என் மலர்
இது புதுசு
பி.எம்.டபுள்யூ. நிறுவத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3 சீரிஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 3 சீரிஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 41.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019 3 சீரிஸ் செடான் கார் இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் வேரியண்ட்டில் கிடைக்கிறது.
பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 47.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் 2018 பாரிஸ் மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கார் செடான் மாடலில் ஏழாவது தலைமுறை மாடல் ஆகும்.

புதிய என்ட்ரி லெவல் ஆடம்பர செடான் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ்: 320டி ஸ்போர்ட், 320டி லக்சரி லைன் மற்றும் 330ஐ எம் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதுதவிர 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது 190 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
330ஐ எம் ஸ்போர்ட் பெட்ரோல் வேரியண்ட் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இது 258 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கிறது.
புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் மாடலின் உள்புறம் 10.25 இன்ச் கண்ட்ரோல் டிஸ்ப்ளே, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பி.எம்.டபுள்யூ. கனெக்ட்டெட் டிரைவ் தொழில்நுட்பம், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
சிங்கப்பூரில் தானியங்கி பேருந்துகளை பொதுவெளியில் சோதனை செய்யப்பட இருக்கின்றன. இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.
சிங்கப்பூரில் மக்கள் போக்குவரத்தில் டிரைவர் இல்லாத பஸ் சேவை வழங்க முடிவு செய்யப்பட்டது. டிரைவர் இல்லாத பஸ் இதற்கான பஸ் வடிவமைப்பு, தொழில்நுட்ப பணிகள் ஆகியவை நடந்து வந்தன. இதற்காக பல கட்ட சோதனை நடந்து வந்தது.
இதற்கிடையே டிரைவர் இல்லாத பஸ்களின் பொது சோதனை ஓட்டம் வருகிற 26 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது. கட்டுப்பாட்டு அறை கேமரா, ஜி.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் புகுத்தப்பட்டுள்ள டிரைவர் இல்லாத பஸ்களை கட்டு பாட்டு அறையில் இருந்து இயக்குவார்கள். சோதனை ஓட்டத்தில் நான்கு டிரைவர் இல்லாத மினி பஸ்கள் இயக்கப் படுகின்றன.
மொபைல் ஆப் மூலம் சென்டோசா தீவில் 5.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு பஸ்கள் சுற்றி வரும். இந்த பஸ்கள் சில்சோ பாயிண்ட் கடற்கரை ஸ்டேசன், பலாவன் கடற்கரை, டான்ஜோங் கடற்கரை மற்றும் சென்டோசா கோல்ப் கிளப் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படுகின்றன. டிரைவர் இல்லாத பஸ் களில் பயணம் செய்ய ‘ரைடு நவ் சென்டோசா’ என்ற மொபைல் ஆப் மூலம் பதிவு செய்யலாம்.
பஸ்கள் வார நாட்களில் காலை 10 மணி முதல் 12 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், நான்கு மணிநேரம் மட்டுமே செல்லும்.

வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் டிரைவர் இல்லாத பஸ்கள் இயக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ்களை சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்.டி. என்ஜினீயரிங் நிறுவனம் வடிவமைத்து உள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம், போக்குவரத்து அமைச்சகம், சென்டோசா மேம்பாட்டு கழகம் ஆகியவை வெளியிட்ட அறிக்கையில், “டிரைவர் இல்லாத பஸ்களில் சாலையில் நடந்து செல்பவர்கள், பாதசாரிகளை அறிந்து கொள்ளும் வகையிலும் தானியங்கி முறையில் இயங்குகின்றன என்பதை குறிக்கவும் மின்னணு அடையாளங்களை காண்பிக்கும்.
இந்த பஸ்களில் பொருத்தமான வழியில் செலுத்தல், தடைகள் மற்றும் அடையாளங்களை காண உதவும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன என்று கூறி உள்ளது. பஸ்களில் ஒரு டிரைவர் இருப்பார். அவர் பஸ்சில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் வாகனத்தை இயக்குவார்.
