என் மலர்
சினிமா செய்திகள்
- ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
- 'டிரைவர் ஜமுனா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

டிரைவர் ஜமுனா
இப்படத்தின் டிரைலர் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Finally v r coming in November 🔥#DriverJamuna is all set to release in theatres from November@kinslin @SPChowdhary3 @18Reels_ @GhibranOfficial @gokulbenoy #AnlArasu @thinkmusicindia #RRamar @ThatsKMS @reddotdzign1 @Synccinema @knackstudios_ @ahatamil @proyuvraaj pic.twitter.com/pDuoNjI120
— aishwarya rajesh (@aishu_dil) October 5, 2022
- சென்னையில் நடைபெற்ற ஒன் வே படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் குஷ்பு கலந்துக் கொண்டார்.
- இவரிடம் சில தினங்களுக்கு முன்பு வெற்றிமாறன் பேசிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
சென்னையில் நேற்று கோவை சரளா, ராஜாத்தி பாண்டியன், சார்லஸ் வினோத் உள்ளிட்ட நடித்திருக்கும் ஒன் வே படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகை குஷ்பு, தயாரிப்பாளர் ராஜன், இயக்குனர்கள் ஆர்.வி.உதயகுமார், எழில் உள்ளிட்ட பல திரையுலகினர் கலந்துக் கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குஷ்புவிடம் வெற்றிமாறன் ராஜராஜ சோழன் குறித்து பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த குஷ்பு, 'வெற்றிமாறன் தனது பார்வையை மாற்றிக்கொள்ள வேண்டும். உலகம் எந்த பார்வையில் பார்க்கிறதோ அதைத்தான் பார்க்க வேண்டும். தன்னுடைய நோக்கத்தில் மட்டும்தான் பார்ப்பேன் என்று அவர் சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை' என்றார்.

தொடர்ந்து பொன்னியின் செல்வன் படம் குறித்தும், அதன் மீது வைகக்ப்படும் விமர்சனம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், "வரலாறு பற்றி ஆய்வு தெரியாமல் மணிரத்னம் படம் எடுத்திருக்கமாட்டார். படம் சூப்பர் டூப்பர் ஹிட். இது தமிழ் படம் தெலுங்கு படம் என்று இல்லை. இது ஒரு பான் இந்தியா படம். தமிழர்களின் வரலாற்றை கூறியிருக்கும் படம். முகம் காட்டாமல் விமர்சனம், எதிர்கருத்து சொல்பவர்களை பற்றி கவலையில்லை" என்றார்.

நீங்கள் ஏன் காவி உடை அணிந்திருக்கிறீர்கள் என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த குஷ்பு, "இதை பார்த்தால் உங்களுக்கு காவி மாதிரி தெரிகிறதா. உங்கள் அருகில் இருப்பவரும்தான் காவி உடை போட்டிருக்கிறார். அவரிடம் ஏன் நீங்கள் கேட்கவில்லை. பச்சை நிறத்திலோ, சிவப்பு நிறத்திலோ உடை அணிந்து வந்தால் ஏன் அப்போது இப்படி கேட்கவில்லை. காவி என்பது நிறம் அவ்வளவுதான்" என்று கூறினார்.
இந்நிகழ்ச்சிக்கு நடிகை குஷ்பு காவி உடை அணிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
- மர்மதேசம், ஜீ பூம்பா உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் லோகேஷ் ராஜேந்திரன்.
- இவர் நேற்று சென்னையில் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியில் மர்மதேசம் நெடுந்தொடருக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த தொடரில் குட்டி ராசுவாக நடித்தவர் லோகேஷ் ராஜேந்திரன். இவர் 'ஜீ பூம்பா' என்ற தொடரிலும் நடித்து பிரபலமானார். இவர் நேற்று இரவு சென்னையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 31. அவரது மரணம் திரையுலகினரும், தொலைக்காட்சி துறையினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மர்மதேசம் - லோகேஷ் ராஜேந்திரன்
சமீபகாலமாக இவர் திரைப்படம் ஒன்றை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்ததாகவும் இதற்காக பணம் திரட்டுவதற்காக நண்பர்களிடம் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த முயற்சியில் இருக்கும்போதுதான் உயிரை மாய்த்துக்கொண்டிருக்கிறார் என்று அவரது நண்பர்கள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

