என் மலர்
இது புதுசு
வால்வோ நிறுவனம் இந்த ஆண்டு இறுதிக்குள் மூன்று புது கார் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டு வாகன உற்பத்தியாளரான வால்வோ இந்தியாவில் புது கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. வால்வோ நிறுவனத்தின் XC40 எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. மாடல் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இத்துடன் 2021 இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் S90 பிரீமியம் செடான் மற்றும் மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலான XC60 அறிமுகமாக இருக்கிறது.
எலெக்ட்ரிக் மாடலான XC40 ரீசார்ஜ் வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகிறது. இது பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகமாக இருக்கிறது. வால்வோ XC40 ரீசார்ஜ் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்களை கொண்டிருக்கிறது. இதில் உள்ள 78kWh பேட்டரி வழங்கப்படுகிறது.

இது 397 பி.ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 4.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது.
வால்வோ S90 மற்றும் XC60 மாடல்களில் பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு-ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்படுகிறது. 2021 முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் வால்வோ கார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை 52 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு வெளியாக இருந்த போர்ஸ் குர்கா மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
புத்தம் புதிய போர்ஸ் குர்கா மாடல் வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக 2020 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட போர்ஸ் குர்கா மாடல் கடந்த ஆண்டே வெளியிட திட்டமிடப்பட்டது.

புதிய குர்கா மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் மாடலை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. எனினும், புது குர்கா மாடலில் மேம்பட்ட லேடர் பிரேம் சேசிஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் சதுரங்க வடிவில் அப்படியே காட்சியளிக்கிறது. இந்த மாடலில் புதிய பம்ப்பர்கள், ஹெட்லைட், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், மேம்பட்ட டெயில் லேம்ப், புதிய முன்புற கிரில் வழங்கப்படுகிறது.
புதிய குர்கா மாடல் மூன்று மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்ட், 2-வீல் மற்றும் 4-வீல் டிரைவ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 90 பி.ஹெச்.பி. பவர், 260 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.
1971 போர் வெற்றியின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் மோட்டார்சைக்கிளை இரு நிறங்களில் அறிமுகம் செய்தது.
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் ஜாவா கிளாசிக் காக்கி மற்றும் மிட்நைட் கிரே நிறங்களை அறிமுகம் செய்தது. இரு நிறங்களும் 1971 போர் வெற்றியின் 50-வது ஆண்டு விழாவை கொண்டாடும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புது நிறம் தவிர மோட்டார்சைக்கிளில் இந்திய ராணுவ சின்னமும் இடம்பெற்று இருக்கிறது.

ஜாவா காக்கி மற்றும் மிட் நைட் கிரே மாடல்கள் விலை ரூ. 1,93,357 எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு நிற ஆப்ஷன்களும் மேட் பினிஷ் மற்றும் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிளாக்டு-அவுட் ஸ்போக் வழங்கப்பட்டு உள்ளது. காஸ்மெடிக் அப்கிரேடுகள் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வெர்ஷன் கொண்ட மாடல்களில் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜாவா மாடலின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் 293சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு, பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 27 பி.ஹெச்.பி. பவர், 27.02 நியூட்டன் மீட்டர் டார்க் திறன் வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மாசிராட்டி நிறுவனத்தின் புதிய ஹைப்ரிட் மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
இத்தாலி நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான மாசிராட்டி, லெவாண்ட் ஹைப்ரிட் எஸ்யுவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. புது ஹைப்ரிட் மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகமாகும் என தெரிகிறது. மாசிராட்டி நிறுவனத்தின் இரண்டாவது ஹைப்ரிட் மாடலாக லெவாண்ட் மாடல் இருக்கிறது.

