என் மலர்

  சினிமா செய்திகள்

  வெகுநேரமாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்
  X

  விஜய்

  வெகுநேரமாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது.
  • இப்படத்தின் நேற்று முன்தினம் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை பார்க்க வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

  வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

  வாரிசு - விஜய்

  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாத இறுதிக்குள் இதன் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துவிடும் எனக் கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சென்னை, எண்ணூரில் நடைபெற்ற படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். அப்போது ரசிகர்கள் பலர் விஜய்யை பார்க்க குவிந்ததால் போலீசார் தடியடி நடித்தியுள்ளனர்.

  வாரிசு - விஜய்

  இதனால் ஆதங்கமடைந்த ரசிகர்கள், "நாங்க இதெல்லாம் யாருக்காக செய்கிறோம். எங்களுக்கு தளபதியே தேவையில்லை. எங்களுக்கு விஜய்யை பார்க்க ஆசையாக உள்ளது. இந்த வாசல் முன்பு வந்து கை அசைத்தால் போதும். ரஜினி, சூர்யா வந்த போது ரசிகர்களை அனுமதித்தார்கள். தளபதி வந்தால் மட்டும் ஏன் அனுமதிக்கவில்லை" என்று வருத்ததில் பலரும் பேசினர்.

  ரசிகர்களை பார்த்து கையசைத்த விஜய்

  இந்நிலையில் நேற்று இரவு சென்னை எண்ணூரில் நடைபெற்ற படப்பிடிப்புக்கு இடையில் வெளியே வந்த விஜய் ரசிகர்களை பார்த்து கையசைத்துவிட்டு சென்றார். விஜய்யை பார்க்க வெகுநேரமாக காத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உற்சாகப்படுத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  Next Story
  ×