என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் லத்தி.
    • இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

    'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.


    லத்தி

    'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ட்ரெண்டானது. இதையடுத்து இப்படத்தின் முதல் லிரிக் பாடலான 'தோட்டா லோடாக வெயிட்டிங்' வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எம்.சி.விக்கி பாடியுள்ளனர்.


    லத்தி

    இந்த பாடலை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    • ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
    • இவரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'டிரைவர் ஜமுனா' படத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.


    ஃபர்ஹானா போஸ்டர்

    இதைத்தொடர்ந்து இவர் 'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு 'ஃபர்ஹானா' என தலைப்பு வைத்துள்ளது. மேலும் முஸ்லிம் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


    • நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.


    ஜெயிலர்

    இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியானது.


    ரஜினிகாந்த்

    இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் ரஜினியின் புகைப்படத்தை பகிர்ந்து அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அந்த பதிவில், "இந்த ஃபிரேம் ஒருபோதும் தவறாக போகாது. இந்த முகமும் எப்போதும் தவறான கோணத்தில் இருக்காது. நேர்மறையான விலைமதிப்பற்ற புகைப்படம்" என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை தற்போது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகிறது.


    • தற்போது விஷால் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளார்.

    லத்தி படத்தை தொடர்ந்து தற்போது விஷாலின் 33வது திரைப்படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இப்படத்திற்கு 'மார்க் ஆண்டனி' என்று பெயரிடப்பட்டுள்ளது.


    விஷால்

    இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். மேலும் இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.


    மார்க் ஆண்டனி

    இதையடுத்து இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, ஜாக்கி பாண்டியன் என்ற கதாபாத்திரல் நடிக்கிறார். இதற்கான போஸ்டரை எஸ்.ஜே.சூர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்து வைரலாகி வருகிறது.

    • ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.
    • இப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

    1993-ஆம் ஆண்டு இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல் திரைப்படம் 'ஜென்டில்மேன்'. இப்படத்தில் அர்ஜூன், மதுபாலா, கவுண்டமணி, செந்தில், மனோரம்மா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

    இதையடுத்து சமீபத்தில் 'ஜென்டில்மேன்-2' படத்தை அடுத்ததாக தயாரிக்கவுள்ளதாக தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார். இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு கீரவாணி இசையமைக்கவுள்ளார். இப்படத்தின் மூலம் நயன்தாரா சக்ரவர்த்தி தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார்.


    ஜென்டில்மேன்-2

    மேலும், இந்த படத்தில் கலை இயக்குனராக தோட்டா தரணி இணைந்துள்ளார். மேலும் தோட்டா தரணியோடு அவரது மகள் ரோகிணி தரணியும் இப்படத்தில் பணியாற்றவுள்ளதாக அண்மையில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    அதன்படி, 'ஜென்டில்மேன்-2' படத்தில் நடிகர் சேத்தன் சீனு கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் சேத்தன் சீனு இப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சிலர் இப்படம் குறித்த அவர்களின் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

    மணிரத்னம்

    மணிரத்னம்

     

    இந்நிலையில் இயக்குனர் மணிரத்னம் குறித்து இயக்குனர் சீனுராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், எல்லோரையும் குளித்து வரச்சொன்னாய் நந்தனை மட்டும் ஏன் தீக்குளித்து வரச்சொன்னாய் என்றார் கலைஞர். தன் மகனுக்கு நந்தன் என பெயரிட்டவர் மணிரத்னம் சார். பம்பாய், ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால் படங்களால் எதிர்ப்புகள் பார்த்தவர். ஜாதிக்கட்சியினர் சினிமாக்காரர்கள் அவரை சிறுமை செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.

    • ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டனர்.
    • இருவரும் பிரிவதாக அறிவித்ததை அடுத்து தற்போது மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் தனுஷும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2004ம் ஆண்டு நவம்பர் 18-ம் நாள் திருமணம் செய்துக் கொண்டனர். மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்த இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரு மகன்கள் உள்ளனர்.


    தனுஷ் - ஐஸ்வர்யா

    சமீபத்தில் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யப்போவதாகவும், இனிமேல் இருவரும் தனித்தனி பாதைகளில் பயணிக்கப்போவதாகவும் அறிவித்திருந்தனர். விவாகரத்து அறிவிப்புக்கு பின்னர் தனுஷ் பெயரை தனது சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியிருந்தார்.