மர்மதேசம் - லோகேஷ் ராஜேந்திரன்
இவர் 10 வருடங்களாக இயக்குனர் நாகாவிடம் சில தொடர்களில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்திருக்கிறார். அதன் பிறகும் சில தொடர்களில் பணியாற்றி வந்தவருக்கு திருமணமாகி குழந்தை இருப்பதாகவும் குடும்ப பிரச்சினை காரணமாக இந்த சோக முடிவை அவர் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.
- சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 'பிரின்ஸ்' திரைப்படத்தை இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ளார்.
- இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

பிரின்ஸ்
'பிரின்ஸ்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதற்கிடையில், 'பிரின்ஸ்' திரைப்படம் தீபாவளியன்று அக்டோபர் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அண்மையில் அறிவித்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டது.

பிரின்ஸ்
இந்நிலையில், 'பிரின்ஸ்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் இந்த வரும் அக்டோபர் 21-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் படத்தின் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
- சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வெற்றிமாறனின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்ப்பியுள்ளது.
- தற்போது இவரின் கருத்துக்கு நடிகர் கருணாஸ் அதரவு தெரிவித்துள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன், "கலையை இன்று நாம் சரியாக கையாள வேண்டும். இதனை கையாள தவறினால் வெகு சீக்கிரம் நிறைய அடையாளங்கள் பறிக்கப்படும். தொடர்ந்து நம்மிடம் இருந்து அடையாளங்கள் பறித்துக் கொண்டு இருக்கிறார்கள். வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது இப்படி தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது. இது சினிமாவிலும் நடக்கும்" என்று பேசினார். இவரின் கருத்துக்கு எதிர்ப்புகளும் ஆதரவுகளும் கிளம்பியுள்ளது.

வெற்றிமாறன் - கருணாஸ்
இந்நிலையில் வெற்றிமாறனின் இந்த கருத்துக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். அதில், இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானது! இராசராசச்சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது. இராசராசச்சோழன் காலத்தில் ஏது இந்து? ஏது இந்தியா? இந்தியா என்ற பெயரே ஆங்கிலேயர்கள் வணிகத்திற்காக உருவாக்கியது. இந்து மதத்தையும் அவர்களே உருவாக்கினார்கள். ஆகவே இந்தியா என்பது ஒரு தேசமில்லை. அது பல தேசங்களின் ஒன்றியம் இதை இந்திய அரசியலமைப்புச் சட்டமே சொல்கிறது. பல்வேறு தேசிய இனங்கள் இணைந்து வாழும் இந்திய ஒன்றியத்தில் பல்வேறு மதங்கள் இருப்பது இயல்பானது. அதுதான் வேற்றுமையில் ஒற்றுமை! அதில் ஒற்றை மதம் மட்டும் தலைதூக்கி எல்லாவற்றையும் விழுங்க நினைக்கும் போதுதான் சிக்கல் இங்கே உருவாகிறது.

கருணாஸ்
அந்தக் காலத்தில் இந்துமதமே கிடையாது. சைவம், வைணவம், ஆசிவகம் என பல மதங்கள்.. இராசராசன் சிவனை வழிபட்ட சைவர் என்பதே வரலாறு! ஆனால் இராசராசசோழனை, இராஜேந்திரசோழனை இந்து மத மன்னர்கள் என்று சொல்லுவது அல்லது மாற்ற நினைப்பது வேடிக்கையானது. காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அவர்கள் தமது தெய்வக்குரல் நூலில்.. "நாம் சைவராகவும், வைணவராகவும், இன்னும் பல்வேறு மதத்தினராகவும் இருந்த நம்மை இந்து என்று நம்மை ஆங்கிலேயர்கள் ஒன்றாக இணைத்ததால் பிழைத்துக் கொண்டோம் என்றார்" அந்தப் "பிழைத்துக் கொண்டோம்" என்ற வார்த்தையிலிருந்துதான் இன்று அவரை அனைத்தையும் தனதாக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆரிய பிராமணர்கள்.

