search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.வி.எஸ். மோட்டார்"

    • அபாச்சி RTR 310 மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது.
    • டி.வி.எஸ். அபாச்சி RTR 310 மாடலில் 312.2சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்படலாம்.

    டி.வி.எஸ். மோட்டார் நிறுவனத்தின் புதிய அபாச்சி RTR 310 மாடலுக்கான டீசர்கள் தொடர்ச்சியாக இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், வெளியான சமீபத்திய டீசர் வீடியோவில் அபாச்சி RTR 310 மாடலுக்கான முன்பதிவு துவங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

    புதிய டி.வி.எஸ். அபாச்சி RTR 310 மாடலுக்கான முன்பதிவு நாடு முழுக்க டி.வி.எஸ். விற்பனை மையங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் பற்றி டீசர் வீடியோவில் எந்த தகவலும் இடம்பெறவில்லை. எனினும், முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 10 ஆயிரத்திற்குள் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

     

    டி.வி.எஸ். அபாச்சி RTR 310 மாடல் அசத்தலான ஸ்டைலிங் வித்தியாசமான டிசைன் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. அந்த வகையில், இந்த மாடலில் புதிய ஸ்ப்லிட் ரக எல்.இ.டி. ஹெட்லைட், சிசெல் வடிவம் கொண்ட ஃபியூவல் டேன்க், காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும். இந்த மாடலில் வழங்கப்படும் எக்சாஸ்ட் தற்போதைய RR 310 மாடலில் உள்ளதை போன்றே இருக்கும் என்று கூறப்படுகிறது.

    புதிய RTR 310 மாடலிலும் 312.2சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு மோட்டார் வழங்கப்படலாம். இந்த என்ஜின் 33.5 ஹெச்.பி. பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதே என்ஜின் தான் தற்போதைய RR 310 மாடலிலும் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய டி.வி.எஸ். அபாச்சி RTR 310 மாடல் செப்டம்பர் 6-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த மாடல் இந்திய சந்தையில் கே.டி.எம். 390 டியூக் மற்றும் பி.எம்.டபிள்யூ. G310R போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என்று தெரிகிறது. இந்தியாவில் புதிய டி.வி.எஸ். அபாச்சி RTR 310 மாடலின் விலை ரூ. 2.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

    ×