search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பி.எம்.டபிள்யூ. CE 04
    X
    பி.எம்.டபிள்யூ. CE 04

    மணிக்கு 120 கிமீ வேகத்தில் செல்லும் பி.எம்.டபிள்யூ. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    பி.எம்.டபிள்யூ. நிறுவனம் உருவாக்கி வரும் புது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விவரங்கள் வெளியிடப்பட்டு இருக்கிறது.


    பி.எம்.டபிள்யூ. மோட்டராட் நிறுவனம் பி.எம்.டபிள்யூ. CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்து இருக்கிறது. இது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ப்ரோடக்ஷன் மாடல் ஆகும். தோற்றத்தில் இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட பி.எம்.டபிள்யூ. டெபனிஷன் CE 04 கான்செப்ட் போன்றே காட்சியளிக்கிறது.

    முற்றிலும் அதிநவீன டிசைன் கொண்டிருக்கும் பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலில் 10.25 இன்ச் TFT கலர் ஸ்கிரீன், முழுவதும் எல்.இ.டி. லைட்டிங், பக்கவாட்டு மற்றும் முன்புறம் பொருட்களை வைத்துக் கொள்வதற்கான இடவசதி உள்ளது. இத்துடன் காற்றோட்ட வசதியுடன் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்ட மொபைல் போன் சார்ஜிங் யூனிட் உள்ளது.  

     பி.எம்.டபிள்யூ. CE 04

    பி.எம்.டபிள்யூ. CE 04 மாடலின் பேட்டரி மற்றும் பின்புற சக்கரத்திற்கு இடையில் காந்த திறன் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார் மவுண்ட் செய்யப்பட்டு இருக்கிறது. 15kW திறன் கொண்ட மோட்டார் 41 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இந்த ஸ்கூட்டர் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தை 2.6 நொடிகளில் எட்டிவிடும். மேலும் அதிகபட்சமாக 120 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும்.

    இதில் உள்ள 8.9 kWh பேட்டரி ஒரு முறை சார்ஜ் செய்தால் 130 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. பி.எம்.டபிள்யூ. CE 04 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் - இகோ, ரெயின், ரோட் மற்றும் ஆப்ஷனல் டைனமிக் மோட் போன்ற ரைடிங் மோட்களை கொண்டிருக்கிறது.  

    Next Story
    ×