என் மலர்
சினிமா செய்திகள்
- கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் யஷ்.
- இவர் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் இவர் நடித்து வெளியான கே.ஜி.எப் மற்றும் கே.ஜி.எப். 2-ம் பாகம் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்று வசூல் சாதனை படைத்தது.

யஷ்
சமீபத்தில் வெளியான கேஜிஎப்-2 திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, தெலுங்கு மொழிகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பல முன்னணி நடிகர்கள் படங்களை பின்னுக்கு தள்ளி புதிய வசூல் சாதனை படைத்தது. இதையடுத்து யஷின் அடுத்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்து வருகிறது.
இதையடுத்து வரலாற்று பாணியில் உருவாகவுள்ள படத்தில் இவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் யஷ் துப்பாக்கி சுடும் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், அதில், "இலக்கை அடைய எப்போதும் ஒரு வழி இருக்கிறது, அதை கண்டுபிடிப்பதே சவால்" என்று குறிப்பிட்டுள்ளார்.
There is always a way to reach the target, the challenge is to spot it!!
— Yash (@TheNameIsYash) September 29, 2022
Thank you my man JJ Perry, what a fantastic day!!
Next time it's gotta be Kalashnikov !! 😉 pic.twitter.com/MYDOQohyvT
- மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன்.
- இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம்.
மலர் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் பயின்ற மணி சேகர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் சஞ்ஜீவன். இப்படத்தில் வினோத் லோகிதாஸ், ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா, சத்யா என்.ஜே, யாஷின், திவ்யா துரைசாமி உள்ளிட்ட பலர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் ஸ்வர்னகுமார் ஒளிப்பதிவில் தனுஜ் மேனன் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் படத்தொகுப்பை ஷிபு நீல் பி.ஆர் கவனித்துள்ளார்.

சஞ்ஜீவன்
இப்படத்தை பற்றி இயக்குனர் மணி சேகர் கூறியதாவது, நான் இயக்குனர் பாலுமகேந்திரா சாரின் சினிமா பட்டறையில் பயின்ற மாணவன் என்பதாலே படங்களை புதுவிதமாக அணுக வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் வந்துவிட்டது.
இப்படம் தென்னிந்தியாவின் முதல் ஸ்னூக்கர் திரைப்படம். நான் அதிக நேரம் ஸ்னூக்கர் விளையாட்டிற்காக நண்பர்களுடன் செலவழித்திருக்கிறேன். ஸ்னூக்கர் என்றாலே சூதாட்டம், அதிக பண வைத்து விளையாடக் கூடியது போன்ற பேச்சுக்கள் எழுகிறது. உண்மையில் மற்ற விளையாட்டுக்களை போன்று தான் இதுவும் ஒரு விளையாட்டு.

சஞ்ஜீவன்
இப்படம் இளைஞர்களை வெகுவாக கவரக்கூடிய வகையில் கதையையும் திரைக்கதையையும் வடிவமைத்துள்ளேன். ஒரு படம் என்றால் அது ஒரு ஜானரை மைய்யமாக வைத்துக் கொண்டு அதனை உருவாக்குவார்கள். இந்த படத்தில் ரசிகர்கள் அனைத்து விதமான ஜானர்களையும் அனுபவிக்கலாம். இதில் காதல், காமெடி, திரில்லர் போன்ற விஷயங்களை ரசிகர்கள் அனுபவிக்க முடியும்.
இப்படத்தில் நடந்த முக்கியமான ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். படப்பிடிப்பில் முக்கியமான காட்சியை படமாக்க மழை தேவைப்பட்டது. அதற்காக செயற்கை மழையை தயார் செய்ய முயற்சி செய்தோம் சில காரணங்களால் அதனை தயார் செய்ய முடியாமல் போனது. சரியாக படப்பிடிப்பு தொடங்க இருந்த சிறிது நேரத்தில் நாங்கள் எதிர்ப்பார்த்த காற்றுடன் கூடிய மழை இயற்கையாக வந்து எங்களை ஆச்சரியப்படுத்தியது.

