என் மலர்

  சினிமா செய்திகள்

  நானே வருவேன்னு சொல்லித்தான் வந்தேன், ஏன்னா.. - நடிகர் பார்த்திபன்
  X

  பார்த்திபன்

  நானே வருவேன்னு சொல்லித்தான் வந்தேன், ஏன்னா.." - நடிகர் பார்த்திபன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது.
  • இப்படம் வெளியாவதை தொடர்ந்து படக்குழு செய்தியாளர்களை சந்தித்தனர்.

  இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னம் இயக்கத்தில் முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் நாளை உலகமெங்கும் வெளியாகிறது. பெரும் எதிர்ப்பார்ப்பில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதை தொடர்ந்து படக்குழுவினர் நிருபர்களை சந்தித்தனர்.

  பார்த்திபன்

  இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பார்த்திபன் கூறியதாவது, "நானே வருவேன் என்று சொல்லி அடம்பிடித்துதான் இன்றைக்கு இங்கே வந்திருக்கிறேன். என்னை இந்த பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழைத்த போது முதலில் நான் வரவில்லை, தஞ்சாவூர் போறேன், அங்கு படத்தை பார்த்துவிட்டு, பிறகு ராஜராஜ சோழனுக்கு மரியாதையை செலுத்த உள்ளேன். அதனால் என்னால் வர முடியாது என்று சொன்னேன். ஆனால் இந்த மேடையை தவற விட்டுவிட கூடாது என்பதற்காக அடம்பிடித்து நானே வருவேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன். ஏன்னா இந்த மாதிரியான பிரம்மாண்ட மேடை இன்னும் எத்தனை படத்திற்கு பார்க்க போறேன்னு தெரியல. நம்ம காதலியை இன்னொருத்தன் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போனா எப்படி இருக்குமோ அப்படி இருக்கு. அந்த மாதிரி இவ்வளவு நாளா நாம காதலித்த படம் நாளைக்கு ரசிகர்கள் கிட்ட போகும் போது, சந்தோஷமாக இருந்தாலும், ஒரு பக்கம் வருத்தமாக இருக்கு" என்றார்.

  Next Story
  ×