என் மலர்
சினிமா செய்திகள்
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் உருவாகியுள்ளது.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

மீனா
இந்நிலையில், இப்படம் குறித்து நடிகை மீனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதில், ''இனிமேலும் என்னால் இதை ரகசியமாக வைத்திருக்க முடியாது. இது என்னை திணறடிக்கிறது; மனதை விட்டு சொல்லியே ஆக வேண்டும். எனக்குப் பொறாமையாக உள்ளது.

மீனா
பொன்னியின் செல்வன் படத்தில் என்னுடைய கனவுக் கதாபாத்திரமான நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராய் மீது வாழ்க்கையில் முதல்முறையாக பொறாமை கொள்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்'' என்று பதிவிட்டுள்ளார்.
- பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
- இந்த படத்தை நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் பார்த்துள்ளார்.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

பொன்னியின் செல்வன்
இதைத்தொடர்ந்து நடிகர் பார்த்திபன் தஞ்சையில் உள்ள ஒரு திரையரங்கில் இன்று அதிகாலை ரசிகர்களுடன் படம் பார்த்துள்ளார். பின்னர் தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்று வழிபட்ட அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

பொன்னியின் செல்வன்
அதில் பார்த்திபன் கூறியதாவது, "ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார் என்பது இயக்குனர் செல்வராகவன் கூறியது. அந்த படத்தின் முதல் பாகத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக இருந்தது. ஆனால் தனுஷிற்கு பதிலாக நான் நடித்தேன். இப்பொழுது என் கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கவுள்ளார். அவர் நடித்தால் மிகவும் சிறப்பாகவே இருக்கும்" என்று கூறினார்.
- சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.
- இது தொடர்பாக போலீசார் 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை அண்ணா நகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 26-ஆம் தேதி இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் வீட்டை தாக்கினர். இதனைத் தொடர்ந்து வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக நடிகர் விஷால் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

விஷால்
இதைத்தொடர்ந்து நடிகர் விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், செப்டம்பர் 26-ஆம் தேதி இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷால் வீட்டை தாக்கினர். அதற்கு ஆதாரமாக எங்களுடைய இல்லத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும், இந்த புகாரில் இணைத்துள்ளோம்.

விஷால்
எனவே இந்த புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்டு விஷால் இல்லத்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- 68-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா இன்று நடைபெறவுள்ளது.
- இவ்விழாவில் கலந்துக் கொள்வதற்காக நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் டெல்லி சென்றுள்ளார்.
இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது. டெல்லியில் இன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.இந்நிலையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் விருது வாங்குவதற்காக டெல்லி சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
- இதில் நடித்துள்ள பார்த்திபன் சோழ தேசத்தில் சென்று படம் பார்த்திருக்கிறார்.
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் இத்திரைப்படத்தை தஞ்சைக்கு சென்று ஒரு திரையரங்கில் நடிகர் பார்த்திபன் ரசிகர்களுடன் அமர்ந்து இன்று காலை படம் பார்த்தார். முன்னதாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தஞ்சை மண்ணுக்கும், ராஜராஜ சோழனுக்கும் வணக்கம். 1973-ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி ராஜராஜ சோழன் திரைப்படத்தை இதே மண்ணில் நான் பார்த்தேன். அதே மகிழ்ச்சியுடன் இந்த படத்தை பார்க்க இன்று வந்துள்ளேன்.
நான் பேசும் சில வார்த்தைகள் மாறிப் போய்விடுகிறது. நான் சினிமாவின் தீவிர ரசிகன். பொன்னியின் செல்வனை வெற்றி பெற செய்வோம். பொன்னியின் செல்வனில் நடித்து, அதனை சோழ தேசத்தில் வந்து பார்ப்பதை பெருமையாக பார்க்கிறேன். கல்கிக்கு ரசிகைகள் அதிகமாக இருந்துள்ளார்கள். ஆண்களை விட பெண்கள் புத்திசாலிகள்.

பார்த்திபன்
அதனால் தான் கல்கிக்கு பெண் ரசிகர்கள் அதிகளவில் இருந்துள்ளனர். 70 வருஷத்துக்கு முன்னால் எழுதப்பட்ட நாவலுக்கு இன்றளவும் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது என்பது முதல் வெற்றி. கல்கியின் எழுத்துக்களுக்குத்தான் தான் முதல் வெற்றி. அடுத்தது மணிரத்தனம் இயக்கத்திற்கு. இந்த திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் சிறிய வேடம் தான். ஆனால் இவ்வளவு பெரிய திரைப்படத்தில் நான் நடித்திருப்பது பெருமையாக உள்ளது. நான் படத்தை பார்க்க வந்தேன் என்பதை விட இந்த படத்தை ரசிகர்கள் எவ்வாறு வரவேற்கிறார்கள் என்று பார்ப்பதற்காக வந்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
- பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'சர்தார்'.
- இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள படம் 'சர்தார்'. இதில் மிரட்டும் வில்லனாக இந்தி நடிகர் சங்கி பாண்டே நடித்துள்ளார். மேலும், ராஷிகண்ணா, ரெஜிஷா விஜயன், லைலா, யுகி சேது, முனிஷ்காந்த், மாஸ்டர் ரித்விக், அவினாஷ், முரளி ஷர்மா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

சர்தார்
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். 'சர்தார்' திரைப்படம் இந்த வருடம் அக்டோபர் மாதம் தீபாவளியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடுவார் என இயக்குனர் பி.எஸ்.மித்ரன் தெரிவித்திருந்தார்.

