என் மலர்
இது புதுசு
கவாசகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 2020 நின்ஜா 400 மாடல்களை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது.
கவாசகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 2020 நின்ஜா 400 மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. புதிய MY20 கவாசகி நின்ஜா 400 தற்சமயம் இரண்டு லிமிட்டெட் எடிஷன் நிறங்களில் கிடைக்கிறது. கவாசகி நின்ஜா 400 விலை ரூ. 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கவாசகி நின்ஜா 400: மெட்டாலிக் ஸ்பார்கிள் பிளாக் / லைன் கிரீன் மற்றும் லைம் கிரீன் / எபோனி நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு புதிய நிறங்களும் வெறும் பத்து யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுதவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளிலும் 399சிசி லிக்விட்-கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 45 பி.ஹெச்.பி. @10,000 ஆர்.பி.எம். மற்றும் 38 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறம் 41 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310 எம்.எம். டிஸ்க், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
அம்சங்களை பொருத்தவரை நின்ஜா 400 மாடலில் ட்வின் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், லைட்வெயிட் டிரெலிஸ் ஃபிரேம், ஸ்லிப்பர் கிளட்ச், ஏ.பி.எஸ்., மல்டி-ஃபன்ஷன் டேஷ் இன்ஸ்ட்ரூமென்டேஷன், க்ளிப் ஆன் ஹேன்டில் பார்கள், நின்ஜா ZX-10R உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
ஆடி இந்தியா நிறுவனம் தனது கியூ7 காரின் பிளாக் எடிஷனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.
ஆடி இந்தியா நிறுவனம் கியூ7 பிளாக் எடிஷன் காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் ஆடி கியூ7 விலை ரூ. 82.15 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய ஆடி கியூ7 பிளாக் எடிஷன் இந்தியாவில் வெறும் 100 யூனிட்களே விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய லிமிட்டெட் எடிஷன் காருக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கப்பட்டுவிட்டன. புதிய கியூ7 லிமிட்டெட் எடிஷன் மாடலில் பல்வேறு பிளாக்டு-அவுட் அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது முந்தைய ஸ்டான்டர்டு மாடலை விட கம்பீரமான தோற்றத்தை வழங்குகிறது. காஸ்மெடிக் மாற்றங்களை பொருத்தவரை புதிய ஆடி கியூ7 பிளாக் ஸ்டைலிங் பேக்கேஜ் கொண்டிருக்கிறது. இத்துடன் காரை சுற்றி கருப்பு நிறம் பூசப்பட்டுள்ளது. இதில் ரேடியேட்டர் கிரில் ஃபிரேம் மற்றும் முன்புற கிரில், ஏர் இன்டேக் ஸ்டிரட்களில் டைட்டானியம் பிளாக் கிளாஸ் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது.

புதிய கியூ7 எஸ்.யு.வி. மாலின் டோர் ட்ரிம் ஸ்ட்ரிப்களிலும் டைட்டன் பிளாக் கிளாஸ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் குவாட்ரோ எம்பாஸ் செய்யப்பட்டுள்ளது. இதன் கண்ணாடி மற்றும் ரூஃப்லைனில் ஹை-கிளாஸ் பிளாக் ஃபிரேம் மோல்டிங் செய்யப்பட்டுள்ளது. ஆடி கியூ7 ரூஃப் ரெயில்கள் மற்றும் பிளாக் அலாய் வீல்கள் கொண்டிருக்கிறது.
காஸ்மெடிக் மாற்றங்கள் தவிர புதிய ஆடி கியூ7 பிளாக் எடிஷன் மாடலில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. காரின் என்ஜின் ஆப்ஷன்கள் ஸ்டான்டர்டு மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலிலும் 3.0 லிட்டர் வி6 TDI டீசல் அல்லது 2.0 லிட்டர் நான்கு-சிலிண்டர் TFSI பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இதன் பெட்ரோல் என்ஜின் 248 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் 3.0 லிட்டர் டீசல் என்ஜின் 245 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு டிப்டிரானிக் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் ஏத்தர் டாட் என்ற சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பேட்டரி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்திருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏத்தர், தற்சமயம் வீடுகளில் ஸ்கூட்டர்களின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு வசதியாக போர்ட்டபிள் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.
