search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "harrier"

    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் விரைவில் இந்தியாவில் வெளியாக இருக்கும் நிலையில், புதிய கார் விற்பனையகத்தில் வைக்கப்பட்டுள்ளது. #tatamotors #harrier



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹேரியர் எஸ்.யு.வி. கார் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. அதிகம் எதிர்பார்க்கப்படும் மாடலாக இருக்கிறது.

    டாடா ஹேரியர் மாடல் அந்நிறுவனத்தின் புதிய OMEGARC பிளாட்ஃபார்மை சார்ந்து உருவாகி இருக்கிறது. புதிய ஹேரியர் எஸ்.யு.வி. இந்தியாவில் ஜீப் காம்பஸ் மற்றும் ஹூன்டாய் டக்சன் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். புதிய ஹேரியர் எஸ்.யு.வி. மாடலின் முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது.

    டாடா ஹேரியர் மாடலில் புதிய 2.0 க்ரியோடெக் இன்ஜின் வழங்கப்படும் என்றும் இது பி.எஸ். VI ரக 4-சிலிண்டர் யூனிட் கொண்டிருக்கும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தெரிவித்தது. இந்த இன்ஜின் ஐந்து பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 140 பி.ஹெச்.பி. பவர் மற்றும் ஏழு பேர் அமரக்கூடிய வேரியன்ட்டில் 170 பி.ஹெச்.பி. பவர் கொண்டிருக்கும்.



    இந்திய சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ்.யு.வி. மாடல்களில் ஒன்றாக டாடா ஹேரியர் இருக்கிறது. இந்தியாவில் டாடா ஹேரியர் சோதனை செய்யும் படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியுள்ளன. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் மாடலாக இது இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    எஸ்.யு.வி. மாடலில் பெரிய 5-ஸ்போக் அலாய் வீல்கள், டூ-டோன் ORVMகள், இன்டகிரேட் செய்யப்பட்ட எல்.இ.டி. சிக்னல் லைட்கள் வழங்கப்படுகிறது. இத்துடன் மிதக்கும் ரூஃப் டிசைன், ஃபிளார்டு வீல் ஆர்ச்கள், ஷார்க் ஃபின் ஆன்டெனா, பெரிய ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. #Tatamotors



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக ஹேரியர் மாடலின் கான்செப்ட் கார் H5X என்ற பெயரில் 2018 ஆட்டோ எக்ஸ்போ விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

    அறிமுகமாக இருக்கும் முன்னதாகவே ஹேரியர் கார் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் பலமுறை லீக் ஆகியிருக்கிறது. அந்த வகையில் ஹேரியர் கார் பெங்களூருவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் லீக் ஆகியுள்ளது. 

    இம்முறை ஹேரியர் காரில் தற்காலிக முகப்பு விலக்குகள் மற்றும் டெயில் லைட்களஅ வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று முன்பக்கம் இன்டிகேட்டர்கள் மற்றும் பின்புற மின்விலக்குகளும் தற்காலிகமானதாகவே வழங்கப்பட்டுள்ளது. டாடா எஸ்.யு.வி.யில் இம்முறை ரூஃப் மவுன்ட் செய்யப்பட்ட ஸ்பாயிலர் மற்றும் ஸ்டாப் லேம்ப் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.


    புகைப்படம் நன்றி: Drivespark.com

    ஏற்கனவே வெளியான தகவல்களின் படி டாடா ஃபியாட் நிறுவனத்தின் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், புதிய காரில் ஹூன்டாயின் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம் என நம்பப்படுகிறது. 

    இந்த கியர்பாக்ஸ் ஃபியாட் க்ரிஸ்லரின் 140 பி.ஹெச்.பி. 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜினுக்கு ஏற்றதாக இருக்கும். மேலும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் விலையும் குறைவு என்பதால், டாடா இதை வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

    டாடா ஹேரியர் எஸ்.யு.வி. அடுத்த ஆண்டின் முதல் அரையாண்டு காலக்கட்டத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. புதிய காரில் 6-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமின்றி, 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது. இத்துடன் புதிய காரில் டாடா உருவாக்கிய ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டம் வழங்கப்படுகிறது. #tataharrier #Tatamotors
    ×