என் மலர்
இது புதுசு
மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் ஸ்விப்ட் மற்றும் டிசையர் மாடல்களின் புது வேரியண்டை அறிமுகம் செய்ய இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் ஸ்விப்ட் மற்றும் டிசையர் சி.என்.ஜி. வேரியண்ட்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இரு மாடல்களிலும் மாருதியின் எஸ்-சி.என்.ஜி. தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. மேலும் இவற்றில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் அதிக சி.என்.ஜி. மாடல்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி இருக்கிறது. இந்நிறுவன மாடல்களில் 1 லிட்டர் மற்றும் 1.5 லிட்டர் சி.என்.ஜி. பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இத்துடன் ஈக்கோ சி.என்.ஜி. எம்.பி.வி. மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

தற்போதைய தகவல்களின்படி ஸ்விப்ட் மற்றும் டிசையர் சி.என்.ஜி. வேரியண்ட்களில் 1.2 லிட்டர் டூயல் ஜெட் வி.வி.டி. என்ஜின் வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த என்ஜின் பலத்தரப்பட்ட எரிபொருள்களில் இயங்கும் திறன் கொண்டிருக்கிறது. இதனால் இவற்றின் செயல்திறன் சற்றே குறைந்து இருக்கும் என தெரிகிறது.
தற்போதைய பெட்ரோல் என்ஜின் 88 பி.ஹெச்.பி. பவர், 113 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறனை வழங்குகிறது. சி.என்.ஜி. வேரியண்ட் இதைவிட 10 சதவீதம் குறைந்த திறன் கொண்டிருக்கும். புதிய சி.என்.ஜி. வேரியண்ட்களின் விலை பெட்ரோல் மாடல்களை விட அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.
மாருதி சுசுகி நிறுவன்தின் XL7 எம்.பி.வி. மாடல் இந்தியாவில் நெக்சா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
மாருதி சுசுகி நிறுவனம் இந்த நிதியாண்டில் பல்வேறு கார் மால்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் சில மாடல்களை அந்நிறுவனத்தின் நெக்சா விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் மாருதி நிறுவனம் நெக்சா பிரிவில் புதிதாக 7 சீட்டர் எம்.பி.வி. மாடலை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இது XL6 மாடலின் 7 சீட்டர் வேரியண்ட்டாக இருக்கும் என்றும் இந்த மாடல் XL7 என அழைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தோனேசிய சந்தையில் மாருதி 7 சீட்டர் எம்.பி.வி. மாடலை விற்பனை செய்து வருகிறது. அங்கு இந்த மாடல் கடந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய XL6 7-சீட்டர் எம்.பி.வி. மாடலில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது.

அதன்படி புதிய அலாய் வீல்கள், அகலமான டையர்கள், காண்டிராஸ்ட் நிற பிளாக் ரூப், பின்புறம் ஸ்பாயிலர், மாடல் பேட்ஜிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதன் இந்தோனேசிய மாடலில் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே கனெக்டிவிட்டி, IRVM, மடிக்கக்கூடிய ஆர்ம்ரெஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.
தற்போதைய XL6 மாடலில் 1.5 லிட்டர் கே15 பெட்ரோல் என்ஜின் மற்றும் SHVS (Smart Hybrid Vehicle by Suzuki) வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 103 பி.ஹெச்.பி. பவர், 138 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன், 4 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் யூனிட் வழங்கப்படுகிறது.
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஆர்வி1 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் மாடல் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மாடலுக்கு மாற்றாக வெளியாகும் என தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் மாடல் ஆர்வி1 எனும் பெயரில் வெளியாக இருக்கிறது.