ஏத்தர் டாட் என்ற பெயரில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 60 வோல்ட் மின்சார சக்தியை பேட்டரிக்கு தரும். இதன் எடை 3.5 கிலோவாகும். இதை பொருத்துவது எளிது. இத்துடன் 2.5 மீட்டர் நீளமான கேபிளும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சார்ஜ் செய்யும்போது 4 மணி நேரத்தில் 80 சதவீதமும், 5 மணி நேரத்தில் 100 சதவீதமும் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.
இதை வீட்டில் நிறுவித்தருவதற்கு மொத்தமாக ரூ. 1,800 கட்டணமாக இந்நிறுவனம் வசூலிக்கிறது. ஏத்தர் பேட்டரி ஸ்கூட்டரை வாங்கியவர்களுக்கு மிகவும் உபயோகமான, அவசியமான ஒன்றாக ஏத்தர் டாட் இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நெக்சான் லிமிட்டெட் எடிஷன் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் க்ராஸ் லிமிட்டெட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய டாடா நெக்சான் க்ராஸ் லிமிட்டெட் எடிஷன்: க்ராஸ் மற்றும் க்ராஸ் பிளஸ் என இரு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 7.57 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 8.17 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய நெக்சான் க்ராஸ் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது லிமிட்டெட் எடிஷன் மாடல் ஆகும். கடந்த ஆண்டு நெக்சான் க்ராஸ் மாடல் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. தற்சமயம் நெக்சான் காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் பத்து லட்சம் யூனிட்கள் விற்பனையை கொண்டாடும் வகையில் புதிய லிமிட்டெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலின் வெளிப்புறம் மற்றும் உள்புறங்களில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்பட்டு, கார் அழகாகவும், ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. வெளிப்புறத்தில் புதிய பிளாக் நிற பெயின்ட், சில்வர் ரூஃப், ORVMகள், முன்புற கிரில், வீல் அக்சென்ட்கள் மற்றும் டெயில் கேட்டில் க்ராஸ் பேட்ஜிங் செய்யப்பட்டுள்ளது.
டாடா நெக்சான் க்ராஸ் மாடல்: 1.2 லிட்டர் ரெவோடிரான் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் ரெவோடார்க் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆப்ஷனல் AMT வசதியுடன் வழங்கப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது செல்டோஸ் காரின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
கியா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இரு வேரியண்ட்களின் விலை ரூ. 16.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் செல்டோஸ் மாடல் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் வாகனம் ஆகும்.
இந்தியாவில் கியா செல்டோஸ் ஆகஸ்ட் 22 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 9.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது டெக்-லைன் மற்றும் ஜி.டி. லைன் என இருவித ட்ரிம்களில் கிடைக்கிறது. இதில் ஜி.டி.எக்ஸ். பிளஸ் டாப் எண்ட் வேரியண்ட் ஆகும்.

புதிய செல்டோஸ் ஜி.டி.எக்ஸ். பிளஸ் மாடல்: 1.4 லிட்டர் டி-ஜி.டி.ஐ. பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் டர்போ பெட்ரோல் என்ஜின் 138 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் மற்றும் டீசல் என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
இரு என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. எனினும், பெட்ரோல் என்ஜினுடன் 7-ஸ்பீடு டி.சி.டி. மற்றும் டீசல் என்ஜினுடன் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
இதுதவிர கியா செல்டோஸ் 1.5 லிட்டர் என்.ஏ. பெட்ரோல் என்ஜினுடன் வருகிறது. இதிலும் மேனுவல் அல்லது ஆட்டோமேடிக் போன்ற டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் விரும்பியதை தேர்வு செய்யும் வசதி கிடைக்கிறது. மூன்று என்ஜின்களும் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கின்றன.
ஹூண்டாய் நிறுவனம் 1.5 லிட்டர் திறன் கொண்ட டீசல் என்ஜின் காரை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் சமீபத்திய வரவுகளில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற மாடல் ‘வென்யூ’. காம்பாக்ட் எஸ்.யு.வி.யாக வந்துள்ள இந்த காரை வாங்க 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். அதிலிருந்தே மிகுந்த எதிர்பார்ப்பை இது உருவாக்கியுள்ளதை உணர முடிகிறது. ஏற்கனவே டீசல் மாடலில் 1.4 லிட்டர் என்ஜின் மற்றும் 1.6 லிட்டர் என்ஜின் கொண்ட மாடல்கள் வந்துள்ளன.
