என் மலர்

    சினிமா செய்திகள்

    மோகன் ராஜா கொடுத்த புதிய அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்
    X

    மோகன் ராஜா

    மோகன் ராஜா கொடுத்த புதிய அப்டேட்.. கொண்டாடும் ரசிகர்கள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் காட்ஃபாதர்.
    • இப்படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் மோகன் ராஜா கொடுத்துள்ளார்.

    மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார்.

    சிரஞ்சீவி - நயன்தாரா

    இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

    சிரஞ்சீவி

    'லூசிபர்' படம் நாளை (அக்டோபர் 5-ஆம்) தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட்டை மோகன் ராஜா வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏக்கோ ராஜா என்ற பாடலை வெளியிட்டுள்ளார். அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த பாடல் தற்போது வைரலாகி வருகிறது.

    Next Story
    ×