என் மலர்
நீங்கள் தேடியது "கட்டமனேனி இந்திரா தேவி"
- பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி காலமானார்.
- இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இவரது தந்தை பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா. இவரது மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி. கடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு
இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறுகிறது.

கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு
நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் மறைவுக்கு தெலுங்கு திரைப்பட நடிகர்கள் மற்றும் தமிழ், கன்னட திரைப்பட நடிகர் நடிகைகள், மற்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.






