என் மலர்tooltip icon

    இது புதுசு

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர் இ.வி. சிப்டிரான் எலெக்ட்ரிக் கார் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலை ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதற்கான அறிவிப்பு அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டது.

     டாடா டீசர்

    புதிய எலெக்ட்ரிக் செடான் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதே தொழில்நுட்பம் நெக்சான் இ.வி. மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக டிகோர் இ.வி. மாடல் அதிக தூரம் செல்லும் வசதி, சிறப்பான செயல்திறன், காரின் வேகம் குறையும் போது மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதி உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்த அம்சங்கள் எதையும் டாடா மோட்டார்ஸ் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. புதிய டிகோர் இ.வி. சிப்டிரான் முழு விவரங்கள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகும். முன்னதாக டிகோர் இ.வி. மாடல் சில ஆண்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இந்த மாடலில் டாடாவின் எலெக்ட்ரா லோ-வோல்டேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் காரின் ரேன்ஜ் மற்றும் திறன்கள் குறைவாக இருந்தது.
    ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் பல்வேறு மாற்றங்களுடன் உருவாகி வருகிறது.


    ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தலைமுறை கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போதைய தகவல்களின் படி 2021 கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் ஆகஸ்ட் மாத இறுதியில் இந்திய சந்தையில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.

    முந்தைய ஸ்பை படங்களின்படி 2021 கிளாசிக் 350 மாடல் வெளிப்புற தோற்றம் சற்றே மாற்றப்பட்டு, புது தொழில்நுட்பங்கள் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மீடியோர் 350 மாடலின் தொழில்நுட்பங்கள் புதிய கிளாசிக் 350 மாடலிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

     ராயல் என்பீல்டு கிளாசிக் 350

    புதிய கிளாசிக் 350 மாடலில் 349சிசி சிங்கில் சிலிண்டர், DOHC என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் மீடியோர் 350 மாடலில் வழங்கப்பட்ட டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன் அம்சமும் 2021 கிளாசிக் 350 மாடலில் வழங்கப்படலாம்.

    புதிய மாடல் தற்போது விற்பனை செய்யப்படும் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு மாற்றாக அமையும். தற்போதைய கிளாசிக் 350 விலை ரூ. 1,79,782 என துவங்கி அதிகபட்சம் ரூ. 2,06,962 வரை விற்பனை செய்யப்படுகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கின்றன.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் மற்றும் சபாரி புது வேரியண்ட்கள் இந்தியாவில் அறிமுகமாகி இருக்கின்றன.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் XTA+ மற்றும் சபாரி XTA+ மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஹேரியர் XTA+ விலை ரூ. 19.14 லட்சத்தில் துவங்கி ரூ. 19.34 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    டாடா சபாரி XTA+ மாடல் விலை ரூ. 20.08 லட்சம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது XT+ மேனுவல் மாடலை விட ரூ. 1.29 லட்சம் அதிகம் ஆகும். இந்த மாடலில் பானரோமிக் சன்ரூப், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

     டாடா சபாரி

    புதிய ஹேரியர் XTA+ மாடலில் 2 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    சபாரி XTA+ மாடலிலும் 2 லிட்டர் டீசல் என்ஜினே வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜினும் 168 பி.ஹெச்.பி. பவர், 350 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்பட்டு உள்ளது.

    ஆடி நிறுவனம் இந்திய சந்தைக்கென பிரத்யேக திட்டம் தீட்டி புது கார்களை அறிமுகம் செய்து வருகிறது.


    ஜெர்மன் நாட்டு ஆடம்பர கார் உற்பத்தியாளரான ஆடி இந்தியாவில் மேலும் மூன்று புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. சமீபத்தில் ஆடி RS5 ஸ்போர்ட்பேக் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்த ஆண்டு ஆடி அறிமுகம் செய்த ஐந்தாவது மாடல் ஆகும். 

     ஆடி கார்

    ஆண்டு துவக்கம் முதல் ஆடி A4 பேஸ்லிப்ட், S5 ஸ்போர்ட்பேக், இ டிரான் மற்றும் இ டிரான் ஸ்போர்ட்பேக் போன்ற மாடல்களை ஆடி இந்தியாவில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்திய சந்தையில் மேலும் மூன்று புதிய கார்களை அறிமுகம் செய்ய இருப்பதாக ஆடி இந்தியா தலைவர் பல்பீர் சிங் திலன் தனியார் நிறுவன உரைடாயலில் சூசகமாக தெரிவித்தார்.

