என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘கிக்’.
- இந்த படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் 'கிக்'. இந்த படத்தில் தன்யா போப், ராகினி திரிவேதி, கோவை சரளா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கிக்
ஃபார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

கிக்
இதையடுத்து இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'கிக்' திரைப்படத்தின் முதல் பாடலான 'சாட்டர்டே இஸ் கம்மிங்கு' வரும் அக்டோபர் 10-ஆம் தேதி மாலை 6.03 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனை படக்குழு டீசர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்த பாடலை நடிகர் சந்தானம் பாடியுள்ளார். இதன் மூலம் சந்தானம் பாடகராக அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் புதிய படம் ’அச்சம் என்பது இல்லையே’.
- இப்படத்தின் அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
அஜித் நடிப்பில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான 'கிரீடம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக அறிமுகமாவனர் ஏ.எல்.விஜய். அதன்பின்னர் மதராசப்பட்டினம், தெய்வ திருமகள், தாண்டவம், தலைவா, தேவி உள்ளிட்ட பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தார். இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி கடந்த ஆண்டு 'தலைவி' படத்தை இயக்கி அனைவரையும் கவர்ந்தார்.

அச்சம் என்பது இல்லையே படக்குழு
இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' என்ற படத்தை ஏ.எல்.விஜய் இயக்கவுள்ளார். இப்படத்தின் கதாநாயகியாக எமி ஜாக்சன் நடிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஸ்ரீஸ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்துள்ள படம் காட்ஃபாதர்.
- திரையரங்குகளில் நேற்று வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடித்துள்ளார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கியிருந்தார்.

சிரஞ்சீவி - நயன்தாரா
இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, சத்யதேவ், சுனில், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார்.

மோகன் ராஜா - சிரஞ்சீவி
இந்நிலையில் 'லூசிபர்' படம் நேற்று (அக்டோபர் 5-ஆம்) தேதி திரையரங்குகளில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. பொதுவாக ரீமேக் படங்கள் அந்த மொழிக்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்யப்படும் போது சில சறுக்கல்களை சந்திக்கும் ஆனால் இப்படத்தில் மோகன் ராஜாவின் ரீமேக் சூட்சமத்தால் சிரஞ்சீவி ரசிகர்கள் கொண்டாடும் வகையிலும் பார்வையாளர்கள் ரசிக்கும் படியும் படத்தை எடுத்துள்ளார் என்று தெலுங்கு திரையுலகினர் தெரிவித்துள்ளனர். மேலும் இயக்குனர் மோகன் ராஜாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
- இப்படத்தின் தமிழக வசூல் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 30-ம் தேதி வெளிவந்த படம் பொன்னியின் செல்வன். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பிரபு, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், நாசர், ஐஸ்வர்யாராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தன.

பொன்னியின் செல்வன்
இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக வசூல் குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை ரூ.100 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'.
- ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டு நல்ல வரவேற்பும் சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

ஆதிபுருஷ்
இந்நிலையில், இப்படத்திற்கு எதிராக படத்தை தடை செய்ய வேண்டும் என்கிற குரல்களும் கிளம்பியுள்ளன. அயோத்தியில் உள்ள ராமர் கோயிலின் தலைமை குருவான சத்யேந்திர தாஸ், ஆதிபுருஷ் படத்திற்கு எதிரான தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். ஆதிபுருஷ் திரைப்படத்தில் ராமர் மற்றும் அனுமனை தவறாக சித்தரித்துள்ளனர். ஆகவே அதன் வெளியீட்டை தடை செய்ய வேண்டும் என கண்டித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரம்மாண்டமாக திரையரங்குகளில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ள நிலையில், இப்படியொரு பெரிய சிக்கல் படத்திற்கு எழுந்துள்ளது படக்குழுவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் தற்போது விடுதலை, வாடிவாசல் படங்களை இயக்கி வருகிறார்.
- அருள்மொழிச் சோழர் மற்றும் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக சீமான் கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகிற்கு பொல்லாதவன் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன், பாவக்கதைகள் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். மேலும் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள வாடிவாசல் படத்தையும் இயக்கவுள்ளார்.