சிங்கப்பூரில் ஏற்கனவே தானியங்கி டாக்சி, டிரக் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தானியங்கி பஸ் சோதனை ஓட்டத்தை நடத்துகிறது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்தியாவில் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்: ஆப்டிமா இ.ஆர். மற்றும் நிக்ஸ் இ.ஆர். அறிமுகம் செய்துள்ளது. இரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முறையே ரூ. 68,721 (எக்ஸ்-ஷோரூம்) மற்றும் ரூ. 69,754 (எக்ஸ்-ஷோரூம்) என விலையில் நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
புதிய ஸ்கூட்டர்கள் ஹீரோ பிராண்டின் ஹை-ஸ்பீடு சீரிஸ் பிரிவில் கிடைக்கின்றன. இரு ஸ்கூட்டர்களும், ஸ்டான்டர்டு மாடல்களில் வழங்கப்பட்டதை போன்ற எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்படுகின்றன. எனினும், இவற்றில் இரு பேட்டரி பேக்குகள் வழங்கப்படுகின்றன. ஸ்டான்டர்டு மாடலில் ஒரு பேட்டரி பேக் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா இ.ஆர். மாடலில் 600 வாட் BLDC எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் 48 வோல்ட் ஒற்றை பேட்டரி பேக் கொண்டிருக்கிறது. புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஸ்டான்டர்டு மாடலில் உள்ளதை போன்றே மணிக்கு அதிகபட்சம் 40 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
இதனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் செல்லும் என ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்துள்ளது. பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்ய 4.5 மணி நேரம் ஆகும்.
ஹீரோ எலெக்ட்ரிக் நிக்ஸ் இ.ஆர். மாடலில் 48 வோல்ட் பேட்டரி பேக் மற்றும் 600 வாட் BLDC மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இதுவும் ஆப்டிமா இ.ஆர். போன்ற செயல்திறன் வழங்குகிறது. இதுவும் மணிக்கு அதிகபட்சம் 40 கிலோமீட்டர் வேகம் மற்றும் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட ஆஸ்டன் மார்டின் டிபி5 கார் ஏலத்தில் பல கோடிகளுக்கு ஏலம்போனது.
1965 ஆஸ்டன் மார்டின் டிபி5 பாண்ட் கார் ஏலத்தில் சுமார் 63,85,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 45.37 கோடி) ஏலம் போனது. ஆடம்பர பொருட்களை ஏலத்தில் விடும் சோத்பிஸ் நடத்திய ஏலத்தில் இந்த வாரம் 1965 ஆஸ்டன் மார்டின் டிபி5 பாண்ட் கார் ஏலத்திற்கு வந்தது.
ஈவ்னிங் வித் ஆஸ்டன் மார்டின் என்ற பெயரில் ஏல நிகழ்வை சோத்பிஸ் ஏல நிறுவனம் நடத்தியது. இதேபோன்று நிகழ்வை சோத்பிஸ் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. முன்னதாக இதே மாடல் 20,00,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 14.21 கோடி) விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏல முடிவில் இதுவரை வெளியானதிலேயே அதிக மதிப்புமிக்க டிபி5 என்ற பெருமையை 1965 ஆஸ்டன் மார்டின் டிபி5 பாண்ட் கார் பெற்றது. உலகின் பிரபல கார் மாடலாக அறியப்படும் டிபி5 DB5/2008/R எனும் சேசிஸ் நம்பரை கொண்டிருக்கிறது.
இது இயான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கார் ஆகும். இதில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் நிபுணர் ஜான் ஸ்டியர்ஸ் கைவண்ணத்தில் உருவான அனைத்து மாடிஃபிகேஷன்களும் செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ரூஸ் என்ஜினியரிங் மூலம் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட இந்த கார் மானடெரியில் காட்சிப்படுத்தப்பட்டது.
