என் மலர்
சினிமா செய்திகள்
- 68வது தேசிய திரைப்பட விருதுகளில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளியான மண்டேலா படம் விருதுகளை வென்றது.
- இதில் விருதை வென்ற மண்டேலா படத்தின் தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் இதுகுறித்து பேசியுள்ளார்.
68வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் 'இந்திரா காந்தி சிறந்த அறிமுக இயக்குனரின் படம்' பிரிவில் தயாரிப்பாளருக்கான விருதை 2020-ஆம் ஆண்டு வெளிவந்த 'மண்டேலா' திரைப்படம் வென்றது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி அன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.

எஸ்.சஷிகாந்த்
இதுகுறித்து தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த் கூறியதாவது, "இந்திய திரைப்பட விழாக்களின் இயக்ககம், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் மற்றும் இப்படத்தை தேர்வு செய்த நடுவர் குழுவிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 'இந்திரா காந்தி சிறந்த அறிமுக இயக்குனரின் படம்' மற்றும் 'சிறந்த வசனகர்த்தா' உள்ளிட்ட விருதுகளை வென்ற திரு.மடோன் அஸ்வின் அவர்களுக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

எஸ்.சஷிகாந்த்
சிறந்த கதை அம்சம் கொண்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்றும், பிரத்தியேக திறமைசாலிகளை கண்டறிந்து ஆதரிக்க வேண்டும் என்கிற குறிக்கோள்களுடன் ஒயிநாட் ஸ்டூடியோஸ் 2010-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த பயணத்தில் இயக்குனர்கள் சி.எஸ்.அமுதன், பாலாஜி மோகன், மடோன் அஸ்வின், நிஷாந்த் கலிதிண்டி போன்றவர்களை அறிமுகப்படுத்தியதில் பெருமை கொள்கிறேன். குறிப்பாக, இந்த பிரிவில் எங்களுக்கு இவ்விருது கிடைத்ததை, எங்களது பன்னிரெண்டு ஆண்டு கால உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகிறேன். பல்வேறு வளர்ந்து வரும் திறமைசாலிகளுடன் எங்களது எதிர்கால படங்கள் அமையவுள்ளன. இந்த விருது என்னை போலவே அவர்களுக்கும் மிகவும் ஊக்கமளிக்கிறது.

விருது பெற்ற தயாரிப்பாளர் எஸ்.சஷிகாந்த்
ஒரு திரைப்படம் தனது பார்வையாளர்களை அமைத்துக்கொள்ளும் என்று நான் எப்போதும் உறுதியாக நம்புகிறேன். கலாச்சாரம் மற்றும் மொழித் தடைகளைத் தாண்டி உலகம் முழுவதிலும் இருந்து "மண்டேலா" தொடர்ந்து பெற்றுவரும் ஆதரவும், எப்போதும் தரமான கதைக்களம் கொண்ட படங்களை பார்வையாளர்கள் ஏற்றுக்கொள்வதற்கு தயாராக இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாகும். மண்டேலா திரைப்படத்தை கொண்டாடிய பார்வையாளர்களுக்கு நான் முழு மனதுடன் நன்றி கூறுகிறேன்.
68வது தேசிய திரைப்பட விருதுகளை வென்ற அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
- நடிகர் விக்ரம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மறைந்த எழுத்தாளர் கல்கி எழுதி புகழ்பெற்ற வரலாற்றுப் புனைவு நாவலான பொன்னியின் செல்வனை பல ஆண்டுகால முயற்சிக்கு பின் படமாக எடுத்துள்ளார் மணிரத்னம். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெயராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் முதல் பாகம் நேற்று முன்தினம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் - விக்ரம்
பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலனாக வரும் விக்ரம் படத்தின் மிக சரியான தேர்வு என்றும் தனது திறமையான நடிப்பால் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறார் என்றும் ரசிகர்கள் பலரும் அவர்களின் விமர்சனங்களை தெரிவித்தனர்.