    கடந்த மாதம் மூன்று கார்களை அறிமுகம் செய்தோம். மேலும் பல கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம் என அவர் தெரிவித்தார். எனினும், எந்தெந்த மாடல்கள் அறிமுகமாகும் என அவர் தெரிவிக்கவில்லை. தற்போதைய தகவல்களின்படி மூன்றில் ஒரு கார் எலெக்ட்ரிக் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

    ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய RS5 ஸ்போர்ட்பேக் மாடல் வி6 பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது.


    ஆடி இந்தியா நிறுவனம் புதிய RS5 ஸ்போர்ட்பேக் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய ஸ்போர்ட் கார் துவக்க விலை ரூ. 1.04 கோடி, எக்ஸ்-ஷோரூம் ஆகும். இந்த மேம்பட்ட மாடல் இந்தியாவுக்கு CBU முறையில் கொண்டுவரப்படுகிறது. இதன் வெளிப்புற தோற்றத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

    புதிய 2021 ஆடி RS5 ஸ்போர்ட்பேக் மாடலில் 2.9 லிட்டர், ட்வின்-டர்போ வி6 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 444 பி.ஹெச்.பி. திறன், 600 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வழங்குகிறது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

     ஆடி RS5 ஸ்போர்ட்பேக்

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 3.9 நொடிகளில் எட்டிவிடும். மேலும் இது மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது. புதிய ஆடி RS5 ஸ்போர்ட்பேக் நான்கு கதவுகளை கொண்டிருக்கிறது. 

    இந்த மாடலில் RS சார்ந்த பிரத்யேக கிரில், ஹனிகொம்ப் இன்சர்ட்கள், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. டெயில் லைட்கள், ஸ்பாயிலர் குரோம் பினிஷ் செய்யப்பட்ட எக்சாஸ்ட் டிப்கள், 19 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. 

    மாருதி சுசுகி நிறுவனத்தின் வேகன்ஆர் Xtra எடிஷன் VXi வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.


    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் வேகன்ஆர் Xtra எடிஷனை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய Xtra எடிஷன் வேகன்ஆர் VXi வேரியண்டை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய மாடலில் காஸ்மெடிக் மாற்றங்கள் மட்டும் செய்யப்பட்டுள்ளது.

     வேகன்ஆர் Xtra எடிஷன்

    அதன்படி வேகன்ஆர் Xtra எடிஷனில் பம்ப்பர் ப்ரோடெக்டர்கள், பக்கவாட்டில் ஸ்கர்ட்கள், வீல் ஆர்ச் கிளாடிங், முன்புற கிரில், பின்புற கதவு மற்றும் நம்பர் பிளேட்களின் மீது குரோம் கார்னிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் இன்டீரியர் ஸ்டைலிங் கிட் வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகி Xtra எடிஷனில் 68 ஹெச்.பி. பவர் வழங்கும் 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 83 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. இரு என்ஜின்களுடன் 5 ஸ்பீடு மேனுவல், 5 ஸ்பீடு AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலில் பல்வேறு கனெக்டெட் அம்சங்கள் வழங்கப்பட இருக்கிறது.


    எம்ஜி மோட்டார் நிறுவனம் தனது புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. மாடலில் இன்-கார் கனெக்டிவிட்டி வழங்க ஜியோவுடன் கூட்டணி அமைத்து இருக்கிறது. புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. இந்த ஆண்டு அறிமுகமாக இருக்கிறது. கூட்டணியை தொடர்ந்து எம்ஜி மோட்டார் புதிய காரில் ஜியோவின் இசிம் வழங்கப்படும். 

    இது காரினுள் ரியல்-டைம் கனெக்டிவிட்டி, இன்போடெயின்மென்ட் மற்றும் டெலிமேடிக்ஸ் போன்ற வசதிகளை வழங்குகிறது. புதிய மிட்-சைஸ் எஸ்.யு.வி. வாங்கும் வாடிக்கையாளர்கள் ஜியோவின் அசத்தலான இணைய சேவையை மெட்ரோ மட்டுமின்றி ஊராட்சி மற்றும் கிராம பகுதிகளிலும் பயன்படுத்த முடியும். 