மாசிராட்டி லெவாண்ட் ஹைப்ரிட் மாடலில் 48 வோல்ட் ஹைப்ரிட் மற்றும் 2 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 330 பி.ஹெச்.பி. பவர், 450 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இதில் உள்ள மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மாசிராட்டி மாடலை மேலும் வேகமாக்கி இருக்கிறது.
இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 6 நொடிகளில் எட்டிவிடும். இந்த கார் மணிக்கு 240 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் அறிமுகமானதும் லெவாண்ட் ஹைப்ரிட் மாடல் போர்ஷ் கேயென், பி.எம்.டபிள்யூ. எக்ஸ்7, ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆடி கியூ7 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
லேண்ட் ரோவர் டிபென்டர் 90 இரு கதவுகள் கொண்ட மாடல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.
லேண்ட் ரோவர் டிபென்டர் 90 மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதன் விலை ரூ. 76.57 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் இரு கதவுகள் கொண்ட வேரியண்ட்டாக கிடைக்கிறது. அளவில் சிறிய வீல்பேஸ் கொண்டிருப்பதால், இந்த மாடல் 90 என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் புதிய டிபென்டர் 90 மாடல் 2 லிட்டர் பெட்ரோல், 2 லிட்டர் டீசல் அல்லது 3 லிட்டர் டீசல் என மூன்று வித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அனைத்து வெர்ஷன்களுடன் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டெரைன் ரெஸ்பான்ஸ் AWD சிஸ்டம், 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
டிபென்டர் 90 மாடல்களில் மேம்பட்ட அம்சங்கள் நிறைந்த டெரைன் ரெஸ்பான்ஸ் 2 சிஸ்டம் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. அனைத்து மாடல்களிலும் லெதர் இருக்கைகள், கிளைமேட் கண்ட்ரோல், லேண்ட் ரோவர் நிறுவனத்தின் பிவி இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் பி.எம்.டபிள்யூ. CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ப்ரோடக்ஷன் மாடல் ஆகும். தோற்றத்தில் இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ. டெபனிஷன் CE 04 கான்செப்ட் போன்றே காட்சியளிக்கிறது.
முற்றிலும் அதிநவீன டிசைன் கொண்டிருக்கும் பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலில் 10.25 இன்ச் TFT கலர் ஸ்கிரீன், முழுவதும் எல்.இ.டி. லைட்டிங், பக்கவாட்டு மற்றும் முன்புறம் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இடவசதி உள்ளது. இத்துடன் காற்றோட்ட வசதியுடன் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்ட மொபைல் போன் சார்ஜிங் யூனிட் உள்ளது.

பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலின் பேட்டரி மற்றும் பின்புற சக்கரத்திற்கு இடையில் காந்த திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. 15kW திறன் கொண்ட மோட்டார் 41 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.
இதில் உள்ள 8.9 kWh பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. பி.எம்.டபிள்யூ. CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இகோ, ரெயின், ரோட் மற்றும் ஆப்ஷனல் டைனமிக் மோட் போன்ற ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.
லேண்ட் ரோவர் நிறுவனத்தின் 2021 ரேன்ஜ் ரோவர் இவோக் மாடல் இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
லேண்ட் ரோவர் இந்தியா நிறுவனம் 2021 ரேன்ஜ் ரோவர் இவோக் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ரேன்ஜ் ரோவர் மாடல் துவக்க விலை ரூ. 64.12 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மாடல் R டைனமிக் SE மற்றும் S என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. புதிய காருக்கான முன்பதிவு அந்நிறுவன வலைதளத்தில் நடைபெறுகிறது.

2021 ரேன்ஜ் ரோவர் R டைனமிக் SE வேரியண்ட் 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது. இதன் S வேரியண்ட் 2 லிட்டர் டீசல் என்ஜின் கொண்டுள்ளது. 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 247 பி.ஹெச்.பி. பவர், 365 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. 2 லிட்டர் டீசல் என்ஜின் 201 பி.ஹெச்.பி. பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
இரு என்ஜின்களுடன் 9 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய இவோக் மாடலில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் டெரைன் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர இவோக் சீரிசில் முதல் முறையாக டீப் கார்னெட் / எபோனி டூயல் டோன் நிறம் வழங்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ மாடல் புது வேரியண்ட்கள் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளன.
ஹூண்டாய் நிறுவனம் தனது வென்யூ காம்பேக்ட் எஸ்யுவி மாடலின் S (O) மற்றும் SX (O) வேரியண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புது வேரியண்ட்களின் துவக்க விலை ரூ. 9.03 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இரு வேரியண்ட்களும் மொத்தம் 4 மாடல்களில் கிடைக்கின்றன.
புது வேரியண்ட்கள் விலை விவரம்
ஹூண்டாய் வென்யூ S(O)
பெட்ரோல் iMT ரூ. 9.03 லட்சம்
பெட்ரோல் 7DCT ரூ. 9.94 லட்சம்
டீசல் 6MT ரூ. 9.44 லட்சம்
ஹூண்டாய் வென்யூ SX(O)
டீசல் 6MT ரூ. 10.96 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