பொன்னியின் செல்வன் - விக்ரம்
இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ''நன்றி.. தேங்க்ஸ்.. சுக்ரியா.. நன்னி.. தன்யவாத்.. இப்படி எந்த மொழியில் சொன்னாலும், கேட்பதற்கும் உணர்வதற்கும் நன்றாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு கிடைத்த வரவேற்பு ஆதித்த கரிகலானுக்கு கிடைத்த அந்த ஆக்ரோஷமான பின்னூட்டம் ரொம்ப நன்றி.

பொன்னியின் செல்வன் - விக்ரம்
நான் நிறைய படங்களில் நடித்திருக்கேன்; நிறைய நல்ல கதாபாத்திரங்களில் நடித்திருக்கேன். எப்போதும் எல்லா படங்களையும், என் படம், என்னுடைய கதாபாத்திரம் என பெருமைப்படுவேன். எல்லோரும் இது எங்களுடைய படம் என கொண்டாடுவது எனக்கு பெரிய மகிழ்ச்சி. படக்குழு உள்ளிட்டவர்களுக்கும் இயக்குநர் மணிரத்னத்துக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
- சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலாபால்.
- பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
தமிழ் திரையுலகிற்கு சிந்து சமவெளி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் அமலாபால். அதன்பின்னர் மைனா, தெய்வதிருமகள், தலைவா, ராட்சசன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

அமலாபால்
இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான கடாவர் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றிருக்கும் அமலாபால் அங்கு எடுத்துக் கொண்ட தனது நீச்சல் உடை கவர்ச்சி புகைப்படங்கள் அடங்கிய வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து லைக்குகளை குவித்து வருகிறது.
Escape the ordinary 💫#beach #beachbum #vacation #maldives pic.twitter.com/98XnA3N5en
— Amala Paul ⭐️ (@Amala_ams) October 1, 2022
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
- இப்படத்தை நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள திரையரங்கில் ரசிகர்களுடன் சரத்குமார் படம் பார்த்தார்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சரத்குமார், விக்ரம், ஐஸ்வர்யாராய், திரிஷா, ஜெயம் ரவி, கார்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை நெல்லை மாவட்டம் காவல்கிணறு பகுதியில் உள்ள திரையரங்கில் நடிகர் சரத்குமார் ரசிகர்களுடன் பொன்னியின் செல்வன் படத்தை கண்டுகளித்தார். அதனை தொடர்ந்து ரசிகர், ரசிகைகள் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

பொன்னியின் செல்வன் - சரத்குமார்
அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது, வரலாற்று எழுத்தாளர் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக காண்பது சிறப்பு. கல்கியின் கதை தெரிந்தவர்கள் இத்திரைப்படத்தை எளிதாக அறிந்து கொள்வர். சோழர்கள் ஆட்சி காலத்தை நினைவுபடுத்தும் விதமாக திரைப்படம் அமைந்திருப்பது சிறப்பு. வெளிநாட்டவர்களுக்கு தாஜ்மஹாலை காட்டுவதை விட, சோழ நாடு எப்படி இருந்தது என்பதற்கு திரைப்படம் உதாரணம். பொருளாதார பெருக்கம், நீர்வளப்பெருக்கம், வெளிநாடு வணிகம், போரிடுவது எவ்வாறு என்பதற்கு சோழர்கள் ஆட்சி காலமே சான்று.

சரத்குமார்
இத்திரைப்படத்தில் உலக அழகி ஐஸ்வர்யா ராயுடன் ஜோடியாக நடித்த நான் மிஸ்டர் மெட்ராஸ் என்பது பெருமை. ஆசையை தூண்டும் விதமாக மிக பிரம்மாண்டமாக இத்திரைப்படம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்ற திட்டத்தை வகுத்து வருகிறேன். மக்கள் சிறப்பாக வாழ எது இருக்க வேண்டும், நீக்க வேண்டும், சேர்க்க வேண்டும், கோர்க்க வேண்டும் என்பதை அறிந்து தெளிவாக விரைவில் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
- 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
- இதில் சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும் சிறந்த திரைப்படத்திற்கான விருதை ஜோதிகாவும் பெற்றுக் கொண்டனர்.
இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

குழந்தைகளுடன் சூர்யா-ஜோதிகா
இதையடுத்து 2020-ஆம் ஆண்டு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை சூர்யாவும், சிறந்த திரைப்படத்திற்கான விருதை தயாரிப்பாளர் ஜோதிகாவும் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து பெற்றுக் கொண்டனர்.