    எம்ஜி கார்

    எம்ஜி ஹெக்டார் மாடலில் 60-க்கும் அதிகமான கனெக்டெட் கார் அம்சங்கள், 35-க்கும் அதிகமான இந்தி-ஆங்கிலம் கலந்த வாய்ஸ் கமாண்ட்கள் உள்ளன. இத்துடன் லெவல் 1 ஆட்வான்ஸ்டு டிரைவர் அசிஸ்டண்ஸ் சிஸ்டம், அடாப்டிவ் குரூயிஸ் கண்ட்ரோல், ஆட்டோ பார்க் அசிஸ்ட், ஆட்டோமேடிக் எமர்ஜன்சி பிரேக்கிங் என பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டன. 

    "ஆட்டோமொபைல் துறையின் கனெக்டெட் கார் பிரிவில் அதிநவீன தொழில்நுட்பம் தான் முன்னோடி. மென்பொருள் சார்ந்த சாதனங்களை அதிகரிப்பதே தற்போது டிரெண்ட் ஆக இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையின் டெக் பிரிவில் முன்னணி இடத்தை பிடிக்க IoT தளத்தில் ஜியோவுடனான கூட்டணி பயன்தரும்" என எம்ஜி மோட்டார் இந்தியா தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சப்பா தெரிவித்தார்.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்க்ப்பட்ட டியாகோ NRG மாடல் நான்குவித நிறங்களில் கிடைக்கிறது.


    டாடா டியாகோ NRG மாடல் இந்திய சந்தையில் அறிமுகமானது. புதிய டியாகோ NRG துவக்க விலை ரூ. 6.57 லட்சம் என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 7.09 லட்சம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    புதிய NRG எடிஷன் டியாகோவின் கிராஸ்ஓவர் வேரியண்ட் ஆகும். டியாகோ NRG எடிஷனில் கருப்பு நிற ரூப், காரை சுற்றி கிளாடிங், ரூப் ரெயில் மற்றும் ஃபாக்ஸ் சில்வர் ஸ்கிட் பிளேட், கருப்பு நிற ORVM-கள் வழங்கப்பட்டுள்ளன. 

     டாடா டியாகோ NRG

    டாடா டியாகோ NRG எடிஷன்- பாரெஸ்டா கிரீன், ஸ்னோ வைட், பயர் ரெட் மற்றும் கிளவுடி கிரே என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. காரின் உள்புறம் ரியர்-வியூ கேமரா, என்ஜின் ஸ்டார்ட்-ஸ்டாப் பட்டன், 7 இன்ச் இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    டியாகோ NRG மாடலில் 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 85 பி.ஹெச்.பி. பவர் வழங்குகிறது. இத்துடன் மேனுவல் மற்றும் ஏ.எம்.டி. டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

    ஹோண்டா நிறுவனத்தின் புதிய அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    ஹோண்டா 2 வீலர்ஸ் இந்தியா நிறுவனம் NX200 அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிளை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய ஹோண்டா NX200 ஆகஸ்ட் 19 ஆம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது. 

     ஹோண்டா NX200 டீசர்

    டீசரில் புதிய மோட்டார்சைக்கிள் பெயரை ஹோண்டா குறிப்பிடவில்லை. எனினும், இந்த மாடல் NX200 பெயரில் பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஹார்னெட் 2.0 என்ஜின் மற்றும் பிளாட்பார்மை போன்றே NX200 மாடலும் ஹோண்டாவின் ரெட்விங் விற்பனை மையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

    இந்த மாடலில் ஹார்னெட் 2.0 எடிஷனில் உள்ளதை போன்றே 184.5சிசி 2-வால்வ், ஏர்-கூல்டு சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 17.26 பி.எஸ். பவர், 16.1 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. 

    மெக்லாரென் நிறுவனத்தின் லிமிடெட் எடிஷன் 765LT ஸ்பைடர் உலகம் முழுக்க 765 யூனிட்களே உற்பத்தி செய்யப்படுகின்றன.


