என் மலர்
சினிமா செய்திகள்
- மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் லூசிபர்.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிபர் படம் தெலுங்கில் 'காட்பாதர்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் சிரஞ்சீவியுடன் சல்மான் கான் மற்றும் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தை தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கியுள்ளார். இந்த படம் நாளை 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சல்மான் கான் - சிரஞ்சீவி
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சல்மான் கான் பேசியதாவது, உங்கள் படங்கள் இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் எங்கள் படங்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு தெற்கு நட்சத்திரம் தேவை. "நாங்கள் உங்களை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். மக்கள் ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புகிறார்கள், நான் தென்மாநிலங்களுக்கு செல்ல விரும்புகிறேன்.

காட் ஃபாதர் படக்குழு
பாலிவுட் தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால், அதிக ரசிகர்களுக்கு படம் சென்று சேரும். சிரஞ்சீவி ரசிகர்கள் என் படத்தையும், என் ரசிகர்கள் சிரஞ்சீவி படத்தையும் பார்ப்பார்கள். நாம் ரூ.300 - 400 கோடி வசூலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால் எளிதாக ரூ. 3,000 - 4,000 கோடியை எட்ட முடியும் என கூறினார்.
- இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள படம் தசரா.
- பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தசரா
மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

தசரா
அண்மையில் நடிகை சில்க் சுமிதா புகைப்படத்திற்கு முன்பு கையில் பாட்டிலுடன் நானி அமர்ந்திருக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் முதல் பாடல் 'தூம் தாம் தோஸ்தான்' தசரா அன்று வெளியாகும் என படக்குழு வித்தியாசமான முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

தசரா - தூம் தாம் தோஸ்தான்
இந்நிலையில் 'தூம் தாம் தோஸ்தான்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தசரா திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது.

பொன்னியின் செல்வன் - பார்த்திபன்
இந்நிலையில் இப்படத்தில் நடித்த பார்த்திபன் இயக்குனர் மணிரத்னம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டிராப்டு புரொஜெக்ட் (Dropped project) என்ற தலைப்பில் இன்று பார்த்தேன். உண்மையில் அவர் இந்தக் கனவுத் திட்டத்திற்காக (சினிமா) துறையில் ஒரு விதையை விதைத்தவர்! பொன்மனச் செம்மலின் பொன்னியின் செல்வன்' எண்ணங்களில் உயர்ந்தவர், என்றோ முதல்வராகி விட்டார் இக்காவியம் படைக்க.' நினைத்ததை முடிப்பவன்'-அவர் நினைத்ததை எல்லாம் அவர் நினைத்ததை எல்லாம் முடிப்பவர் சிஎம் (CM) உட்பட! அப்படிப்பட்ட மனிதர் நினைத்ததை மணிரத்னம் முடித்துள்ளார். விதைச்சது எம்ஜிஆர் விளைச்சது எம்ஆர். நமக்கது பெருமை! என்று பதிவிட்டுள்ளார்.
Dropped project என்ற தலைப்பில் இன்று பார்த்தேன்.Actually HE just dropped a seed in (cine)field for this dream project!பொன்மனச் செம்மலின்பொன்னியின் செல்வன்'எண்ணங்களில் உயர்ந்தவர்,என்றோ முதல்வராகி விட்டார் இக்காவியம் படைக்க.'நினைத்ததை முடிப்பவன்'-அவர் நினைத்ததை எல்லாம் pic.twitter.com/sxSO8LBwZO
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 4, 2022
- மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் காட்ஃபாதர்.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் மோகன் ராஜா கொடுத்துள்ளார்.
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார்.

