பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால்.. நடிகர் சல்மான் கான்

மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் லூசிபர்.இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சல்மான் கான்
சல்மான் கான்
Published on

பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான லூசிபர் படம் தெலுங்கில் 'காட்பாதர்' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இதில் சிரஞ்சீவியுடன் சல்மான் கான் மற்றும் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தை தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா இயக்கியுள்ளார். இந்த படம் நாளை 5ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சல்மான் கான் - சிரஞ்சீவி
சல்மான் கான் - சிரஞ்சீவி

சல்மான் கான் - சிரஞ்சீவி

இந்நிலையில், மும்பையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சல்மான் கான் பேசியதாவது, உங்கள் படங்கள் இங்கே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, ஆனால் எங்கள் படங்கள் அங்கு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதற்கு தெற்கு நட்சத்திரம் தேவை. "நாங்கள் உங்களை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். மக்கள் ஹாலிவுட்டுக்கு செல்ல விரும்புகிறார்கள், நான் தென்மாநிலங்களுக்கு செல்ல விரும்புகிறேன்.

காட் ஃபாதர் படக்குழு
காட் ஃபாதர் படக்குழு

காட் ஃபாதர் படக்குழு

பாலிவுட் தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால், அதிக ரசிகர்களுக்கு படம் சென்று சேரும். சிரஞ்சீவி ரசிகர்கள் என் படத்தையும், என் ரசிகர்கள் சிரஞ்சீவி படத்தையும் பார்ப்பார்கள். நாம் ரூ.300 - 400 கோடி வசூலைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாலிவுட் - தென்னிந்திய நடிகர்கள் ஒன்றிணைந்தால் எளிதாக ரூ. 3,000 - 4,000 கோடியை எட்ட முடியும் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com