சீமான் - வெற்றிமாறன்
இந்நிலையில் அருள்மொழிச் சோழர் மற்றும் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளதாக இயக்குனரும், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், தமிழர்களின் போற்றுதற்குரிய மூதாதை, அரசனுக்கரசன் அருள்மொழிச் சோழனின் உண்மையான வரலாற்றையும், இந்த நூற்றாண்டின் இணையற்ற விடுதலைப் போராளி தமிழ்த்தேசிய தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வரலாற்றையும் ஆகச்சிறந்த கலைவடிவமாக நான் தயாரிக்க, என் அன்புத்தம்பி வெற்றிமாறன் இயக்குவார்.

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட இனத்தின் மக்கள், தங்களுக்கான வரலாற்றைத் தாங்களே எழுதுவார்கள் என்ற அறிவாசான் அண்ணல் அம்பேத்கரின் புரட்சி மொழிக்கேற்ப, ஒரு நாள் எங்களுக்கான வரலாற்றை நாங்களே எழுதும் நாள் வரும். அன்றைக்கு தமிழர்கள் நாங்கள் யாரென்று உலகத்திற்குத் தெரியவரும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
- மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பட பொன்னியின் செல்வன்.
- இப்படத்தை நடிகர்கள் விக்ரம் மற்றும் கார்த்தியுடன் இணைந்து கமல் பார்த்து ரசித்தார்.
கல்கி எழுதிய நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம், உலகம் முழுவதும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாராகியிருந்த இந்த படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படம் வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு நல்ல வசூல் கிடைத்துள்ளது.

பொன்னியின் செல்வன்
இதனிடையே ராஜராஜசோழன் குறித்து அண்மையில் இயக்குனர் வெற்றிமாறன் கூறிய கருத்து விமர்சனத்திற்கு உள்ளானது. சினிமாவை அரசியல்மையப்படுத்த வேண்டியது முக்கியம் என்று தெரிவித்த அவர், திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது, ராஜராஜ சோழனை இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்மிடமிருந்து அடையாளங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அவர் பேசினார்.

கமல்
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் நேற்று பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை நடிகர் கார்த்தி, நடிகர் விக்ரம் ஆகியோருடன் இணைந்து பார்த்துவிட்டு, பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம் வெற்றிமாறன் கூறிய கருத்து குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

செய்தியாளர்களை சந்தித்த கமல்
இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், "ராஜராஜசோழன் காலத்தில் இந்து மதம் என்ற பெயர் கிடையாது. சைவம், வைணவம், சமணம் போன்ற சமயங்கள் இருந்தன. இந்து என்பது ஆங்கிலேயர்கள் வைத்த பெயர். இங்கு மதங்கள் வெவ்வேறாக இருந்தது. அவற்றை 8-ம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் ஷண்மத ஸ்தாபனம் என்று கொண்டு வந்தார். இவையெல்லாம் வரலாற்றில் உள்ளவை. இந்த திரைப்படம் ஒரு வரலாற்றுப் புனைவு. இங்கு நாம் சரித்திரத்தை புனைய வேண்டாம், திரிக்க வேண்டாம், மொழி அரசியலை திணிக்கவும் வேண்டாம். நல்ல கலைஞர்களை கொண்டாடுவோம்." இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இயக்குனர் அபிஜித் தேஷ்பாண்டே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹர ஹர மஹாதேவ்.
- இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் அபிஜித் தேஷ்பாண்டே எழுதி இயக்கியுள்ள படம் 'ஹர ஹர மஹாதேவ்'. இந்த படத்தில் சத்ரபதி சிவாஜி மகாராஜனாக சுபோத் பாவேயும், பாஜி பிரபு தேஷ்பாண்டேவாக ஷரத் கேல்கரும் நடித்துள்ளனர். ஜி ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் 'வா ரே வா ஷிவா' பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். அதுமட்டுமல்லாமல் 'ஹர ஹர மஹாதேவ்' படத்தின் தலைப்புப் பாடலுக்கு ஷங்கர் மகாதேவன் குரல் கொடுத்துள்ளார்.