சஞ்ஜீவன்
இயக்குனர் பாலுமகேந்திரா சார் எங்களை நேரில் வந்து ஆசிர்வதித்து போன்று இருந்தது. ஏனென்றால் பாலுமகேந்திரா சார் இயக்கிய மூன்றாம் பிறை படத்தில் இதேப்போன்று ஒரு நிகழ்வு நடந்ததாக கேள்விப் பட்டிருக்கிறோம். எங்களின் படப்பிடிப்பிலும் இதே போன்று நடந்தது அவரின் ஆசியாக தோன்றியது. படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது, எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் வந்து படத்தை பார்த்து அனைத்தையும் அனுபவியுங்கள் என்றார்.
சஞ்ஜீவன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. இப்படம் அக்டோபர் 14 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் திரைப்படம் பனாரஸ்.
- இப்படம் நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கன்னட திரையுலகின் முன்னணி இயக்குனரான ஜெய தீர்த்தா இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பனாரஸ்'. இந்த படத்தில் புதுமுக நடிகர் ஜையீத் கான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை சோனல் மோன்டோரியோ நடித்திருக்கிறார்.
இவர்களுடன் தேவராஜ், அச்சுத்குமார், சுஜய் சாஸ்திரி, பரக்கத் அலி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைத்திருக்கிறார்.

பனாரஸ்
இந்த படத்தை என் கே புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் திலகராஜ் பல்லால் தயாரித்திருக்கிறார். பனாரஸ் திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழியிலும் வெளியாகிறது.
இப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பிரபல கன்னட நடிகர் ரவிச்சந்திரன், நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான், பனாரஸ் படத்தின் தயாரிப்பாளர் திலக்ராஜ் பல்லால், நாயகன் ஜையீத் கான், கதாநாயகி சோனல் மாண்டீரோ உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பனாரஸ் படக்குழு
இதில் இயக்குனர் ஜெய தீர்த்தா பேசியதாவது "இதுவரை 7 படங்களை இயக்கியுள்ளேன். ஒவ்வொரு முறையும் ஒரு புது ஜானர் கதைகளைத்தான் எடுத்து வந்துள்ளேன். அதனால் எனக்கு நிரந்தர ரசிகர்கள் இல்லை.
இந்த 'பனாரஸ்' படமும் அப்படிப்பட்ட ஒரு ஜானர் வகையறா படம்தான். இது ஒரு டைம்லைன் காதல் கதை. காசியின் அத்தனை அழகையும் படத்தில் அள்ளி வந்துள்ளோம். இது ஒரு யூனிவர்சல் சப்ஜெக்ட் என்பதால் பான் இந்தியா படமாக வருவதற்கு அத்தனை தகுதியும் உள்ள படம்' என்றார்.
- வருத்தப்படாத வாலிபர் சங்கம், இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பாண்டிய நாடு, ஜில்லா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் சூரி.
- இவரின் அம்மன் உணவகத்தில் சில தினங்களுக்கு முன்பு வணிகவரித்துறை சோதனையில் ஈடுப்பட்டனர்.
மதுரை அருகே ஒத்தக்கடையில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது, தமிழகத்தில் போலி பத்திரம் ரத்து சட்டம் அமல்படுத்தப்பட்டது, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. யாரெல்லாம் நிலத்தை பறிகொடுத்துள்ளார்களோ, அவர்கள் அதிகாரிகளிடம் மனுவாக அளித்து தன்னுடைய நிலங்களை மீட்டுக் கொள்ளலாம்.
வணிகவரித்துறையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தம் காரணமாக வரி செலுத்தாத வணிகர்கள் பயத்தோடு வரி கட்டி வருகிறார்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு வணிகவரித் துறை மூலம் ரூ.18 ஆயிரம் கோடி வருவாயும் பத்திரப்பதிவுத்துறை மூலம் ரூ.8300 கோடி வருவாயும் என மொத்தம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நடிகர் சூரி எனது தொகுதிக்காரர் என்னுடைய நல்ல நண்பர். அவரது உணவகத்தில் திட்டமிட்டு சோதனை நடத்தப்பட்டது போல தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். வணிகவரித்துறை நிர்வாக ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதில் யாருடைய தலையிடும் இல்லை. வணிகவரித்துறை சுதந்திரமாக செயல்படுகிறது.

