என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அகன்ஷா மோகன்"

    • சமீபத்தில் வெளியான சியா என்ற படத்தில் நடித்திருந்தவர் அகன்ஷா மோகன்.
    • இவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மராட்டிய மாநிலம் மும்பையில் வசித்து வந்த இளம்பெண் அகன்ஷா மோகன். 30 வயதான இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 16-ம் தேதி ரிலீஸ் ஆன சியா என்ற படத்தில் ஷிபெய்ல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழில் 9 திருடர்கள் என்ற படத்தில் நடித்துள்ள இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

     

    அகன்ஷா மோகன்

    அகன்ஷா மோகன்

    இந்நிலையில், நடிகையும், மாடல் அழகியுமான அகன்ஷா மோகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். மும்பை அந்தேரியில் ஒரு ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் தனது அறையில் உள்ள மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அந்தேரி ஓட்டலில் தங்கி இருந்த அகன்ஷா மோகன் நேற்று வெகு நேரமாகியும் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை.

     

    அகன்ஷா மோகன்

    அகன்ஷா மோகன்

    இதனால் சந்தேகமடைந்த ஓட்டல் ஊழியர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து ஓட்டலுக்கு வந்த போலீசார் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்குள்ள ஒரு அறையில் அகன்ஷா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    ×