என் மலர்
சினிமா செய்திகள்
லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் பற்றி பேசிய நடிகை மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரபல நடிகை மற்றும் இயக்குனர் ஆயிஷா சுல்தானா. இவர் சமீபத்தில் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் லட்சத்தீவு விவகாரம் குறித்து பேசினார். அப்போது லட்சத்தீவு நிர்வாகியாக நியமனம் செய்யப்பட்டுள்ள பிரஃபுல் படேல் என்பவர் மத்திய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட பயோவெப்பன் என்று பேசி இருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து நடிகை ஆயிஷா சுல்தானா மீது பாஜக பிரமுகர் அப்துல் காதர் ஹாஜி என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் நடிகை சாயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிஷா சுல்தானா
இந்த நிலையில் தனது பேச்சு குறித்து ஆயிஷா சுல்தானா கூறும்போது, லட்சத்தீவு நிர்வாகி பிரஃபுல் பட்டேலை பயோவெப்பன் என தான் பேசியது நாட்டையோ அரசையோ குறிப்பிடவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
சிம்பு நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் ஈஸ்வரன். இதில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா, இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுசீந்திரன் இயக்கி இருந்தார்.


ஈஸ்வரன் திரைப்படம்
இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படம் வரும் ஜூன் 12-ஆம் தேதி முதல் டிஸ்னி+ஹாட் ஸ்டார் விஐபியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமீர் கான் மகன் நடிக்கும் புதிய படத்தில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்த இளம் நடிகை ஜோடியாக நடிக்க இருக்கிறார்.
தெலுங்கில் அர்ஜூன் ரெட்டி படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு வந்தவர் ஷாலினி பாண்டே. அதன்பிறகு மேரி நிம்மோ என்ற இந்தி படத்தில் நடித்தார். தமிழில் 100 பிரசண்ட் காதல் படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்தார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.

தற்போது ஷாலினி பாண்டே அமீர்கானின் மகன் ஜுனைத் கான் அறிமுகமாகும் மகாராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

ஜுனைத் கான், ஷாலினி பாண்டே
இந்த படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கிறது. சித்தார்த் மல்ஹோத்ரா இயக்குகிறார். 1982ம் ஆண்டு நடந்த பிரிஜ்நாத்ஜி மகராஜ் வழக்கை மையமாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதில் ஜுனைத் கான் பத்திரிகையாளராக நடிக்கிறார். ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.
பல படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகர் சார்லி சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான சிவாஜி கணேசன், கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், பிரபு, விக்ரம், அஜித், விஜய், சூர்யா என மூன்று தலைமுறை நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் சார்லி. இவர் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.


இந்த புகாரில் நடிகர் சார்லி கூறியிருப்பதாவது: கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் தமிழ் நாடகம், திரைப்படங்களில் நடிகராக பணியாற்றி வரும் நான், எந்த ஒரு சமூக வலைதளத்திலும் இல்லை என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய பெயரில் என்னுடைய அனுமதி இன்றி, ட்விட்டரில் போலியாக கணக்கு துவங்கப்பட்டு உள்ளது. இதை ஆரம்பத்திலேயே தடை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மிக்க பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என அந்த புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் வரலட்சுமி சரத்குமார் அடுத்ததாக பிரபல நடிகர் படத்தில் இணைந்து இருக்கிறார்.
பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 61வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் பாலகிருஷ்ணா நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தில் நடிகை வரலட்சுமி இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பாலகிருஷ்ணா - வரலட்சுமி
பாலகிருஷ்ணா நடிப்பில் இயக்குனர் கோபிசந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க உள்ளது. இந்த படத்தில் வரலட்சுமி நடிப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக நடிக்கிறாரா? அல்லது வேறு முக்கிய வேடத்தில் நடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், பிரபல நடிகரின் தந்தை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
வேதாளம், அதே கண்கள், ஈஸ்வரன் உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் பால சரவணன். இவருடைய தந்தை எஸ்.ஏ.ரெங்கநாதன் சமீபத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்.


பால சரவணன்
இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். பால சரவணன் தந்தையின் வயது 60. பால சரவணன் தந்தை மறைவிற்கு பலரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர், கொரோனா ஊரடங்கு காலத்தில் உணவின்றி தவிக்கும் மக்களுக்கு உணவு கொடுத்திருக்கிறார்.
கொரோனா பெருந்தொற்று ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி வருமானமின்றி உள்ளனர். ஏழை மக்களுக்கு தமிழக அரசு, திரையுலக பிரபலங்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்தளவிற்கு உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் புகழ் ஆரி அர்ஜுனன் மக்களுக்கு உணவு வழங்கி இருக்கிறார்.


