என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஏத்தர் டாட்
    X
    ஏத்தர் டாட்

    ஏத்தர் டாட் அறிமுகம்

    ஏத்தர் எனர்ஜி நிறுவனம் இந்தியாவில் ஏத்தர் டாட் என்ற சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.



    இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பேட்டரி ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்திருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான ஏத்தர், தற்சமயம் வீடுகளில் ஸ்கூட்டர்களின் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு வசதியாக போர்ட்டபிள் சார்ஜரை அறிமுகம் செய்துள்ளது.

    ஏத்தர் டாட் என்ற பெயரில் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது 60 வோல்ட் மின்சார சக்தியை பேட்டரிக்கு தரும். இதன் எடை 3.5 கிலோவாகும். இதை பொருத்துவது எளிது. இத்துடன் 2.5 மீட்டர் நீளமான கேபிளும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் சார்ஜ் செய்யும்போது 4 மணி நேரத்தில் 80 சதவீதமும், 5 மணி நேரத்தில் 100 சதவீதமும் பேட்டரி சார்ஜ் ஆகிவிடும்.

    இதை வீட்டில் நிறுவித்தருவதற்கு மொத்தமாக ரூ. 1,800 கட்டணமாக இந்நிறுவனம் வசூலிக்கிறது. ஏத்தர் பேட்டரி ஸ்கூட்டரை வாங்கியவர்களுக்கு மிகவும் உபயோகமான, அவசியமான ஒன்றாக ஏத்தர் டாட் இருக்கிறது.
    Next Story
    ×