என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • நடிகை மஞ்சு வாரியர் தற்போது நடித்து வரும் படம் 'ஆயிஷா'.
    • இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..' பாடல் வெளியாகி உள்ளது.

    'அசுரன்' படத்தின் மூலம் தமிழில் மிகவும் பிரபலமான நடிகை மஞ்சு வாரியார். இவர் தற்போது 'ஆயிஷா' என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் அமீர் பள்ளிக்கல் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதையை ஆஷிப் கக்கோடி எழுத, கிராஸ் பார்டர் கேமரா பிரைவேட் லிமிடெட் எனும் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜக்காரியா தயாரித்திருக்கிறார்.

     

    பாடல் நடனம் அமைக்கும் பணியில் பிரபுதேவா

    பாடல் நடனம் அமைக்கும் பணியில் பிரபுதேவா

    இந்நிலையில் 'ஆயிஷா' படத்தில் இடம்பெற்றுள்ள 'கண்ணிலு கண்ணிலு மெய்யெழுதின கண்ணிலு..' எனத் தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. ஜெயச்சந்திரன் இசையமைத்துள்ள இந்த பாடலை பி.கே.ஹரி நாராயணன் மற்றும் சுகைல் கோயா ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த பாடலுக்கு பிரபுதேவா நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 



    • இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் துருவ நட்சத்திரம்.
    • இப்படம் டிசம்பரில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    துருவ நட்சத்திரம்

    இப்படத்தின் வேலைகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டது. வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. படத்தை 2018-ல் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சினைகளால் தள்ளிப்போனது.

    இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளதாகவும் அதற்காக விக்ரம் 15 நாள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது.


    துருவ நட்சத்திரம்

    இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தின் பணிகளை முடித்து இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் விக்ரம் ரசிகர்கள் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.

    • தமிழில் முன்னணி இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்.
    • இவர் சூரரைப்போற்று திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருது பெற்றார்.

    பிரபல இசையமைப்பாளரான ஜி.வி. பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்த 'பேச்சுலர்', 'ஐங்கரன்', 'ஜெயில்' போன்ற படங்கள் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தற்போது இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'வணங்கான்' படத்திற்கு இசையமைத்து வருகிறார்.


    ஜி.வி.பிரகாஷ்

    சமீபத்தில் 'சூரரைப் போற்று' படத்திற்காக ஜி.வி. பிரகாஷ் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதைப் பெற்றார். இந்நிலையில், இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டார்.


    ஜி.வி.பிரகாஷ்

    அந்த புகைப்படத்திற்கான கமெண்டில் மாணவி ஒருவர் "நான் கும்பகோணத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் பிசிஏ படித்து வருகிறேன். இந்த மாதம் என்னுடைய தேர்வுகள் தொடங்க உள்ளன. தேர்வுக் கட்டணம் தொடர்பான விவரங்களை அனுப்பியிருக்கிறேன்" என உதவி கேட்டுள்ளார்.

    இந்த கமெண்டை படித்த ஜிவி பிரகாஷ் 'பணம் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பப்பட்டு விட்டது" என்று பதிலளித்துள்ளார். இந்த செயலுக்காக ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டி வருகின்றனர்.


    • விஜய் சேதுபதி, அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி நடித்துள்ள படம் காந்தி டாக்ஸ்.
    • இப்படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

    தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது 'காந்தி டாக்ஸ்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கிஷோர் பி.பெலேகர் இயக்க ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வசனமில்லாமல் மவுனப் படமாக உருவாகி இருக்கும் இப்படத்தில் அதிதி ராவ் ஹைதாரி, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ப்ளாக் காமெடி ஜானரில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

     

    காந்தி டாக்ஸ்

    காந்தி டாக்ஸ்

    இப்படம் குறித்து இயக்குனர் கிஷோர் பி.பெலேகர் கூறியதாவது, மௌனப் படம் என்பது வித்தை காட்டும் ஒரு செயல் அல்ல இது கதைசொல்லலின் ஒரு வடிவம். பேசும் மொழியான வசனத்தை முற்றிலும் நிராகரித்துவிட்டு உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது கடினமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமும் சவாலும் கூட என்றார்.