கருணாஸ்
ஆரியம் எப்போதும் ஒன்றை எதிர்க்கும் அது முடியாது என்று தெரிந்துவிட்டால் அதை தனதாக்கிக் கொள்ளும்., அப்படித்தான் எல்லாவற்றையும் தனக்கானதாகவே மாற்றிக் கொண்டது. இப்போதும் மாற்றிக் கொண்டிருக்கிறது. இராசராச சோழனை இந்து என்று மாற்றநினைப்பது, மட்டுமா நடந்தது? தமிழை சமற்கிருதத்திலிருந்து தோன்றிய மொழி என்றார்கள். சிந்துவெளிநாகரிகமான தமிழர் நாகரிகத்தில் இடம்பெற்ற காளையை குதிரையாக திரித்தார்கள், முப்பாட்டன் முருகனை சுப்ரமணியனாக மாற்றினார்கள். முப்பால் யாத்த வள்ளுவப் பெருந்தகைக்கு காவியும் பூணூலும் அணிவித்தார்கள். தஞ்சைப் பெரியகோயிலை பிரகதீஸ்வரர் ஆலயம் என்று மாற்றினார்கள். எங்கெல்லாம்.. எதையெல்லாம் காவியாக்க முடியுமே அதையெல்லாம் மாற்றமுற்படுவார்கள். கடைசியில் அது கலைத்துறைக்கும் வரும்; வந்துகொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கையை தற்காப்பு உணர்ச்சியை ஊட்டும் உரையாக இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். அது மிகச்சரியானது. நாம் இனியாவது விழிப்புணர்வை அடையவேண்டும்.

கருணாஸ் - வெற்றிமாறன்
தமிழர் பண்பாட்டு அடையாளங்களை, தமிழர் கோயில்களை, ஊர்ப் பெயர்களை, இப்படி பல்வேறு தளங்களில் இந்தி – சமற்கிருத – காவி அடையாங்களாக மற்றுவதற்கான ஆரிய நுண்ணரசியல் பலகாலம் தொட்டு நடந்தேறுகிறது. அது அண்மைக்காலமாக வேகமெடுத்துள்ளது. அதை நாம் முறியடிக்கவேண்டும். அதன் ஒரு கூறுகத்தான்.. ஆர்.எஸ்.எஸ். பேரணி.. இதற்குமுன் வேல்யாத்திரை, இராமராஜ்ய ரதயாத்திரை எல்லாம் தமிழ்நாட்டில் நடந்தது.

வெற்றிமாறன் - கருணாஸ்
இந்தியாவை 'பாரத்', 'பாரத் வர்ஷா" என்று மாற்றுவதற்குரிய சட்ட வேலைகளை பா.ஜ.க.முன்னெடுக்கிறது.. மிகவிரைவில் இந்தியா பாரத் ஆக மாறும். இந்து மதம் என்னவாக மாறும் என்பதும் அவர்கள் மனுதர்மபடிதான் நடக்கும்! ஆகவே நாம் விழிப்புணர்வு பெறவேண்டும். கலை மக்களுக்கானது! கலைப்பண்பாட்டு அடையாளங்கள் அந்தந்த மண்ணுக்குரியது அதை மாற்ற நினைப்பதும், அதை தனதாக்கிக் கொள்ள நினைப்பதும் மானுட அறத்திற்கே எதிரானது. தமிழர் அடையாளங்களை பறிக்க நினைத்தால் தமிழர் இனம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது சரியானதை யார் பேசினாலும் அதை ஆதரிப்பது தமிழர் அறம்! என்றார்.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இதில் அருண்மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார்.
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது.

