என் மலர்
இது புதுசு
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா மாடல் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய எலான்ட்ரா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய எலான்ட்ரா துவக்க விலை ரூ. 15.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 20.39 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய எலான்ட்ரா மாடலில் மேம்பட்ட வடிவமைப்பு, புதிய அம்சங்கள் மற்றும் என்ஜின் அம்சங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. வடிவமைப்பில் முன்புற கிரில் கேஸ்கேடிங் வடிவில் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய ஹெட்லேம்ப் கிளஸ்டர், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், முக்கோண வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப், புதிய அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இத்துடன் இருபுறங்களிலும் புதிய பம்ப்பர், மேம்பட்ட எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், ராப்-அரவுண்ட் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் மேம்பட்ட கேபின் வழங்கப்பட்டுள்ளது.

இதில் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, இன்ஃபினிட்டி சவுண்ட் சிஸ்டம், டையர் பிரெஷர் மானிட்டரிங் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல் வழங்கப்படுகின்றன.
இத்துடன் 10-வழிகளில் பவர் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய டிரைவர் சீட் எலெக்ட்ரிக் சன்ரூஃப், முன்புற பார்க்கிங் சென்சார், ஹேன்ட்ஸ்-ஃப்ரீ டெயில்கேட், குரூஸ் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ஆறு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., பின்புற பார்க்கிங் கேமரா, ஹை-ஸ்பீடு வார்னிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ஹூன்டாய் எலான்ட்ரா மாடலில் 2.0 லிட்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 152 பி.ஹெச்.பி. பவர், 192 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது.
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி 350டி கார் இந்திய வெளியீட்டு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
ஜெர்மன் நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியாவில் புதிய ஜி 350டி எஸ்.யு.வி. மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய ரக்கட் எஸ்.யு.வி. மாடல் இந்தியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது அந்நிறுவன ஜி கிளாஸ் பிரிவில் என்ட்ரி-லெவல் மாடலாக இருக்கும்.
மெர்சிடிஸ் பென்ஸ் ஜி கிளாஸ் மாடலில் ஏ.எம்.ஜி. ஜி 63 விற்பனை செய்யப்படுகிறது. புதிய ஜி 350டி எஸ்.யு.வி. அறிமுகமானதும் வாடிக்கையாளர்களுக்கு சற்றே விலை குறைந்த மாடல் மற்றும் அதிக சக்திவாய்ந்த ஏ.எம்.ஜி. ஜி 63 என இரண்டு மாடல்களில் ஒன்றை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350டி எஸ்.யு.வி. மாடலின் உள்புறம் ஏ.எம்.ஜி. ஜி 63 மாடலில் உள்ளதை போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் டேஷ்போர்டில் வைடுஸ்கிரீன் காக்பிட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 12.3 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டிருக்கிறது.
இதன் சென்டர் கன்சோலில் டச் பேட் இருப்பதால் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மிக எளிமையாக இயக்க முடியும். மேலும் இதில் ஸ்டீரிங் வீல் மவுன்ட்டெட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் லெதர் இருக்கைகள் மற்றும் பிரீமியம் இன்டீரியர் கொண்டிருக்கிறது.
புதிய ஜி 350டி மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன், 6-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 282 பி.ஹெச்.பி. பவர், 600 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 9-ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4-வீல் டிரைவ் டிரான்ஸ்ஃபெர் வசதி கொண்டிருக்கிறது.
ஃபெராரி நிறுவனத்தின் புதிய எஃப்8 டிரிபியூடோ கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம்.
ரேஸ் கார்கள் என்றாலே ஃபெராரியை அவ்வளவு எளிதில் யாராலும் மறந்துவிட முடியாது. இந்நிறுவனம் தற்போது ‘எப்ஃ8 டிரிபியூடோ’ மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ.4.02 கோடி என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது இது வர்த்தக ரீதியில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்நிறுவனம் ஹைபிரிட் மாடல் அல்லாத கடைசி காராக இருக்கும் என்று கூறப்படுகிறது.

புதிய ஃபெராரி காரில் 3.9 லிட்டர் ட்வின் டர்போ சார்ஜ்டு வி 8 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இது 720 ஹெச்.பி. திறனையும் 770 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையும் கொண்டது. இதை ஸ்டார்ட் செய்து 2.9 வினாடி நேரத்திற்குள் 100 கி.மீ. வேகத்தை தொட்டுவிடலாம். 200 கி.மீ. வேகத்தை 7.8 வினாடிக்குள் எட்டிவிடும்.
இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 340 கிலோ மீட்டராகும். இது பார்ப்பதற்கு முந்தைய 488 மாடலைப் போலவே உள்ளது. இருப்பினும் எஸ்டக்ட் இன்டேக், முகப்பு விளக்கு அமைப்பு, பின்பகுதியில் விளக்கு அமைப்பு ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஹூன்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் முன்பதிவு துவங்கியது. இத்துடன் புதிய காரின் அதிகாரப்பூர்வ புகைப்படங்களையும் ஹூன்டாய் வெளியிட்டுள்ளது.
புதிய ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் அக்டோபர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய எலான்ட்ரா பல்வேறு அப்டேட்களை பெற இருக்கிறது. அதன்படி புதிய வடிவமைப்பு, புதிய அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பபடுகிறது.
வடிவமைப்பில் புதிய ஹூன்டாய் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஹூன்டாயின் கேஸ்கேடிங் கிரில் வழங்கப்படுகிறது. இத்துடன் மேம்பட்ட ஹெட்லேம்ப்கள், இன்டகிரேட்டெட் எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன. எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் முக்கோண வடிவம் கொண்ட ஃபாக் லேம்ப்கள், பிரம்மாண்ட பொனெட் மற்றும் புதிய அலாய் வீல் வடிவமைப்பு கொண்டிருக்கும்.

இதேபோன்று புதிய எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் மாடலின் பின்புறத்தில் மேம்பட்ட பம்ப்பர்கள் இருபுறங்களிலும் வழங்கப்படலாம். இத்துடன் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. காரின் உள்புறத்தில் முற்றிலும் புதிய கேபின், பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுகிறது.
இத்துடன் 8.0 இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டூயல் சோன் கிளைமேட் கண்ட்ரோல், கூல்டு முன்புற இருக்கைகள், வெஹிகில் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.
பி.எம்.டபுள்.யூ. மோட்டாராட் ஆர் 1250 ஆர் மற்றும் ஆர் 1250 ஆர்.டி. மோட்டார்சைக்கிள்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.
பி.எம்.டபுள்.யூ. மோட்டோராட் நிறுவனம் இந்தியாவில் ஆர் 1250 மற்றும் ஆர் 1250 ஆர்.டி. மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இரு மாடல்களின் விலை முறையே ரூ. 15.95 லட்சம் மற்றும் ரூ. 22.50 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புனேவில் உள்ள விற்பனையாளர்கள் பி.எம்.டபுள்.யூ. ஆர் 1250 ஆர் மற்றும் ஆர் 1250 ஆர்.டி. மோட்டார்சைக்கிள்களை ரூ. 3 லட்சம் விலையில் முன்பதிவு செய்கின்றனர். புதிய மோட்டார்சைக்கிளை பெற மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஒவ்வொரு மாடலுக்கு மொத்தம் ஐந்து மோட்டார்சைக்கிள்கள் கிடைக்கின்றன.
புதிய பி.எம்.டபுள்.யூ. ஆர் 1250 ஆர்.டி.: புளு பிளேனட் மெட்டாலிக் மற்றும் ஸ்பார்க்ளிங் ஸ்டாம் மெட்டாலிக் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதில் பல்வேறு க்ரோம் அம்சங்கள் வாகனத்திற்கு வித்தியாச தோற்றம் பெற்றிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிளில் இரு டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இத்துடன் ஆட்டோமேடிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், ஏ.பி.எஸ்., கார்னெரிங் ஏ.பி.எஸ்., ஹில் ஸ்டார்ட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும் ஹீட்டெட் சீட், சென்ட்ரல் லாக்கிங், டையர் பிரெஷர் மேனேஜ்மென்ட் சிஸ்டம், ஆன்டி-தெஃப்ட் அலாரம் வழங்கப்பட்டுள்ளது.
கனெக்டிவிட்டிக்கு இரு மாடல்களிலும் டி.எஃப்.டி. ஸ்கிரீன், ப்ளூடூத், ரேடியோ சாஃப்ட்வேர், பி.எம்.டபுள்.யூ. மோட்டோராட் மல்டி கண்ட்ரோலர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதன் ஆர் மாடலில் 6.5 இன்ச் ஸ்கிரீனும், ஆர்.டி. மாடலில் 5.7 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டுள்ளது.
பி.எம்.டபுள்.யூ. ஆர் 1250 ஆர் மற்றும் ஆர் 1250 ஆர்.டி. மாடல்களில் 1254சிசி 2-சிலிண்டர் இன்-லைன் பாக்சர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 134 பி.ஹெச்.பி. பவர், 143 என்.எம். டார்க் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கோல்டன் பிரேக் கேலிப்பர்கள், ரேடியேட்டர் கவர், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டேன்க் கவர் வழங்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்.யு.வி.300 எஸ்.யு.வி. மாடலின் டபுள்யூ6 டீசல் வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் புதிய மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 டீசல் ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 9.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 டீசல் வேரியண்ட் முன்னதாக மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் இதில் ஆட்டோஷிஃப்ட் தொழில்நுட்பம் சேர்க்கப்பட்டுள்ளது. புதிய ஏ.எம்.டி. கியர்பாக்ஸ் உடன் எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 வேரியண்ட்டில் எலெக்டிரானிக் ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

புதிய டிரான்ஸ்மிஷன் தவிர மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 மாடலில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. புதிய எக்ஸ்.யு.வி.300 டபுள்யூ6 வேரியண்ட் ஸ்டான்டர்டு வேரியண்ட்டில் உள்ள அம்சங்களை கொண்டிருக்கிறது.
மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 மாடலில் 1.5-லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. புதிய டபுள்யூ6 வேரியண்ட் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கிறது. இதே கார் பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கிறது.
இது 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் ஆகும். இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் எஸ் பிரெஸ்ஸோ காரின் புதிய டீசர் வெளியிடப்பட்டுள்ளது.
2019 ஆண்டின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாருதி சுசுகி எஸ் பிரெஸ்ஸோ கார் செப்டம்பர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், வெளியீட்டிற்கு முன் காரின் டீசரை மாருதி சுசுகி வெளியிட்டுள்ளது.
இந்திய சந்தையில் மைக்ரோ எஸ்.யு.வி.யாக வெளியாகும் எஸ் பிரெஸ்ஸோ கார் எஸ்.யு.வி. அளவுகளில், விடாரா பிரெஸ்ஸா போன்ற வடிவமைப்பை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ் பிரெஸ்ஸோ கார் முற்றிலும் புதிய தலைமுறையில் உருவாக்கப்படிருக்கும் என தெரிகிறது.

இது விரைவில் அமலாக இருக்கும் அனைத்து வித கிராஷ் டெஸ்ட்களில் வெற்றி பெறும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இது பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எஸ். 6 விதிகளுக்கு பொருந்தும் 1.0 லிட்டர் என்ஜின் கொண்டிருக்கும் புதிய கார் 68 பி.எஸ். மற்றும் 90 என்.எம். டார்க் செயல்திறன் வழங்கும் என தெரிகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு ஆட்டோமேடிக் அல்லது ஆப்ஷனல் ஆட்டோமேட்டெட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் கொண்டிருக்கும்.
இந்தியாவில் எஸ். பிரெஸ்ஸோ கார் ரெனால்ட் க்விட் மாடலுக்கு போட்டியாக இருக்கும் எனலாம். இதன் விலை ரூ. 5 லட்சசத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 6.5 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை நிர்ணயம் செய்யப்படலாம்.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் என்டார்க் 125 ஸ்கூட்டரின் ரேஸ் எடிஷன் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் என்டார்க் 125 ரேஸ் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. புதிய டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் விலை ரூ. 62,995 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ரேஸ் எடிஷன் என்டார்க் ஸ்கூட்டர் பல்வேறு காஸ்மெடிக் மாற்றங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ஸ்கூட்டர் முந்தைய ஸ்டான்டர்டு மாடலை விட அதிக ஸ்போர்ட் தோற்றம் பெற்றிருக்கிறது. டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் மாடலில் அழகிய கிராஃபிக்ஸ், மேட் பிளாக்/மெட்டாலிக் பிளாக் மற்றும் மெட்டாலிக் ரெட் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது.