ஏலத்தில் பங்கேற்க ஆறு பேர் விருப்பம் தெரிவித்தனர். இவர்கள் ஒரே அறை மற்றும் தொலைபேசி மூலம் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் 1965 ஆஸ்டன் மார்டின் டிபி5 பாண்ட் கார் 4 நிமிடங்கள் 30 நொடிகளில் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈவ்னிங் வித் ஆஸ்டன் மார்டின் என்ற பெயரில் ஏல நிகழ்வை சோத்பிஸ் ஏல நிறுவனம் நடத்தியது. இதேபோன்று நிகழ்வை சோத்பிஸ் ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. முன்னதாக இதே மாடல் 20,00,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 14.21 கோடி) விலைக்கு ஏலம் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏல முடிவில் இதுவரை வெளியானதிலேயே அதிக மதிப்புமிக்க டிபி5 என்ற பெருமையை 1965 ஆஸ்டன் மார்டின் டிபி5 பாண்ட் கார் பெற்றது. உலகின் பிரபல கார் மாடலாக அறியப்படும் டிபி5 DB5/2008/R எனும் சேசிஸ் நம்பரை கொண்டிருக்கிறது.
இது இயான் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கார் ஆகும். இதில் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் நிபுணர் ஜான் ஸ்டியர்ஸ் கைவண்ணத்தில் உருவான அனைத்து மாடிஃபிகேஷன்களும் செய்யப்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்தின் ரூஸ் என்ஜினியரிங் மூலம் முழுமையாக புதுப்பிக்கப்பட்ட இந்த கார் மானடெரியில் காட்சிப்படுத்தப்பட்டது.
ஏலத்தில் பங்கேற்க ஆறு பேர் விருப்பம் தெரிவித்தனர். இவர்கள் ஒரே அறை மற்றும் தொலைபேசி மூலம் ஏலத்தில் கலந்து கொண்டனர். ஏலத்தில் 1965 ஆஸ்டன் மார்டின் டிபி5 பாண்ட் கார் 4 நிமிடங்கள் 30 நொடிகளில் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 2020 3 சீரிஸ் ஹைப்ரிட் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.
ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான பி.எம்.டபுள்யூ. தனது வாகனங்களில் ஹைப்ரிட் ரகங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் முன்னதாக 7 சீரிஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கார் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
745இ (7 சீரிஸ் ஹைப்ரிட்) ஏற்கனவே இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், 3 சீரிஸ் பிளக்-இன் ஹைப்ரிட் மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய பி.எம்.டபுள்யூ. 330இ ஹைப்ரிட் மாடலில் 2.0 லிட்டர், 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஒற்றை எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. இது 249 பி.ஹெச்.பி. பவர், 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இது கன்வெஷனல் வேரியண்ட்டில் உள்ளதை விட 15எம்.எம். உயரமானதாகும்.

இந்த என்ஜின் 182 பி.ஹெச்.பி. திறனும், எலெக்ட்ரிக் மோட்டார் கூடுதலாக 111 ஹெச்.பி. வேகம் கிடைக்கும். இதன் ஸ்போர்ட்ஸ் மோட் மேலும் அதிகமாக 39 ஹெச்.பி. திறன் வழங்குகிறது. இது 10 நொடிகளில் 288 பி.ஹெச்.பி. திறனை வழங்கிவிடும்.
பி.எம்.டபுள்யூ. 330இ மாடல் லிட்டருக்கு 52.63 கிலோமீட்டரில் இருந்து 62.5 கிலோமீட்டர் வரை செல்லும் என பி.எம்.டபுள்யூ. தெரிவித்துள்ளது. புதிய 330இ மாடல் அதிகபட்சம் மணிக்கு 140 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியதாகும். எனினும், இது மணிக்கு 110 கிலோமீட்டர் வரை மட்டும் செல்லும் வகையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் ஆடம்பர சொகுசு வசதிகள் நிறைந்த கோஸ்ட் செனித் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது.