    மெக்லாரென் நிறுவனம் 765LT ஸ்பைடர் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இது 765LT கூப் மாடலின் கன்வெர்டிபில் வேரியண்ட் ஆகும். இந்த கார் உலகம் முழுக்க 765 யூனிட்களே உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன.

    கன்வெர்டிபில் வேரியண்டின் ஹார்டு-டாப் 11 நொடிகளில் திறந்து, மூடிக் கொள்ளும். கார்பன் பைபர் கொண்டு உருவாக்கப்பட்டு இருப்பதால், கார் மணிக்கு 50 கிலோமீட்டரில் செல்லும் போதும் ஹார்டு-டாப் அம்சத்தை இயக்கலாம்.

     மெக்லாரென் 765LT ஸ்பைடர்

    மெக்லாரென் 765LT ஸ்பைடர் மாடலில் 4 லிட்டர் ட்வின்-டர்போ வி8 என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 755 பி.ஹெச்.பி. பவர், 800 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7 ஸ்பீடு சீக்வென்ச்சுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 2.8 நொடிகளில் எட்டிவிடும். மேலும் மணிக்கு அதிகபட்சம் 330 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். 

    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் EQE எலெக்ட்ரிக் மாடல் விரைவில் சர்வதேச சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.


    மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. செப்டம்பரில் நடைபெற இருக்கும் IAA முனிச் மோட்டார் விழாவில் மெர்சிடிஸ் நான்கு எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இவற்றில் புதிய EQE ஆல்-எலெக்ட்ரிக் செடான் மாடலுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    புதிய பென்ஸ் EQE இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட EQS மாடலின் கீழ் நிலைநிறுத்தப்படுகிறது. டீசர் புகைப்படங்களின் படி புதிய EQE மாடலில் பெரிய சென்ட்ரல் இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், டர்பைன் போன்ற ஏ.சி. வென்ட்கள், ஆம்பியன்ட் லைட் செட்டப் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 

     மெர்சிடிஸ் பென்ஸ் EQE டீசர்

    காரின் வெளிப்புற தோற்றம் பற்றி அதிக விவரங்கள் இல்லை. இதன் டெயில் லைட் இடது முதல் வலது புறம் வரை நீள்கிறது. புதிய EQE ஒட்டுமொத்த டிசைன், காருக்கு ஸ்போர்ட் தோற்றம் வழங்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது. எலெக்ட்ரிக் பிரிவில் அதிகம் கவனம் செலுத்தி வருவதால் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQE மாடலை விரைவில் பல்வேறு சந்தைகளில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.

    வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மூன்றாவது 5-சீட்டர் எஸ்.யு.வி. மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.


    வோக்ஸ்வேகன் நிறுவனம் இந்திய சந்தையில் பல்வேறு எஸ்.யு.வி. மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வரிசையில் 2021 டிகுவான் மாடலை இந்த ஆண்டு பண்டிகை காலக்கட்டத்தில் அறிமுகம் செய்ய வோக்ஸ்வேகன் திட்டமிட்டு உள்ளது.

    2021 வோக்ஸ்வேகன் டிகுவான் எஸ்.யு.வி. முற்றிலும் புது டிசைன், அம்சங்கள் மற்றும் புதிய பவர்டிரெயின் கொண்டிருக்கிறது. வெளியானதும், புதிய டிகுவான் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் மூன்றாவது 5-சீட்டர் எஸ்.யு.வி.-யாக இருக்கும்.
     
     வோக்ஸ்வேகன் டிகுவான்

    இந்தியாவில் புதிய டிகுவான் எஸ்.யு.வி. மாடலின் விலை ரூ. 28 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். அந்த வகையில் இந்த மாடல் ஜீப் காம்பஸ் டாப் எண்ட் வேரியண்ட் மற்றும் சிட்ரோயன் சி5 ஏர்கிராஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    தோற்றத்தில் புதிய டிகுவான் அதன் பி.எஸ்.4 மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு, எல்.இ.டி. மேட்ரிக்ஸ் தொழில்நுட்பத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் 2 லிட்டர் TSI என்ஜின் வழங்கப்பட இருக்கிறது. இந்த என்ஜின் 190 பி.ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    ×