அறிமுக நடிகர் கிரீட்டி நடிக்கும் 'ஜுனியர்'

இயக்குனர் ராதாகிருஷ்ண ரெட்டி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ஜூனியர்.இந்த படத்தில் நடிகர் கிரீட்டி கதாநாயகனாக நடித்துள்ளார்.
கிரீட்டி
கிரீட்டி
Published on

இயக்குனர் ராதாகிருஷ்ண ரெட்டி புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் கிரீட்டி கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் மூலம் இவர் நடிகராக அறிமுகமாகியுள்ளார். மேலும், இதில் வி. ரவிச்சந்திரன், ஜெனிலியா ரித்தேஷ் தேஷ் முக், ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

'பாகுபலி' படப் புகழ் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பெயரிடப்படாத இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி கன்னட திரையுலகில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஜூனியர்

வாராஹி ‌ஃபிலிம் புரொடக்‌ஷன் தயாரிக்கும் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகர் கிரீட்டி நடித்துள்ள இப்படத்திற்கு 'ஜுனியர்' என படக்குழு பெயரிட்டுள்ளது. இதன் டைட்டில் லுக் சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இப்படம் கன்னடம் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com