தற்போது 1.5 லிட்டர் திறன் கொண்ட டீசல் என்ஜின் மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இது பாரத் புகை விதி 6-ஐ பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 115 ஹெச்.பி. திறனும் 250 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் கொண்டது.
இந்நிறுவனத்தின் மற்றொரு செடான் மாடலான எலென்ட்ராவின் மேம்படுத்தப்பட்ட மாடலை அறிமுகம் செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2 லிட்டர், நான்கு சிலிண்டர் பெட்ரோல் என்ஜினைக் கொண்ட இது 152 ஹெச்.பி. திறனையும், 192 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது.
இது பாரத் 6 புகைவிதி சோதனைக்குட்பட்டதாகும். இது புதிய வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் கிரில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல மாற்றியமைக்கப்பட்ட முகப்பு விளக்கு மற்றும் பகலில் ஒளிரும் எல்.இ.டி. விளக்கு ஆகியன வாகனத்துக்கு பிரீமியம் தோற்றத்தை அளிக்கிறது. பின்பகுதியில் மாற்றியமைக்கப்பட்ட பம்பர், ரிவர்ஸ் விளக்கு, பாக் விளக்கு ஆகியன வித்தியாசமான தோற்றத்தை அளிக்கிறது. இதன் உள்பகுதியில் 8 அங்குல தொடு திரை இன்போடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. இது ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்பிளே இயங்குதளங்களில் செயல்படக் கூடியது.
பாதுகாப்பு அம்சத்துக்கு 6 ஏர் பேக்குகள் உள்ளன. ரிவர்ஸ் கேமரா, மல்டி ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், காற்றோட்டமான இருக்கைகள், டயர் பிரஷர் மானிட்டர் ஆகியன இதில் முக்கியமான மாற்றங்களாகும். ஏ.பி.எஸ்., இ.பி.டி. உள்ளிட்டவையும் உள்ளன. இதன் விலை ரூ.13.82 லட்சம் முதல் ரூ.18.92 லட்சம் வரை இருக்கும். இதில் டீசல் மாடல் விலை ரூ.15.13 லட்சத்தில் தொடங்கி ரூ.20.05 லட்சத்தில் முடிகிறது.

ஜப்பானின் யமஹா நிறுவனம் புதிதாக எக்ஸ்.எஸ்.ஆர்155 எனும் மாடல் மோட்டார் சைக்கிளை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது.
மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் சர்வதேச அளவில் பிரபலமாகத் திகழும் ஜப்பானின் யமஹா நிறுவனம் புதிதாக எக்ஸ்.எஸ்.ஆர்155 எனும் மாடல் மோட்டார் சைக்கிளை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. எக்ஸ்.எஸ்.ஆர். சீரிஸில் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் மூன்றாவது மாடல் மோட்டார் சைக்கிள் இது என்பது குறிப்பிடத்தக்கது. இது ஸ்போர்ட்ஸ் மாடலை அடிப்படையாகக் கொண்டது. தாய்லாந்தில் இதன் விலை 91,500 தாய் பாட் ஆகும். இந்திய மதிப்பின்படி இது ரூ.2.12 லட்சம். தாய்லாந்து சந்தையில் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இந்த மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இது 155 சி.சி திறன் கொண்டது. யு.எஸ்.டி. போர்க் கொண்ட இந்த மாடல் 19.3 ஹெச்.பி. திறன் மற்றும் 14.7 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையைக் கொண்டது. 6 கியர்களைக் கொண்ட இந்த மாடல் ஸ்லிப்பர் கிளட்ச் வசதி கொண்டது. யமஹா நிறுவனம் 1970 மற்றும் 1980-ம் ஆண்டுகளில் தயாரித்த மாடல் மோட்டார் சைக்கிளில் முகப்பு விளக்கு வட்ட வடிவில் இருக்கும்.
இதை பின்பற்றி இந்த மாடலில் வட்ட வடிவிலான முகப்பு விளக்கு மற்றும் பின்புற விளக்குகளை வடிவமைத்துள்ளது யமஹா. இதுவே இந்த மோட்டார் சைக்கிளுக்கு மிகவும் எடுப்பான தோற்றத்தைக் கொடுக்கிறது. டிஜிட்டல் திரையைக் கொண்டது. இதன் எடை 134 கிலோவாகும்.