பொன்னியின் செல்வன் - அருண்மொழி வர்மன்
இந்நிலையில் இப்படத்தில் அருண்மொழி வர்மன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்த ஜெயம் ரவியை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இதுகுறித்து ஜெயம் ரவி பதிவிட்டது, அந்த 1 நிமிட உரையாடல் எனது நாளை, எனது இந்த வருடத்தை என் வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்தது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா. நீங்கள் திரைப்படத்தையும் எனது நடிப்பையும் விரும்பினீர்கள் என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியும் ஆசீர்வாதமும் அடைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள திரைப்படம் ஆதிபுருஷ்.
- சில தினங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் டீசர் பல விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர். ஆனால் கடந்த 2-ம் தேதி வெளியான இப்படத்தின் டீசரை பார்த்த ரசிகர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஆதிபுருஷ் டீசர் சமூக வலைதளங்களில் மிகுந்த கிண்டலுக்கு ஆளாகி வருகிறது. இப்படத்தில் ராவணன் கதாபாத்திரம் பெரும் எதிர்ப்பை சந்தித்து உள்ளது. மோசமான விஎப்எக்ஸ் படத்திற்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

ஆதிபுருஷ்
இயக்குனர் ஓம் ராவத் மீது நெட்டிசன்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பாகுபலி படத்தை கொடுத்த பிரபாஸ் இப்படி ஒரு தரமற்ற படத்தை எடுத்திருக்க கூடாது என கருத்துக்களை பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆதிபுருஷ் டீசரின் கிராபிக்ஸ் காட்சிகளை பார்த்த நெட்டிசன்கள் இதை விட கார்ட்டூன் நெட்வொர்க் சீரிஸ் தான் சிறந்தது கார்ட்டூன் நெட்வொர்க்கில் வெளியிடுங்கள் என்று கூறி வருகின்றனர்.

ஆதிபுருஷ்
சமூக வலைதளங்களில் கிண்டல் செய்யப்பட்டாலும் இதுகுறித்து படக்குழு எந்த பதிலும் அளிக்கவில்லை. ஆனால் இதற்கிடையில் பிரபாஸ் கோபப்படுவது போன்ற வீடியோ வைரலாகி வருகிறது. கோபத்தில் இயக்குனர் ஓம் ரவுத்தை அவர் அழைத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியீட்டு நிகழ்வின் வீடியோவில் டீசர் வெளியானதும், கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்த்த பிரபாஸ் இயக்குனரிடம் கோபமடைந்ததாக கூறப்படுகிறது.

கோபத்தில் பிரபாஸ்
பிரபாஸ் கோபமாக இயக்குனர் ஓம் என் அறைக்கு வா என்று கூறுகிறார். பிரபாஸை இவ்வளவு கோபமாக நாங்கள் பார்த்ததில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ராமர் பிறந்த அயோத்தியில் ஆதிபுருஷ் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரை ஆதிபுருஷே ரசிக்கவில்லை என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆதிபுருஷ்
ஆதிபுருஷ் திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், படத்தின் விஎப்எக்ஸ் மிகவும் மோசமாக இருப்பதால் நெட்டிசன்கள் கோபத்தில் படத்தின் தரத்தை உயர்த்துங்கள் என கூறி வருகின்றனர்.
ஆதிபுருஷ் படத்தில் பிரபாஸ் ராமனாகவும், கிருத்தி சனூன் சீதையாகவும், சைப் அலிகான் ராவணன் கதாபாத்திரத்திலும் ந்டித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு 2023ல் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'.
- இப்படத்தின் டீசர் நேற்று முன்தினம் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஆதிபுருஷ்
இப்படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை நேற்று முன்தினம் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த டீசர் வெளியிட்டு விழா அயோத்தியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பிரபாஸ், கிரித்தி சனோன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆதிபுருஷ்
இந்நிலையில் ஆதிபுருஷ் பட டீசரில் சர்ச்சைக்குறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், அனுமன் குறித்த சர்ச்சைக்குறிய காட்சிகளை நீக்காவிடில் சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என மத்தியப்பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
'ஆதிபுருஷ்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந்தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் படம் வள்ளி மயில்.
- இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுசீந்திரன். இவர் தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் 'வள்ளி மயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

