படப்பிடிப்பை நிறைவு செய்த சிவகார்த்திகேயன் படக்குழு

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
Published on

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

பிரின்ஸ்

மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 'பிரின்ஸ்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

பிரின்ஸ் படக்குழு

இந்நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின்  படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதனை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான புகைப்படத்தை படக்குழு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com