என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இதன் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது.


    பொன்னியின் செல்வன்

    ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


    துல்கர் சல்மான்

    இதையடுத்து இப்படம் குறித்து நடிகர் துல்கர் சல்மான் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றில் பல நண்பர்கள் ஒரு குடும்பம் போல நடித்துள்ளனர். இதை தனிப்பட்ட வெற்றியைப் போல் உணர்கிறேன். மேலும், படக்குழுவிற்கு தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'.
    • இப்படத்தின் டீசர் தற்போது யூடியூபில் முதலிடம் பிடித்துள்ளது.

    பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

     

    சர்தார்

    சர்தார்

    பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசரை நேற்று முன்தினம் நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்டார்.

     

    சர்தார்

    சர்தார்

    இந்நிலையில் 'சர்தார்' படத்தின் டீசர் அனைவரின் கவனத்தை ஈர்த்து 7.6 மில்லியன் பார்வையாளர்களை கடந்து யூடியூபில் முதலிடம் பிடித்துள்ளது. இதனை இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.



    • நடிகை ராஷ்மிகா தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
    • இவர் தற்போது விஜய்யுடன் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தற்போது விஜய்யுடன் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்துள்ளார்.


    ராஷ்மிகா மந்தனா

    தெலுங்கில் உருவாகி பல மொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட புஷ்பா படம் ராஷ்மிகாவுக்கு திருப்பு முனையாக அமைந்தது. மேலும் இவர் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் திரைப்படம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

    தற்போது தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் சீதாராமம் படத்திலும் ராஷ்மிகா நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. மேலும், இந்தியில் சித்தார்த் மல்கோத்ராவுடன் மிஷன் மஜ்னு, அமிதாப்பச்சனுடன் குட்பை, ரன்பீர் கபூருடன் அனிமல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


    ராஷ்மிகா மந்தனா

    இதையடுத்து நடிகை ராஷ்மிகாவும் விஜய் தேவரகொண்டாவும் காதல் செய்து வருகிறார்கள் என தகவல் பரவி வந்தது. இது குறித்து விளக்கமளித்த ராஷ்மிகா "இந்த வதந்திகள் மிகவும் அழகாக இருக்கிறது" என்று பதிலளித்துள்ளார்.

    • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நேற்று நடைபெற்றது.
    • இதில் சிறந்த திரைக்கதைக்கான விருதை இயக்குனர் சுதா கொங்கரா பெற்றுக் கொண்டனர்.

    இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

    விருதை பெற்று கொண்ட சுதா கொங்கரா

    விருதை பெற்று கொண்ட சுதா கொங்கரா

     

    இதையடுத்து 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூர்யா பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சூரரை போற்றுக்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார். மேலும் சிறந்த திரைக்கதைக்காக இயக்குனர் சுதா கொங்கரா தேசிய விருதை பெற்று கொண்டார்.

    • தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா.
    • இந்துபுரம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் பாலகிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பாலகிருஷ்ணா. இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து ஆந்திர மாநில அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்துபுரம் தொகுதியில் ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட பாலகிருஷ்ணா, சமீபத்தில் நடந்த தேர்தலிலும் இதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து இரண்டு முறை இந்துபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதி பக்கம் வருவது இல்லை என்று புகார் கிளம்பி உள்ளது.

     

    பாலகிருஷ்ணா

    பாலகிருஷ்ணா

    இந்நிலையில் பாலகிருஷ்ணா மீது போலீசில் தொகுதி மக்கள் சிலர் புகார் அளித்துள்ளனர். அதில் ''இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக இருக்கும் பாலகிருஷ்ணா தொகுதியை கண்டுகொள்வது இல்லை என்றும், தொகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. இந்த புகார் பரபரப்பையும், விவாதங்களையும் கிளப்பி உள்ளது. யாரோ தூண்டுதலின் பேரில் பாலகிருஷ்ணா மீது புகார் அளித்து இருப்பதாக அவரது ரசிகர்கள் கண்டித்து வருகிறார்கள்.

    • இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

    இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.


    பிரின்ஸ்

    மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 'பிரின்ஸ்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.


    பிரின்ஸ் படக்குழு

    இந்நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின்  படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. 

    • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெற்றது.
    • இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.

    இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.


    சூரரைப்போற்று 

    இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.


