search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ்
    X
    பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ்

    இந்தியாவில் பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் அறிமுகம்

    பி.எம்.டபுள்யூ. நிறுவத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 3 சீரிஸ் கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.



    இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் 3 சீரிஸ் கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ. 41.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019 3 சீரிஸ் செடான் கார் இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் வேரியண்ட்டில் கிடைக்கிறது.

    பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 47.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் 2018 பாரிஸ் மோட்டார் விழாவில் காட்சிப்படுத்தப்பட்டது. புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ் கார் செடான் மாடலில் ஏழாவது தலைமுறை மாடல் ஆகும். 

    பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ்

    புதிய என்ட்ரி லெவல் ஆடம்பர செடான் மாடலுக்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டுள்ளன. புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ்: 320டி ஸ்போர்ட், 320டி லக்சரி லைன் மற்றும் 330ஐ எம் ஸ்போர்ட் என மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதுதவிர 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இது 190 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.

    330ஐ எம் ஸ்போர்ட் பெட்ரோல் வேரியண்ட் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் யூனிட் வழங்கப்படுகிறது. இது 258 பி.ஹெச்.பி. பவர், 400 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கிறது.

    புதிய பி.எம்.டபுள்யூ. 3 சீரிஸ்  மாடலின் உள்புறம் 10.25 இன்ச் கண்ட்ரோல் டிஸ்ப்ளே, 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், பி.எம்.டபுள்யூ. கனெக்ட்டெட் டிரைவ் தொழில்நுட்பம், ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும ஆப்பிள் கார் பிளே உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. 
    Next Story
    ×