என் மலர்
சினிமா

மாதவன்
அந்த செய்தி உண்மையில்லை... மறுக்கும் மாதவன்
தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து வரும் மாதவன் தன்னை பற்றி வந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
தமிழில் ஆனந்தம், ரன், பையா, சண்டக்கோழி என பல்வேறு ஹிட் படங்களை கொடுத்த லிங்குசாமி, தற்போது தெலுங்கில் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் படத்தை அவர் இயக்க உள்ளார்.

இப்படத்தில், வலுவான வில்லன் கதாபாத்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளாராம் லிங்குசாமி. அந்த கதாபாத்திரத்தில் மாதவன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியானது.

லிங்குசாமி - மாதவன்
ஆனால், இவை எதுவும் உண்மையில்லை. "லிங்குசாமி படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். அவர் நல்ல மனிதரும் கூட. ஆனால், அவர் படத்தில் நான் நடிப்பதாக வரும் செய்தியில் உண்மையில்லை" என மாதவன் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
Next Story






