என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • 80-களின் காலக்கட்டத்தில் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக கொடிகட்டி பறந்த அம்பிகா.
    • தற்போது பாலியல் குற்றங்களை கண்டித்து நடிகை அம்பிகா கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    தமிழ் திரையுலகில் 1980-களில் கதாநாயகியாக கொடி கட்டி பறந்த அம்பிகா, அப்போதைய முன்னணி கதாநாயகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை தக்கவைத்து இருந்தார். தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட அனைத்து தென்னிந்திய மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீப காலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அம்பிகா சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகிறார்.

    அம்பிகா

    அம்பிகா

     

    இந்நிலையில் புனித தோமையார் காவல் நிலையத்தில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளதாக சென்னை காவல் துறை சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டதற்கு நடிகை அம்பிகா சமூக வலைத்தளப் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

    அம்பிகா

    அம்பிகா

     

    அதில் ''பாலியல் குற்றங்கள் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ இருந்தாலும் குற்றவாளிகள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். சிறாராக இருந்தாலும் சரி 100 வயது உடையவராக இருந்தாலும் சரி குற்றம் குற்றமே" என்று கூறியுள்ளார். அம்பிகாவின் பரிந்துரைக்கு காவல் துறை நன்றி தெரிவித்து பதிவு வெளியிட்டு உள்ளது.

    • பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி காலமானார்.
    • இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இவரது தந்தை பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா. இவரது மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி. கடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

     

    கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

    கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

    இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறுகிறது.

     

    கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

    கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

    நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் மறைவுக்கு தெலுங்கு திரைப்பட நடிகர்கள் மற்றும் தமிழ், கன்னட திரைப்பட நடிகர் நடிகைகள், மற்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷால் வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
    • இதுகுறித்து காவல் நிலையத்தில் விஷால் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சென்னை அண்ணா நகரில் நடிகர் விஷால் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று (26-09-2022) இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடிகர் விஷால் வீட்டை தாக்கினர். இதனைத் தொடர்ந்து வீட்டின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக நடிகர் விஷால் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

     

    விஷால்

    விஷால்

    இதுதொடர்பாக நடிகர் விஷால் சார்பாக அவரது மேலாளர் ஹரி கிருஷ்ணன் அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், நேற்று (26-09-2022) இரவு சிகப்பு நிற காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் விஷால் வீட்டை தாக்கினர். அதற்கு ஆதாரமாக எங்களுடைய இல்லத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி வீடியோ பதிவையும், இந்த புகாரில் இணைத்துள்ளோம்.

     

    விஷால்

    விஷால்

    எனவே இந்த புகாரை ஏற்று விசாரணை மேற்கொண்டு விஷால் இல்லத்தை தாக்கிய மர்ம நபர்களை கண்டுபிடித்து தக்க தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்ட வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி சரத்குமார் கூறினார்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக வெளிவரும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற 30-ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

     

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராமன், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

     

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    "பொன்னியின் செல்வன்" படத்தில் இடம்பெறும் பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டதாகவும், இதற்காக அவர் இயக்குனர் மணிரத்னத்தை நேரில் சந்தித்து தனது விருப்பத்தை தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

     

    சரத்குமார்

    சரத்குமார்

    தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க ரஜினி விருப்பம் தெரிவித்த அந்த வேடத்தில் சரத்குமார் நடித்திருக்கிறார். பழுவேட்டரையர் வேடத்தில் நடித்த அனுபவம் பற்றி சரத்குமார் கூறியதாவது:- "பழுவேட்டரையர் 64 விழுப்புண்களை பெற்ற மாவீரர். பொன்னியின் செல்வன் கதையை படிக்கும்போதே பெரிய பழுவேட்டரையர் வேடத்தில் நடிப்பது யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

     

    அந்த வாய்ப்பை எனக்கு அளித்த இயக்குனர் மணிரத்னத்துக்கு நன்றி. அந்த வேடத்தில் யாரெல்லாம் நடிக்க ஆசைப்பட்டார்கள் என்று தெரியாது. ரஜினிகாந்த் நடிக்க விரும்பியதை பெருமையாக கருதுகிறேன்.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பொன்னியின் செல்வன்.
    • இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் புதிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.



    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படத்தின் 'மல்லிப்பூ' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது.

    கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.


    வெந்து தணிந்தது காடு

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் 'மல்லிப்பூ' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.


    வெந்து தணிந்தது காடு

    'வெந்து தணிந்தது காடு' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு கார் ஒன்றையும் இயக்குனர் கவுதம் மேனனுக்கு 'ராயல் என்ஃபீல்ட்' பைக்கையும் நடிகர் கூல் சுரேஷிற்கு ஐபோனையும் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



    • செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'.
    • 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    நானே வருவேன்

    வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, "இந்தப் படத்தின் கதையை உருவாக்க 6 மாதங்கள் எடுத்துக் கொண்டது. இந்த ஸ்கிரிப்டை திரையில் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருந்ததது.


    நானே வருவேன் படக்குழு

    இது தனுஷின் கதை என்பதால் நாங்கள் இருவரும் பல நேரங்களில் பல விவாதங்களை மேற்கொண்டு காட்சிகளை அமைத்தோம். குழந்தையில் இருந்து நடிகராகவும் தற்போது திரைக்கதை ஆசிரியராகவும் அவரது பல வளர்ச்சிகள் என்னை வியப்படைய வைத்துள்ளது" என்று கூறினார்.

    • மன்மத லீலை படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கி வரும் படம் என்சி22.
    • இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார்.