    காந்தி டாக்ஸ்

    காந்தி டாக்ஸ்

     

    இந்நிலையில் இப்படத்தின் அறிமுக வீடியோவை காந்தி பிறந்தநாளான நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் உலகம் முழுவதும் 2023ல் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    • புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விக்ரம் வேதா திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.
    • பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

     

    விக்ரம் வேதா

    விக்ரம் வேதா

    இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்துள்ளனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கியிருந்தார்கள்.

     

    விக்ரம் வேதா

    விக்ரம் வேதா

    ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் திரையுலகினர் என பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தமிழில் வெளியான விக்ரம் வேதா படத்தை போன்று இந்தியிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாகவும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் படமாகவும் உருவாகி உள்ளது. இப்படத்தின் திரைக்கதை வடிவத்தை இந்தி திரையுலகம் வியப்பில் பார்த்து வருகிறது. இப்படம் மூலம் இந்தியில் தங்களுடைய தடத்தை பதித்துள்ள புஷ்கர்-காயத்ரிக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளது.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படம் வெளியான 3 நாட்களில் பல கோடி வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரகாஷ் ராஜ், பிரபு, ஆர்.சரத்குமார், விக்ரம் பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த படம் பொன்னியின் செல்வன்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இப்படத்தின் முதல் பாகம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

     

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான 3 நாட்களில் உலகம் முழுவதும் 230 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. முன்பதிவு செய்யப்பட்ட நாட்களையும் தாண்டி இந்த படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு இருக்கும் என்பதால் எதிராபாராத அளவுக்கு வசூலை எட்டும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

    • சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருந்த மாமனிதன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படம்ம் அமெரிக்க திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

    அமெரிக்காவில் நடைபெறும் முக்கிய திரைப்பட விழாக்களில் ஒன்றாக கருதப்படும் அர்பா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கான சிறந்த படங்களாக 5 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாமனிதன் திரைப்படமும் இடம்பெற்றுள்ளது. நவம்பர் 20-ந்தேதி விருது குறித்து அறிவிப்பை வெளியிடுகின்றனர்.

     

    விஜய் சேதுபதி

    விஜய் சேதுபதி

    சீனுராமசாமி இயக்கத்தில் வெளியான மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதியும் காயத்ரியும் ஜோடியாக நடித்திருந்தனர். இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமி கூறும்போது, ''அர்பா சர்வதேச திரைப்பட விழாவானது 25-வது ஆண்டாக நடக்கிறது. வெள்ளிவிழா ஆண்டில் நடக்கும் புகழ் பெற்ற இவ்விழாவில் திரையிடப்படும் ஐந்து படங்களில் ஒன்றாக விஜய்சேதுபதி நடித்து எனது இயக்கத்தில் வெளியான மாமனிதன் படம் திரையிட தேர்வாகியுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தேர்வு குழுவினருக்கு நன்றி'' என்றார்.


     


    மாமனிதன் 

    மாமனிதன் 

    ஏற்கனவே மாமனிதன் படம் டோக்கியோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த ஆசியப்படத்துக்கான தங்க பதக்கம் விருதையும் பூடான் நாட்டில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டு 4 விருதுகளையும் சிங்கப்பூர் பட விழாவில் திரையிடப்பட்டு 4 விருதுகளையும் பெற்றுள்ளது. மாமனிதன் சர்வதேச அளவில் விருதுகளை குவித்து வருவது படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • தெலுங்கு நடிகர் பிரித்விராஜ் தமிழில் புதுப்பேட்டை, பீஸ்ட், பாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவருக்கு எதிராக இவரது மனைவி தொடர்ந்த வழக்கில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரித்விராஜ். இவர் தமிழில் புதுப்பேட்டை, பீஸ்ட், பாரீஸ் ஜெயராஜ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிரித்விராஜுக்கும் விஜயவாடாவை சேர்ந்த ஸ்ரீலட்சுமி என்ற பெண்ணுக்கும் 1984-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

     

    பிரித்விராஜ்

    பிரித்விராஜ்

    இந்நிலையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததையடுத்து பிரித்விராஜுக்கு எதிராக ஸ்ரீலட்சுமி விஜயவாடா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ''பிருத்விராஜ் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த காலங்களில் எனது பெற்றோர்தான் அவர் செலவுகளை எல்லாம் பார்த்துக் கொண்டனர். 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார்.