டாடா நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது.
விழா காலங்களையொட்டி கார், பைக் நிறுவனங்கள் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை அறிமுகம் செய்வது வழக்கமான ஒன்று. ஆனால், தற்போது ஆட்டோமொபைல் துறை சரிவை சந்தித்துள்ளதால், வாடிக்கையாளர்களை கவர்வதற்கு ஸ்பெஷல் எடிசன் மாடல் கட்டாயமாக உள்ளது.
இதையடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது நெக்ஸான் எஸ்.யூ.வியின் ஸ்பெஷல் எடிசன் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. இந்த புதிய மாடலின் டீசரையும் வெளியிட்டுள்ளது.
இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலானது நெக்ஸான் க்ராஸ் என்ற பெயரில் வர உள்ளது. இந்த புதிய காரின் அம்சங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளிவரவில்லை.
நெக்ஸான் எஸ்.யூ.வியின் க்ரில், சைடு மிரர்கள் விசேஷ பூச்சுடன் வரும் எனவும், உட்புறத்தில் இதன் பிரதிபலிப்பாக சிறப்பு அலங்காரங்கள் வரலாம் எனவும், அலாய் வீல்களும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலில் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம், புளூடூத் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் ஏசி வென்ட்டுகள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு நெக்ஸான் எஸ்.யூ.வியில் க்ராஸ் மற்றும் க்ராஸ் ப்ளஸ் ஆகிய இரண்டு மாடல்களில் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டுகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும். எஞ்சின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்த காரில் 110 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனை வழங்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.
இந்த 2019ம் ஆண்டுக்கான நெக்சானில் ஆரெஞ்சு நிற கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடி மற்றும் வீல் கேப்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காரின் உள்ளே உள்ள ஏர் வெண்ட், டோர் பேனல்கள் அனைத்தும் ஆரெஞ்சு நிறம் கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சாதாரண வேரியண்ட்டுகளைவிட கூடுதல் விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் இந்த புதிய டாடா நெக்ஸான் க்ராஸ் எடிசன் மாடல் கூடுதல் மதிப்பை வழங்கும். விரைவில் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் மேம்படுத்தப்பட்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட க்ராஸ் எடிசன் மாடலை போன்றே, டேஷ்போர்டு அலங்கார வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருக்கலாம். தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய இருக்கைகள் மற்றும் க்ராஸ் எடிசன் பேட்ஜ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடலில் 4 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஹார்மன் மியூசிக் சிஸ்டம், புளூடூத் வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ரியர் ஏசி வென்ட்டுகள் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.
இந்த ஆண்டு நெக்ஸான் எஸ்.யூ.வியில் க்ராஸ் மற்றும் க்ராஸ் ப்ளஸ் ஆகிய இரண்டு மாடல்களில் ஸ்பெஷல் எடிசன் வேரியண்ட்டுகளை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்யும். எஞ்சின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இருக்காது.
இந்த காரில் 110 பிஎஸ் பவரையும், 170 என்எம் டார்க் திறனை வழங்கும் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படும். இரண்டிலுமே 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் கொடுக்கப்படும்.
இந்த 2019ம் ஆண்டுக்கான நெக்சானில் ஆரெஞ்சு நிற கோட்டிங் கொடுக்கப்பட்ட கண்ணாடி மற்றும் வீல் கேப்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காரின் உள்ளே உள்ள ஏர் வெண்ட், டோர் பேனல்கள் அனைத்தும் ஆரெஞ்சு நிறம் கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
சாதாரண வேரியண்ட்டுகளைவிட கூடுதல் விலையில் அதிக சிறப்பம்சங்களுடன் இந்த புதிய டாடா நெக்ஸான் க்ராஸ் எடிசன் மாடல் கூடுதல் மதிப்பை வழங்கும். விரைவில் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் எனப்படும் மேம்படுத்தப்பட்ட மாடலும் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.
சொகுசு கார்களில் ஒன்றான பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய வரவுதான் 3 சீரிஸ். இது 3 சீரிஸில் 7-வது தலைமுறை மாடலாகும்.