    என்சி 22

    தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.


    என் சி 22 படப்பிடிப்பு

    இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, என்சி22 படத்தின் படப்பிடிப்பு மைசூரில் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. இதனை வெங்கட் பிரபு தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.


    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வருகிற செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    கல்கி எழுதிய நாவலை தழுவி, மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்-1' திரைப்படம் வரும் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயராம், பார்த்திபன், சரத்குமார், நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


    பொன்னியின் செல்வன்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தற்போது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் சென்று படத்தை விளம்பரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது.


    பொன்னியின் செல்வன்

    இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' அருண்மொழி வர்மன் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அருண்மொழி வர்மன் என்ற பேரரசர் மிகவும் அமைதியானவர். உதவும் தன்மை கொண்டவர். யார் மனதும் புண்படக் கூடாது என்று நினைப்பவர்.


    பொன்னியின் செல்வன்

    இவர் மிருகங்களிடம் பேசும் திறன் கொண்டவர். அதாவது, மிருகங்கள் நினைப்பதை புரிந்து கொள்ளும் அளவிற்கு திறமையும் பாசமும் கொண்டவர். எதிரி நம் நாட்டினராக இருந்தாலும் அவருடன் நட்புடன் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். இப்படியான சிறப்பு மிக்க கதாபாத்திரத்தில் தான் ஜெயம் ரவி நடித்துள்ளார்.

    • கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் வெந்து தணிந்தது காடு.
    • இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பரிசுகள் வழங்கியுள்ளார்.

    கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு, நடிகை சித்தி இத்னானி, நடிகை ராதிகா உள்ளிட்டோர் நடித்த 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு வெற்றி கிடைத்து வருகிறது. தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது.


    கவுதம் மேனன் - ஐசரி கணேஷ்

    ஏ.ஆர்.ரகுமான் இசையில் படத்தின் பின்னனி இசையும், பாடல்களும் கவனத்தைப் பெற்றுள்ளன. குறிப்பாக 'மல்லிப்பூ' பாடலும், அதன் காட்சியமைப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இப்படத்தின் இரண்டாம் பாகம் இரண்டு ஹீரோக்களை கொண்ட படமாக இருக்கும் என்று சமீபத்தில் நேர்க்காணல் நிகழ்ச்சி ஒன்றில் இயக்குனர் கவுதம் மேனன் கூறியிருந்தார்.


    சிம்பு - ஐசரி கணேஷ்

    இதையடுத்து படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் நடிகர் சிம்புவுக்கு 'டொயோட்டா வெல்ஃபையர்' சொகுசு கார் ஒன்றையும் இயக்குனர் கவுதம் மேனனுக்கு 'ராயல் என்ஃபீல்ட்' பைக்கையும் பரிசாக வழங்கினார். இந்நிலையில், நடிகர் கூல் சுரேஷுக்கு ஐபோன் ஒன்றை ஐசரி கணேஷ் பரிசளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.


    ஐசரி கணேஷ் - கூல் சுரேஷ்

    'வெந்து தணிந்தது காடு'  திரைப்படத்திற்கு நடிகர் கூல் சுரேஷ்  செல்லும் இடமெல்லாம் புரொமோஷன் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • திரைத்துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • பழம்பெரும் நடிகை ஆஷா பரேக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

    திரைத்துறையில் தன்னிகரற்ற சேவையாற்றி வரும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தியத் திரை உலகினருக்குக் கிடைக்கும் கௌரவச் சின்னமாகவும், வாழ்நாள் அங்கீகாரமாகவும் இவ்விருது கருதப்படுகிறது.

     

    ஆஷா பரேக்

    ஆஷா பரேக்

    இந்நிலையில் பழம்பெரும் இந்தி நடிகை ஆஷா பரேக்கிற்கு இந்த ஆண்டு இவ்விருது வழங்கப்படுகிறது. 1960 மற்றும் 1970 ஆண்டுகளில் இந்தியில் பிரபலமாக திகழ்ந்த ஆஷா பரேக் இதுவரை பல்வேறு விருதுகளை பெற்று உள்ளார். 79 வயதான இவர் 1992-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மலையாள திரையுலகில் முன்னணி நடிகை பாவனா.
    • இவரின் பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    தமிழ், தெலுங்கு, கன்னட திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் பாவனா. சில ஆண்டுகளுக்கு முன்பு கன்னட தயாரிப்பாளரை திருமணம் செய்து சினிமாவைவிட்டு ஒதுங்கினார். 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும் 'என்றெகாக்காக்கொரு பிரேமண்டார்ந்னு' என்ற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


    பாவனா

    சமீபத்தில் இவருக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விழாவில், பாவனா அணிந்திருந்த உடை சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்யப்பட்டது. இதனால் வருத்தமடைந்த பாவனா பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


    பாவனா

    அதில், "ஒவ்வொரு நாளும் எல்லாம் சரியாகிவிடும் என்று எனக்குள் சொல்லிக் கொண்டு வாழ முயல்கிறேன், என் அன்புக்குரியவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்று நினைத்து சோகத்தைத் தவிர்க்க முயல்கிறேன். எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் மூலம் என்னை மீண்டும் இருளுக்கு இழுக்க முயற்சிப்பவர்கள் இருப்பதை அறியும்போது வேதனை அளிக்கிறது. இதுபோன்ற செயல்கள் மூலம்தான் அவர்கள் சந்தோசம் காண விரும்பினால் நான் அவர்களைத் தடுக்கவில்லை" என்று வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

    ×