என் மலர்
சினிமா செய்திகள்
- முனி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா.
- இவர் மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.
ராகவா லாரன்ஸ் இயக்கிய "முனி" படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வேதிகா. அதன்பின் காளை, பரதேசி, காவிய தலைவன் உள்ளிட்ட பல்வேறு தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து வருகிறார்.

வேதிகா
வேதிகா சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில், இவர் வித்யாசமான பிங் நிற பிகினி உடையில் கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
— Vedhika (@Vedhika4u) September 28, 2022
- இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.
- இத்திரைப்பட திருவிழாவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தொடங்கி வைத்தார்.
இதய ஆரோக்கிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக உலக இதய தின அனுசரிப்பு நாளன்று இளம் இதயங்களை காப்போம் என்ற பெயரில் ஒருமாத காலம் நடைபெறும் பரப்புரை திட்டமானது செப்டம்பர் 10-ம் தேதியன்று தொடங்கப்பட்டது. இச்செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்வமுள்ள திரைப்பட படைப்பாளிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் பங்கேற்பதற்கு ஒரு குறும்பட போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது.

இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை நடுவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு பிரிவினராலும் வழங்கப்படும் வாக்குகளின் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வெற்றியாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.100,000 இரண்டாவது பரிசாக ரூ.50,000 மற்றும் மூன்றாவது பரிசாக ரூ.25,000 பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
இத்திரைப்பட திருவிழாவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தொடங்கி வைத்தார். திரைப்பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் மற்றும் திரைப்பட எடிட்டர் ஆர்.கே. செல்வா ஆகியோர் இத்தொடக்கவிழா நிகழ்வில் முன்னிலை வகித்தனர்.

இதில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பேசியதாவது, "சிந்தனையை தூண்டிவிடுகின்ற, சிறப்பான குறும்படங்களின் மூலம் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தும் விதமாக வளர்ந்து வரும் திரைப்படைப்பாளிகளின் படைப்புகளைப் பார்க்க நான் ஆவலோடு காத்திருக்கிறேன். உங்களது முழு திறனையும், ஆற்றலையும், அறிவையும் சிறப்பாக வெளிப்படுத்துமாறு ஒவ்வொருவரையும் ஊக்குவிக்க நான் விரும்புகிறேன்.
இளவயதினர் மத்தியில் இதயநோய் பாதிப்பு அச்சுறுத்தும் விகிதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, இளவயதிலேயே இதயநோய் வராமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளும் தொடங்கப்பட வேண்டும். சமூக விழிப்புணர்விற்கான இந்த சிறப்பான செயல்திட்டத்தை நிஜத்தில் செயல்படுத்த உதவியிருக்கின்ற அனைவருக்கும் எனது நன்றியினை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்," என்று பேசினார்.
- விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
- இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
பிரபல நடிகை மீராமிதுன். இவர் தாழ்த்தப்பட்டோர் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளித்த புகாரின் பேரில் அவர் மீதும், அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
இதன்பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்கு மீரா மிதுன் ஆஜராகாததால் அவருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.

மீரா மிதுன்
இதையடுத்து அந்த வழக்கு செப்டம்பர் 14-ஆம் தேதி நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மீராமிதுன் ஆஜராகவில்லை. அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆஜரானார். போலீசார் தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வக்கீல் எம்.சுதாகர், 'மீராமிதுன் பெங்களூருவில் தலைமறைவாக இருப்பதாக தெரிகிறது. விரைவில் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவோம்' என்றார். இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை 28-ந் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

மீரா மிதுன்
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுனுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை செயல்படுத்துவதற்காக அவரை பல இடங்களில் தேடியும் இருப்பிடத்தை அவர் அடிக்கடி மாற்றி வருவதால் அவரை கண்டுபிடிக்கமுடியவில்லை என்றும் தலைமறைவாக இருக்கும் அவர் பெங்களூரில் இருப்பதாக தாகவல் வந்ததை அடுத்து அங்கு சென்று பார்த்த போது அவர் வேறு இடத்திற்கு தப்பி சென்றுவிட்டதாக கவல்துறை தெரிவித்துள்ளது.

மீரா மிதுன்
அதுமட்டுமல்லாமல் அடிக்கடி அவர் செல்போன் நம்பரை மாற்றி வருவதாகவும் ஏற்கனவே வைத்திருந்த நம்பர் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளதால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் விரைவில் மீராமிதுனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார் என்று காவல்துறை தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
2 மாதங்களுக்கு மேலாக பிடிவாரண்ட் நிலுவையில் உள்ள நிலையில் கைது செய்யாததால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இந்த வழக்கை அக்டோபர் 19-ஆம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
- நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ஜெயிலர்.
- இதன் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

ஜெயிலர்
இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். அண்மையில் தொடங்கிய ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

ஜெயிலர் படப்பிடிப்பு தளம்
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ்.
- ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் ஆதிபுருஷ் படத்தில் நடித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் தற்போது இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் நடித்துள்ள படம் 'ஆதிபுருஷ்'. ராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ராமர் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளார்.