சிரஞ்சீவி - நயன்தாரா
இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

சிரஞ்சீவி
'லூசிபர்' படம் நாளை (அக்டோபர் 5-ஆம்) தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை மோகன் ராஜா வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏக்கோ ராஜா என்ற பாடலை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.
- பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார்.
- அதன்பின்னர் விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் என்ற கதாப்பாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து பா.இரஞ்சித் இயக்கும் 'சியான் 61' படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் - இயக்குனர் அலௌகிக் தேசாய்
இந்நிலையில் விக்ரம் அடுத்து நடிக்கவிருக்கும் அடுத்த படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி கங்கனா ரணாவத் நடிக்கும் சீதா (The Incarnation - Sita) படத்தில் விக்ரம் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. அலௌகிக் தேசாய் இயக்கும் இப்படத்திற்கு பாகுபலி மற்றும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.
- சிரஞ்சீவி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த படம் ஆச்சார்யா.
- இப்படத்தின் தோல்வியால் இனி இருவரும் இணைந்து படம் நடிக்க மாட்டார்கள் என தகவல் வெளியானது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவி, தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடித்த படம் 'ஆச்சார்யா'. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இந்த படம் படுதோல்வி அடைந்து, வினியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை எதிர்கொண்டனர். அதன்பின்னர் சிரஞ்சீவி குடும்பத்திடம் நஷ்ட ஈடு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சிரஞ்சீவி - ராம்சரண்
இந்த தோல்வி காரணமாக இனி தனது மகன் ராம்சரணுடன் இணைந்து நடிக்கப் போவதில்லை என்று சிரஞ்சீவி முடிவு எடுத்திருக்கிறார் என தகவல் வெளியானது. ஆனால் இதனை சிரஞ்சீவி மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, 'ஆச்சாரியா' படத்தின் தோல்வி என்னை பாதிக்கவில்லை, ராம் சரணையும் இது பாதிக்காது. ஏனெனில் இயக்குனர் சொன்னபடி படத்தில் நடித்து முடித்தோம். ஆனால் ரசிகர்கள் இந்த படத்தை அங்கீகரிக்கவில்லை. இதற்காக எதிர்காலத்தில் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்க மாட்டோம் என்று அர்த்தம் ஆகி விடாது. வாய்ப்பு வந்தால், காலம் கனிந்தால் மீண்டும் இணைந்து நடிப்போம். இவ்வாறு சிரஞ்சீவி விளக்கம் அளித்துள்ளார்.
- சென்னையில் நடைபெற்ற குறும்பட விழாவில் இயக்குனர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார்.
- இந்த விழாவில் வெற்றிமாறனின் பேசியதை இயக்குனர் பேரரசு விமர்சனம் செய்துள்ளார்.
சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி குறும்பட, ஆவணப்பட கலைத்திருவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குனர் வெற்றிமாறன், "சினிமாவை திராவிட இயக்கம் கையில் எடுக்கும்போது, கலை கலைக்கானது தான் எனப் பேசினார்கள். மக்களை பிரதிபலிப்பது தான் கலை என உணர்த்தினார்கள்.

வெற்றிமாறன்
அந்த கலையை நாம் சரியாக கையாள வேண்டும். இல்லையென்றால், ஏற்கெனவே நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பதாகட்டும், ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவதாகட்டும் இப்படி தொடர்ந்து நடக்கிறது என்று விமர்சனம் செய்திருந்தார். அவரது கருத்துக்கு பலரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசியதாவது, எந்த மேடையை எடுத்தாலும் இந்து மக்களை இழிவுப்படுத்துவது சிலர் ஒரு வேலையாக வைத்திருக்கிறார்கள். ஒருவர் இந்து மதத்தை இழிவுபடுத்தும் போது, அவருக்கு நாங்கள் பதில் சொன்னால், உடனே நாங்கள் மத வெறியர்கள் என்று சொல்கிறார்கள்.

பேரரசு
ராஜராஜ சோழனை இந்து என்று அடையாளம் கொடுக்கிறாங்கன்னு இயக்குனர் வெற்றிமாறன் சொல்றாரு. சரி ராஜராஜ சோழன் இந்து இல்லை என்றால் வேறு என்ன கிறிஸ்துவரா? இல்ல இஸ்லாமியரா? ஆங்கிலேயர் நம் நாட்டை ஆட்சி செய்தபோது இந்தியா மாகாணம், மாகாணங்களாக பிரிந்து இருந்தது. அதில் மாற்றம் ஏற்பட்டு ஒன்றாக இணைத்து இன்று இந்தியா என்ற நாடாக்கியுள்ளனர்.
உலகத்திலேயே இந்தியா சிறந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல்தான் சைவம், வைணவம் ஆகிய அனைத்தும் இந்திய மதங்கள். அதை ஆங்கிலேயர்கள் ஒன்றிணைத்து இந்தியர் என்றார்கள். இங்கு சாமி கும்பிடுபவர்கள் அனைத்து தெய்வங்களையும் ஒன்றாக நினைத்து வழிபடுகிறார்கள். சாமி கும்பிடாதவர்களுக்கு இங்கு என்ன பிரச்சனை? உங்களுக்கு சாமி கும்பிட பிடிக்கவில்லை என்றால் இந்துக்கள் பற்றி ஏன் பேசுகிறீர்கள்,நாத்திகம் பேசுபவர் மனிதரே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
- பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை கரீனா கபூர்.
- இவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்ஃபி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கரீனா கபூர். இவர் அண்மையில் தனது 42-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், கரண் ஜோக்கர் என திரைப்பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

கரீனா கபூர்
இவர் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது காரில் இருந்து இறங்கிய நடிகை கரீனா கபூரை ரசிகர்கள் பலர் செல்ஃபி எடுப்பதற்காக சூழ்ந்துள்ளனர். புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக இருந்த ரசிகர்கள் பலர் அவரை தள்ளவும் செய்துள்ளனர்.

கரீனா கபூர்
இதைத்தொடர்ந்து நடிகையின் பாதுகாவலர்கள் ரசிகர்களை அப்புறப்படுத்தினர். அதன்பின்னர் கரீனா கபூர் விமான நிலையத்திற்கு சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே’.
- இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'லவ் டுடே' படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'லவ் டுடே' படத்தின் டிரைலர் வருகிற அக்டோபர் 5-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த ப்ரோமோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Here is #LoveToday Trailer announcement 📢
— Pradeep Ranganathan (@pradeeponelife) October 3, 2022
▶️https://t.co/Qxt051YN3H
Trailer from Oct 5th,6 PM!
Wait for it :D@Ags_production #KalpathiSAghoram #KalpathiSGanesh #KalpathiSSuresh @pradeeponelife @thisisysr @archanakalpathi pic.twitter.com/45NVjL4F4b
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

கமல்ஹாசன் - ஷங்கர்
இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

கமல்ஹாசன்
'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியதாக புகைப்படங்களையும் வீடியோ ஒன்றையும் கமல் வெளியிட்டார். இந்நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன் துணை நடிகையின் குழந்தையை கையில் ஏந்தி கொஞ்சியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
- தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகர் யோகி பாபு.
- தற்போது இவர் நடிக்கும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராகவும் கதாநாயகனாகவும் வலம் வருபவர் யோகி பாபு. இவரின் 'மெடிக்கல் மிராக்கல்', 'பூமர் அங்கிள்', 'பொம்மை நாயகி' போன்ற படங்கள் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதோடு சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது புதிய படம் ஒன்றிற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்லாமல் படத்தின் கதாநாயகனாகவும் நடிக்கிறார். இந்த படத்தை 'வில் அம்பு' படத்தை இயக்கிய இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியன் இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில் நடந்தது. படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
— Yogi Babu (@iYogiBabu) October 3, 2022
- சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார்.
- அதில் வியாபார உலகம் உங்கள் நேரங்களை திருடுகிறது என்று பேசினார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;- "எல்லாரிடமும் பழகுங்கள் தெரிந்து கொள்ளுங்கள். யார்மேல் கோபம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாதீர்கள்.

விஜய் சேதுபதி
இன்னைக்கு கோபப்பட்டவர்களை சண்டை போட்டவர்களை நான் காலத்திற்கு பின்னாடி சந்திக்கிறேன். அவன் நண்பனாக மாறுகிறான். எதையும் உடனே வெளிக்காட்டாதீர்கள் எல்லாவற்றிற்கும் நேரம் கொடுங்கள். இன்றைக்கு இருக்கும் வியாபார உலகம் உங்களது நேரங்களை திருடுவதற்கு தயாராக இருக்கிறது.

விஜய் சேதுபதி
உங்கள் நேரத்தை எந்த விதத்தில் திருடிக் கொள்ளலாம். உங்கள் மூளையை எப்படி பயன்படுத்தலாம் என்று யோசிக்கிறது. உங்களுக்கு சுதந்திரம் தருவது போல் அது நடிக்கிறது. டெக்னாலஜி உங்களை திங்கப்பார்க்கிறது. உங்களை எப்படி ஆட்கொள்ளலாம் என்பதில் இந்த உலகம் ரொம்ப ஆர்வமாக இருக்கிறது" இவ்வாறு நடிகர் விஜய் சேதுபதி பேசினார்.






