search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "prudhvi raj"

    • தெலுங்கு நடிகர் பிரித்விராஜ் தமிழில் புதுப்பேட்டை, பீஸ்ட், பாரீஸ் ஜெயராஜ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
    • இவருக்கு எதிராக இவரது மனைவி தொடர்ந்த வழக்கில் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

    பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் பிரித்விராஜ். இவர் தமிழில் புதுப்பேட்டை, பீஸ்ட், பாரீஸ் ஜெயராஜ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். பிரித்விராஜுக்கும் விஜயவாடாவை சேர்ந்த ஸ்ரீலட்சுமி என்ற பெண்ணுக்கும் 1984-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

     

    பிரித்விராஜ்

    பிரித்விராஜ்

    இந்நிலையில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்ததையடுத்து பிரித்விராஜுக்கு எதிராக ஸ்ரீலட்சுமி விஜயவாடா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ''பிருத்விராஜ் சினிமாவில் நடிக்க முயற்சி செய்த காலங்களில் எனது பெற்றோர்தான் அவர் செலவுகளை எல்லாம் பார்த்துக் கொண்டனர். 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார்.

     

    பிரித்விராஜ்

    பிரித்விராஜ்

    இப்போது நான் பிறந்த வீட்டில் தான் இருக்கிறேன். இனிமேல் அவரோடு சேர்ந்து வாழ சாத்தியம் இல்லை. தற்போது சினிமாவிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து மாதத்துக்கு ரூ.30 லட்சம் வரை சம்பாதிக்கிறார். எனவே எனக்கு மாதம் ரூ.10 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

     

    பிரித்விராஜ்

    பிரித்விராஜ்

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திரா பிரியதர்ஷினி நடிகர் பிரித்விராஜ் சொத்துக்கள் மற்றும் அவரது வருவாய் சம்பந்தப்பட்ட விவரங்களை பரிசீலித்து மனைவிக்கு மாதம் ரூ.8 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிட்டார். இது திரையுலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×