சர்தார்
இந்நிலையில் 'சர்தார்' படத்தின் டீசரை அறிவித்தபடி நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார். பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள் இப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Good luck team #Sardar @Karthi_offl Here's the teaser! https://t.co/Ee0sk6NgZB Hearty wishes to team #PonniyinSelvan for a blockbuster start!!! #Sardarteaser #Sardardeepavali @PsMithran @Prince_Pictures @Udhaystalin@gvprakash
— Suriya Sivakumar (@Suriya_offl) September 29, 2022
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
- இப்படம் வெளியாவதை தொடர்ந்து படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதை தொடர்ந்து படக்குழுவினர் நிருபர்களை சந்தித்தனர்.

பார்த்திபன்
இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பார்த்திபன் கூறியதாவது, "நானே வருவேன் என்று சொல்லி அடம்பிடித்துதான் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறேன். என்னை இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்த போது முதலில் நான் வரவில்லை, தஞ்சாவூர் போறேன், அங்கு படத்தை பார்த்துவிட்டு, பிறகு ராஜராஜ சோழனுக்கு மரியாதையை செலுத்த உள்ளேன். அதனால் என்னால் வர முடியாது என்று சொன்னேன். ஆனால் இந்த மேடையை தவற விட்டுவிட கூடாது என்பதற்காக அடம்பிடித்து நானே வருவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். ஏன்னா இந்த மாதிரியான பிரம்மாண்ட மேடை இன்னும் எத்தனை படத்திற்கு பார்க்க போறேன்னு தெரியல. நம்ம காதலியை இன்னொருத்தன் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போனா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு. அந்த மாதிரி இவ்வளவு நாளா நாம காதலித்த படம் நாளைக்கு ரசிகர்கள் கிட்ட போகும் போது, சந்தோஷமாக இருந்தாலும், ஒரு பக்கம் வருத்தமாக இருக்கு" என்றார்.
- மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்திற்காக சென்னை உயர்நீதிமன்றம் தற்போது அதிரடி திர்ப்பு வழங்கியுள்ளது.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

பொன்னியின் செல்வன்
'பொன்னியின் செல்வன்' திரைப்படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிடக் கூடாது என லைகா நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.சுந்தர் இப்படம் சுமார் 2,045-க்கும் மேற்பட்ட இணையதளங்களில் சட்ட விரோதமாக வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.
- இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
- தற்போது இயக்குனர் பாரதிராஜாவை நேரில் சந்தித்து ஓ.பன்னீர்செல்வம் நலம் விசாரித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்தார்.

பாரதிராஜா
சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக இயக்குனர் பாரதிராஜா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்து நலமுடன் வீடு திரும்பினார். சென்னை நீலாங்கரை வீட்டில் ஓய்வு எடுத்து வந்த பாரதிராஜாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் நலம் விசாரித்து வந்தனர்.

பாரதிராஜாவை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம்
இந்நிலையில் சென்னையில் உள்ள பாரதிராஜாவின் இல்லத்தில் ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
- இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்த அனுபவம் குறித்து விக்ரம் பேசியுள்ளார்.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாவதை தொடர்ந்து படக்குழுவினர் நிருபர்களை சந்தித்தனர்.

பொன்னியின் செல்வன் - விக்ரம்
இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் கூறியதாவது, இந்தியா முழுவதும் நிறைய வரலாற்று கதைகள் இருக்கிறது, இது போன்ற கதைகளில் நான் நடிக்க மாட்டேனா என்ற கனவுகளும் இருந்தது; எனக்கு பிடித்த ஆதித்த கரிகாலன் கதாபாத்திரம் அமைந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஆதித்த கரிகாலனின் காதல் எனக்குள் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது; அவனுடைய காதலுக்காக அவன் என்ன வேண்டுமானாலும் செய்வான். அதை உணர்ந்து தான் நான் நடித்தேன். பொன்னியின் செல்வனில் இது சிறந்த காதல் காவியமாக அமையும் என கூறினார்.
- கருணாஸ் நடிப்பில் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் உருவாகி வெளியான படம் ஆதார்.
- இப்படம் சில தினங்களுக்கு முன்பு வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் நடிகர் கருணாஸ் கதையின் நாயகனாக நடித்த 'ஆதார்' திரைப்படம், சில தினங்களுக்கு முன் திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஆதார் படக்குழு
இந்நிலையில் 'ஆதார்' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையிலும் இப்படத்தில் உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் சென்னையில் விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் ராம்நாத் பழனிக்குமார், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர்கள் கருணாஸ், திலீபன், நடிகை இனியா, படத்தொகுப்பாளர் ராமர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் தயாரிப்பாளர் திருமதி சசிகுமார், இயக்குனர் ராம்நாத் பழனிக்குமாருக்கு கார் ஒன்றை பரிசாக அளித்தார்.
- கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் யஷ்.
- இவர் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப். 2-ம் பாகம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தது.

யஷ்
சமீபத்தில் வெளியான கேஜிஎப்-2 திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்கு தள்ளி புதிய வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து யஷின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து வருகிறது.
இதையடுத்து வரலாற்று பாணியில் உருவாகவுள்ள படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் யஷ் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அதில், "இலக்கை அடைய எப்போதும் ஒரு வழி இருக்கிறது, அதை கண்டுபிடிப்பதே சவால்" என்று குறிப்பிட்டுள்ளார்.
There is always a way to reach the target, the challenge is to spot it!!
— Yash (@TheNameIsYash) September 29, 2022
Thank you my man JJ Perry, what a fantastic day!!
Next time it's gotta be Kalashnikov !! 😉 pic.twitter.com/MYDOQohyvT






