என் மலர்
சினிமா செய்திகள்
பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம் இளையராஜா வர்ணித்த "மலரும் நினைவுகள்''
பாரதிராஜாவுடன் சேர்ந்து நடத்திய நாடகம் இளையராஜா வர்ணித்த "மலரும் நினைவுகள்''
சிறு வயதில் நண்பர்களாகப் பழகிய பாரதிராஜாவும், இளையராஜாவும், நாடகம் நடத்தினார்கள். இதில் பாரதிராஜாதான் "ஹீரோ''! இசை அமைப்பு இளையராஜா.
இதுபற்றி இளையராஜா கூறியதாவது:-
"கன்னியாகுமரி மாவட்டத்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நேரத்தில், பாவலரை ஏற்கனவே அறிந்திருந்த கம்ïனிஸ்டு கட்சித் தலைவர் ஜீவானந்தம் ஒரு டேப் ரிக்கார்டரை கொடுத்தார்.
"இந்த டேப் ரிக்கார்டர் உங்களிடமே இருக்கட்டும்'' என்று சொல்லி மகிழ்ச்சியுடன் கொடுத்தார். இது அவருக்கு கோவை விஞ்ஞானியும் தொழில் அதிபருமான ஜி.டி.நாயுடு கொடுத்தது என்பதையும் அறிந்து கொண்டோம்.
இந்த டேப் ரிக்கார்டர் வந்த பிறகு, எங்கள் உற்சாகம் இன்னும் அதிகமாகி விட்டது. தலைவர்களின் பேச்சையும், எங்களின் கச்சேரியையும் போட்டுப் போட்டுக் கேட்போம். கைதட்டல் ஒலி ஆரவாரத்துடன் எங்கள் கச்சேரிக்கு மக்கள் அளித்த வரவேற்பை `டேப்' வாயிலாக கேட்க நேர்ந்தபோது, உற்சாகம் அதிகமானது.
வீட்டில் அந்த டேப் ரிக்கார்டர் இருந்தபோது கிடார், புல்புல்தாரா, ஆர்மோனியம், பாங்கோ சகிதம் ஏதோவொன்றை வாசிப்பேன். அதை டேப்பில் பதிவு செய்து திரும்பக் கேட்கும்போது வேறு ஏதோ மாதிரி இருக்கும்.
இது எனக்குள் ஒரு புதிய இசைப்பரிமாணத்தை கொண்டு வந்தது. அடுத்தடுத்து இதுமாதிரி முயற்சிகளை டேப்பில் தொடர்ந்தேன்.
ஆனால், இந்த சந்தோஷம் அதிக நாள் நீடிக்கவில்லை. "தலைவர் ஜீவானந்தம் கொடுத்த டேப் ரிக்கார்டரை கட்சி ஆபீசில் ஒப்படைக்கவும்'' என்று கம்ïனிஸ்டு கட்சியிடம் இருந்து கடிதம் வந்தது. அதே வேகத்தில், டேப் ரிக்கார்டரையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார்கள்.
அது வீட்டில் இருந்தபோது நானும் பாஸ்கரும் "மனோகரா'', "வீரபாண்டிய கட்டபொம்மன்'' படங்களில் சிவாஜி பேசிய வசனங்களை எங்கள் ஆக்ரோஷ குரலில் பேசி பதிவு செய்து கொள்வோம். பிறகு போட்டுக் கேட்போம். இதில் பாரதிராஜாவும் அவரது நண்பர் `டெய்லர்' மணியுடன் வந்து சேர்ந்து கொள்வார். பாரதிராஜா எழுதிய வசனத்தை அவரும், `டெய்லர்' மணியும் பேசி பதிவு செய்து போட்டுக்
கேட்பார்கள்.இப்படியெல்லாம் வசனம் பேசி, வசனம் பேசி கேட்டுப் பழகியதால்தான் அவருக்கு நாடகம் போட வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும் என்று எண்ணுகிறேன்.
இதற்குப் பின்பே பழனி செட்டிப்பட்டி கோவில் திருவிழாவிலும், அல்லி நகரம் (பாரதிராஜாவின் சொந்த ஊர்) கோவில் திருவிழாவிலும் இரண்டு நாடகங்களை நடத்தினார், பாரதிராஜா.