ஹர ஹர மஹாதேவ் போஸ்டர்
300 வீரர்கள் இணைந்து 12000 பேர்கள் கொண்ட எதிரி ராணுவத்தை எதிர்த்துப் போராடி (பாஜி பிரபு தலைமையில்) வெற்றி பெற்ற, நம் வரலாற்றில் நடந்த ஒரு உண்மையான போரை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் இந்தியா எங்கும் அக்டோபர் 25 -ஆம் தேதி ஜி ஸ்டூடியோஸ் நிறுவனத்தால் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே’.
- இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

லவ் டுடே
பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 'லவ் டுடே' படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

லவ் டுடே
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளத்தை ஆகிரமித்து வருகிறது. 'லவ் டுடே' திரைப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண்.
- இவர் தனது திருமண அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
'பியார் பிரேமா காதல்', 'இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்', 'தாராள பிரபு' போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். தமிழ் திரையுலகின் சாக்லேட் பாய் லிஸ்டில் இடம்பெற்றுள்ள இவர் 'நூறு கோடி வானவில்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 'டீசல்' படத்தில் நடித்து வருகிறார்.

ஹரிஷ் கல்யாண் அறிக்கை
இப்படி பல படங்களில் பிசியாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தனது திருமணம் குறித்த அறிக்கை ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு முக்கியமான பயணத்தின் தொடக்கத்தை துவங்க உள்ள மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எழுதுகிறேன். உங்கள் அனைவரின் ஆசியுடன், நர்மதா உதயகுமார் உடனான எனது திருமணத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
எங்களை நாங்களே புதுப்பித்துக் கொள்ளும் இந்த புதிய வாழ்க்கைப் பயணத்தை துவங்கும் நேரத்தில் இப்போதும் எப்போதும் உங்கள் அனைவரிடமிருந்தும் இரட்டிப்பு ஆசிர்வாதங்களையும் அன்பையும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என குறிப்பிட்டு தனது வருங்கால மனைவியின் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இதனையொட்டி ரசிகர்கள் ஹரிஷ் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
With all my heart, for all my life ❤️
— Harish Kalyan (@iamharishkalyan) October 5, 2022
Im extremely happy to introduce 𝐍𝐚𝐫𝐦𝐚𝐝𝐚 𝐔𝐝𝐚𝐲𝐚𝐤𝐮𝐦𝐚𝐫, my wife-to-be. Love you to bits 🤗❤️
With God's blessings, as we begin our forever, we seek double the love from you all, now & always pic.twitter.com/yNeHusULfY
- வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் லத்தி.
- இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.
'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.

லத்தி
'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ட்ரெண்டானது. இதையடுத்து இப்படத்தின் முதல் லிரிக் பாடலான 'தோட்டா லோடாக வெயிட்டிங்' வெளியாகியுள்ளது. ஆக்ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எம்.சி.விக்கி பாடியுள்ளனர்.

லத்தி
இந்த பாடலை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- ஐஸ்வர்யா ராஜேஷின் 'டிரைவர் ஜமுனா' திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.
- இவரின் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயக்குனர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'டிரைவர் ஜமுனா' படத்தில் நடித்துள்ளார். மேலும், இதில் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

ஃபர்ஹானா போஸ்டர்
இதைத்தொடர்ந்து இவர் 'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்திற்கு படக்குழு 'ஃபர்ஹானா' என தலைப்பு வைத்துள்ளது. மேலும் முஸ்லிம் பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ் இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
Here's our next!@aishu_dil in & as #Farhana @selvaraghavan @JithanRamesh @Aishwaryadutta6 @justin_tunes @gokulbenoy @EditorSabu @nelsonvenkat @prabhu_sr#ஃபர்ஹானா pic.twitter.com/TKZmCThIlb
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 5, 2022






