search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ரெவோல்ட்  எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்
    X
    ரெவோல்ட் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

    குறைந்த விலை எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யும் ரெவோல்ட்

    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஆர்வி1 எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.


    ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் மாடல் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆர்வி300 எலெக்ட்ரிக் மாடலுக்கு மாற்றாக வெளியாகும் என தெரிகிறது. புதிய எலெக்ட்ரிக் மாடல் ஆர்வி1 எனும் பெயரில் வெளியாக இருக்கிறது. 

     ரெவோல்ட் மோட்டார், ரெவோல்ட் ஆர்வி300, எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

    இந்த மோட்டார்சைக்கிள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் மாடல்களை விட விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது. இதற்கான உற்பத்தி பணிகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் துவங்க இருக்கிறது. ஆர்வி1 மாடல் 100 சதவீதம் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. தற்போதைய மாடல்களுக்கான பாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. 

    இந்தநிலையில், புதிய ஆர்வி1 மாடலுக்கான பாகங்களை முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வாங்க ரெவோல்ட் திட்டமிட்டு இருக்கிறது. ரெவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 மாடல்களை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் ஆர்வி300 மாடல் விற்பனை படிப்படியாக நிறுத்தப்பட்டு புதிய ஆர்வி1 மாடல் குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    Next Story
    ×