இந்த மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. ஆர்வி1 மாடல் 100 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. தற்போதைய மாடல்களுக்கான பாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், புதிய ஆர்வி1 மாடலுக்கான பாகங்களை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வாங்க ரெவோல்ட் திட்டமிட்டு இருக்கிறது. ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் ஆர்வி300 மாடல் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட்டு புதிய ஆர்வி1 மாடல் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
சீனாவில் உருவாகி இருக்கும் புதிய ரெயில் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது.
உலகின் அதிவேக ரெயிலை சீனா உருவாக்கி இருக்கிறது. இந்த ரெயில் மணிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் சீறிப்பாயும் திறன் கொண்டிருக்கிறது. இந்த ரெயில் மேக்லெவ் புல்லட் ரெயில் என அழைக்கப்படுகிறது. இந்த ரெயில் சுமார் ஆயிரம் கிலோமீட்டரை கடக்க வெறும் 150 நிமிடங்களையே எடுத்துக் கொள்கிறது. இதே தூரத்தை விமானத்தில் செல்லும்போது 180 நிமிடங்கள் வரை ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
வழக்கமான அதிவேக ரெயில்களுடன் ஒப்பிடும்போது இந்த ரெயில் பயண நேரத்தை மூன்று மணி நேரங்கள் வரை குறைத்துவிடுகிறது. இந்த ரெயில் எவ்வித சக்கரமும் இன்றி இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சக்கரங்களின் உதவியின்றி இந்த ரெயில் தரையின் மேல்பரப்பில் மிக நெருக்கமாக பறக்கிறது. இந்த ரெயிலில் சக்கரங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு மாற்றாக சக்திவாய்ந்த காந்தகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த காந்தகங்கள் ரெயிலில் உராய்வின்றி அதிவேகமாக முன்னேறி செல்கிறது. ரெயில் மற்றும் பாதை இடையே எவ்வித உராய்வும் இருக்காது என்பதால் வழக்கமான ரெயில்களுடன் ஒப்பிடும்போது இந்த ரெயில் அதிவேகமாக செல்கிறது. தற்போதுள்ள அதிவேக ரெயில்கள் மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கின்றன.
சீனாவில் இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் முடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த ரெயில்களின் முதற்கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு உள்ளது.
வழக்கமான அதிவேக ரெயில்களுடன் ஒப்பிடும்போது இந்த ரெயில் பயண நேரத்தை மூன்று மணி நேரங்கள் வரை குறைத்துவிடுகிறது. இந்த ரெயில் எவ்வித சக்கரமும் இன்றி இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சக்கரங்களின் உதவியின்றி இந்த ரெயில் தரையின் மேல்பரப்பில் மிக நெருக்கமாக பறக்கிறது. இந்த ரெயிலில் சக்கரங்கள் மற்றும் தண்டவாளங்களுக்கு மாற்றாக சக்திவாய்ந்த காந்தகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் இந்த திட்டம் 2016 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு மூன்றே ஆண்டுகளில் முடிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்த ரெயில்களின் முதற்கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டு உள்ளது.
யமஹா நிறுவனத்தின் பசினோ 125 ஹைப்ரிட் ஸ்கூட்டர் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகமாகி இருக்கிறது.
யமஹா நிறுவனம் பசினோ 125 ஹைப்ரிட் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இது இந்தியாவின் முதல் ஹைப்ரிட் ஸ்கூட்டர் ஆகும். யமஹா பசினோ 125 ஹைப்ரிட் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டருக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. வினியோகம் விரைவில் துவங்க இருக்கிறது.
யமஹா பசினோ 125 ஹைப்ரிட் மாடலின் டிரம் வேரியண்ட் விலை ரூ. 70 ஆயிரம் என்றும் டிஸ்க் வேரியண்ட் விலை ரூ. 76,530 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டிஸ்க் மாடல் விவிட் ரெட் ஸ்பெஷல் மற்றும் மேட் பிளாக் ஸ்பெஷல் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டர் கூல் புளூ மெட்டாலிக், டார்க் மேட் புளூ, சாவ் கூப்பர், எல்லோ காக்டெயில், சியான் புளூ, மெட்டாலிக் பிளாக் மற்றும் விவிட் ரெட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது.