புதிய ஹூண்டாய் வென்யூ S(O) வேரியண்ட் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், iMT 7 ஸ்பீடு DCT ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 118 பிஹெச்பி பவர், 172 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
இத்துடன் 1.5 லிட்டர் டீசல் என்ஜின், 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 100 பிஹெச்பி பவர், 240 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
மாற்றங்களை பொருத்தவரை இரு வேரியண்ட்களிலும் அலாய் வீல்களுக்கு மாற்றாக ஸ்டீல் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் புளூ லின்க் கனெக்டிவிட்டி வசதி வழங்கப்படுகின்றன. இவைதவிர இரு வேரியண்ட்களிலும் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
லம்போர்கினி நிறுவனத்தின் புது ஹரிகேன் STO மாடல் ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது.
லம்போர்கினி நிறுவனம் தனது ஹரிகேன் STO மாடலை ஜூலை 15 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
லம்போர்கினி ஹரிகேன் STO மாடலில் ஹரிகேன் பெர்போர்மன்ட் மற்றும் ஹரிகேன் இவோ மாடல்களில் வழங்கப்பட்டுள்ள என்ஜினே வழங்கப்பட்டு இருக்கிறது. எனினும், இதன் இழுவிசை திறன் சற்றே குறைக்கப்பட்டு இருக்கிறது.

எடையை பொருத்த வரை புது ஹரிகேன் STO கார், பெர்போர்மன்ட் மாடலை விட 43 கிலோ குறைவாக உள்ளது. இதன் பிரத்யேக ஏரோடைனமிக் வடிவமைப்பு ஹரிகேன் STO மாடலின் திறனை பலமடங்கு அதிகரித்து இருக்கிறது. இதனால் அதிவேகமாக செல்லும் போது காரை சிறப்பாக கட்டுப்படுத்த முடியும்.
புது லம்போர்கினி காரில் 5.2 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 631 பிஹெச்பி பவர், 565 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது அதிகபட்சமாக 310 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் பிஎஸ்6 ரக R 1250 GS சீரிஸ் விரைவில் இந்திய சந்தையில் வெளியாக இருக்கிறது.
பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் தனது பிஎஸ்6 ரக பி.எம்.டபிள்யூ. R 1250 GS மற்றும் R 1250 GS அட்வென்ச்சர் மாடல்கள் ஜூலை 8 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என அறிவித்துள்ளது. இரு மாடல்கள் வெளியீட்டை பி.எம்.டபிள்யூ. தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து இருக்கிறது.
ஏற்கனவே யூரோ 5 விதிகளுக்கு பொருந்தும் பி.எம்.டபிள்யூ. R 1250 GS சீரிஸ் மாடல்கள் பல்வேறு நாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் சமீபத்திய அட்வென்ச்சர் டூரர் மாடலில் 1254சிசி, ஏர்/லிக்விட் கூல்டு, பிளாட் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