ஆதிபுருஷ்
மேலும், கிரித்தி சனோன், சைப் அலி கான், சன்னி சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். டி சீரிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் தமிழ் உள்பட ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது.

ஆதிபுருஷ் படக்குழு
இந்நிலையில், இந்தப் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை படக்குழு வரும் அக்டோபர் 2-ம் தேதி அயோத்தி நகரில் உள்ள சராயு நதிக்கரை ஓரத்தில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Our magical journey is now yours to experience & love! ✨
— Om Raut (@omraut) September 27, 2022
The much awaited #AdipurushTeaser and the first poster of our film will be launched on Oct. 2!
Venue - Bank Of Sarayu, Ayodhya, UP! #Adipurush releases IN CINEMAS on January 12, 2023 in IMAX & 3D! pic.twitter.com/D5MPSHjcsn
- இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி ஆணையர் அனுப்பிய நோட்டீசை ரத்து செய்யக் கோரி 2020-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்தார்.
- இந்த மனுவிற்கு ஜி.எஸ்.டி ஆணையர் பதில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தனது படைப்புகளின் காப்புரிமையை முழுமையாக பட தயாரிப்பாளர்களுக்கு வழங்காததற்காக, ரூ.6.79 கோடி ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என ஜி.எஸ்.டி ஆணையர் 2019-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்த நோட்டீசை ரத்து செய்யக் கோரி கடந்த 2020-ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இசை படைப்புகளின் காப்புரிமை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின் தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம்.

ஏ.ஆர்.ரகுமான்
தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ரூ.6.79 கோடி வரி செலுத்தவில்லை என கூறி, ரூ.6.79 கோடி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.எஸ் டி. நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஜி.எஸ்.டி. ஆணையர் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரகுமானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை.

ஏ.ஆர்.ரகுமான்
ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டது. அதை செலுத்தாததால் அபராதம் விதிக்கப்பட்டது என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும் எனவும் பதில் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.
- இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகும் படம் இந்தியன் -2.
- இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்திருந்த இந்தியன் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

கமல் - ஷங்கர்
இந்த படத்தில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியதாக புகைப்படங்களையும் வீடியோ ஒன்றையும் கமல் வெளியிட்டார். இந்நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கமலுக்கு மேக்கப் போடுவது போன்ற புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இதனை ரசிகர்கள் பலரும் வைரலாக்கி வருகின்றனர்.
- விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
- இப்படத்தின் நேற்று முன்தினம் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

வாரிசு - விஜய்
இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சென்னை, எண்ணூரில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் பலர் விஜய்யை பார்க்க குவிந்ததால் போலீசார் தடியடி நடித்தியுள்ளனர்.

வாரிசு - விஜய்
இதனால் ஆதங்கமடைந்த ரசிகர்கள், "நாங்க இதெல்லாம் யாருக்காக செய்கிறோம். எங்களுக்கு தளபதியே தேவையில்லை. எங்களுக்கு விஜய்யை பார்க்க ஆசையாக உள்ளது. இந்த வாசல் முன்பு வந்து கை அசைத்தால் போதும். ரஜினி, சூர்யா வந்த போது ரசிகர்களை அனுமதித்தார்கள். தளபதி வந்தால் மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை" என்று வருத்ததில் பலரும் பேசினர்.

இந்நிலையில் நேற்று இரவு சென்னை எண்ணூரில் நடைபெற்ற படப்பிடிப்புக்கு இடையில் வெளியே வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்றார். விஜய்யை பார்க்க வெகுநேரமாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
- மலையாள படமான 'சாட்டர்டே நைட்' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி கோழிகோட்டில் நடைபெற்றது.
- இதில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.
மலையாள படமான 'சாட்டர்டே நைட்' படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் சமீபத்தில் கோழிக்கோட்டில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றிருந்தனர். அப்போது பிரபல மலையாள நடிகைகள் சானியா ஐயப்பன் மற்றும் கிரேஸ் ஆண்டனி ஆகியோருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது.