     

    பிரித்விராஜ்

    பிரித்விராஜ்

    இப்போது நான் பிறந்த வீட்டில் தான் இருக்கிறேன். இனிமேல் அவரோடு சேர்ந்து வாழ சாத்தியம் இல்லை. தற்போது சினிமாவிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து மாதத்துக்கு ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கிறார். எனவே எனக்கு மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

     

    பிரித்விராஜ்

    பிரித்விராஜ்

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பிரியதர்ஷினி நடிகர் பிரித்விராஜ் சொத்துக்கள் மற்றும் அவரது வருவாய் சம்பந்தப்பட்ட விவரங்களை பரிசீலித்து மனைவிக்கு மாதம் ரூ.8 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டார். இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சென்னையில் நடைபெற்ற குறும்பட விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார்.
    • இவ்விழாவில் வெற்றிமாறன், நம் அடையாளங்களைப் பறிக்கும் செயல் தொடர்ந்து நடக்கிறது என்று பேசினார்.

    சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, ''அசுரன் படம் எடுப்பதற்கு முன் அரசியல் ரீதியாக எதுவும் தவறாகிவிடக் கூடாது என்பதற்காக அப்போது நான் விசிக தலைவர் திருமாவளவனை நேரில் சந்தித்தேன். இதுபோன்ற பிர்ச்சினைகளை கையாளும்போது எதனை முதன்மைப்படுத்த வேண்டும் எனக் கேட்டிருந்தேன்.

    வெற்றிமாறன்

    வெற்றிமாறன்

     

    அதற்கு அவர், "தனிமனிதனால் சமூகத்திற்கு தீர்வு கிடைக்கும் என சினிமாவில் சொல்லாதீர்கள். அதே தவறு தான் நிகழ்கிறது. அமைப்பால் திரள வழிசெய்யுங்கள்" என்றார். மேலும், "கலை என்பது ஒரு அரசியல். நாம் தெரிந்தோ, தெரியாமலோ அரசியலுக்குள் தான் இருக்கிறோம்" என திருமாவளவன் சொல்லியிருந்தார். இலக்கியம், சினிமா எப்படி அவர்கள் கையில் இருந்தது. அந்த தமிழ் சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுத்ததால் தான் தமிழ்நாடு ஒரு மதச்சார்பற்ற நாடாக மாறியுள்ளது. அதனால்தான் வெளிப்புற ஆதிக்கத்தை எதிர்க்கும் பக்குவத்தையும் சினிமா பெற்றுள்ளது என நினைக்கிறேன். சினிமா என்பது வெகுமக்களை மிக எளிமையாக சென்றடையும் கலைவடிவம்.

     

    வெற்றிமாறன்

    வெற்றிமாறன்

    சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம். சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள். அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை நம்மிடமிருந்து எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது.

     

    வெற்றிமாறன்

    வெற்றிமாறன்

    சினிமாவிலும் அடையாளங்கள் பறிக்கப்படுகின்றன. இந்த அடையாளங்களை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். நம்முடைய விடுதலைக்காக நாம் போராட வேண்டும் என்றால் நாம் அரசியல் தெளிவோடு இருக்க வேண்டும். நடக்கவிருந்த ஆர்எஸ்எஸ் பேரணியே இதற்கெல்லாம் ஒரு உதாரணம் தான் என நினைக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நான் என்னால் முடிந்த பங்களிப்பைக் கொடுப்பேன்'' என்றார்.

    • ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'.
    • இப்படத்தின் டீசர் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

     

    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்

    இந்நிலையில் இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் வெளியிட்டு விழா அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரபாஸ், கிரித்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ஆதிபுருஷ்

    ஆதிபுருஷ்

     

    மற்றொரு புறம் கிராபிக்ஸ் காட்சிகள் கவரும் வகையில் இல்லை என்று இணையவாசிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'ஆதிபுருஷ்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.



    • விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் நிகில் முருகன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் பவுடர்.
    • இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

    தமிழ் திரையுலகின் முன்னணி மக்கள் தொடர்பாளராக வலம் வரும் நிகில் முருகன் நாயகனாக நடித்திருக்கும் படம் பவுடர். இப்படத்தில் மோகன், குஷ்பு உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை ஹரா படத்தை இயக்கி வரும் விஜய் ஸ்ரீ ஜி இயக்க, ஜீ மீடியா நிறுவனம் தயாரித்துள்ளது. ஓர் இரவில் நடக்கும் பரபரப்பான சம்பவங்களை வைத்து திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா படக்குழு உள்ளிட்ட பல திரைபிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்றது.

    விழாவில் பேசிய பாக்யராஜ்

    விழாவில் பேசிய பாக்யராஜ்

     

    இவ்விழால் கலந்து கொண்ட இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது, "இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய தயாரிப்பாளர் ஜெயஸ்ரீக்கு எனது வாழ்த்துகள். நிகில் முருகன் தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தாலும், அதை எப்போதும் தன்னம்பிக்கையுடனும் புன்னகையுடனும் எதிர்கொள்கிறார். நடிகராக புது அவதாரத்தின் மூலம் அவர் வெற்றியைக் காணுவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றார்.

    விழாவில் பேசிய வசந்த்
    விழாவில் பேசிய வசந்த்

     

    இயக்குநர் வசந்த் பேசியதாவது, "நிகில் எப்போதும் புதிய விஷயங்களில் கவனம் செலுத்துவதில் ஆர்வமாக இருப்பார், மேலும் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வார். அவர், தனது கடின உழைப்புக்காகவும் அதனை வெற்றிகரமாக மாற்றுவதிலும் வல்லவர் ஆவார். கடந்த 26 ஆண்டுகளாக தொடர்ந்து தனது வெற்றியை நிரூபித்து வருகிறார். படத்தின் டிரெய்லர் நம்பிக்கை தருகிறது, மேலும் இந்த படம் மாபெரும் வெற்றியடைய ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்" என்றார்.

    • சின்னத்திரை பிரபலங்கள் பலரும் நடித்து வரும் மெகாத் தொடர் இலக்கியா.
    • இந்த தொடர் அக்டோபர் 10-ம் தேதி திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் 8 வருடங்களாக ஒளிபரப்பாகி மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற சந்திரலேகா தொடர் 9-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை அடுத்து அக்டோபர் 10-ம் தேதி முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 2 மணிக்கு தினமும் இலக்கியா மெகாத் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த மெகாத் தொடரின் கதையை அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் உருவாக்கியுள்ளனர்.

    இதில் ரூபஸ்ரீ, நந்தன், ஹீமாபிந்து, சுஷ்மா, டெல்லிகணேஷ், சதிஷ், பரத்கல்யாண், ராணி, காயத்ரிப்ரியா, மீனா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சரிகம இண்டியா லிமிட் சார்பாக பி.ஆர். விஜயலட்சுமி தயாரிக்கும் இந்த தொடரை சாய் மருது இயக்குகிறார். இதன் கதையை சரிகம கதை இலாகாவும், திரைக்கதையை சேக்கிழார் எழுத, வசனத்தை குரு சம்பத்குமார் எழுதுகிறார்.

    இலக்கியா மெகாத் தொடர்

    இலக்கியா மெகாத் தொடர்

     

    தந்தை கைவிட்டுப் போன நிலையில் இலக்கியாவின் குடும்பம் தாய்மாமன் மாசிலாமணி வீட்டில் அவர்களின் தயவில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. அத்தை சிந்தாமணி எப்போதும் அவர்களை தேளைப்போல வார்த்தைகளால் கொட்டிக்கொண்டே இருப்பாள். சிறு வயதில் தங்களை காப்பாற்றிய தாய்மாமனுக்காக இலக்கியா அனைத்தையும் பொறுத்துக் கொள்கிறாள், தான் பல வேலைகள் செய்து கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் மொத்த பணத்தையும் அத்தையிடமே கொடுத்து விடுகிறாள். இதற்கிடையில் தம்பியையும் படிக்க வைத்து அம்மாவையும் காக்க போராடுகிறாள். கதையின் நாயகன் கெளதம் பெரிய தொழிலதிபர். அவனின் நட்பு இலக்கியாவிற்கு கிடைக்க, அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தாய்மாமன் மகள் அஞ்சலி பிரச்சனை செய்கிறாள். நல்ல வாழ்க்கை இலக்கியாவிற்கு கிடைத்து விடக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறாள்.

    இலக்கியா அனைத்தையும் சமாளித்து வாழ்க்கைப் பயணத்தை எப்படி வெற்றிகரமாக தொடர்கிறாள். அத்தையின் கொடுமையிலிருந்து விடுதலையாகி எப்படி குடும்பத்தை காப்பாற்றப் போகிறாள் என்பதை இலக்கியா மெகாத் தொடர் விளக்குகிறது. 

    ×