ரோல்ஸ் ராய்ல் கோஸ்ட் செனித் எடிஷன் கார் அறிமுகம் செய்யப்பட்டது. அதிகாரப்பூர்வாக வெளியாகாத நிலையில், புதிய செனித் எடிஷன் கோஸ்ட் மாடல் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் மாடலாக அமைந்துள்ளது. இது ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் எடிஷனின் ஹூராவின் கடைசி மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த கார் 2020 இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் ஃபேண்டம் சீரிஸ் மாடல்களுக்கு அடுத்த நிலையில் கோஸ்ட் இருக்கிறது. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடலின் செனித் எடிஷன் வெறும் ஐம்பது யூனிட்களே உருவாக்கப்படுகின்றன. ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் முதன்முதலாக 2009 ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது.

ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் மாடல் பென்ட்லி ஸ்பர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-கிளாஸ், பி.எம்.டபுள்யூ. 7 சீரிஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் 20154 ஆம் ஆண்டு அப்டேட் செய்யப்பட்டு, தற்சமயம் புதிய தலைமுறை மாடல் வெளியாக இருக்கிறது.
புதிய செனித் எடிஷன் மாடலில் ரோல்ஸ் ராய்ஸ் பாரம்பரிய கிரில், எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டி.ஆர்.எல்.கள், பிரத்யேக அலாய் வீல்கள், டூயல்-டோன் பெயின்ட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் புதிய செனித் எடிஷன் போமியன் ரெட் மற்றும் பிளாக் டைமண்ட், இக்வாஸூ புளு மற்றும் அன்டலுசியன் வைட், பிரீமியர் சில்வர் மற்றும் ஆர்க்டிக் வைட் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.
ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் செனித் எடிஷன் மாடலில் 6.6 லிட்டர், ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட வி12 என்ஜினுடன் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த என்ஜின் 562 பி.ஹெச்.பி. பவர், 820 என்.எம். டார்க் மற்றும் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
ஸ்காட்லாந்தின் ரேஸ் கார் பிராண்டு எகியூரி இகோஸ் ஜாகுவார் நிறுவனத்தின் எக்ஸ்.ஜெ.13 மாடலை தழுவி எல்.எம்.69 எனும் காரை உருவாக்கி இருக்கிறது.
ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ரேஸ் கார்களைத் தயாரிக்கும் எகியூரி இகோஸ் நிறுவனம் புதிய மாடல் சூப்பர்காரை உருவாக்கி வருகிறது. ‘எல்.எம் 69’ என்ற பெயரிலான இந்த கார் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டிருக்கிறது.
இதில் 5 லிட்டர் வி 12 என்ஜின் உள்ளது. இந்த காரை வரும் செப்டம்பர் மாதம் 6 முதல் 8-ம் தேதி வரை லண்டனில் உள்ள ஹாம்ப்டன் கோர்ட் பேலஸ் எனும் பகுதியில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 கார்களை மட்டுமே இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. பந்தய களத்தில் மட்டுமின்றி சாலைகளிலும் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத் தயாரிப்புகள் 1956-ம் ஆண்டு லெமான்ஸ் பந்தயத்திலும், 1957-ல் ஜாகுவார் டிடைப் கார் பந்தயத்திலும் வெற்றி கோப்பையை பெற்றது. தற்போது உருவாக்கப்பட்டு வரும் எல்.எம் 69 பந்தய களத்தில் மட்டுமின்றி சாதாரணமாக சாலைகளிலும் ஓட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பந்தயக் களத்தில் இம்முறை கோப்பையை வெல்வதோடு, 25 பிரீமியம் வாடிக்கையாளர்களின் வீடுகளிலும் இடம்பெறப் போகிறது எல்.எம் 69.
