search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    டாடா சிப்டிரான்
    X
    டாடா சிப்டிரான்

    அடுத்த வாரம் இந்தியா வரும் டிகோர் இ.வி. சிப்டிரான்

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது டிகோர் இ.வி. சிப்டிரான் எலெக்ட்ரிக் கார் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலை ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. இதற்கான அறிவிப்பு அந்நிறுவன சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி இருக்கிறது. முன்னதாக டிகோர் இ.வி. சிப்டிரான் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டது.

     டாடா டீசர்

    புதிய எலெக்ட்ரிக் செடான் மாடல் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிப்டிரான் தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இதே தொழில்நுட்பம் நெக்சான் இ.வி. மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக டிகோர் இ.வி. மாடல் அதிக தூரம் செல்லும் வசதி, சிறப்பான செயல்திறன், காரின் வேகம் குறையும் போது மின்சாரம் உற்பத்தி செய்யும் வசதி உள்ளிட்டவற்றை கொண்டிருக்கும் என தெரிகிறது.

    இந்த அம்சங்கள் எதையும் டாடா மோட்டார்ஸ் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. புதிய டிகோர் இ.வி. சிப்டிரான் முழு விவரங்கள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெளியாகும். முன்னதாக டிகோர் இ.வி. மாடல் சில ஆண்டுகளாக விற்பனை செய்யப்படுகிறது. எனினும், இந்த மாடலில் டாடாவின் எலெக்ட்ரா லோ-வோல்டேஜ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால் காரின் ரேன்ஜ் மற்றும் திறன்கள் குறைவாக இருந்தது.
    Next Story
    ×