    திரௌபதி முர்மு - சூர்யா

    இதையடுத்து 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூர்யா பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சூரரை போற்றுக்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார்.


    திரௌபதி முர்மு - ஜோதிகா

    இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சூர்யா பேசியதாவது, "இந்திய அரசாங்கத்திற்கும் ஜூரிக்கும் என் நன்றி. என் மனதில் நிறைய உணர்ச்சிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. நான் நன்றி சொல்ல நிறைய பேர் உள்ளனர். உண்மையிலேயே மறக்க முடியாத தருணம்" என்று பேசினார்.

    • இயக்குனர் ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜூனியர்.
    • இந்த படத்தில் நடிகர் கிரீட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.

    இயக்குனர் ராதாகிருஷ்ண ரெட்டி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் கிரீட்டி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமாகியுள்ளார். மேலும், இதில் வி. ரவிச்சந்திரன், ஜெனிலியா ரித்தேஷ் தேஷ் முக், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    'பாகுபலி' படப் புகழ் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கன்னட திரையுலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


    ஜூனியர்

    வாராஹி ‌ஃபிலிம் புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கிரீட்டி நடித்துள்ள இப்படத்திற்கு 'ஜுனியர்' என படக்குழு பெயரிட்டுள்ளது. இதன் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    இப்படம் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெற்றது.
    • இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.

    இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.


    திரௌபதி முர்மு - சூர்யா

    இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.


    திரௌபதி முர்மு  - ஜோதிகா

     இந்நிலையில் 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து சூர்யா பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து சூரரை போற்றுக்காக சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகா பெற்றுக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன்.
    • இவர் தனது குடும்பத்துடன் பொற்கோவில்லு சென்று வழிபாடு நடத்தியுள்ளார்.

    இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. இப்படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் தெலுங்கு மொழியில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மலையாளம், கன்னடம் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது.


    குடும்பத்துடன் அல்லு அர்ஜுன்

    இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.


    குடும்பத்துடன் அல்லு அர்ஜுன்

    இந்நிலையில், அல்லு அர்ஜுன் மனைவி சினேகா ரெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சிறப்பு வழிபாடு நடத்தினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • தொகுப்பாளரிடம் அநாகரீகமாக பேசியதாக நடிகர் ஸ்ரீநாத் பாசியை காவல்துறை கைது செய்தது.
    • நடிகர் ஸ்ரீநாத் பாசி முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

    மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர் ஸ்ரீநாத் பாசி. இவர் '22 பீமேல் கோட்டயம்', 'உஸ்தாத் ஓட்டல்', 'கும்பளங்கி நைட்ஸ்', 'வைரஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த 'சட்டம்பி' திரைப்படம் சமீபத்தில் வெளியானது.


    ஸ்ரீநாத் பாசி

    இதையடுத்து இவர் 'சட்டம்பி' திரைப்படம் தொடர்பாக பிரபலமான மலையாள யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பெண் தொகுப்பாளரின் கேள்வியால் எரிச்சலடைந்த அவர், கேமராவை நிறுத்தும்படி கூறிவிட்டு, தொகுப்பாளரையும் அந்தக் குழுவையும் ஆபாசமாகத் திட்டி, மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

    இதுபற்றி கொச்சி, மராடு போலீசில் புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நடிகர் ஸ்ரீநாத் பாசியை போலீசார் கைது செய்து மூன்று மணி நேரம் விசாரணைக்கு பிறகு ஜாமீனில் விடுவித்தனர். இவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.


    ஸ்ரீநாத் பாசி

    இந்நிலையில், தன்னை நேரில் சந்தித்து நடிகர் ஸ்ரீநாத் பாசி மன்னிப்பு கேட்டதால் வழக்கை திரும்ப பெறுவதாக பெண் தொகுப்பாளர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து தன் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி ஸ்ரீநாத் பாசி மனு தாக்கல் செய்துள்ளார்.  

    • செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'.
    • இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.


    நானே வருவேன்

    வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'நானே வருவேன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


    இந்நிலையில், 'நானே வருவேன்' திரைப்படம் முதல் நாளிலே ரூ.10.1 கோடி வசூல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு இயக்குனர் செல்வராகவனுக்கு மாலை அணிவித்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    ×