இதில் 5 லிட்டர் வி 12 என்ஜின் உள்ளது. இந்த காரை வரும் செப்டம்பர் மாதம் 6 முதல் 8-ம் தேதி வரை லண்டனில் உள்ள ஹாம்ப்டன் கோர்ட் பேலஸ் எனும் பகுதியில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 கார்களை மட்டுமே இந்நிறுவனம் தயாரிக்க உள்ளது. பந்தய களத்தில் மட்டுமின்றி சாலைகளிலும் செல்லும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத் தயாரிப்புகள் 1956-ம் ஆண்டு லெமான்ஸ் பந்தயத்திலும், 1957-ல் ஜாகுவார் டிடைப் கார் பந்தயத்திலும் வெற்றி கோப்பையை பெற்றது. தற்போது உருவாக்கப்பட்டு வரும் எல்.எம் 69 பந்தய களத்தில் மட்டுமின்றி சாதாரணமாக சாலைகளிலும் ஓட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
பந்தயக் களத்தில் இம்முறை கோப்பையை வெல்வதோடு, 25 பிரீமியம் வாடிக்கையாளர்களின் வீடுகளிலும் இடம்பெறப் போகிறது எல்.எம் 69.
ஹூன்டாய் நிறுவனம் இந்தியாவில் தயாரித்த முதல் கிராண்ட் ஐ10 நியோஸ் காரை வெளியிட்டுள்ளது.
ஹூன்டாய் இந்தியா நிறுவனம் மூன்றாம் தலைமுறை கிராண்ட் ஐ10 காரின் உற்பத்தி பணிகளை துவங்கியுள்ளது. புதிய கிராண்ட் ஐ10 கார் கிராண்ட் ஐ10 நியோஸ் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் இதன் விற்பனை ஆகஸ்ட் 20 ஆம் தேதி துவங்குகிறது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கிவிட்டன.
2019 ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல் சமீபத்தில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் இந்தியாவில் கிராண்ட் ஐ10 மாடலுடன் விற்பனை செய்யப்படுகிறது. புதிய கார் நியோஸ் எனும் பிராண்டிங்குடன் விற்பனை செய்யப்படுகிறது.
நியோஸ் என்றால் வாகனத்தின் கோணங்கள், கேபின் ஸ்பேஸ் மற்றும் செயல்திறன உள்ளிட்டவற்றில் அதிகளவு மேம்படுத்தப்பட்டு இருக்கும் என பொருள்படும். இந்தியாவில் அறிமுகமானதும் கிராண்ட் ஐ10 நியோஸ் மாடல் கிராண்ட் ஐ10 மற்றும் எலைட் ஐ20 மாடல்களுக்கு மத்தியில் நிலைநிறுத்தப்படும்.

புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் கார் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மொத்தம் பத்து வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. அந்த வகையில் கிராண்ட் ஐ10 நியோஸ் ஸ்டான்டர்டு இரா, மேக்மா, ஸ்போர்ட்ஸ் மற்றும் ஆஸ்டா போன்ற ட்ரிம்களில் விற்பனை செய்யப்படலாம்.
என்ஜினை பொருத்தவரை கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் CRDi டீசல் யூனிட் வழங்கப்படுகிறது. இதில் பெட்ரோல் என்ஜின் 81 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் என்ஜின் 74 பி.ஹெச்.பி. பவர், 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது அல்லது 5-ஸ்பீடு AMT டிரான்ஸ்மிஷனுடன் வரும் என கூறப்படுகிறது. கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் வழங்கப்படும் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என தெரிகிறது.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய கார்களின் பட்டியலை பார்ப்போம்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தை கடுமையான நெருக்கடியை சந்தித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக கார் மற்றும் இரு சக்கர வாகனங்களின் விற்பனை மந்த கதியில் உள்ளது. சில நிறுவனங்கள் உற்பத்தியை ஒரு வாரம் வரை நிறுத்தி வைத்தன. இருந்தாலும் புதிய தயாரிப்புகளை தொடர்ந்து அறிமுகம் செய்வதில் அனைத்து நிறுவனங்களுமே ஆர்வம் காட்டுகின்றன.
