கார்த்தியுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. வெளியான புதிய அறிவிப்பு..

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
Published on

இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார்.

பிரின்ஸ்

மேலும் இப்படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 'பிரின்ஸ்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நிறைவடைந்தது.

பிரின்ஸ் படக்குழு

இந்நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

பிரின்ஸ் போஸ்டர்

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள 'சர்தார்' திரைப்படம் இதே தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com