யமஹா பசினோ 125 ஹைப்ரிட் மாடல் 125 சிசி பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் மற்றும் ஸ்டார்டர் மோட்டார் ஜெனரேட்டர் (எஸ்.எம்.ஜி.) கொண்டிருக்கிறது. இதன் எஸ்.எம்.ஜி. எலெக்ட்ரிக் மோட்டார் எலெக்ட்ரிக் பவர் அசிஸ்ட் வழங்குகிறது. இந்த என்ஜின் 8.2 பி.ஹெச்.பி. பவர், 10.3 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
யமஹா பசினோ 125 ஹைப்ரிட் மாடலில் புல்லி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்., ஆப்ஷனல் யு.எஸ்.பி. சார்ஜ் ஸ்லாட், ப்ளூடூத் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
போர்டு நிறுவனத்தின் பிகோ ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விவரங்களை பார்ப்போம்.
ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்ட போர்டு பிகோ மாடல் இந்தியாவில் அறிமுகமானது. புதிய பிகோ மாடல் துவக்க விலை ரூ. 7.75 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது வேரியண்ட் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் பிகோ மாடல்களுடன் இணைகிறது. பிகோ ஆட்டோமேடிக் வேரியண்டில் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் யூனிட் உள்ளது.
இந்த ஆப்ஷன் பிகோ டைட்டானியம் மற்றும் டைட்டானியம் பிளஸ் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. டைட்டானியம் பிளஸ் மாடலின் விலை ரூ. 8.20 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. போர்டு பிகோ புது வேரியண்டில் இகோஸ்போர்ட் மாடலில் வழங்கப்பட்டு இருக்கும் என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜினுடன் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுவதால், 95 பி.ஹெச்.பி. பவர், 119 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. பிகோ ஆட்டோமேடிக் வேரியண்டில் கூடுதலாக ஸ்போர்ட் மோட் வசதியும் வழங்கப்படுகிறது. பிகோ ஆட்டோமேடிக் வேரியண்ட் லிட்டருக்கு 16 கிலோமீட்டர் மைலேஜ் வழங்குகிறது.
மற்ற அம்சங்களை பொருத்தவரை பிகோ ஆட்டோமேடிக் மாடலில் 7 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், ரெயின்-சென்சிங் வைப்பர், ரிமோட் கீலெஸ் என்ட்ரி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
யமஹா நிறுவனத்தின் FZ25 மோட்டோ ஜிபி எடிஷன் மோட்டார்சைக்கிள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
யமஹா நிறுவனம் FZ25 மோட்டோ ஜிபி எடிஷன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லிமிடெட் எடிஷன் விலை ரூ. 1.36 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புதிய யமஹா FZ25 முன்பதிவு ஆன்லைனில் நடைபெறுகிறது. இந்த மாடலின் வினியோகம் இம்மாத இறுதியில் துவங்கும் என தெரிகிறது.

புதிய FZ25 மோட்டோ ஜிபி எடிஷனின் பியூவல் டேன்க், சைடு பேனல்களில் மான்ஸ்டர் எனர்ஜி யமஹா மோட்டோ ஜிபி பிராண்டிங் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய மோடடோ ஜிபி எடிஷன் குறைந்த எண்ணிக்கையில் கிடைக்கும். FZ25 மட்டுமின்றி இதர ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் மாடல்களின் மோட்டோ ஜிபி எடிஷனை அறிமுகம் செய்ய யமஹா திட்டமிட்டுள்ளது.
கிராபிக்ஸ் தவிர யமஹா FZ25 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அதன்படி யமஹா FZ25 மாடலில் 249சிசி, ஏர் கூல்டு, சிங்கில் சிலண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 20.5 பி.ஹெச்.பி. பவர், 20.1 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
சுசுகி மோட்டார் கார்ப் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் மாடல் இந்திய வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.
ஜப்பான் நாட்டை சேர்ந்த கார் உற்பத்தியாளரான சுசுகி மோட்டார் கார்ப் இந்திய எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் 2025 வாக்கில் களமிறங்க இருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களுக்கென முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் கொண்டு இயங்கும் காம்பேக்ட் மாடலை சுசுகி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த எலெக்ட்ரிக் கார் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி ரூ. 11 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையின் காம்பேக்ட் கார்கள் பிரிவில் கவனம் செலுத்த சுசுகி திட்டமிட்டு இருக்கிறது. இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளராக மாருதி சுசுகி இருக்கிறது. இந்திய விற்பனையில் மாருதி நிறுவனத்தின் ஆல்டோ, வேகன்ஆர், பலேனோ மற்றும் ஸ்விப்ட் போன்ற மாடல்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் தனது வேகன்ஆர் ஹேட்ச்பேக் மாடலின் எலெக்ட்ரிக் வேரியண்டை இந்தியாவில் சோதனை செய்து வருகிறது. எனினும், இதன் வெளியீடு பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
டி.வி.எஸ். நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகனங்கள் உற்பத்தியாளரான டி.வி.எஸ். மோட்டார் விரைவில் க்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவை பலப்படுத்த டி.வி.எஸ். நிறுவனம் ரூ. 1000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

