என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹூன்டாய் நிறுவனத்தின் 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய விவரங்களை பார்ப்போம்.



    ஹூன்டாய் நிறுவனத்தின் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் சீன சந்தையில் அக்டோபர் 30 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் செப்டம்பர் மாதம் நடைபெற்ற செங்டு மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையில், 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் அதிகாரப்பூர்வ புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் புதிய தலைமுறை கிரெட்டா அல்லது ix25 மாடலை தழுவி உருவாகி இருப்பது தெளிவாகி இருக்கிறது. புதிய வெர்னா கார் முந்தைய மாடலை விட கூர்மையாக இருக்கிறது. இதன் கேஸ்கேடிங் கிரில் காரின் தோற்றத்தை சற்று மாற்றினாலும், இது முன்பை விட அகலமாகவே இருக்கிறது.

    2020 ஹூன்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் புகைப்படம்

    இத்துடன் மெல்லிய ஹெட்லேம்ப்கள், ஷார்ப் பம்ப்பர், பிரெசிஷன்-கட் அலாய் வீல்கள் காரின் தோற்றத்தை வித்தியாசப்படுத்துகிறது. முன்புறம் போன்றே காரின் பின்புறத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் காரின் தோற்றம் பிரீமியம் அனுபவத்தை வழங்குகிறது.

    வெர்னா ஃபேஸ்லிஃப்ட் பின்புறம் ராப்-அரவுண்ட் எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை காரின் மத்தியில் இணைக்கப்பட்டு ஹூன்டாய் பேட்ஜ் இடையில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று காரின் கேபினும் பிரீமியம் அம்சங்களை கொண்டிருக்கிறது.

    இம்முறை வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடலில் புதிய 8-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. வெர்னா ஃபேஸ்லிஃப்ட் மாடல் கனெக்ட்டெட் காராக இருக்கும். இதனால் இதில் ப்ளூலின்க் கனெக்டிவிட்டி மற்றும் வயர்லெஸ் போன் சார்ஜர் போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது.
    ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சான்ட்ரோ காரின் புதிய வேரியண்ட்டை சத்தமில்லாமல் வெளியிட்டது.



    ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது சான்ட்ரோ காரின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆனிவர்சரி எடிஷன் என அழைக்கப்படும் புதிய சான்ட்ரோ மேனுவல் வேரியண்ட் துவக்க விலை ரூ. 5.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ஆட்டோமேடிக் விலை ரூ. 5.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சான்ட்ரோ ஆனிவர்சரி எடிஷன் ஹேட்ச்பேக் மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வேரியண்ட் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உள்புறத்தில் முழுக்க முழுக்க கருப்பு நிற இன்டீரியர் மற்றும் புளு நிற ட்ரிம் கொண்டிருக்கிறது.

    ஹூன்டாய் சான்ட்ரோ ஆனிவர்சரி எடிஷன்

    வெளிப்புறத்தில் பிளாக்டு அவுட் டோர் ஹேன்டில்கள், ORVMகள், ரூஃப் டெயில்கள், வீல் கவர்களில் கன்மெட்டல் கிரே ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பூட் லிட், பாடி சைடு மோல்டிங் உள்ளிட்டவற்றில் குரோம் அக்சென்ட்களும், பூட் லிட் பகுதியில் ஆனிவர்சரி எடிஷன் பேட்ஜ் கொண்டிருக்கிறது.

    புதிய சான்ட்ரோ ஆனிவர்சரி எடிஷன் மாடல் போலார் வைட் மற்றும் அக்வா டீல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஃபேப்ரிக் சீட் வடிவமைப்பும் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தவிர புதிய காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் புதிய சான்ட்ரோ காரிலும் 1.1 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏ.எம்.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
    ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ஆக்டேவியா மாடல் காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த கார் விவரங்களை பார்ப்போம்.



    ஸ்கோடா நிறுவனத்தின் 2020 ஆக்டேவியா மாடல் காருக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. இது 11வது தலைமுறை ஆக்டேவியா மாடல் ஆகும். சர்வதேச சந்தையில் நவம்பர் 11 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் நிலையில் புதிய ஆக்டேவியா டீசர் வெளியாகி இருக்கிறது.