புதிய தயாரிப்புகள் மூலம் விற்பனையை அதிகரிக்கச் செய்ய முடியும் என்று நிறுவனங்கள் உறுதியாக நம்புகின்றன. ஆகஸ்டு மாதத்தில் மட்டும் ஏராளமான புதிய மாடல் கார்கள் அறிமுகமாக உள்ளன. புதிய அறிமுகங்கள் நிறுவனங்களின் விற்பனையை எந்த அளவுக்கு அதிகரிக்க உதவுகின்றன என்பதற்கு காலம்தான் பதில் தர வேண்டும்.
பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ்
சொகுசு கார் நிறுவனங்களில் ஒன்றான பி.எம்.டபுள்யூ.வில் 7-வது தலைமுறை கார்கள் 3 சீரிஸ் என்ற பெயரில் அறிமுகமாக உள்ளது. ஏற்கனவே 5 சீரிஸ் மற்றும் 7 சீரிஸ் கார்கள் தயாரான அதே பிளாட்ஃபார்மில் 3 சீரிஸ் கார்கள் தயாராவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் இது அளவில் சற்று பெரியதாக உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் 2 லிட்டர் டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 258 ஹெச்.பி. திறன், 400 நியூட்டன் மீட்டர் டார்க் செயல்திறன் கொண்டது. 2 லிட்டர் டீசல் என்ஜின் 190 ஹெச்.பி. திறன் 400 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடலுமே 8 ஆட்டோமேடிக் கியரைக் கொண்டுள்ளது.

ஹூண்டாய் கிராண்ட் ஐ 10
கொரிய நிறுவனம் தனது பிரபலமான கிராண்ட் ஐ10 மாடலில் புதிய அம்சங்களை புகுத்தி அறிமுகம் செய்ய உள்ளது. இதன் வடிவமைப்பிலேயே பெரும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அகலமான முன்புற கிரில், அலாய் சக்கரங்கள், துல்லியமான ஒளி வீசும் முகப்பு விளக்குகள், புதிய வடிவமைப்பில் பின்புற விளக்குகள் என புத்தம் புதிய தோற்றப் பொலிவுடன் தயாராகிறது.
இதேபோல உள்புறத்தில் டேஷ் போர்டிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இருக்கைகள் தாராள இட வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளன. 8 அங்குல தொடுதிரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே வசதி கொண்டது. பி.எஸ்6. புகை விதிகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் மாடலாக இது வருகிறது.
இதில் 83 ஹெச்.பி. திறன், 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் என்ஜினைக் கொண்டது. டீசல் மாடலைப் பொறுத்தவரை 1.2 லிட்டர் என்ஜினைக் கொண்டது.

கியா செல்டோஸ்
கொரிய நிறுவனமான கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் செல்டோஸ் மாடல் கார் விளம்பரம் மூலம் மக்களை பெருமளவில் சென்றடைந்துவிட்டாலும் அதிகாரபூர்வ அறிமுகம் ஆகஸ்ட் 22-ந் தேதிதான் நடைபெற இருக்கிறது. முதல் காரே எஸ்.யு.வி.யாக அறிமுகம் செய்துள்ளது கியா மோட்டார்ஸ். வடிவமைப்பில் ஏற்கனவே சந்தையில் உள்ள எஸ்.யு.வி. ரக மாடல்களைக் காட்டிலும் இது வித்தியாசமாக உள்ளது.
வித்தியாசமான கிரில், துல்லியமான வடிவமைப்பு கொண்ட முகப்பு விளக்குகள், கம்பீரமான தோற்றத்தை அளிக்கும் பம்பர் வடிவமைப்பு இவை அனைத்தும் செல்டோஸ் மாடலின் மீதான ஆவலைத் தூண்டியுள்ளது. மிகப் பெரிய அளவிலான தொடுதிரை, 360 டிகிரி சுழலும் கேமரா, வயர்லெஸ் சார்ஜிங், காரினுள் வைபை வசதி, தேவையான விளக்கு வெளிச்சம் ஆகியன பிரம்மிப்பூட்டுகின்றன.