குடும்பத்துடன் சூர்யா-ஜோதிகா
இந்நிலையில் இதுகுறித்து சூர்யா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு அதனுடன் இரு புகைப்படங்களையும் இணைத்துள்ளார். அதில், என்றும் நன்றியுள்ளவள் சுதா! வெற்றி பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இது அன்பான ரசிகர்களுக்காக!! என்று பதிவிட்டுள்ளார். அவர் இணைத்துள்ள அந்த புகைப்படத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா பெற்று கொண்ட பதக்கத்தை சூர்யாவின் தந்தை சிவகுமார் மற்றும் தாய் லஷ்மி குமாரி இருவரின் கழுத்தில் அணிய வைத்து அழகு பார்த்துள்ளனர். இந்த புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகிறனர்.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
- இப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், பிரபு, ஆர்.சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த படம் பொன்னியின் செல்வன்.

பொன்னியின் செல்வன்
இப்படத்தின் முதல் பாகம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியானது.

பொன்னியின் செல்வன்
இப்படம் வெளியான முதல் நாளிலே நல்ல வசூலை அள்ளியுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் 5000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
- சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
- அதில், யாரும் யாரிடமும் தோற்பதும் இல்லை, ஜெயிப்பதும் இல்லை என விஜய் சேதுபதி பேசினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;- "இந்த உலகில் யாரும் யாரிடமும் தோற்றுப்போவதில்லை. யாரும் யாரையும் வெற்றி கொள்வதும் இல்லை. அது அந்த சமயத்தில் நடக்கும் ஒரு சிறிய நாடகம் மட்டுமே. அறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் முக்கியமானது கேட்பது. பிறர் பேசுவதை முதலில் அதை நன்றாக கவனித்து கேளுங்கள்.

விஜய் சேதுபதி
பள்ளி, கல்லூரி எல்லாம் அதை தான் நமக்கு சொல்லிக் கொடுக்கின்றன. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பாடங்கள் எல்லாம் யாரோ ஒருவர் படித்து, புரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கு பாடமாக ஆக்கியது தான். அவ்வாறு நாம் படிக்கும் பாடங்களை நம் அறிவைக் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்கு பெயர் தான் பகுத்தறிவு. அது கடவுளாக இருந்தாலும், சக மனிதனாக இருந்தாலும் அல்லது யாராக இருந்தாலும் சரி, கருத்தைப் பாருங்கள், கருத்து சொன்னவரை பார்க்காதீர்கள். கருத்து உங்களுக்கு பயன்படுகிறதா என்பதை மட்டும் பாருங்கள்.

விஜய் சேதுபதி
புரிந்து கொள்ளும் திறன் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடும். கண்ணதாசன் சொன்னது போல் 'தன்னைத் தானும் அறிந்து கொண்டு ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா' என்ற பாடலின்படி, தன்னை உணர்ந்து கொள்வது தான் மிக முக்கியம். நாம் தான் சிறந்த புத்தகம்". இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.
- சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ளது சாகுந்தலம்.
- இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நடிகை சமந்தா தற்போது சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள சாகுந்தலம் படத்தில் நடித்துள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

சாகுந்தலம்
இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக சமீபத்தில் படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு மாற்றி வைத்துள்ளது. அதன்படி, படத்தை 3-டியில் மாற்ற உள்ளோம். இதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது'' என்று படக்குழு தெரிவித்துள்ளது.
Bigger and better 🙌 https://t.co/zRjpZ7h6fQ
— Samantha (@Samanthaprabhu2) September 29, 2022
- தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் இயக்குனர் பாக்யராஜ்.
- இவர் நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்த இயக்குனர் பாக்யராஜுக்கு, நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதில் கூறியிருப்பதாவது, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக்கொண்ட நிலையில் தாங்கள் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை பற்றியும், தேர்தல் குறித்தும் பொய்யான, உண்மைக்கு புறம்பான கருத்துகளை நடிகர் சங்கத்தினுடைய உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் பரப்பி வருகிறீர்கள்.