சொகுசு கார்களில் ஒன்றான பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் புதிய வரவுதான் 3 சீரிஸ். 2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜினில் வந்து உள்ளது. இது 3 சீரிஸில் 7-வது தலைமுறை மாடலாகும். இதை கிளஸ்டர் ஆர்கிடெக்சர் (சி.எல்.ஏ.ஆர்.) எனும் பிளாட்பார்மில் உருவாக்கி உள்ளனர். முந்தைய மாடலை விட இது நீளமானது, அகலமானது, உயரமானது. இதன் உட்பகுதியில் 8 அங்குல திரை உள்ளது. வாடிக்கையாளர் விரும்பினால் 10 அங்குல திரை கொண்ட காரையும் தேர்வு செய்யலாம்.
பி.எம்.டபிள்யூ. சமீபத்தில் அறிமுகம் செய்த ஐ-டிரைவ் சிஸ்டம் இணைப்பு வசதி இதில் உள்ளது. 2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட இது 258 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்த கூடியது. இது முந்தைய மாடலைக் காட்டிலும் 6 ஹெச்.பி. கூடுதலான திறன் கொண்டதாகும். டீசல் மாடலைப் பொறுத்தமட்டில் 2 லிட்டர் டீசல் என்ஜின் 190 ஹெச்.பி. திறன் கொண்டதாக வந்துள்ளது.
மெர்சிடஸ் பென்ஸ் சி, ஆடி ஏ4, ஜாகுவார் எக்ஸ்.இ. ஆகிய கார்களுக்கு போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெனால்ட் நிறுவனத்தின் டிரைபர் எஸ்.யு.வி. மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே க்விட் மாடல் மூலம் இந்திய வாகன சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. தற்போது டிரைபர் என்ற பெயரிலான எஸ்.யு.வி. மாடலை அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்த வாகனத்துக்கான முன்பதிவு ஆகஸ்டு 17-ந் தேதி தொடங்கப்பட்ட நிலையில் இம்மாதம் 28-ந் தேதி அறிமுகம் செய்ய ரெனால்ட் திட்டமிட்டுள்ளது.
4 மீட்டருக்கும் குறைவான பிரிவில் உருவாகி இருக்கும் புதிய எஸ்.யு.வி.யின் நீளம் 3,990 மி.மீ., அகலம் 1,637 மி.மீ, உயரம் 2,656 மி.மீ. ஆகும். இதன் சக்கரங்களின் ஆரம் 182 மி.மீ. ஆகும். இந்த மாடலில் 84 லிட்டர் கொள்ளளவில் பொருட்களை வைக்கும் இட வசதியும் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது வரிசை இருக்கையை மடக்குவதன் மூலம் பொருட்கள் வைக்கும் இட வசதி 625 லிட்டராக அதிகரிக்கும்.
புரெஜெக்டர் ஹெட்லேம்ப், பகலில் ஒளிரும் டி.ஆர்.எல். விளக்கு, ரூப் பார், 15 இன்ச் அலாய் சக்கரங்கள், கழுகின் அலகு போன்ற பின்புற விளக்கு, ஸ்கிட் பிளேட் ஆகிய அம்சங்களுடன் கம்பீரமான தோற்றத்தில் இது அறிமுகமாகிறது. காரின் உள்புறம் 8 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ போன்ற வசதிகள் உள்ளன.

இரண்டாவது வரிசையில் உள்ளவர்களுக்கென ஏ.சி. வசதி, மூன்றாவது வரிசையில் உள்ளவர்களுக்காக மேற்கூரையில் ஏ.சி. வசதி என குளிர்ச்சியான பயண அனுபவத்தை தரும் வகையில் டிரைபர் எஸ்.யு.வி. உருவாக்கப்பட்டுள்ளது. பொத்தான் மூலம் ஆன்-ஆப் வசதி, பாதுகாப்புக்கு 4 ஏர் பேக்குகள் என மிகச் சிறப்பாக, கன கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு லிட்டர் 3 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் உள்ளது. இது 72 பி.எஸ். திறனை 6,250 ஆர்.பி.எம். வேகத்திலும், 96 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை 3,500 ஆர்.பி.எம். வேகத்திலும் வெளிப்படுத்தக் கூடியது. இதில் 5 ஸ்பீடு மானுவல் டிரான்ஸ்மிஷன் வசதி மற்றும் ஆட்டோமேடிக் கியர் வசதி கொண்ட மாடலும் அறிமுகமாகிறது. டிரைபர் அறிமுகம் மூலம் தனது விற்பனை சந்தையை இரட்டிப்பாக உயர்த்திக் கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ரெனால்ட் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய எஸ்.யு.வி. மாடலின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ரெனால்ட் நிறுவனம் சமீபத்தில் டஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்நிலையில், மற்றொரு புதிய எஸ்.யு.வி. மாடலை ரெனால்ட் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
ஹெச்.பி.சி. எனும் குறியீட்டு பெயரில் உருவாகும் புதிய காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலின் நீளம் 4 மீட்டர்களுக்குள் இருக்கும் என்றும் இது டிரைபர் மாடலின் சி.எம்.எஃப்.-ஏ பிளாட்ஃபார்மில் உருவாகிறது. ரெனால்ட் ஹெச்.பி.சி. கார் 2020 இந்திய ஆட்டோ எக்ஸ்போ விழாவில் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.