யாரையும் தனிப்பட்ட முறையில் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்த சோதனை மேற்கொள்ளவில்லை. வணிகவரித்துறை யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்ய அவர்களுக்கு அதிகாரம் உண்டு. வரி ஏய்ப்பு செய்து இருந்தால் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
- தயாரிப்பாளர் ஏக்தா கபூர் எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். என்ற வெப் தொடரை தயாரித்தார்.
- முன்னாள் ராணுவ வீரரின் புகார் மனு அடிப்படையில் ஏக்தா கபூர் மற்றும் அவரது தாயார் ஷோபா கபூருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் ஏராளமான டெலிவிஷன் தொடர் மற்றும் திரைப்படங்கள் தயாரித்துள்ளார். இவர் சொந்தமாக பாலாஜி டெலி பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் அவரது தாயார் ஷோபா கபூரும் பங்குதாரராக இருக்கிறார்.

ஏக்தா கபூர்
நடிகை ஏக்தா கபூர் தயாரித்த எக்ஸ்.எக்ஸ்.எக்ஸ். என்ற வெப் தொடர் சீசன் இரண்டில் ராணுவ வீரரின் மனைவியை ஆபாசமாக சித்தரித்து இருப்பதாகக் கூறி பீகாரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஷாம்பு குமார் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், இந்த வெப் தொடரின் இரண்டாவது சீசனில் ராணுவ வீரரின் மனைவிக்கு எதிராக பல ஆட்சேபகரமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், இது ராணுவ வீரர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இம்மனுவில் ஏக்தா கபூர் மட்டுமல்லாது அவரது தாயார் ஷோபா கபூரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார்.

ஷோபா கபூர் - ஏக்தா கபூர்
இம்மனு இதற்கு முன்பு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் ஆஜராகும்படி இருவருக்கும் பீகார் மாநிலம் பெகுசராய் நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் இருவரும் கோர்ட்டில் ஆஜராகாத காரணத்தால் அவர்கள் இருவருக்கும் கோர்ட் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
- இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள படம் தசரா.
- இப்படத்தின் புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வரும் நானி, அந்தே சுந்தராணிகி படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தசரா படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்க கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தசரா
மேலும் பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி, சாய் குமார், பூர்ணா மற்றும் ஜரீனா வஹாப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் சுதாகர் செருக்குரி தயாரித்துள்ள இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.

தசரா
அண்மையில் நடிகை சில்க் சுமிதா புகைப்படத்திற்கு முன்பு கையில் பாட்டிலுடன் நானி அமர்ந்திருக்கும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்நிலையில் தசரா படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் 'தூம் தாம் தோஸ்தான்' தசரா அன்று வெளியாகும் என படக்குழு வித்தியாசமான முறையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பலரின் கவனம் ஈர்த்து வருகிறது. தசரா திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சில் 15-வது சீசனை கடந்து 16-வது சீசன் தொடங்கியுள்ளது.
- இந்த சீசனையும் நடிகர் சல்மான்கான் தொகுத்து வழங்குகிறார்.
தொலைக்காட்சிகளில் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. இந்தியில் மட்டும் இந்த நிகழ்ச்சி 15 சீசன்களை கடந்து 16-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் தொகுத்து வழங்க நடிகர் சல்மான்கான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

சல்மான்கான்
ஏற்கனவே ரூ.250 கோடி சம்பளம் பெற்ற சல்மான்கான் பிக்பாஸ் 16-வது சீசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ரூ.1,000 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் சம்மதித்து இருப்பதாகவும் வலைத்தளத்தில் தகவல் பரவியது.
இதுதொடர்பாக 16-வது சீசன் அறிமுக விழாவில் நடிகர் சல்மான்கான் விளக்கமளித்துள்ளார். அதில், " "நான் ஆயிரம் கோடி சம்பளம் வாங்கினால் வாழ்க்கையில் அதன் பிறகு சம்பாதிக்கவே வேண்டாமே. இந்த அளவுக்கு சம்பளம் பெற்றால் வழக்கறிஞர் கட்டணம் உட்பட பல்வேறு வகை செலவுகளும் அதிகமாகும்.

சல்மான்கான்
மேலும் இந்த செய்தி வருமான வரித்துறைக்கு கிடைக்கும். அவர்கள் வந்து சோதிக்கும் போது உண்மை வெளிவரும். இந்த 12 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தியதில் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்" என்று தெரிவித்துள்ளார்.
- செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'.
- இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

நானே வருவேன்
வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'நானே வருவேன்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு 'நானே வருவேன்' திரைப்படம் குறித்து அளித்துள்ள பேட்டி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதில், 'நானே வருவேன்' திரைப்படம் முதல் நாள் வசூல் அள்ளி விடும். இரண்டாவது நாள் 'பொன்னியின் செல்வன்' வெளியாகும் போது வசூல் சிறிது குறையும்.