இது 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாடலிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர் ஆப்ஷன்கள் கொண்டிருக்கின்றன. இதில் ஸ்போர்டியர் மாடல் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் தயாராகி வருகிறது. டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸைக் கொண்டுள்ளது.

ரெனால்ட் டிரைபர்
பிரான்ஸ் நாட்டை தலைமை இடமாக கொண்டு இயங்கும் ரெனால்ட் நிறுவனம் 4 மீட்டருக்குள்ளான 7 பேர் பயணிக்கும் வகையிலான எஸ்.யு.வி. மாடலை டிரைபர் என்ற பெயரில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்நிறுவனத்தின் பிரபலமான ரெனால்ட் க்விட் மாடலின் மேம்பட்ட ரகமாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் இருக்கை வசதி பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றி அமைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. 3 சிலிண்டர் 1 லிட்டர் என்ஜினைக் கொண்டது. இதில் 5 கியர்கள் மேனுவல் டிரான்ஸ் மிஷன் மற்றும் ஆட்டோமேடிக் மாடலுடன் வந்துள்ளது. ஜூன் 19-ம் தேதியே இந்தக் காரை அறிமுகம் செய்ய ரெனால்ட் திட்டமிட்டிருந்தது. ஆனால் பின்னர் இது ஆகஸ்டு பிற்பாதியில் அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
ஜீப் இந்தியா நிறுவனம் புத்தம் புதிய 2019 ராங்லர் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜீப் நிறுவனத்தின் பிரபல மாடலான ராங்லர் மாடலில் நான்காம் தலைமுறை அறிமுகமாகி உள்ளது. தற்போது விற்பனையாகிவரும் ராங்லர் மாடல் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோமொபைல் கண்காட்சியில் 2017-ல் காட்சிப்படுத்தப்பட்டிருந்த மாடலாகும். இந்தியாவில் புதிய ஜீப் ராங்லர் விலை ரூ. 63.94 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஐந்து கதவுகளைக் கொண்டதாக கம்பீரமான தோற்றத்துடன் சாலை மற்றும் சாகச பயணத்துக்கேற்ற வகையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது அன்லிமிட்டெட் என அழைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் விற்பனையாகும் ஜீப் ராங்லர் சகாரா மாடலின் வடிவமைப்பைக் கொண்டதாக இது விளங்குகிறது.
இதன் முகப்பு தோற்றம் ஜீப் சி.ஜே. 15 மாடலைப் போல உள்ளது. இதன் பின்புறத்தில் விளக்குகள் நேர்த்தியாக, தொலைவிலிருந்து பார்த்தாலும் மிகச் சிறப்பாக ஒளிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் உள்ள ஸ்டெப்னி டயரால் எந்த வகையிலும் விளக்கு வெளிச்சம் பாதிக்கப்படாத வகையில் வாகனத்தின் பின்பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது.

உள்புறத்திலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 8.4 அங்குல இன்போடெயின்மென்ட் திரை உள்ளது. டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் வசதி கொண்டது. பின் இருக்கை பயணிகளுக்கென பின் பகுதியில் ஏ.சி. வென்ட் உள்ளது. இது சிறந்த குளிர்ச்சியை அளிக்கிறது. மேலும் அனைத்து பயணிகளும் சவுகரியமாக பயணிக்கும் வகையில் அதிக இட வசதி கொண்டதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்ய வசதியாக 12 வோல்ட் யு.எஸ்.பி. போர்ட் இதில் உள்ளன. 2019 ஜீப் ராங்கலர் மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்-லைன் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கபப்ட்டுள்ளது. இந்த என்ஜின் 268 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 8-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்குகிறது.
