இது தனுஷின் கதை.. உண்மையை உடைத்த செல்வராகவன்..

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
தனுஷ்
தனுஷ்
Published on

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள படம் 'நானே வருவேன்'. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். மேலும் யோகி பாபு, பிரபு, எல்லி அவுரம் என்ற ஸ்வீடன் நாட்டு நடிகை உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

நானே வருவேன்

வி கிரியேசன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 'நானே வருவேன்' திரைப்படம் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, "இந்தப் படத்தின் கதையை உருவாக்க 6 மாதங்கள் எடுத்துக் கொண்டது. இந்த ஸ்கிரிப்டை திரையில் கொண்டு வருவது மிகப்பெரிய சவாலாக இருந்ததது.

நானே வருவேன் படக்குழு

இது தனுஷின் கதை என்பதால் நாங்கள் இருவரும் பல நேரங்களில் பல விவாதங்களை மேற்கொண்டு காட்சிகளை அமைத்தோம். குழந்தையில் இருந்து நடிகராகவும் தற்போது திரைக்கதை ஆசிரியராகவும் அவரது பல வளர்ச்சிகள் என்னை வியப்படைய வைத்துள்ளது" என்று கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com