    டீசர்களின் படி புதிய ஆக்டேவியா வடிவமைப்பு பார்க்க ஸ்கோடா கமிக் மற்றும் ஸ்கேலா மாடல்களை தழுவி உருவாகி இருக்கிறது. புதிய ஆக்டேவியா மாடலில் ஒற்றை ஹெட்லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளன. புதிய மாடல் காரிலும் மேட்ரிக்ஸ் எல்.இ.டி. தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது.

    புதிய காரில் பட்டர்ஃபிளை கிரில் பிரம்மாண்டமாகவும், அகலமாகவும் காட்சியளிக்கிறது. இத்துடன் பெரிய பொனெட் மற்றும் மேம்பட்ட பம்ப்பர், எல்.இ.டி. ஃபாக் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

    2020 ஸ்கோடா ஆக்டேவியா டீசர்

    காரின் பின்புறம் ஆடி-எஸ்க் எல்.இ.டி. டெயில்லைட்கள், ராப்-அரவுண்ட் யூனிட்கள் வழங்கப்பட்டுள்ளன. நாட்ச்பேக் ஸ்டைலிங் காரின் தனித்துவ அம்சமாக இருக்கிறது. இத்துடன் பின்புறம் அகலமாக காட்சியளிக்கிறது.

    2020 ஆக்டேவியா காரில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் TSI என்ஜின்கள் 2.0 லிட்டர் டி.டி.ஐ. மோட்டார் உடன் வழங்கப்படுகிறது. இவற்றுடன் மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்படும் என கூறப்படுகிறது.
    ஹூன்டாய் நிறுவனத்தின் கிரெட்டா பேஸ் வேரியண்ட் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டன.



    ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது கிரெட்டா E+ மற்றும் EX பேஸ் மாடல்களில் 1.6 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் விலை முறையே ரூ. 10.87 லட்சம் மற்றும் ரூ. 11.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    ஹூன்டாய் கிரெட்டா

    இதுவரை இரு பேஸ் வேரியண்ட்களும் 1.4 லிட்டர் டீசல் மற்றும் 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது. தற்சமயம் ஹூன்டாய் நிறுவனம் 1.6 லிட்டர் டீசல் என்ஜினை இரு மாடல்களில் வழங்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    புதிய 1.6 லிட்டர் டீசல் என்ஜின் 126 பி.ஹெச்.பி. பவர் @4000 ஆர்.பி.எம். மற்றும் 240 என்.எம். டார்க் @1500 முதல் 3000 ஆர்.பி.எம். செயல்திறன் வழங்குகிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் வருகிறது. புதிய டீசல் என்ஜின் தவிர காரில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
    ஹோன்டா நிறுவனத்தின் நான்காம் தலைமுறை ஜாஸ் மாடல் காருக்கான டீசர் வெளியிடப்பட்டுள்ளது.



    ஹோன்டா நிறுவனம் 2020 டோக்யோ மோட்டார் விழாவில் அறிமுகம் செய்ய இருக்கும் புதிய காருக்கான டீசரை வெளியிட்டுள்ளது. புதிய டீசர் அடுத்த தலைமுறை ஹோன்டா ஜாஸ் மாடலுக்கானது ஆகும்.

    காரின் வெளிப்புறம் தெரியும் படி நேர்த்தியாக காணப்படும் டீசரில் புதிய தலைமுறை ஜாஸ் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதனால் கேபின் இடவசதி அதிகமாக இருக்கும். மேலும் புதிய கார் நான்கு மீட்டர்களுக்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

    நான்காம் தலைமுறை ஹோன்டா ஜாஸ் மாடல் டோக்யோ ஆட்டோ விழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய காரின் வடிவமைப்பு அதிகளவு மாற்றங்கள் இன்றி முந்தைய மாடலில் உள்ளதை விட அதிக இடவசதி கொண்டிருக்கும். புதிய ஜாஸ் மாடல் கார் பயணிகளுக்கு சவுகரியத்தை வழங்கும் வகையில் மேம்படுத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஹோன்டா ஜாஸ் டீசர்

    ஐரோப்பியாவில் புதிய ஜாஸ் மாடல் மேம்பட்ட இரண்டு மோட்டார் ஹைப்ரிட் பவர் டிரெயின்களில் அறிமுகம் செய்யப்படுகிறது. மற்ற சந்தைகளில் ஹைப்ரிட் அல்லது பெட்ரோல் என்ஜின்களுடன் வழங்கப்படுகிறது. இதில் 1.2 லிட்டர் பி.எஸ். 6 என்ஜின் கொண்ட வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    இதே என்ஜின் ஹோன்டா அமேஸ் மற்றும் டபுள்.ஆர்.-வி. மாடலிலும் வழங்கப்படலாம். இந்த என்ஜினுடன் மேனுவல் மற்றும் சி.வி.டி. ஆட்டோ டிரான்ஸ்மிஷன் வழங்கப்படலாம். புதிய ஹோன்டா ஜாஸ் மாடல் இந்திய சந்தையில் ஹூன்டாய் ஐ20 மற்றும் மாருதி சுசுகி பலேனோ மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அர்பனைட் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அர்பனைட் பிராண்டிங்கில் அறிமுகமாகி இருக்கும் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் படிப்படியாக விற்பனைக்கு வர இருக்கிறது.

    புதிய வாகனம் என்ற போதும் அர்பனைட் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வடிவமைப்பு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பிரபல ஸ்கூட்டராக இருந்த செட்டாக் மாடலை தழுவியே உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இ ஸ்கூட்டர் ஷீட் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது. இதன் மீது பிரஷ் செய்யப்பட்ட குரோம் ஹைலைட்கள், வட்ட வடிவ எல்.இ.டி. ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

    செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் டிஜிட்டல் ப்ளூடூத் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரில் ஒற்றை இருக்கை அமைப்பு இருவர் அமரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் எலெக்ட்ரிக் மோட்டார் மூலம் இயங்குகிறது.

    அர்பனைட் செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

    இந்த மோட்டார் IP67 தரச்சான்று பெற்ற லித்தியம் அயன் பேட்டரியில் இருந்து தேவையான மின்சக்தியை எடுத்துக் கொள்கிறது. இதன் செயல்திறன் பற்றி இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த ஸ்கூட்டர் இகோ, ஸ்போர்ட் என இருவித டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது.

    செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன்புறம் சிங்கில் ஆர்ம் யூனிட், பின்புறம் மோனோஷாக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. பிரேக்கிங்கிற்கு டிஸ்க் மற்றும் டிரம் பிரேக் செட்டப் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அர்பனைட் செட்டாக் ஸ்கூட்டர் ஏத்தர் 450 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என தெரிகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா டூர் எம் டீசல் வேரியண்ட் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் எர்டிகா எம்.பி.வி. காரின் டூர் எம் டீசல் வேரியண்ட்டை அறிமுகம் செய்தது. புதிய மாருதி எர்டிகா டூர் எம் டீசல் வேரியண்ட் விலை ரூ. 9.81 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    பெட்ரோல், டீசல் வேரியண்ட்களை தொடர்ந்து எர்டிகா டூர் எம் மாடலில் இது மூன்றாவது வேரியண்ட் ஆகும். முன்னதாக பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்கள் மே மற்றும் ஜூலை மாதங்களில் வெளியிடப்பட்டன.

    மற்ற எர்டிகா டூர் எம் வேரியண்டகளை போன்று புதிய டீசல் மாடல் கால் டாக்சி மற்றும் டிராவல்ஸ் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் விற்பனை செய்யப்படுகிறது. மாருதி எர்டிகா டூர் எம் டீசல் மாடல் ஸ்டான்டர்டு VDi வேரியண்ட்டை தழுவி உருவாகியிருக்கிறது. இதன் விலை ரூ. 5000 வரை குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    மாருதி எர்டிகா டூர் எம் டீசல் வேரியண்ட்

    மாருதி எர்டிகா டூர் எம் டீசல் மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ரியர் காம்பினேஷன் லேம்ப், குரோம் கிரில் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. காரின் உள்புறம் பவர் விண்டோ, கீலெஸ் என்ட்ரி, அடஜஸ்ட் செய்யக்கூடிய ல்டீரிங் மற்றும் மவுண்ட் கண்ட்ரோல்கள், பின்புறம் ஏ.சி. வென்ட்கள் வழங்கப்பட்டுள்ளன.

    பாதுகாப்பிற்கு மாருதி எர்டிகா டூர் எம் டீசல் வேரியண்ட்டில் ஏ.பி.எஸ்., இ.பி.டி., பிரேக் அசிஸ்ட், பின்புற பார்க்கிங் அசிஸ்ட், ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், டூயல் ஏர்பேக், சீட் பெல்ட் ரிமைண்டர் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

    புதிய எர்டிகா டூர் எம் மாடலிலும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த 1498சிசி 4 சிலிண்டர் டீசல் என்ஜின் 95 பி.ஹெச்.பி. பவர், 225 என்.எம். டார்க் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
    வோல்வோ நிறுவனத்தின் புதிய பேட்டரி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    சொகுசு கார்களைத் தயாரிக்கும் வோல்வோ நிறுவனம் இப்போது பேட்டரி எஸ்.யு.வி. மாடல் கார்களையும் தயாரித்து அதை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. எக்ஸ்.சி 40. என்ற பெயரில் மிகவும் பாதுகாப்பான, சிறிய ரக எஸ்.யு.வி.யாக இது இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

    சுவீடனைச் சேர்ந்த வோல்வோ நிறுவனத்தை சீனாவைச் சேர்ந்த ஜீலி குழுமம் வாங்கிஉள்ளது. இருப்பினும் சுவீடனின் கோதென்பர்க் நகரில் உள்ள டோர்ஸ்லான்டா என்ற இடத்தில் தலைமையகத்தைக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பேட்டரி காருக்கு பெரும்பாலான நிறுவனங்கள் மாறிவரும் சூழலில் வோல்வோ நிறுவனமும் பேட்டரி கார் தயாரிப்பில் தீவிரம் காட்டியுள்ளது.

    இந்நிறுவனத் தயாரிப்புகளில் பாதிக்கும் மேலான வாகனங்களை பேட்டரி வாகனங்களாக தயாரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த இலக்கை அடுத்த 6 ஆண்டுகளில் எட்ட முடிவு செய்து முதலாவதாக எக்ஸ்.சி 40. மாடலை பேட்டரி காராக களமிறங்க திட்டமிட்டுள்ளது.

    வோல்வோ எக்ஸ்.சி.40

    வோல்வோ தயாரிப்புகளில் எக்ஸ்.சி 40. மாடல் மிகவும் பிரபலமானது. இதில் பேட்டரி காரை அக்டோபர் 16 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. நான்கு சக்கர சுழற்சி கொண்ட இந்த பேட்டரி காருக்கான முன்புற சக்கரத்திற்காக பிரத்யேகமாக ஒரு என்ஜினும், பின்புற சக்கரத்திற்காக பிரத்யேகமாக ஒரு என்ஜினும் உள்ளது. மோட்டாரை இயக்கத் தேவைப்படும் பேட்டரியை காரின் கீழ் பகுதியில் வைத்துள்ளது. 

    பெட்ரோலில் இயங்கும் எக்ஸ்.சி 40. மாடலை பேட்டரி மாடலாக உருமாற்றம் செய்யும்போது அதற்கேற்ப தேவையான மாற்றங்களை இந்நிறுவனம் செய்துள்ளது. பேட்டரி வாகனங்கள் பாதுகாப்பானவையாக இருக்கும் வகையில் பேட்டரியின் மேல்பகுதி அலுமினியத்தால் ஆனதாக இந்நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்தக் காரில் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டென்ட் சிஸ்டம் (ஏ.டி.ஏ.எஸ்.) சென்சார் உள்ளது.

    ஏற்கனவே இந்நிறுவனத்தின் துணை நிறுவனமான போல்ஸ்டார் தனது பேட்டரி காரில் 78 கிலோவாட் பேட்டரியை பயன்படுத்திஉள்ளது. அந்தக் கார் 408 ஹெச்.பி. திறன் மற்றும் 660 என்.எம் டார்க் செயல்திறனை கொண்டது. இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ. தூரம் ஓடக் கூடியது. 

    இதே தொழில்நுட்பத்தை எக்ஸ்.சி 40. பேட்டரி காரிலும் இந்நிறுவனம் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்தக் காரை முழுவதும் இறக்குமதி செய்து விற்பனை செய்வதா அல்லது பெங்களூருவில் உள்ள ஆலையில் அசெம்பிளி செய்து விற்பனை செய்வதா என்பது குறித்தும் நிறுவனம் ஆராய்ந்து வருகிறது.
    லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் இவோ ஸ்பைடர் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



    லம்போர்கினி நிறுவனத்தின் ஹரிகேன் இவோ ஸ்பைடர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் இதன் விலை ரூ. 4.1 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய கார் அறிமுகம் செய்யப்பட்டதோடு மும்பையில் புதிய விற்பனையகம் ஒன்றை லம்போர்கினி திறந்துள்ளது.

    கூப் மாடலில் உள்ள என்ஜினே புதிய ஹரிகேன் இவோ ஸ்பைடர் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இதில் கன்வெர்டிபில் சாஃப்ட் டாப் வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ஸ்டான்டர்டு மாடலை விட இதன் எடை 120 கிலோ அதிகம் ஆகும். கார் மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் போது சாஃப்ட் டாப் ரூஃபினை 17 நொடிகளில் மூடிவிட முடியும்.

    லம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர்

    மேலும் லம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 3.1 நொடிகளில் எட்டும் திறன் கொண்டிருக்கிறது. இது கூப் மாடலை விட 0.2 நொடிகள் குறைவாகும். இதே காரில் மணிக்கு 0 முதல் 200 கிலோமீட்டர் வேகத்தை 9.3 நொடிகளில் எட்ட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 325 கிலோமீட்டர்களில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    லம்போர்கினி ஹரிகேன் இவோ ஸ்பைடர் மாடலிலும் 5.2 லிட்டர் வி10 பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 631 பி.ஹெச்.பி. @8000 ஆர்.பி.எம். மற்றும் 600 என்.எம். டார்க் @6500 ஆர்.பி.எம். செயல்திறனை வழங்குகிறது. இத்துடன் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.

    காரின் உள்புறம் 8.4 இன்ச் கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் கிளைமேட் கண்ட்ரோல், ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி, ஆப்பிள் கார்பிளே மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர டூயல் கேமரா டெலிமெட்ரி, டைனமிக் ஸ்டீரிங், ஆல்-வீல் ஸ்டீரிங் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன.
    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிக தூரம் செல்லும் டிகோர் இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டிகோர் இ.வி. காரை இந்தியாவில் அறிமுகம் செய்தது. புதிய டிகோர் இ.வி. முன்பை விட அதிக தூரம் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் டிகோர் இ.வி. இனி வணிகம் மற்றும் தனிப்பட்ட பயன்பாடு என இருதரப்பு வாடிக்கையாளர்களும் வாங்க முடியும். டிகோர் இ.வி. கார் துவக்க விலை ரூ. 9.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் டிகோர் இ.வி. காருக்கு அரசாங்க சலுகைகளும் வழங்கப்படுகிறது.

    டாடா டிகோர் இ.வி.

    ஏற்கனவே இந்தியாவில் டிகோர் இ.வி. கார் அறிமுகம் செய்யப்பட்டு விட்டது. எனினும், இது அரசாங்கம் மற்றும் வணிக ரீதியிலான வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. அந்த வரிசையில் புதிய காரினை இனி தனிப்பட்ட வாடிக்கையாளர்களும் தங்களது சொந்த பயன்பாட்டிற்கு வாங்கிட முடியும்.

    டாடா டிகோர் இ.வி. கார்: XE+, XM+ மற்றும் XT+ என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. மூன்று வேரியண்ட்களும் ஃபேம் 2 சலுகைகளுக்கு பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய காரில் 21.5 கிலோவாட் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. இது ஒருமுறை சார்ஜ் செய்தால் 213 கிலோமீட்டர் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    புதிய டிகோர் இ.வி. கார் டிரைவ் மற்றும் ஸ்போர்ட் என இரண்டு டிரைவிங் மோட்களை கொண்டிருக்கிறது. புதிய காரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பேட்டரி கூலிங் சிஸ்டத்தை மேம்படுத்தி இருக்கிறது. இது அதிக வெப்பநிலை கொண்ட பகுதிகளிலும் செயல்திறனை குறையாமல் பார்த்துக் கொள்ளும்.
    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு புதிய பிராண்டு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.



    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் கால்பதிக்க இருக்கிறது. அக்டோபர் 16 ஆம் தேதி பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அர்பனைட் பிராண்டினை அறிமுகம் செய்ய இருக்கிறது. 

    புதிய அர்பனைட் பிராண்டு பஜாஜ் ஆட்டோவின் புதிய அங்கமாக செயல்படும் என தெரிகிறது. இது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதுதவிர இரு தசாப்தங்களுக்கு பின் பஜாஜ் ஆட்டோ நிறுவனம் ஸ்கூட்டர்கள் பிரிவில் களமிறங்க இருக்கிறது.

    முன்னதாக பஜாஜ் நிறுவனத்தின் செடாக் ஸ்கூட்டர்கள் இந்தியா முழுக்க அதிக பிரபலமாக இருந்தன. இந்தியாவில் பஜாஜ் அர்பனைட் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அவற்றில் ஸ்கூட்டரின் வடிவமைப்பு, அம்சங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகின.

    அர்பனைட் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் பிரீமியம் பிரிவில் அறிமுகமாகும் என்றும் இது ஒகினாவா, ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் எனர்ஜி போன்ற நிறுவனங்களின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் அர்பனைட் பற்றிய விவரங்கள் அக்டோபர் 16 ஆம் தேதி தெரியவரும்.
    ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி ஆர்.எஸ். க்யூ3 மற்றும் ஆர்.எஸ்.க்யூ 3 ஸ்போர்ட்பேக் என இரண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



    சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியின் ஆடி நிறுவனம் தற்போது ஆர்.எஸ். க்யூ3. மற்றும் ஆர்.எஸ்.க்யூ 3. ஸ்போர்ட்பேக் ஆகிய இரண்டு மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

    இரண்டு மாடல்களுமே முந்தைய காரின் சக்கர ஆரத்தை விட 10 மி.மீ. அதிகம் உடையவை. இதன் கிரில் ஒற்றை பிரேமில் ஆனது. முன்புற பம்பரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பார்க்கும்போதுதான் இரண்டு கார்களுக்குமான வித்தியாசம் ஓரளவு தெரியும். மற்றபடி இரண்டுமே தோற்றப் பொலிவில் அழகாக காட்சியளிக்கின்றன. 

    ஸ்போர்ட்பேக் மாடலின் பின்பகுதி சற்று தாழ்ந்துள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை எக்ஸாஸ்ட் உள்ளது. உள்பகுதியும் வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. மிருதுவான தோலினால் ஆன இருக்கைகள், கார் ஓட்டும் அனுபவத்தை எளிதாக்கும் வகையில் பன்முக செயல்பாடுகள் கொண்ட பொத்தான், இனிய இசையை வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

    ஆர்.எஸ்.க்யூ 3 ஸ்போர்ட்பேக்

    இரண்டரை லிட்டர், 5 சிலிண்டர் பெட்ரோலில் ஓடும் டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்டது. முந்தைய மாடல் 340 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். புதிய மாடல் 400 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். 480 என்.எம். டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. 

    காரை ஸ்டார்ட் செய்து 4.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர் ஆகும். இது 7 கியர்களுடன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியோடு வந்துள்ளது. இந்த இரண்டு மாடல் கார்களுமே நான்கு சக்கர சுழற்சி கொண்டவை. முந்தைய மாடலைக் காட்டிலும் இவற்றின் உயரம் 10 மி.மீ. குறைவாகும்.

    இவ்விரு மாடல்களின் வருகையால் ஆடி தயாரிப்புகளில் எஸ்.யு.வி. ரகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த மாடல் கார் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி. ஜி.எல்.ஏ.45, பி.எம்.டபிள்யூ. எக்ஸ்3. ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
    ×