மஹ்ந்திரா நிறுவனம் இந்திய சந்தையில் 2021-க்குள் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மஹிந்திரா நிறுவனம் வரும் ஆண்டுகளில் மூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் இ-கே.யு.வி.100, இ-எக்ஸ்.யு.வி.300 மற்றும் மஹிந்திரா பேட்ஜிங் கொண்ட ஃபோர்டு ஆஸ்பையர் பெயரில் அறிமுகமாகிறது.
இ.கே.யு.வி.100 விற்பனை இந்த ஆண்டிற்குள் விற்பனைக்கு வரும் என்றும், எலெக்ட்ரிக் எக்ஸ்.யு.வி.300 2020 ஆம் ஆண்டிலும், மஹிந்திராவின் ஃபோர்டு ஆஸ்பையர் 2021 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று எலெக்ட்ரிக் வாகனங்களுடன் மஹிந்திரா இ-வெரிட்டோவும் கிடைக்கும்.

சமீபத்தில் மஹிந்திரா எலெக்ட்ரிக் தனது இ2ஒ காரின் விற்பனையை நிறுத்தியது. பாதுகாப்பு விதிகளுக்கு பொருந்தாது என்பதால், இதன் விற்பனை நிறுத்தப்படுவதாக கூறப்பட்டது.
மூன்று எலெக்ட்ரிக் வாகனங்கள் தவிர மஹிந்திரா நிறுவனம் முற்றிலும் புதிய இ.வி. வாகனங்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. தற்சமயம் ஏற்கனவே விற்பனையாகும் மாடல்களை போன்று இல்லாமல் புதிய பிளாட்ஃபார்ம் முற்றிலும் புதிதாக உருவாக்கப்படுகின்றன.
புதிய மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் 2022 அல்லது 2023 ஆம் ஆண்டு வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மஹிந்திரா இ-கே.யு.வி.100 எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின.
நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் புதிய பேஸ் வேரியண்ட்டை அறிமுகம் செய்துள்ளது.
நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் தனது கிக்ஸ் எஸ்.யு.வி. மாடலின் புதிய பேஸ் வேரியண்ட் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய பேஸ் வேரியண்ட் எக்ஸ்.இ. என அழைக்கப்படுகிறது. இதன் துவக்க விலை ரூ. 9.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய நிசான் கிக்ஸ் எக்ஸ்.இ. வேரியண்ட்டில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய வேரியண்ட் உடன் கிக்ஸ் எஸ்.யு.வி. மாடல் எக்ஸ்.இ., எக்ஸ்.எஸ்., எக்ஸ்.வி. மற்றும் எக்ஸ்.வி. பிரி என நான்கு வேரியண்ட்களில் கிடைக்கும்.
ஒவ்வொரு வேரியண்ட்டிலும் பல்வேறு அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் வழங்கப்ட்டுள்ளன. புதிய வேரியண்ட்டில் 50-க்ககும் அதிகமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ஆட்டோ ஏ.சி., ரியர் ஏ.சி. வென்ட், கூல்டு குலோவ் பாக்ஸ், ஷார்க் ஃபின் ஆன்டெனா, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, 2 டின் ஆடியோ, யு.எஸ்.பி. மற்றும் நிசான் கனெக்ட் உள்ளிட்டவை முக்கியமானவைகளாக இருக்கின்றன.

இத்துடன் பாதுகாப்பை உறுதிப்படுத்த டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், சென்ட்ரல் டோர் லாக், ஸ்பீடு சென்சிங் ஆட்டோ டோர், சைல்டு லாக், இம்பேக்ட் சென்சிங் டோர் அன்லாக் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன.
நிசான் கிக்ஸ் எக்ஸ்.இ. டீசல் வேரியண்ட் 1.5 லிட்டர் K9K டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 110 பி.ஹெச்.பி. பவர், 240 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 1.5 லிட்டர் H4K பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 105 பி.ஹெச்.பி. பவர், 142 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.






