத்தில் நான் கொஞ்சமும் எதிர்பார்த்திராத நேரத்தில் தனது கொம்பால் எனது தொடையில் குத்தித் தள்ளியது. தொடையில் இருந்து ரத்தம் வரத்தொடங்க, காளையை அடக்கியே தீரவேண்டிய வேகம் எனக்குள். இப்போது இந்த வீரத்தை அதிகப்படுத்துவது போல, "விஜயகுமார்! விடாதே! காளையை அடக்கு'' என்று கத்தினார், தேவர்.
தேவரின் அந்த வார்த்தைக்கும் பலம் இருந்திருக்க வேண்டும். ரத்தம் சொட்டச்சொட்ட, காளையின் கொம்பை பிடித்த நான், அடுத்த சில நிமிட போராட்டத்தில் அந்தக் காளையை மண்டியிட வைத்தேன். அன்று மதியமே இன்னொரு மாட்டையும் அடக்கியாக வேண்டும். ஏற்கனவே ஒரு வீரக்காளையை அடக்க முடிந்த தெம்புடன் இதை அணுகியதால் மிக சுலபமாய் அந்தக் காளையையும் மடக்கிவிட்டேன்.
பொதுமக்கள் ஆரவாரம் செய்தார்கள். விசில், கரகோஷ சத்தம் காதைத் துளைத்தது.
காளைகளை அடக்கும் காட்சி முடிந்ததும் சந்தோஷ மிகுதியால் ஓடிவந்து என்னை ஆரத் தழுவிக் கொண்டு வாழ்த்து சொன்னார், தேவர். "நான் எதிர்பார்த்ததை விடவும் காட்சி நல்லா வந்திருக்கு'' என்றார்.
சில நாட்களில் வாகினி ஸ்டூடியோவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தேவர், படத்தில் நான் வீரத்துடன் காளைகளுடன் மோதியதை சொன்னார். அதோடு நில்லாமல், "எனக்குத் தெரிந்து சண்டைக் காட்சியில் `டூப்' போடாமல் செய்பவர்கள் இரண்டே இரண்டு நடிகர்கள்தான். வடநாட்டில் தர்மேந்திரா, தென்னாட்டில் விஜயகுமார்'' என்றார். தேவரின் இந்த வெளிப்படையான பாராட்டில் காளை குத்தியதில் ஏற்பட்டிருந்த வலி கூட மறந்து போயிற்று.''
இவ்வாறு விஜயகுமார் கூறினார்.
"குற்றப்பத்திரிகை'' படத்தில் நடித்த நேரத்தில் பெரிய விபத்தில் இருந்து உயிர் தப்பியிருக்கிறார், விஜயகுமார். இந்த விபத்தில்
4 நாட்கள் `கோமா' நிலையில் இருந்து கண் விழித்திருக்கிறார்.
அதுபற்றி அவர் கூறுகிறார்:-
"டைரக்டர் ஆர்.கே.செல்வமணியின் குற்றப்பத்திரிகை படத்தில் எனக்கும் முக்கிய கேரக்டர். அப்போதிருந்த அரசியல் பின்னணியில் பரபரப்பான படமாக எதிர்பார்க்கப்பட்டது அந்தப்படம். என் சம்பந்தப்பட்ட காட்சிகளை தர்மபுரியில் படமாக்கினார்கள்.
என் இளைய மகள் ஸ்ரீதேவிக்கு அப்போது 5 வயது இருக்கும். சினிமா படப்பிடிப்புக்கு நான் எப்போது புறப்பட்டாலும், "அப்பா! காரில் இரவுப் பயணம் மட்டும் செல்ல வேண்டாம்'' என்று கூறுவாள். அப்பா மீதான அதிகபட்ச பாசமாக அதை எடுத்துக் கொள்வேன்.
தர்மபுரியில் முடிந்த படப்பிடிப்பைத் தொடர்ந்து கோபிசெட்டிப்பாளையம் போக வேண்டியிருந்தது. மறுநாள் அங்கே படப்பிடிப்பு. இரவு படப்பிடிப்பு முடிந்து 11 மணிக்குத்தான் கார் வந்தது. எனக்கு அப்போது மகள் ஸ்ரீதேவியின் `ராத்திரி கார் பயணம் வேண்டாம்' என்ற வார்த்தைகள் காதுக்குள் வந்து போயின.
ஆனாலும் கம்பெனியின் அவசரம் கருதி காரில் புறப்பட்டு விட்டேன். கார் வேலூரில் இருந்து புறப்பட்டு கோபிசெட்டிப்பாளையம் போய்க் கொண்டிருந்தது. நள்ளிரவு தாண்டி 2 மணி அளவில் நான் கொஞ்சம் கண்ணயர்ந்த நேரம் கார் எதிரில் வந்த லாரி மீது மோதி, மூன்று குட்டிக்கரணம் அடித்தது. காரில் இருந்து நான் தூக்கியெறியப்பட்டது தெரிந்தது. மரணத்தை ருசிபார்க்க நேர்ந்த அனுபவமும் அப்போது
கிடைத்தது.என் இதயத்துடிப்பு படிப்படியாக குறைவது எனக்குத் தெரிகிறது. `நோ' என்று அலறுகிறேன். மறுபடி துடிப்பு ஏறுகிறது.
மீண்டும் இறங்கத் தொடங்கும்போது `நோ' என்று அலறுவேன். இப்படி ஜீவ மரணப் போராட்டத்திலும் மகள் ஸ்ரீதேவி சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்து போகின்றன...
அப்புறம் என்ன நடந்தது என்று தெரியாது. பெங்களூரில் உள்ள மணிபால் ஆஸ்பத்திரியில் 4 நாட்கள் கழித்து கண் விழித்தேன். விலா எலும்புகள் உடைந்திருந்தன என்றார்கள். தொடையின் ஒரு பக்கம் கிழிந்து தையல் போட்டிருந்தார்கள். ஆஸ்பத்திரியில் என்னைப் பார்த்தவர்கள் `மறுபிறவி' என்றார்கள். இந்த சம்பவத்துக்குப் பிறகு நான் காரில் இரவுப் பயணத்தை அது எத்தனை அவசரமானாலும் மேற்கொள்வதில்லை.
இந்த விபத்து சமயத்தில் டைரக்டர் பி.வாசுவின் வால்டர் வெற்றிவேல் படத்திலும், மலையாளத்தில் மம்முட்டியுடன் `ஆயிரம் பரா' என்ற படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தேன். "நான் குணமாகி வர மாதக் கணக்கில் ஆகலாம். எனவே, என் கேரக்டரில் வேறு நடிகரைப் போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று சொல்லி அனுப்பியும், அவர்கள் எனக்காக காத்திருப்பதாக சொல்லி விட்டார்கள். நான் திருப்பிக் கொடுத்த அட்வான்சையும் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். நெகிழ்ந்து போனேன்.'

ஆர்.அரவிந்த் இயக்கத்தில் மஹத் ராகவேந்திரா, சனா மக்புல் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ படத்தின் முன்னோட்டம்.
நடிகரும், தயாரிப்பாளருமான நிதின் சத்யா ‘லாக்கப்’ படத்தை அடுத்து ‘காதல் கண்டிஷன்ஸ் அப்ளை’ என்ற படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் மஹத் ராகவேந்திரா ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த மாடல் அழகி சனா மக்புல் நடித்துள்ளார். ஆர்.அரவிந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார். விவேக் பிரசன்னா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மஹத் ராகவேந்திரா, சனா மக்புல்
படத்தை பற்றி தயாரிப்பாளர் நிதின் சத்யா கூறியதாவது: ‘இது, முழுக்க முழுக்க காதல் படம். ஆனால், இதுவரை வராத காதல் கதை. பொதுவாக காதலுக்கு ‘ஈகோ’தான் வில்லனாக இருக்கும். அந்த வில்லன் இந்த படத்தில் இல்லை. தனது காதலை தெரிவிக்கும் கதாநாயகனிடம், கதாநாயகி சில நிபந்தனைகளை விதிக்கிறாள். அது என்ன நிபந்தனை? என்பதே கதை. கதாநாயகி திருச்சியில் இருக்கிறார். அவர் சென்னைக்கு வந்ததும் காதல் பிரச்சினை குறுக்கிடுவது போல் திரைக்கதை அமைக்கப்பட்டு இருக்கிறது.
இளம் நடிகை சாக்ஷி அகர்வால், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை ஊக்குவித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் சாக்ஷி அகர்வால். இவர் ரஜினி நடித்த காலா, அஜித் நடித்த விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார். தற்போது நடிகை சாக்ஷி, சிண்ட்ரெல்லா, புரவி, அரண்மனை 3 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் ரிலீசாக உள்ளன.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சாக்ஷி அகர்வால், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். மேலும், உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை வெளியிட்டு இளைஞர்களை ஊக்குவித்து வருவார்.
கொரோனா ஊரடங்கில் உடற்பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் பலரும் உடல் எடையை கூடி குண்டாக மாறி விட்டார்கள். மேலும் சிலர் சோம்பேறியாகவும் மாறிவிட்டார்கள். ஆனால், நடிகை சாக்ஷி அகர்வால், உடல் எடை கூடாமல் இருக்க தினமும் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து வருகிறார்.

சாக்ஷி அகர்வால்
வீட்டில் இருக்கும் பூந்தொட்டி, தலையணை, துணி வைக்கும் பெட்டி ஆகியவற்றை வைத்து எளிய முறை உடற்பயிற்சிகளை செய்கிறார். இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களும் இவ்வாறு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகிறார். இவர் வெளியிட்டிருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்குகள் குவிந்துள்ளது.
தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‘மாநாடு’. இப்படத்தை வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார்.
மேலும் எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி, எஸ்.ஜே.சூர்யா, டேனியல் போப், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சிம்பு
இந்நிலையில், மாநாடு படத்தின் டிரெய்லர் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி மாநாடு படத்தின் டிரெய்லர் வருகிற ஜூலை 21-ந் தேதி பக்ரீத் பண்டிகையன்று வெளியிடப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் உருவாகி உள்ள மாநாடு படத்தை தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர்.
2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரபல திரைப்பட ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி, 2021ஆம் ஆண்டில் இந்திய அளவில் அதிகப்படியான ரசிகர்களால் பார்க்கப்பட்டு பிரபலமான திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த ஜனவரி மாதம் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான ‘மாஸ்டர்’ படம் முதலிடத்தை பிடித்துள்ளது.
ஆஸ்பிரன்ட்ஸ் என்கிற வெப் தொடர் இரண்டாம் இடத்தையும், பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான தி வைட் டைகர் திரைப்படம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம்-2 திரைப்படம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்ததாக தமன்னா நடிப்பில் அண்மையில் வெளியான நவம்பர் ஸ்டோரிஸ் எனும் வெப் தொடர் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளது. அதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த கர்ணன் படம் 6வது இடத்தை பிடித்துள்ளது. பவன் கல்யாணின் வக்கீல் சாப் திரைப்படம் 7-வது இடத்தையும், மகாராணி வெப் தொடர் 8-வது இடத்தையும், ரவி தேஜா நடித்த கிராக் திரைப்படம் 9-வது இடத்தையும், தி கிரேட் இந்தியன் கிச்சன் எனும் மலையாள படம் 10-வது இடத்தையும் பிடித்துள்ளது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் எப்போது தொடங்கும் என்பது குறித்த புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது ‘குக் வித் கோமாளி’ எனும் சமையல் நிகழ்ச்சி. கலகலப்பு நிறைந்த இந்நிகழ்ச்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இதுவரை இந்நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் முடிந்துள்ளன. முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிந்து வருகிறது.
ஷிவாங்கி, சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்கிறார். அதேபோல் பவித்ரா, தர்ஷா ஆகியோர் படங்களில் கதாநாயகியாக நடிக்கின்றனர். புகழ், பாலா ஆகியோர் காமெடியனாக நடித்து வருகின்றனர். அஸ்வின் ஹீரோவாக நடிக்கிறார்.

குக் வித் கோமாளி பிரபலங்கள்
இந்த நிலையில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டு உள்ளதால், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3-வது சீசனை தொடங்க திட்டமிட்டுள்ளார்களாம். ஓரிரு மாதத்தில் இந்நிகழ்ச்சி தொடங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், நயன்தாரா நடித்துள்ள படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.
நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ‘நெற்றிக்கண்’. இப்படத்தை ‘அவள்’ பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கி உள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் இணைந்து தயாரித்துள்ளார்கள். கார்த்திக் கணேஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

நெற்றிக்கண் படத்தின் போஸ்டர்
கொரோனா ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ளனர். அதன்படி இப்படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே நடிகை நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

ராக்கி படத்தின் போஸ்டர்
இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் வெளியிட பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், இப்படம் தியேட்டரில் தான் வெளியிடப்படும் எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்னேஷ் சிவன். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டதும், ராக்கி படம் வெளியிடப்படும் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நடிகராக வலம்வரும் பிரபாஸ், சலார், ஆதிபுருஷ், ராதே ஷ்யாம் போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
‘பாகுபலி’ படங்களுக்குப் பிறகு இந்திய அளவில் பிரபலமான நடிகராகிவிட்டார் பிரபாஸ். இதனால் அவர் நடித்து வரும் படங்களை பான்-இந்தியா படமாகவே உருவாக்கி வருகின்றனர். இதன் காரணமாக இந்திய அளவில் பிரபலமான நடிகைகளை அவருக்கு ஜோடியாக நடிக்க வைக்கின்றனர். குறிப்பாக பாலிவுட் நடிகைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அந்த வகையில், சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூருடன் ஜோடி சேர்ந்த பிரபாஸ், ஆதிபுருஷ் படத்தில் கீர்த்தி சனோனுடன் நடித்து வருகிறார்.

தீபிகா படுகோனே
இது தவிர மகாநடி இயக்குனருடன் பிரபாஸ் இணையும் படத்தில் முன்னணி பாலிவுட் நடிகையான தீபிகா படுகோனே நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படம் இதுவாகும். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்தில், பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க, நடிகை தீபிகா படுகோனேவுக்கு ரூ.8 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இதையறிந்த தென்னிந்திய நடிகைகள் வாயடைத்துப்போய் உள்ளார்களாம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம், கைதி, மாஸ்டர் ஆகிய 3 படங்களும் பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.
மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குனராக வலம்வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மூன்று படங்களும் தற்போது பாலிவுட்டில் ரீமேக் ஆகின்றன.
அதன்படி மாநகரம் படத்தை இந்தியில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்கின்றனர். பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன் இப்படத்தை இயக்குகிறார். நடிகர் விஜய் சேதுபதி இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

மாநகரம், கைதி, மாஸ்டர் பட போஸ்டர்கள்
அதேபோல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த கைதி படமும் இந்தியில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் கார்த்தியின் கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன் நடிக்க உள்ளார்.
லோகேஷ் கனகராஜின் மூன்றாவது படமான மாஸ்டரும் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இப்படத்தின் இந்தி ரீமேக் உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதில் விஜய் கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள ‘விக்ரம்’ படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் கமலின் 232 வது படம் ‘விக்ரம்’. கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர். கொரோனா பரவல் குறைந்த பின்னர் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

லோகேஷ் கனகராஜ், கமல்ஹாசனுடன் அன்பறிவ்
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்டுள்ளார். அதன்படி, பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ், இப்படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இரட்டையர்களான இவர்கள் இருவரும், ஏற்கனவே கேஜிஎப், கைதி, கபாலி, மெட்ராஸ் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசனும், நடிகை மீனாவும் ஏற்கனவே ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோகன்லால், மீனா நடித்து மலையாளத்தில் 2013-ல் வெளியாகி வசூல் குவித்த திரிஷ்யம் படம் தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இதில் கமல்ஹாசன், கவுதமி நடித்து இருந்தனர். தெலுங்கு, இந்தி, கன்னடம், சீன மொழிகளிலும் திரிஷ்யம் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், திரிஷ்யம் படத்தின் 2-ம் பாகமும் மோகன்லால், மீனா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தையும் தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் சீன மொழிகளில் ரீமேக் செய்வதாக அறிவித்து உள்ளனர்.

கவுதமி, மீனா
தமிழிலும் ‘திரிஷ்யம் 2’ படம் பாபநாசம் 2-ம் பாகமாக உருவாக உள்ளதாகவும், இதில் நடிக்க கமல் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது. மேலும் முதல் பாகத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த கவுதமி, இரண்டாம் பாகத்தில் நடிக்க மாட்டார் என்றும், அவருக்கு பதிலாக நடிகை மீனாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் கமல்ஹாசனும், நடிகை மீனாவும் ஏற்கனவே கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘அவ்வை சண்முகி’ படத்தில் ஜோடியாக நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.