டி.வி.எஸ். என்ட்ராக் 125 ஸ்கூட்டரில் ரேஸ் எடிஷன் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இத்துடன் முற்றிலும் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.களை கொண்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள மாற்றங்களை தவிர ஸ்கூட்டரில் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
இதில் ப்ளூடூத் கனெக்டிவிட்டியும் வழங்கப்பட்டுள்ளது. இது ‘SmartXonnect' என அழைக்கப்படுகிறது. இது அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் இதர நோட்டிஃபிகேஷன்களை டிஸ்ப்ளேவில் காண்பிக்கிறது. இதில் பயனர்கள் தங்களின் ஸ்மார்ட்போனினை இணைத்துக் கொண்டாலே போதுமானது.
மெக்கானிக்கல் அம்சங்களில் டி.வி.எஸ். என்டார்க் 125 ரேஸ் எடிஷன் ஸ்கூட்டரில் 124-சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 9.4 பி.ஹெச்.பி. பவர் @7500 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 10.5 என்.எம். டார்க் @5500 செயல்திறன் வழங்குகிறது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் வெளியிடப்பட்டுள்ளது.
டி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் ஸ்கூட்டி பெப் பிளஸ் ஸ்கூட்டரின் மேட் எடிஷனை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ் மேட் எடிஷன் விலை ரூ. 44,332 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மேட் எடிஷன் இந்திய சந்தையில் 25 ஆண்டுகள் விற்பனையை கொண்டாடும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்கூட்டி பெப் பிளஸ்: கோரல் மேட் மற்றும் அக்வா மேட் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. புதிய நிறங்கள் தவிர ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடல் 3டி எம்ப்லெம், புதிய கிராஃபிக் மற்றும் டெக்ஸ்ச்சர் சீட் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய சந்தையில் அங்கீகரிக்கப்பட்ட ஸ்கூட்டர்களில் டி.வி.எஸ். ஸ்கூட்டி ஒன்றாக இருக்கிறது. இந்தியாவில் 25 ஆண்டுகள் விற்பனையாகி வரும் ஸ்கூட்டி மாடல் இந்திய சந்தையில் பெண்கள் அதிகம் பயன்படுத்தும் மாடலாகவும் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் ஸ்கூட்டி பெப் பிளஸ் பல்வேறு மாறுதல்கள் மற்றும் அப்டேட்களை பெற்றிருக்கிறது.
புதிய டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் பிளஸ் மாடலில் ஸ்டான்டர்டு மாடலில் உள்ள என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதில் 87.8சிசி ஏர்-கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 4.9 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 5.8 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.
அம்சங்களை பொருத்தவரை முன்புறம் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷன், அதிகளவு கிரவுண்ட் கிளியரன்ஸ், மொபைல் சார்ஜிங் சாக்கெட், சைடு ஸ்டான்டு அலாரம் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
கே.டி.எம். இந்தியா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் டியூக் 790 மோட்டார்சைக்கிளின் வெளியீட்டு விவரங்களை பார்ப்போம்.
கே.டி.எம். இந்தியா நிறுவனம் தனது டியூக் 790 மாடல் இந்தியாவில் செப்டம்பர் 23 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என தெரிவித்துள்ளது. இந்தியாவில் அறிமுகமானதும் கே.டி.எம். நிறுவனத்தின் சக்திவாய்ந்த மாடலாக டியூக் 790 இருக்கும்.
புதிய டியூக் 790 மாடல் இந்திய நகரங்களில் தேர்வு செய்யப்பட்ட விற்பனை மையங்களில் மட்டுமே கிடைக்கும். புதிய மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் இதுவரை துவங்கப்படவில்லை. எனினும், சில விற்பனையாளர்கள் டியூக் 790 மாடலை ரூ. 30,000 கட்டணத்தில் முன்பதிவு செய்து வருகின்றனர்.
கே.டி.எம். டியூக் 790 மாடலில் எலெக்டிராணிக் ரைடர் ஏய்டுகள், அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றில் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம், லீன் ஆங்கில் சென்சிடிவிட்டி, மோட்டார் ஸ்லிப் ரெகுலேஷன், ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், டிராக் மோட், குவிக் ஷிஃப்டர் பிளஸ் உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கின்றன.