நாடகத்தில் பாரதிராஜா நடிக்கவும் செய்தார். பாரதிராஜா மதுரை நடிகையுடன் பாடி நடிப்பதற்காக, சிவாஜி - பானுமதி நடித்த `அம்பிகாபதி' படப்பாடலான "மாசிலா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே'' என்ற பாடலை தேர்ந்தெடுத்தோம். நாடகத்தில் அப்போதெல்லாம் பெரும்பாலும் சினிமாப் பாடல்களையே பயன்படுத்துவார்கள்.
அல்லி நகரத்தில் நடந்த நாடகத்தில் மதுரையில் இருந்து நடிகைகள் சீன் செட்டிங்ஸ் மேக்கப்பிற்கு அட்வான்ஸ் கொடுத்து ஒரு பள்ளிக்கூடத்திலும், அரியநாயகம் என்பவர் வீட்டிலும் ஒத்திகை பார்த்தோம். "பூட் மேக்கர் பி.ஏ'' என்பது நாடகத்தின் பெயர். எனக்குத் தெரிந்து இதுதான் பாரதிராஜாவின் முதல் நாடக அரங்கேற்றம்.
பாரதிராஜா ஹீரோவாக - செருப்பு தைக்கும் "பி.ஏ'' பட்டதாரி இளைஞராக நடித்தார். நாடகத்தில் அவர் ரோட்டில் ஷூ பாலீஷ் போடுவதாக ஒரு காட்சி. அந்தக் காட்சிக்கு ஏற்கனவே உள்ள சினிமா பாடல்களை தவிர்த்து புதிதாக ஒரு பாடல் கம்போஸ் செய்யச் சொன்னார்.
சட்டென பாட்டு பிறந்தது. `பாலீஷ் பூட் பாலிஷ்' என்று தொடங்கி, "செருப்பப்பா இது செருப்பு! சுறுசுறுப்பா எனக்கிருப்பு'' என்று ஒரு பாடலை கம்போஸ் செய்தேன்.
இந்த காலக்கட்டத்தில் பாவலர் அண்ணனுடன் இடைவிடாத கச்சேரி இருக்கும். இப்படிப் போகும் ஊர்களில் புதிய நவநாகரீகம் எங்கள் உடைகளில் வெளிப்படும். புதிதாக உடையிலும், ஹேர்ஸ்டைலிலும் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் உடனே அதற்கேற்ப நாங்கள் மாறி விடுவோம். அதாவது `லேட்டஸ்ட் பேஷன்' எது என்பதை எங்கள் ஆடை, தலைமுடி அறிவிக்கும். கவுபாய் பேண்ட், சம்மர் கிராப் போன்றவை அப்போது ஏற்பட்ட மாற்றங்கள்.
இப்படி லேட்டஸ்ட்டாக ஒரு "டீ'' சர்ட் அணிந்து நாடகத்துக்கு இசையமைத்துக் கொண்டிருந்தேன். என் `டிசர்ட்' பாரதிராஜாவை கவர்ந்திருக்க வேண்டும். ஒரு சீனில் நடிக்கும்போது மேடையில் தோன்ற எனது `டிசர்ட்'டை கழற்றித் தரும்படி கேட்டார்.
நான் இதற்கு உடன்படுவேனா? ஷர்ட்டை கழற்றிவிட்டு வெறும் பனியனோடு ஆர்மோனியம் வாசிப்பதாவது? அதுவும் மதுரை நடிகைகள்
முன்பாக?ஷர்ட்டை தருவதற்கில்லை என்று நான் மறுக்க, பாரதி விடாப்பிடியாக ஷர்ட் வேண்டும் என்று அடம் பிடிக்க, ஒரு கட்டத்தில் என் பிடிவாதத்தைவிட பாரதிராஜாவின் பிடிவாதம் அதிகமாக ஷர்ட்டை கழற்றிக் கொடுத்தேன். ஆசைப்பட்டபடியே ஒரு சீனில் என் டிஷர்ட்டை போட்டு நடித்து விட்டு வந்தார் பாரதிராஜா.
இப்போது, எனக்கு புதுக்கவலை. இந்த டிஷர்ட்டைப் போட்டுக்கொண்டுதானே நாளை அல்லி நகர வீதிகளில் நடக்கவேண்டும். அப்படி யாராவது பார்த்தால், `இது பாரதிராஜாவின் ஷர்ட். அவர்தானே நாடகத்தில் இந்த ஷர்ட்டுடன் தோன்றினார்' என்று எண்ணி, என்னை "இரவல் சட்டைக்காரன்'' என்று நினைத்துவிட்டால் என்னாவது?
இதோ இப்போதே இது என் ஷர்ட்தான் என்று நிரூபிக்க வேண்டும் என்று எண்ணினேன். அதற்கொரு ஐடியாவும் வந்தது.

தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து வரும் மாதவன் தன்னை பற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார்.

இப்படத்தில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் லிங்குசாமி. அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

லிங்குசாமி - மாதவன்
ஆனால், இவை எதுவும் உண்மையில்லை. "லிங்குசாமி படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அவர் நல்ல மனிதரும் கூட. ஆனால், அவர் படத்தில் நான் நடிப்பதாக வரும் செய்தியில் உண்மையில்லை" என மாதவன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் தனது வீட்டில் புதிய தோட்டத்தை உருவாக்கி அதை சிவகார்த்திகேயன் பராமரித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது டாக்டர், அயலான், டான் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதையடுத்து தொடர்ந்து சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் 5 படங்களில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் என் வீட்டு தோட்டத்தில் என்று பதிவு செய்து, லாக்டவுனில் இந்த தோட்டத்தை உருவாக்கி இருக்கிறேன். இன்னும் பெரிய தோட்டத்தை உருவாக்க இருக்கிறேன். அதுதான் என்னுடைய ஆசை என்று கூறி இருக்கிறார்.
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கத்தில் உருவாகி இருக்கும் காயல் படத்தின் முன்னோட்டம்.
ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கும் புதிய படம் காயல். இப்படத்தில் லிங்கேஷ், ஐசக் வர்கீஸ் , காயத்ரி, ஸ்வாகதா, ரமேஷ்திலக், ரேடியோ சிட்டி பரத் ஆகியோர் நடிக்கிறார்கள். அனுமோள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.
கார்த்திக் சுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில், பி.பிரவீன் பாஸ்கர் படத்தொகுப்பில், ஜஸ்டின் கெனன்யாவின் இசையமைப்பில் உருவாகி வரும் இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாக இருக்கிறது.
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், பின்னணி பாடகியாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா பிசாசு 2 படத்திற்காக ரிஸ்க் எடுத்து நடித்து இருக்கிறார்.
தமிழில் முன்னணி பாடகியாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. இதுவரை ஏராளமான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார். பன்முக திறமைக்கொண்ட இவர் நடிப்பிலும் கலக்கி வருகிறார். மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, வடசென்னை, தரமணி, மாஸ்டர் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

ஆண்ட்ரியா நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் படம் பிசாசு 2. மிஷ்கின் இயக்கத்தில் 2016ஆம் ஆண்டு வெளியான பிசாசு படம் பெரிய வெற்றி பெற்றதையடுத்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதைக்கு இந்த காட்சி மிகவும் அவசியம் என்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியை சிறப்பாக நடித்து முடித்துகொடுத்தாராம். படத்திற்காக ஆண்ட்ரியாவின் இந்த ரிஸ்க் ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. அந்த குறிப்பிட்ட காட்சி எடுக்கப்படும்போது படப்பிடிப்பு தளத்தில் மிக குறைவான நபர்களே இருந்துள்ளனர்.

தமிழில் 2019 ஆம் ஆண்டு ஆடை படத்தில் அமலா பால் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அவரை தொடர்ந்து தற்போது ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார்.
பல படங்களில் தன்னுடைய நடிப்பால் முத்திரை பதித்த நடிகை பிரியாமணி, அடுத்ததாக கேங்ஸ்டர் படத்தில் நடிக்க இருக்கிறார்.
‘பருத்தி வீரன்’ படத்தின் மூலம் நல்ல அறிமுகத்தை பெற்றவர் பிரியாமணி. இவர் சமீபத்தில் வெளியான ‘தி பேமிலி மேன் 2’ வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். தெலுங்கில் ‘நாரப்பா’, ‘விராட்டா பர்வம்’, ‘சயனைடு மோகன்’ உள்ளிட்ட பல படங்களை பிரியாமணி கைவசம் வைத்துள்ளார்.

இந்த படங்களை அடுத்து விவேக் இயக்கத்தில் புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இப்படம் மும்பையில் நிழல் உலக தாதாக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து கேங்ஸ்டர் படமாக உருவாகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பூஜை போடப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசியுள்ள நடிகை பிரியாமணி, இந்த படத்தில் ஒப்பந்தக் கொலையாளியாக நடிப்பது மிகுந்த உற்சாகம் அளிக்கிறது. மேலும் சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதால், அதற்காக தன்னை தயார்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.
போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் இருந்து சீனியர் நடிகர்கள் வெளியேறிவிட்டதாக இயக்குனர் எச்.வினோத் கூறியிருக்கிறார்.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டு உள்ளது. இதுவரை ’வலிமை’ படத்தின் எந்த அப்டேட்டும் படக்குழுவினர் வெளியிடவில்லை. ஆனால், இப்படம் குறித்து ஏதாவது செய்திகள் வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில் இயக்குனர் எச்.வினோத் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், கடந்த ஆண்டு ’வலிமை’ படத்திற்காக ஒரு சில காட்சிகளை சீனியர் நடிகர்களை வைத்து படமாக்கினோம்., அதன் தொடர்ச்சியாக அந்த நடிகர்களை படப்பிடிப்பிற்கு அழைத்த போது அவர்கள் கொரோனா தொற்று பயம் காரணமாக படப்பிடிப்பிற்கு வர முடியாது என்று கூறிவிட்டனர்.

அவர்களுக்கு பதிலாக புதிய நடிகர்களை வைத்து தற்போது மீண்டும் படப்பிடிப்பு நடத்தப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
முன்னணி இயக்குனராகவும் தற்போது நடிகராகவும் இருக்கும் செல்வராகவனின் புதிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் கீர்த்தி சுரேஷுடன் இணைந்து சாணிக்காயிதம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா இரண்டாவது அலை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சாணிக்காயிதம் படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கையில் துப்பாக்கியுடன் செல்வராகவன் இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தனக்கு அட்வைஸ் செய்த நெட்டிசன் ஒருவருக்கு நடிகை வனிதா விஜயகுமார் பதிலடி கொடுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகை வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’தான் இப்போது சிங்கிள் என்றும் ’அவைலபிள்’ என்றும் குறிப்பிட்டு தனது திருமணம் குறித்து வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன் ஒருவர் ’அவைலபிள்’ என்ற வார்த்தை தேவையா? என்றும் உங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொண்டு இனிமேலாவது இதுபோன்ற அசிங்கத்தை நிறுத்தி விடுங்கள் என்று கமெண்ட் செய்திருந்தார்.

வனிதாவின் பதிவு
அதற்கு பதிலடி கொடுத்த வனிதா விஜயகுமார் ’நாங்கள் அனைவரும் வளர்ந்து வருகிறோம், எங்கள் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள எங்களுக்கு தெரியும். எங்கள் கடமை என்ன என்பதும் தெரியும். எங்களுக்கு தேவைப்படும் போது நீங்கள் வந்து உதவி செய்யப் போகிறீர்களா? உங்களுடைய வாழ்க்கை எதுவோ அதை நீங்கள் வாழ்ந்து கொள்ளுங்கள். நான் ஒரு நடிகை, என் நடிப்பு பிடித்திருந்தால் என் படங்களை பாருங்கள், மற்றபடி உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவரின் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் சமீபத்தில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனை ஜூவாலா கட்டாவை திருமணம் செய்து கொண்டார்.

விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளங்களில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி வெளியிட்டு வருவார். இந்த நிலையில் கப்பிங் தெரபி செய்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.

விஷ்ணு விஷால்
கப்பிங் தெரபி செய்தால் உடல் மற்றும் மனம் ரிலாக்ஸ் ஆகும் என்கிறார்கள். சீனாவின் பழங்கால மார்ஷியல் ஆர்ட்ஸ்களில் ஒன்றான கப்பிங் தெரபியை ஹாலிவுட் பிரபலங்கள் பலரும் கடைப்பிடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள கோப்ரா படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாகவும், இர்பான் பதான் வில்லனாகவும் நடித்துள்ளனர்.
விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இப்படத்தில் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இர்பான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து - விக்ரம்
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் புகைப்படம் ஒன்றை இயக்குனர் அஜய் ஞானமுத்து வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்த நடிகை, தனது உடல் எடையை பற்றி சமூக வலைத்தளத்தில் பேசுபவர்களுக்கு பதில் அளித்துள்ளார்.
மலையாள திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை சனுஷா தமிழில் ரேணிகுண்டா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ரேணிகுண்டா திரைப்படத்தில் வாய் பேச முடியாத இளம் பெண்ணாக நடித்த சனுஷாவின் நடிப்பு பலரையும் வெகுவாக கவர்ந்தது.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சானுஷா, தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில், இவரது உடல் எடையை வைத்து உருவ கேலி செய்தவர்களுக்கு தற்போது நடிகை சனுஷா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நடிகை சனுஷா
“யாரெல்லாம் என் உடல் எடையைப் பற்றி என்னைவிட அதிகமாக கவலைப்படுகிறார்களோ அதைக்குறித்து பேசுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று அவசியமில்லை. என்னை சுட்டிக் காட்டி பேசும் எல்லோரும் ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஒருவரை உங்களின் இரு விரல்களால் சுட்டிக்காட்டும்போது மீதமுள்ள மூன்று விரல்களும் உங்களை சுட்டிக்காட்டும் என்பதை மறந்து விடாதீர்கள். முதலில் உங்களை நீங்கள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சரி செய்து கொள்ளுங்கள் ” என தெரிவித்துள்ளார்.