போஸ்டரை வெளியிட்ட விஜய் ஆண்டனி.. வைரலாக்கும் ரசிகர்கள்

இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் படம் வள்ளி மயில்.இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி
Published on

வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுசீந்திரன். இவர் தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் 'வள்ளி மயில்' என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

வள்ளிமயில்
வள்ளிமயில்

வள்ளிமயில்

இப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது.

வள்ளிமயில்
வள்ளிமயில்

வள்ளிமயில்

இந்நிலையில் இப்படத்தின் போஸ்டரை இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு அனைவருக்கும் ஆயூத பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com