நானே வருவேன்
ஆனால் மூன்றாவது நாள் இரண்டும் ஒரே மாதிரியான நிலையை எட்டிவிடும். இரண்டு படங்களும் மிகப்பெரிய மைல் ஸ்டோனாக இருக்கும். நான் இதுவரை 'நானே வருவேன்' திரைப்படத்தை பதினைந்து முறை பார்த்திருக்கிறேன். எந்த படத்தையும் நான் இப்படி பார்த்தது இல்லை. அப்போது அந்த கதாபாத்திரம் என்னை இழுக்கிறது என்று அர்த்தம்" என்று கூறினார்.
- மோகன் ராஜா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் படம் காட்ஃபாதர்.
- இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் 'லூசிபர்'. இப்படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்துள்ளனர். இதில் சிரஞ்சீவி ஹீரோவாக நடிக்கிறார். தமிழில், ஜெயம், சந்தோஷ் சுப்ரமணியம், உனக்கும் எனக்கும், வேலாயுதம், தனி ஒருவன், வேலைக்காரன் போன்ற பல படங்களை இயக்கிய மோகன் ராஜா, லூசிபர் தெலுங்கு ரீமேக்கை இயக்கியுள்ளார்.

காட்ஃபாதர்
இப்படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்க, முக்கிய கதாப்பாத்திரத்தில் சல்மான் கான் நடித்திருக்கிறார். 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' மற்றும் 'என்.வி.ஆர் ஃபிலிம்ஸ்' இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 'காட்ஃபாதர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது.

காட்ஃபாதர்
இதையடுத்து இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் உருவாகியுள்ள இந்த டிரைலர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் அக்டோபர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் நாளை செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

பொன்னியின் செல்வன்
ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

சரத்குமார்
இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சரத்குமார் கலந்து கொண்டார். அதில் நடிகர் விஜய்க்கு 'பொன்னியின் செல்வன்' படத்தில் எந்த பாடல் பிடிக்கும் என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சரத்குமார், " விஜய்க்கு 'பொன்னிநதி' பாடல் மிகவும் பிடிக்கும் வாரிசு படப்பிடிப்பு தளத்தில் அந்த பாடலை தான் பாடிக் கொண்டிருப்பார்" என்று கூறினார்.
விஜய் நடிக்கும் 'வரிசு' திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது
- புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம் விக்ரம் வேதா.
- இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது.
புஷ்கர்-காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. சஷிகாந்த் தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விக்ரம் வேதா
இப்படத்தின் இந்தி ரீமேக்கில் மாதவன் கதாபாத்திரத்தில் சைப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹிருத்திக் ரோஷன் இருவரும் நடித்து வருகின்றனர். தமிழில் விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர்-காயத்ரி இந்தியிலும் இயக்கி வருகின்றனர்.
ரசிகர்களால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்படும் இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது. இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக உள்ளது. விக்ரம் வேதா இந்தி படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.

விக்ரம் வேதா
இந்த நிலையில், படத்தின் புரொமோஷனில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷன் பேசியதாவது, "விக்ரம் வேதா படத்தில் விஜய் சேதுபதி அவரது கதாபாத்திரத்தில் எவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலையை எட்டுவது குறித்து என்னால் கனவிலும் நினைக்க முடியாது.

விக்ரம் வேதா
என்னால் முடிந்ததைச் செய்துள்ளேன், நான் செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் ஒரு கதாபாத்திரத்தை அணுகும்போது, அந்தக் கதாபாத்திரம் செய்ததை மீண்டும் நீங்கள் செய்ய முடியாது. ஒவ்வொரு நபரும் வித்தியாசமானவர் என்பதை அறிந்துகொள்வதே அதற்கான எளிய வழி. எனவே, நான் பார்க்கும் விதத்தில் இதை அணுகினேன். அது தானாகவே வித்தியாசமாகவும், புதியதாகவும், நேர்மையாகவும் வந்திருக்கிறது'' என்றார்.
- முனி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா.
- இவர் மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் இயக்கிய "முனி" படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா. அதன்பின் காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

வேதிகா
வேதிகா சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் வித்யாசமான பிங் நிற பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
— Vedhika (@Vedhika4u) September 28, 2022