சானியா ஐயப்பன்
இந்த சம்பவம் தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர்கள் அளித்த புகாரின் பேரில் கோழிக்கோடு பாண்டிரங்கான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நடிகைகளில் ஒருவர் தற்போது கண்ணூரிலும் மற்றொருவர் கொச்சியிலும் உள்ளனர். அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய பெண் எஸ்ஐ தலைமையிலான போலீசார் சென்று உள்ளனர்.
தங்களுக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து நடிகை சானியா, தனது சமூக வலைதளப்பக்கத்தில், "நானும் எனது படக்குழுவினரும் எங்களின் புதிய திரைப்படமான 'சாட்டர்டே நைட்' திரைப்படத்தை கோழிகோட்டில் உள்ள ஒரு மாலில் விளம்பரப்படுத்திக் கொண்டிருந்தோம். விளம்பர நிகழ்வுகள் கோழிக்கோடு மற்றும் அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடந்தன.

கிரேஸ் ஆண்டனி
கோழிக்கோடு மக்களின் அன்புக்கு நன்றி. மாலில் மக்கள் அதிக அளவில் இருந்ததால் கூட்டத்தைக் கையாளவும் பராமரிக்கவும் பாதுகாப்புப் படையினர் சிரமப்பட்டனர். நிகழ்ச்சிக்குப் பிறகு, நானும் என் சக நடிகர்களில் ஒருவரும் வெளியேறினோம், சிலர் என் சக நடிகையிடம் தவறாக நடந்துகொண்டார்கள்.
கூட்டத்தின் காரணமாக அவருக்குப் எதிர்வினையாற்ற கூட வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன்பிறகு, இதேபோன்ற பெண் வெறுப்பு செயலை நானும் சந்தித்தேன், நீங்கள் வீடியோவில் பார்த்தது போல் நான் அதிர்ச்சியுடன் அதற்கு பதிலளித்தேன் என பதிவிட்டுள்ளார்.
- இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- வெளிமாநிலங்களில் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர்கள் சென்னை திரும்பினர்.
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

பொன்னியின் செல்வன்
ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில், இப்படத்தின் வெளிமாநிலங்களின் புரொமோஷன் பணிகளை முடித்துவிட்டு நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி மற்றும் திரிஷா ஆகியோர் இன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

பொன்னியின் செல்வன்
அப்போது நடிகர் கார்த்தி பேசியதாவது, "பல பேர் இந்த படத்தை பார்ப்பதற்காக 'பொன்னியின் செல்வன்' புத்தகத்தை படிக்க ஆரம்பித்துவிட்டார்கள். வெளிமாநிலத்தவர்களும் நம் பெருமையை தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுவது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
முதல் பான் இந்திய திரைப்படத்தை மணி சார் தான் ஆரம்பித்தார். அதனால் மணி சாரை அனைவருக்கும் தெரிகிறது. அவர் நம்முடைய பெரிய அடையாளமாக இருக்கிறார். ஏ.ஆர்.ரகுமானும் மணிசாரும் வரும் பொழுது தமிழ்நாட்டில் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார்களோ அதுபோல் தான் வெளிமாநிலங்களிலும் இருக்கிறார்கள்" என்று கூறினார்.
- ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ராய் லட்சுமி.
- ராய் லட்சுமி தற்போது வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் 'கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.

ராய் லட்சுமி
அதன்பிறகு 'கற்க கசடற', 'குண்டக்க மண்டக்க', 'தர்மபுரி', 'வெள்ளித்திரை', 'மங்காத்த', 'காஞ்சனா', 'அரண்மனை' போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.

ராய் லட்சுமி
அதன்பின்னர் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவிய ராய் லட்சுமி, முதன்முதலில் நடித்த 'ஜூலி-2' திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் வெளியான சிண்ட்ரெல்லா திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றது.

ராய் லட்சுமி
அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளின் மூலம் தனது கவர்ச்சி புகைப்படங்களை ராய் லட்சுமி வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது பிகினி உடையில் பீச்சில் ஊஞ்சலில் படுத்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- இந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே.
- இவர் நேற்றிரவு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்தி திரையுலகில் பிரபல நடிகையான தீபிகா படுகோனேவுக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதன்பின் அவருக்கு தொடர்ச்சியாக பல மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளன. டாக்டர்களின் சிகிச்சைக்கு பின்பு அவர் உடல்நலம் தேறி வருகிறார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தீபிகா படுகோனே
கடந்த ஜூனில் ஐதராபாத்தில், நடிகர் பிரபாஸ் உடனான படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்தபோது, தீபிகாவுக்கு இதய துடிப்பு விகிதம் அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து அவர் உடல் பரிசோதனைக்காக காமினேனி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தீபிகா படுகோனே
இவர் தற்போது நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் ஜான் ஆபிரகாம் ஆகியோருடன் பதான் படத்தில் நடித்துள்ளார். மேலும் நடிகர் ஹிரித்திக் ரோஷன் உடன் பைட்டர் படத்திலும், நடிகர்கள் பிரபாஸ் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் நடிக்கும் படம் ஒன்றிலும் அவர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