பாக்யராஜ்
காழ்ப்புணர்ச்சி காரணமாகவும், சில உறுப்பினர்களின் தூண்டுதலின் பேரிலும் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் உள்ள நிர்வாகிகள் மீது சமூக அந்தஸ்தை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இந்த செயலை செய்துள்ளீர்கள். சங்க சட்டவிதிகளுக்கு முரணாக இதை செய்து இருக்கிறீர்கள். சங்க உறுப்பினர்கள் சிலர் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கடிதம் அனுப்பி உள்ளனர்.

பாக்யராஜ்
இதுகுறித்து சங்கத்தின் செயற்குழுவில் விவாதித்து தங்களை சங்க உறுப்பினர் பதவியில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் பெற முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் உங்களை சங்கத்தில் இருந்து ஏன் நீக்கக்கூடாது என்று விளக்கம் கேட்டு இந்த கடிதம் அனுப்பப்படுகிறது. 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும். விளக்கம் அளிக்காத பட்சத்தில் அல்லது தங்கள் விளக்கம் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் தங்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறோம்" என்று அந்த நோட்டீசில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாக்யராஜ்
இந்நிலையில், புதிதாக வந்த நிர்வாகம் மற்றும் தேர்தல் குறித்து பொய்யான தகவலை பரப்பி வந்த காரணத்திற்காக இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் ஏ.எல்.உதயா இருவரையும் ஆறு மாதத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சமீபத்தில் வெளியான சியா என்ற படத்தில் நடித்திருந்தவர் அகன்ஷா மோகன்.
- இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் மும்பையில் வசித்து வந்த இளம்பெண் அகன்ஷா மோகன். 30 வயதான இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆன சியா என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் 9 திருடர்கள் என்ற படத்தில் நடித்துள்ள இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

அகன்ஷா மோகன்
இந்நிலையில், நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை அந்தேரியில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்தேரி ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை.

அகன்ஷா மோகன்
இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து ஓட்டலுக்கு வந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள ஒரு அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

பிரின்ஸ்
மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 'பிரின்ஸ்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.

பிரின்ஸ் படக்குழு
இந்நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

பிரின்ஸ் போஸ்டர்
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள 'சர்தார்' திரைப்படம் இதே தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
#Prince @Siva_Kartikeyan is Coming to Theatres to Light up your Diwali! 🪔💥@anudeepfilm @maria_ryab @manojdft @Cinemainmygenes #Sathyaraj @Premgiamaren @SVCLLP @SureshProdns @ShanthiTalkies @Gopuram_Cinemas @adityamusic @AdityaTamil_ #Prince🕊️ #PrinceFromDiwali2022 pic.twitter.com/REnd3Moxvm
— Shanthi Talkies (@ShanthiTalkies) October 1, 2022
- 2019 ஆம் ஆண்டு ‘ஒரு அடார் லவ்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரியா வாரியர்.
- இவர் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார்.
2019 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஒரு அடார் லவ் என்ற படத்தில் புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலமாக உலகம் முழுதும் ஒரே இரவில் டிரெண்டிங்கில் வந்த நடிகை பிரியா வாரியர். சமூக வலைதளத்தில் மட்டும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள்.

பிரியா வாரியர்
ஒரு அடார் லவ் படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு பாலிவுட் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறாக எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற படத்தில் பிரியா வாரியர் நடித்துள்ளார்.

பிரியா வாரியர்
பிரியா வாரியார் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவர் சுற்றுலாவுக்காக பாங்காக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் குளத்தில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் லைக்குகளை குவித்து வருகின்றனர்.