ரெனால்ட் டிரைபர் மாடலும் சி.எம்.எஃப். ஏ பிளாட்ஃபார்மிலேயே உருவாக்கப்பட்டிருக்கிறது. இது க்விட் ஹேட்ச்பேக் மாடலை விட சற்று நீளமாக இருக்கும் என தெரிகிறது. டிரைபர் எம்.பி.வி. மற்றும் ஹெச்.பி.சி. காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடல்கள் குறைந்த விலையிலேயே அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய வாகனம் ரெனால்ட் பிராண்டின் விலை குறைந்த எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இது மாருதி பிரெஸ்ஸா, ஹூன்டாய் வென்யூ போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது. புதிய ஹெச்.பி.சி. காரில் டிரைபர் மாடலில் உள்ளதை போன்ற 1 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரெனால்ட் டிரைபர் மாடலில் ஏழு பேர் அமரக்கூடியதாக இருக்கும் நிலையில், ஹெச்.பி.சி. மாடல் ஐந்து பேர் பயணிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிகிறது. புதிய கார் சற்று பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் என்றும் இது தற்போதைய டிரெண்டை தழுவி உருவாகியிருக்கும் என கூறப்படுகிறது.
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் எதி்ர்பார்க்கப்பட்ட செல்டோஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.
கியா செல்டோஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் புதிய செல்டோஸ் டெக்-லைன் மற்றும் ஜி.டி.-லைன் என இருவித வேரியண்ட்களில் பல்வேறு ஆப்ஷன்களுடன் கிடைக்கிறது. கியா செல்டோஸ் துவக்க விலை ரூ. 9.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 15.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கியா செல்டோஸ் காருக்கான முன்பதிவுகள் ஒரு மாதத்திற்கு முன்பே துவங்கி விட்ட நிலையில், இதுவரை 25,000-க்கும் அதிக முன்பதிவுகளை பெற்றிருக்கிறது. செல்டோஸ் கார் உற்பத்தி துவங்கியதும், வினியோகம் செய்யப்படும். புதிய செல்டோஸ் கார் மிட்-சைஸ் எஸ்.யு.வி. பிரிவில் அறிமுகமாகியுள்ளது.
இந்த கார் ஹூன்டாய் கிரெட்டா, மஹிந்திரா எக்ஸ்.யு.வி.500, டாடா ஹேரியர், ஜீப் காம்பஸ் மற்றும் நிசான் கி்க்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

கியா செல்டோஸ் கார்: 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்களும், 1.4 லிட்டர் டர்போ-பெட்ரோல் என மொத்தம் மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இவை பி.எஸ்.6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் 115 பி.ஹெச்.பி. பவர், 250 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
செல்டோஸ் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் யூனிட் 138 பி.ஹெச்.பி. பவர், 242 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மூன்று என்ஜின்களும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொண்டிருக்கின்றன. இதுதவிர 1.5 லிட்டர் பெட்ரோல் யூனிட்டில் சி.வி.டி., டீசல் மாடலில் ஐ.வி.டி. மற்றும் டர்போ பெட்ரோல் மாடலில் 7 ஸ்பீடு டி.சி.டி. டிரான்ஸ்மிஷன் வசதிகளுடன் கிடைக்கிறது.
கியா செல்டோஸ் கார் ரெட், ஆரஞ்சு, கிளேசியர் வைட், க்ளியர் வைட், கிரே, சில்வர், புளு மற்றும் பிளாக் என பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது.