search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஆர்.எஸ். க்யூ3
    X
    ஆர்.எஸ். க்யூ3

    இரண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தும் ஆடி

    ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி ஆர்.எஸ். க்யூ3 மற்றும் ஆர்.எஸ்.க்யூ 3 ஸ்போர்ட்பேக் என இரண்டு புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



    சொகுசு கார் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஜெர்மனியின் ஆடி நிறுவனம் தற்போது ஆர்.எஸ். க்யூ3. மற்றும் ஆர்.எஸ்.க்யூ 3. ஸ்போர்ட்பேக் ஆகிய இரண்டு மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

    இரண்டு மாடல்களுமே முந்தைய காரின் சக்கர ஆரத்தை விட 10 மி.மீ. அதிகம் உடையவை. இதன் கிரில் ஒற்றை பிரேமில் ஆனது. முன்புற பம்பரில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்கவாட்டில் பார்க்கும்போதுதான் இரண்டு கார்களுக்குமான வித்தியாசம் ஓரளவு தெரியும். மற்றபடி இரண்டுமே தோற்றப் பொலிவில் அழகாக காட்சியளிக்கின்றன. 

    ஸ்போர்ட்பேக் மாடலின் பின்பகுதி சற்று தாழ்ந்துள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இரட்டை எக்ஸாஸ்ட் உள்ளது. உள்பகுதியும் வெகு நேர்த்தியாக உருவாக்கப்பட்டுள்ளது. மிருதுவான தோலினால் ஆன இருக்கைகள், கார் ஓட்டும் அனுபவத்தை எளிதாக்கும் வகையில் பன்முக செயல்பாடுகள் கொண்ட பொத்தான், இனிய இசையை வழங்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

    ஆர்.எஸ்.க்யூ 3 ஸ்போர்ட்பேக்

    இரண்டரை லிட்டர், 5 சிலிண்டர் பெட்ரோலில் ஓடும் டர்போ சார்ஜ்டு என்ஜினைக் கொண்டது. முந்தைய மாடல் 340 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். புதிய மாடல் 400 ஹெச்.பி. திறனை வெளிப்படுத்தும். 480 என்.எம். டார்க் இழுவிசையை வெளிப்படுத்தக் கூடியது. 

    காரை ஸ்டார்ட் செய்து 4.5 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிலோமீட்டர் ஆகும். இது 7 கியர்களுடன் ஆட்டோமேடிக் கியர் பாக்ஸ் வசதியோடு வந்துள்ளது. இந்த இரண்டு மாடல் கார்களுமே நான்கு சக்கர சுழற்சி கொண்டவை. முந்தைய மாடலைக் காட்டிலும் இவற்றின் உயரம் 10 மி.மீ. குறைவாகும்.

    இவ்விரு மாடல்களின் வருகையால் ஆடி தயாரிப்புகளில் எஸ்.யு.வி. ரகங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இந்த மாடல் கார் மெர்சிடிஸ் பென்ஸ் ஏ.எம்.ஜி. ஜி.எல்.ஏ.45, பி.எம்.டபிள்யூ. எக்ஸ்3. ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
    Next Story
    ×