என் மலர்
ஆட்டோமொபைல்

2020 நின்ஜா 400
இரண்டு புதிய நிறங்களில் அறிமுகமான கவாசகி நின்ஜா 400
கவாசகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 2020 நின்ஜா 400 மாடல்களை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது.
கவாசகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 2020 நின்ஜா 400 மோட்டார்சைக்கிளை இரண்டு புதிய நிறங்களில் அறிமுகம் செய்துள்ளது. புதிய MY20 கவாசகி நின்ஜா 400 தற்சமயம் இரண்டு லிமிட்டெட் எடிஷன் நிறங்களில் கிடைக்கிறது. கவாசகி நின்ஜா 400 விலை ரூ. 4.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கவாசகி நின்ஜா 400: மெட்டாலிக் ஸ்பார்கிள் பிளாக் / லைன் கிரீன் மற்றும் லைம் கிரீன் / எபோனி நிறங்களில் கிடைக்கிறது. இரண்டு புதிய நிறங்களும் வெறும் பத்து யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுதவிர மோட்டார்சைக்கிளில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.

அந்த வகையில் புதிய மோட்டார்சைக்கிளிலும் 399சிசி லிக்விட்-கூல்டு பேரலெல் ட்வின் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 45 பி.ஹெச்.பி. @10,000 ஆர்.பி.எம். மற்றும் 38 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறம் 41 எம்.எம். டெலிஸ்கோபிக் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310 எம்.எம். டிஸ்க், பின்புறம் 220 எம்.எம். டிஸ்க் வழங்கப்பட்டுள்ளது.
அம்சங்களை பொருத்தவரை நின்ஜா 400 மாடலில் ட்வின் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், லைட்வெயிட் டிரெலிஸ் ஃபிரேம், ஸ்லிப்பர் கிளட்ச், ஏ.பி.எஸ்., மல்டி-ஃபன்ஷன் டேஷ் இன்ஸ்ட்ரூமென்டேஷன், க்ளிப் ஆன் ஹேன்டில் பார்கள், நின்ஜா ZX-10R உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கிறது.
Next Story