    தனுஷ் - ஐஸ்வர்யா

    சமீபத்தில் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியினரின் மூத்த மகன் யாத்ராவின் பள்ளி நிகழ்ச்சிக்கு முதல் முறையாக இருவரும் ஒன்றாக வந்தனர். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது. இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்கள் விவாகரத்தை முடிவை ரத்து செய்து மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியால் உற்சாகமடைந்த ரசிகர்கள் பலர் ஆர்வமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    • இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “பருந்தாகுது ஊர்க்குருவி”.
    • இப்படம் அடர்ந்த காட்டுக்குள் ஒரு நாளில் நடக்கும் பரபர சர்வைவல் திரில்லராக உருவாகியுள்ளது.

    இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "பருந்தாகுது ஊர்க்குருவி". இவர் இயக்குனர் ராம் அவர்களின் உதவி இயக்குனர் ஆவார். நிஷாந்த் ரூஷோ, விவேக் பிரசன்னா நடிப்பில் சர்வைவல் திரில்லராக உருவாகி இருக்கும் இப்படத்தில் காயத்திரி ஐயர் நாயகியாக நடிக்கிறார். மேலும் ராட்சசன் வினோத் சாகர், அருள் டி சங்கர், கோடங்கி வடிவேல், ராம்தாஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை லைட்ஸ் ஆன் மீடியா தயாரித்துள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    பருந்தாகுது ஊர்க்குருவி

    பருந்தாகுது ஊர்க்குருவி

     

    இப்படம் குறித்து இயக்குனர் தனபாலன் கோவிந்தராஜ் கூறியதாவது, கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்கும் காட்டில் ஏற்படும் நட்பு, அதனை தொடர்ந்த அடுத்த கட்ட நிகழ்வுகளுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன் எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம்.

    பருந்தாகுது ஊர்க்குருவி

    பருந்தாகுது ஊர்க்குருவி

     

    இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையை உருவாக்கியுள்ளோம். ஊட்டி முதுமலை காடுகளில் படமாக்கியுள்ளோம். மாறுபட்ட ஒரு பரபரப்பான திரில் பயணமாக இப்படம் இருக்கும் என்றார்.

    • விஜய் சேதுபதி நடிப்பில் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’.
    • இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    அறிமுக இயக்குனர் வெங்கட கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்'. இவர் மறைந்த இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குனர் ஆவார். விஜய் சேதுபதி நாயகனாக நடித்துள்ள இப்படத்தில், அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் மோகன் ராஜா, மகிழ்திருமேனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

     

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    யாதும் ஊரே யாவரும் கேளிர்

    இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அதனுடன் ஒரு புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படத்தின் 'மல்லிப்பூ' பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது.

    கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றது.

     

    வெந்து தணிந்தது காடு

    வெந்து தணிந்தது காடு

    சமீபத்தில் 'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு கார் ஒன்றையும் இயக்குனர் கவுதம் மேனனுக்கு 'ராயல் என்ஃபீல்ட்' பைக்கையும் நடிகர் கூல் சுரேஷிற்கு ஐபோனையும் பரிசளித்தார்.

     

    சிம்பு

    சிம்பு

    இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற 'மல்லிப்பூ' பாடலின் மேக்கிங் வீடியோவை நடிகர் சிம்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.

    • மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படம் குறித்து இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ௫ மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியானது.


    பொன்னியின் செல்வன்

    ரூ.200 கோடிக்கு மேல் வசூல் குவித்துள்ள இப்படத்திற்கு திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்த இயக்குனர் ஷங்கர் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    ஷங்கர்

    அதில், "பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் கவர்கிறது. பல வருடங்களுக்கு பிறகு ஒரு தரமான வரலாற்று திரைப்படம். மணிரத்னம் சார் திரைக்கலையின் மாஸ்டர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். படக்குழுவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


    • ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படம் 'டிரைவர் ஜமுனா'.
    • 'டிரைவர் ஜமுனா' படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கியுள்ள படம் 'டிரைவர் ஜமுனா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.


    டிரைவர் ஜமுனா

    இப்படத்தின் டிரைலர்  சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


    ×