search icon
என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தோட்டா லோடாக வெயிட்டிங்.. யுவன் பாடிய விஷால் பட பாடல்..
    X

    யுவன் ஷங்கர் ராஜா

    'தோட்டா லோடாக வெயிட்டிங்'.. யுவன் பாடிய விஷால் பட பாடல்..

    • வினோத் குமார் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் லத்தி.
    • இப்படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.

    'வீரமே வாகை சூடும்' படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்திருக்கும் திரைப்படம் 'லத்தி'. இதனை புதுமுக இயக்குனர் வினோத் குமார் இயக்கியிருக்கிறார். இதில் விஷாலுக்கு ஜோடியாக சுனைனா நடித்திருக்கிறார். 'ராணா புரொடக்ஷன்' சார்பாக ரமணா மற்றும் நந்தா இப்படத்தை தயாரிக்கின்றனர்.


    லத்தி

    'லத்தி' திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி ட்ரெண்டானது. இதையடுத்து இப்படத்தின் முதல் லிரிக் பாடலான 'தோட்டா லோடாக வெயிட்டிங்' வெளியாகியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் எம்.சி.விக்கி பாடியுள்ளனர்.


    லத்தி

    இந்த பாடலை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.



    Next Story
    ×