பிக்பாஸ் ஆரி
திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி உள்ள சாலையோரம் வசிக்கும் 100 பேருக்கு தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக உணவு வழங்கி இருக்கிறார் ஆரி. இதற்கு பொது மக்கள் பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
எம்.சக்திவேல் இயக்கத்தில் சிங்கம்புலி, வையாபுரி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தகவி’ படத்தின் முன்னோட்டம்.
‘ஆறடி’ என்ற பெயரில் பெண் வெட்டியானின் கதையை படமாக்கி பாராட்டுகளை பெற்ற படக்குழுவினர் அடுத்து, ‘தகவி’ என்ற பெயரில் குழந்தைகளுக்கான தரமான படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் பவாஸ், குகன், சாய், சஞ்சய், ஆதிசக்தி ஆகிய குழந்தை நட்சத்திரங்களுடன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் நகைச்சுவை வேடத்தில் நடித்து இருக்கிறார். ராகவ், ஜெய்போஸ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, சிங்கம்புலி, அஜய் ரத்தினம், வையாபுரி, பயில்வான் ரங்கநாதன், வெங்கல்ராவ், சாப்ளின் பாலு, கிங்காங், ஐந்து கோவிலான் ஆகியோர் நடித்துள்ளனர்.
கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் இசையமைத்து இருக்கிறார். எம்.சக்திவேல் கதை-வசனம் எழுத, சந்தோஷ்குமார் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ளார். எஸ்.நவீன்குமார் தயாரித்து இருக்கிறார்.

தகவி படக்குழு
இந்த படம் பல சர்வதேச பட விழாக்களில் விருதுகளை அள்ளி இருக்கிறது. நவடா சர்வதேச படவிழா, பாரத் சர்வதேச படவிழா, மராட்டிய சர்வதேச படவிழா, மாஸ்கோ படவிழா ஆகிய படவிழாக்களில் விருதுகளை பெற்றதுடன், மேலும் பல படவிழாக்களிலும் திரையிடுவதற்காக ‘தகவி’ படம் அனுப்பப்பட்டுள்ளது.
குழந்தைகளை வளர்ப்பது ஒரு கலை. அதுவும் அவர்களை நல்வழிப்படுத்துவது சவாலானது என்ற கருத்தை சித்தரிக்கும் படம், இது.
‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ‘தி பேமிலி மேன் 2’ வெப் தொடர் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர்களான ராஜ் மற்றும் டிகே ஆகியோர் இந்த தொடரை இயக்கி இருந்தனர். பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே கடந்த வாரம் ஓடிடியில் வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகை சமந்தா மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் அந்த வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வெப் தொடரை தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாக்க திட்டமிட்டுள்ளார்களாம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் கவுதம் மேனன், பிரபல நடிகருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ‘மண்டேலா’. கடந்த ஏப்ரல் மாதம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட இப்படம், பின்பு ஓடிடி தளத்தில் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர்.
அந்த வகையில், மண்டேலா படத்தை பார்த்த இயக்குனர் கவுதம் மேனன், ஒரு சிறந்த காமெடி படம் என்று பாராட்டியதோடு, யோகிபாபுவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாகவும், அவருடன் இணைந்து பணியாற்ற ஆசைப்படுவதாகவும் கூறி உள்ளார். இதற்கு நடிகர் யோகிபாபு டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

யோகிபாபு
பல்வேறு இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ள யோகிபாபு, இதுவரை கவுதம் மேனனுடன் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றியதில்லை. தற்போது கவுதம் மேனனே, அவருடன் பணியாற்ற ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளதால், இந்த கூட்டணி விரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர், அவரைப் பார்க்க ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு நடந்தே சென்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் சோனு சூட். இவர் ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கடந்தாண்டு கொரோனா காலகட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு எண்ணிலடங்கா உதவிகளை செய்த சோனு சூட், இந்தாண்டும் அந்த பணியை தொடர்ந்து செய்து வருகிறார். இதுதவிர கொரோனா நோயாளிகளுக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
இந்நிலையில், சோனு சூட்டின் தீவிர ரசிகர் ஒருவர், அவரைப் பார்க்க ஐதராபாத்தில் இருந்து மும்பைக்கு நடந்தே சென்றுள்ளார். வெங்கடேஷ் என்ற அந்த நபர் சுமார் 700 கி.மீ. வெறுங்காலில் நடந்து வந்ததை அறிந்த சோனுசூட், அந்த ரசிகரோடு புகைப்படம் எடுத்துக் கொண்டதோடு, இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தி உள்ளார். மேலும் அவர் சொந்த ஊர் செல்லவும் ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டபோது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கார்த்தி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கார்த்தி, முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். நடிகர் கார்த்தியின் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Took my first dose of vaccine. #CovidVaccinepic.twitter.com/eqLzqWAvol
— Actor Karthi (@Karthi_Offl) June 11, 2021
நடிகர் கார்த்தி கைவசம், மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன், பி.எஸ்.மித்ரன் இயக்கும் சர்தார் உள்ளிட்ட படங்கள் உள்ளன.






