search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    ஹூன்டாய் சான்ட்ரோ
    X
    ஹூன்டாய் சான்ட்ரோ

    ஹூன்டாய் சான்ட்ரோ புதிய எடிஷன் அறிமுகம்

    ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் சான்ட்ரோ காரின் புதிய வேரியண்ட்டை சத்தமில்லாமல் வெளியிட்டது.



    ஹூன்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது சான்ட்ரோ காரின் புதிய வேரியண்ட்டை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ஆனிவர்சரி எடிஷன் என அழைக்கப்படும் புதிய சான்ட்ரோ மேனுவல் வேரியண்ட் துவக்க விலை ரூ. 5.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என்றும் ஆட்டோமேடிக் விலை ரூ. 5.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    சான்ட்ரோ ஆனிவர்சரி எடிஷன் ஹேட்ச்பேக் மாடலின் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட்டை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வேரியண்ட் உள்புறம் மற்றும் வெளிப்புறங்களில் காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உள்புறத்தில் முழுக்க முழுக்க கருப்பு நிற இன்டீரியர் மற்றும் புளு நிற ட்ரிம் கொண்டிருக்கிறது.

    ஹூன்டாய் சான்ட்ரோ ஆனிவர்சரி எடிஷன்

    வெளிப்புறத்தில் பிளாக்டு அவுட் டோர் ஹேன்டில்கள், ORVMகள், ரூஃப் டெயில்கள், வீல் கவர்களில் கன்மெட்டல் கிரே ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பூட் லிட், பாடி சைடு மோல்டிங் உள்ளிட்டவற்றில் குரோம் அக்சென்ட்களும், பூட் லிட் பகுதியில் ஆனிவர்சரி எடிஷன் பேட்ஜ் கொண்டிருக்கிறது.

    புதிய சான்ட்ரோ ஆனிவர்சரி எடிஷன் மாடல் போலார் வைட் மற்றும் அக்வா டீல் என இருவித நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஃபேப்ரிக் சீட் வடிவமைப்பும் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் தவிர புதிய காரின் மெக்கானிக்கல் அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

    அந்த வகையில் புதிய சான்ட்ரோ காரிலும் 1.1 லிட்டர் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 68 பி.ஹெச்.பி. பவர், 99 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏ.எம்.டி. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்படுகிறது.
    Next Story
    ×