முன்னதாக 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் டி.வி.எஸ். க்ரியான் கான்செப்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் க்ரியான் எலெக்ட்ரிக் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் பிரீமியம் பிரிவில் அசத்தல் அம்சங்களுடன் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
டி.வி.எஸ். க்ரியான் மாடல் அந்நிறுவனத்தின் ஓசூர் ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த மாடலை உருவாக்கும் பணிகளில் சுமார் 500 பொறியாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. டி.வி.எஸ். க்ரியான் மாடலில் 12 kW லித்தியம் அயன் பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.1 நொடிகளில் எட்டிவிடும்.
மஹிந்திரா நிறுவனத்தின் eKUV100 எலெக்ட்ரிக் கார் சோதனை துவங்கி நடைபெற்று வருகிறது.
மஹிந்திரா நிறுவனம் eKUV100 எலெக்ட்ரிக் கார் மாடலை 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த மாடலின் ப்ரோடக்ஷன் வேரியண்ட் சோதனை துவங்கி இருக்கிறது. இது ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட ப்ரோடோடைப் மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
புதிய eKUV100 அடுத்த ஆண்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் eKUV100 கருப்பு நிறம் கொண்டிருக்கிறது. காரின் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் தற்போது விற்பனையாகும் KUV100 போன்றே காட்சியளிக்கிறது.

மஹிந்திரா eKUV100 பேட்டரி திறன் பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 147 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இதில் வழங்கப்படும் பேட்டரியை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய ஒரு மணி நேரம் ஆகும்.
மேலும் இதன் எலெக்ட்ரிக் மோட்டார் 54 பி.ஹெச்.பி. பவர், 120 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. இந்தியாவில் eKUV100 விலை ரூ. 10 லட்சத்திற்குள் நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
லம்போர்கினி நிறுவனத்தின் ஹூராகேன் STO மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகி இருக்கிறது.
லம்போர்கினி நிறுவனம் இந்தியாவில் ஹூராகேன் STO மாடலை அறிமுகம் செய்தது. புது சூப்பர் கார் விலை ரூ. 4.99 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும்.

லம்போர்கினி ஹூராகேன் STO மாடலில் 5.2 லிட்டர் வி10 என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இத்துடன் 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் LDF கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 630 பி.ஹெச்.பி. பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.
புதிய லம்போர்கினி கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.0 நொடிகளிலும் 200 கிலோமீட்டர் வேகத்தை 9 நொடிகளிலும் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 310 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. லம்போர்கினி ஹூராகேன் STO மூன்று டிரைவ் மோட்களை கொண்டுள்ளது.
பல்வேறு புதிய அம்சங்கள் கொண்ட 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது.
ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் 2021 டிஸ்கவரி மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி துவக்க விலை ரூ. 88.06 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். முன்னதாக லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டிபென்டர் 90 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடலின் வெளிப்புறம் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் மேம்பட்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், புது பவர்டிரெயின் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக 2017 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட டிஸ்கவரி மாடலே இதுவரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

புதிய மாடலில் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட் செய்யப்பட்ட டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட பம்ப்பர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதன் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த காரில் 11.4 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
2021 டிஸ்கவரி மாடல் 2 லிட்டர், 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின், 3 லிட்டர், 6 சிலிண்டர் என்ஜின் மற்றும் 3 லிட்டர், 6 சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த என்ஜின்கள் முறையே 296 பி.ஹெச்.பி. பவர், 400 நியூட்டன் மீட்டர் டார்க், 355 பி.ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் மற்றும் 296 பி.ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகின்றன.
இவற்றுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 2021 லேண்ட் ரோவர் டிஸ்கவரி மாடல் வால்வோ XC90, பி.எம்.டபிள்யூ. X7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் GLS போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.