கே.டி.எம். டியூக் 790 மாடலில் 799சிசி லிக்விட் கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. @9000 ஆர்.பி.எம்., 87 என்.எம். டார்க் @8000 ஆர்.பி.எம். செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது. டிரான்ஸ்மிஷனிற்கு இருவழி குவிக் ஷிஃப்டர் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.
டியூக் 790 மாடல்: ஸ்போர்ட்ஸ், ஸ்டிரீட், ரெயின் மற்றும் டிராக் என நான்கு வித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. இதில் ஸ்டீல் ஃபிரேம் சேசிஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்புறம் 43 எம்.எம். அப்சைடு-டவுன் ஃபோர்க், பின்புறம் மோனோ ஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது.
ஸ்கோடா இந்தியா நிறுவனத்தின் கோடியாக் கார்ப்பரேட் எடிஷன் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கோடா இந்தியா நிறுவனம் கோடியக் கார்ப்பரேட் எடிஷன் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய ஸ்கோடா கோடியாக் கார்ப்பரேட் எடிஷன் மாடல் விலை ரூ. 32.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது ஸ்டான்டர்டு மாடலை விட ரூ. 2 லட்சம் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த கார் அனைவருக்கும் வழங்கப்படாது.
புதிய கார்ப்பரேட் எடிஷன் மாடல் இந்திய சந்தையில் ஸ்கோடா வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஸ்கோடா நிறுவன வாகனங்களை வைத்திருப்போர் மட்டுமே புதிய கோடியாக் கார்ப்பரேட் எடிஷனை வாங்க முடியும்.

ஸ்கோடா கோடியாக் எஸ்.யு.வி.: ஸ்டைல் மற்றும் எல்.கே. (லாரின் மற்றும் கிளெமன்ட்) என இருவித வேரியன்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் ஸ்டைல் மாடல் விலை ரூ. 35.36 லட்சம் என்றும் எல்.கே. வேரியண்ட் விலை ரூ.36.78 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஸ்கோடா கோடியாக் கார்ப்பரேட் எடிஷன் ஸ்டைல் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வேரியண்ட்டில் ஸ்டான்டர்டு மாடலில் உள்ள பல்வேறு அம்சங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஃபுல் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், முன்புறம், பின்புறம் ஃபாக் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய கார்ப்பரேட் எடிஷனில் 2.0 லிட்டர் TDI டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 148 பி.ஹெச்.பி. பவர், 340 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 7-ஸ்பீடு டி.எஸ்.ஜி. ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
ஹூன்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் இந்த வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஹூன்டாய் நிறுவனத்தின் எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் கார் நீண்ட காலமாக அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எலான்ட்ரா ஃபேஸ்லிஃப்ட் தற்சமயம் தேர்வு செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
அந்த வகையில் இந்த கார் இம்மாத இறுதியில் விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. காரின் வெளிப்புறம் கூர்மையான ஸ்டைலிங் மற்றும் ரீடன் கேபின் வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி எலான்ட்ரா கார் பெட்ரோல் என்ஜின் கொண்ட வெர்ஷன் மட்டுமே விற்பனைக்கு வரும் என தெரிகிறது.

இந்த பெட்ரோல் என்ஜின் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. இது 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜுலை 2019 வரையிலான காலக்கட்டத்தில் ஹூன்டாய் நிறுவனம் 214 பெட்ரோல் எலான்ட்ரா வாகனங்களை விற்பனை செய்திருக்கிறது. இதே காலக்கட்டத்தில் அந்நிறுவனம் வெறும் 90 டீசல் எலான்ட்ரா மாடல்களையே விற்பனை செய்திருக்கிறது.
டீசல் மாடல்களின் விற்பனை குறைந்து வருவதால் ஹூன்டாய் நிறுவனம் புதிய எலான்ட்ரா மாடலை பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் மட்டும் விற்பனை செய்யலாம் என கூறப்படுகிறது.
தற்சமயம் விற்பனை செய்யப்படும் எலான்ட்ரா மாடலில் 128 பி.ஹெச்.பி., 1.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் வெர்னா மற்றும் கிரெட்டா மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது.