வள்ளிமயில்
இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

வள்ளிமயில்
இந்நிலையில் இப்படத்தின் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் லூசிபர்.
- இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிபர் படம் தெலுங்கில் 'காட்பாதர்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் சிரஞ்சீவியுடன் சல்மான் கான் மற்றும் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தை தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கியுள்ளார். இந்த படம் நாளை 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சல்மான் கான் - சிரஞ்சீவி
இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சல்மான் கான் பேசியதாவது, உங்கள் படங்கள் இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் எங்கள் படங்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு தெற்கு நட்சத்திரம் தேவை. "நாங்கள் உங்களை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். மக்கள் ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புகிறார்கள், நான் தென்மாநிலங்களுக்கு செல்ல விரும்புகிறேன்.

காட் ஃபாதர் படக்குழு
பாலிவுட் தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால், அதிக ரசிகர்களுக்கு படம் சென்று சேரும். சிரஞ்சீவி ரசிகர்கள் என் படத்தையும், என் ரசிகர்கள் சிரஞ்சீவி படத்தையும் பார்ப்பார்கள். நாம் ரூ.300 - 400 கோடி வசூலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால் எளிதாக ரூ. 3,000 - 4,000 கோடியை எட்ட முடியும் என கூறினார்.
- இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள படம் தசரா.
- பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தசரா
மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

தசரா
அண்மையில் நடிகை சில்க் சுமிதா புகைப்படத்திற்கு முன்பு கையில் பாட்டிலுடன் நானி அமர்ந்திருக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் முதல் பாடல் 'தூம் தாம் தோஸ்தான்' தசரா அன்று வெளியாகும் என படக்குழு வித்தியாசமான முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்திருந்தது.

தசரா - தூம் தாம் தோஸ்தான்
இந்நிலையில் 'தூம் தாம் தோஸ்தான்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தசரா திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது.

பொன்னியின் செல்வன் - பார்த்திபன்
இந்நிலையில் இப்படத்தில் நடித்த பார்த்திபன் இயக்குனர் மணிரத்னம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், டிராப்டு புரொஜெக்ட் (Dropped project) என்ற தலைப்பில் இன்று பார்த்தேன். உண்மையில் அவர் இந்தக் கனவுத் திட்டத்திற்காக (சினிமா) துறையில் ஒரு விதையை விதைத்தவர்! பொன்மனச் செம்மலின் பொன்னியின் செல்வன்' எண்ணங்களில் உயர்ந்தவர், என்றோ முதல்வராகி விட்டார் இக்காவியம் படைக்க.' நினைத்ததை முடிப்பவன்'-அவர் நினைத்ததை எல்லாம் அவர் நினைத்ததை எல்லாம் முடிப்பவர் சிஎம் (CM) உட்பட! அப்படிப்பட்ட மனிதர் நினைத்ததை மணிரத்னம் முடித்துள்ளார். விதைச்சது எம்ஜிஆர் விளைச்சது எம்ஆர். நமக்கது பெருமை! என்று பதிவிட்டுள்ளார்.
Dropped project என்ற தலைப்பில் இன்று பார்த்தேன்.Actually HE just dropped a seed in (cine)field for this dream project!பொன்மனச் செம்மலின்பொன்னியின் செல்வன்'எண்ணங்களில் உயர்ந்தவர்,என்றோ முதல்வராகி விட்டார் இக்காவியம் படைக்க.'நினைத்ததை முடிப்பவன்'-அவர் நினைத்ததை எல்லாம் pic.twitter.com/sxSO8LBwZO
— Radhakrishnan Parthiban (@rparthiepan) October 4, 2022






