என் மலர்
சினிமா

டாப்சி
மீண்டும் தமிழுக்கு வரும் டாப்சி... திரில்லர் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கிறார்
பாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம்வரும் டாப்சி, அடுத்ததாக தமிழ் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் அறிமுகமாகி முன்னணி இடத்துக்கு வந்தவர் டாப்சி. பின்னர் காஞ்சனா-2, வந்தான் வென்றான், கேம் ஓவர், ஆரம்பம், வை ராஜா வை போன்ற படங்களில் நடித்த டாப்சி, பாலிவுட்டிலும் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது கிரிக்கெட் வீராங்கனை மித்தாலி ராஜ் வாழ்க்கை கதையை மையமாக வைத்து உருவாகும் ‘சபாஷ் மித்து’, தமிழில் ஜெயம் ரவியுடன் ‘ஜன கண மன’ உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.

டாப்சி, பரத் நீலகண்டன்
இந்நிலையில், நடிகை டாப்சி மேலும் ஒரு தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை, அருள்நிதி நடிப்பில் வெளியான ‘கே 13’ என்ற திரில்லர் படத்தை இயக்கிய பரத் நீலகண்டன் இயக்க உள்ளாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையம்சம் கொண்ட படம் என்பதால், நடிகை டாப்சி இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story