இந்த என்ஜின் 134 பிஹெச்பி பவர், 142 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்தியாவில் வெளியாக இருக்கும் பி.எம்.டபிள்யூ. R 1250 GS மாடலும் இதே அளவு செயல்திறன் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோற்றத்தில் இரு மாடல்களும் சர்வதேச சந்தையில் விற்பனையாகும் மாடல்களை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதில் அசிமெட்ரிக் ஹெட்லைட் டிசைன், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அட்வென்ச்சர் வேரியண்ட் டியூப்-லெஸ் டையர், கிராஸ் ஸ்போக் வீல்களை கொண்டிருக்கிறது.
சிஎப் மோட்டோ நிறுவனம் தனது பிஎஸ்6 மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது.
சிஎப் மோட்டோ நிறுவனம் 650NK, 650GT மற்றும் 650MT பிஎஸ்6 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இவற்றின் துவக்க விலை ரூ. 4.29 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். புது மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கான முன்பதிவு சிஎப்மோட்டோ வலைதளத்தில் நடைபெறுகிறது.
பிஎஸ்6 மாடல்கள் விலை விவரம்
650NK - ரூ. 4.29 லட்சம்
650GT - ரூ. 5.29 லட்சம்
650MT - ரூ. 5.59 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன. சிஎப் மோட்டோ 650NK மற்றும் 650MT பிஎஸ்6 மாடல்கள் விலை முந்தைய வேரியண்டை விட ரூ. 30 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. சிஎப்மோட்டோ 650GT மாடல் விலை ரூ. 10 ஆயிரம் அதிகமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

மூன்று புது சிஎப் மோட்டோ மாடல்களிலும் 650சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 55.6 பிஹெச்பி பவர், 54.4 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது.
பி.எம்.டபிள்யூ. என்ஜின் கொண்ட பறக்கும் கார் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டு இருக்கிறது.
பறக்கும் கார்கள் பல ஆண்டுகளாக மக்கள் மத்தியில் அதிசயம் மிக்க வாகனமாகவே அறியப்பட்டு வந்தது. சாலையில் வழக்கமான கார்களை போன்று செல்வதோடு, வானத்திலும் பறக்கும் திறன் கொண்ட வாகனம் என்றால் சுவாரஸ்யமான விஷயமாக இருப்பதோடு மட்டுமின்றி தொழில்நுட்ப சவால்கள் நிறைந்த ஒன்றாகவும் உள்ளது.
எனினும், கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்கள் பறக்கும் கார் தொழில்நுட்பத்தை உருவாக்க முயற்சித்து புதுமை மிக்க சில ப்ரோடோடைப் மாடல்களையும் வெளியிட்டுள்ளன. அந்த வகையில் கிளைன் விஷன் எனும் நிறுவனமும் பறக்கும் கார் ப்ரோடோடைப் மாடலை உருவாக்கி உள்ளது. இத்துடன் உலகில் முதல் முறையாக இன்டர்-சிட்டி சோதனையையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.

இந்த பறக்கும் கார் நித்ராவில் இருந்து ஸ்லோவேகியாவில் உள்ள பிரடிஸ்லாவா என இரண்டு சர்வதேச விமான நிலையங்களுக்கு பறந்து சென்றுள்ளது. ஜூன் 28 ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் பறக்கும் கார் இரு விமான நிலையங்களை கடக்க 35 நிமிடங்களை எடுத்துக் கொண்டது.
கிளைன் விஷன் ஏர்கார் மாடலில் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் 160 பிஹெச்பி திறன் வழங்கும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் தரையில் இருந்து 8200 அடி உயரத்தில் சுமார் ஆயிரம் கிலோமீட்டர்கள் வரை பறக்கும் திறன் கொண்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 170 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.
வானில் பறந்து வந்து தரையிறங்கியதும், ஒரே பட்டனை க்ளிக் செய்ததும் வழக்கமான ஸ்போர்ட்ஸ் காராக மூன்றே நிமிடங்களில் மாறிவிடுகிறது. வானில் பறப்பது மட்டுமின்றி சாதுர்யமான வளைவுகளையும் இந்த கார் நேர்த்தியாக செய்கிறது. இந்த கார் இதுவரை 40 மணி நேரம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் தரையில் இருந்து டேக் ஆப் ஆக 15 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. மேலும் காராக இருந்து விமானமாக மாற 2.15 நிமிடங்களை எடுத்துக் கொள்கிறது.






