என் மலர்tooltip icon

    இது புதுசு

    ஹூன்டாய் நிறுவனத்தின் புதிய தலைமுறை ஹேட்ச்பேக் காரின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    ஹூன்டாய் நிறுவனம் தனது புதிய தலைமுறை கிராண்ட் ஐ10 கார் கிராண்ட் ஐ10 நியோஸ் என்ற பெயரில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளது.

    புதிய ஹேட்ச்பேக் கார் இந்தியாவில் ஆகஸ்ட் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. கிராண்ட் ஐ10 நியோஸ் இந்தியாவில் மட்டும் அழைக்கப்படும் என்றும் சர்வதேச சந்தையில் இந்த கார் கிராண்ட் ஐ10 என்ற பெயரிலேயே விற்பனை செய்யப்படும் என தெிவிக்கப்பட்டு இருக்கிறது.

    கிராண்ட் ஐ10 நியோஸ் ஐ10 பிராண்டிங்கில் மூன்றாம் தலைமுறை மாடல் ஆகும். இது ஏற்கனவே விற்பனையாகும் கிராண்ட் ஐ10 மாடலுடன் சேர்த்து விற்பனை செய்யப்பட இருக்கிறது. புதிய ஹேட்ச்பேக் காருக்கான முன்பதிவுகள் இந்தியா முழுக்க துவங்கப்பட்டு விட்டது. புதிய காரை முன்பதிவு செய்ய ரூ. 11,000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ்

    புதிய கிராண்ட் ஐ10 நியோஸ் காரில் ஹூன்டாயின் கேஸ்கேடிங் கிரில் வழங்கப்பட்டுள்ளது. இது காரின் முன்புறத்தை அகலமாக்கி ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகிறது. என்ஜினை பொருத்தவரை கிராண்ட் ஐ10 நியோஸ் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் யூனிட் வழங்கப்படும் என தெரிகிறது.

    இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பி.எஸ். பவர் மற்றும் 114 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இதன் டீசல் யூனிட் 75 பி.எஸ். பவர் மற்றும் 190 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் AMT அல்லது 5-ஸ்பீடு MT டிரான்ஸ்மிஷனுடன் வரும் என கூறப்படுகிறது.
    ஜப்பானில் உருவாக்கப்பட்ட பறக்கும் கார் சோதனை சமீபத்தில் நடைபெற்றது. சோதனை முடிவு விவரங்களை பார்ப்போம்.



    ஜப்பானின் எலெக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு நிறுவனமான என்.இ.சி. கார்ப் பறக்கும் காரை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. அதன்படி பறக்கும் காரை உருவாக்கி அதன் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பெரிய ஆளில்லா விமானம் போல் காட்சியளித்த பறக்கும் காரின் மேலே நான்கு இறக்கைகள் போன்று வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    சோதனை ஓட்டத்தின் போது பறக்கும் கார் தரையில் இருந்து மேலே 3 மீட்டர் உயரம் பறந்து சென்றது. சுமார் ஒரு நிமிட நேரம் வானில் வட்டமடித்தப்படி சென்றது. பறக்கும் கார் உருவாக்குவதில் ஜப்பான் அரசு ஆதரவாக உள்ளது. பறக்கும் கார்களை 2030-ம் ஆண்டுக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் ஜப்பான் அரசு முனைப்புடன் உள்ளது.

    பறக்கும் கார்

    2011-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி, பூகம்பம் மற்றும் அணுசக்தி பேரழிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளால் ஜப்பான் அரசு பறக்கும் கார்களை மீட்பு பணிகளில் ஈடுபடுத்த உதவும் என்று இந்த திட்டத்தை ஊக்குவித்து வருகிறது.

    அதேபோன்று மத்திய ஜப்பானில் உள்ள மை என்ற தீவு பகுதிகளை இனைக்கும் வகையில் போக்குவரத்துக்கு பறக்கும் கார்கள் உதவும் என்று அரசு நம்புகிறது. 2017-ம் ஆண்டு பறக்கும் கார் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் பறக்கும் கார் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து நொறுங்கியது.

    அதன்பின்னர் பல்வேறு கட்ட முயற்சிகள் வடிவமைப்புகளுக்கு பின் தற்போது பறக்கும் கார் சோதனை வெற்றிகரமாக முடிந்து உள்ளது. இதுகுறித்து என்.இ.சி. அதிகாரிகள் கூறும்போது, பறக்கும் கார்களை ஆளில்லா விமானம் போல் வரவழைத்து பொருட்களை டெலிவரி செய்யவே உருவாக்கினோம். ஆனால் தற்போது நிறுவனத்தின் தொழில்நுட்பத்தின் மூலம் மற்ற பயன்பாடுகளுக்காக உருவாக்கி வருகிறோம் என்றார்.
    ஆடி நிறுவனத்தின் 2020 எஸ்.கியூ.7 ஃபேஸ்லிஃப்ட் காரின் சிறப்பம்சங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
    சொகுசு ரக கார்களுக்கு பிரபலமான ஆடி நிறுவனம் அதன் எஸ்.கியூ7 காரில் பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை சேர்த்து அறிமுகம் செய்துள்ளது. 2020 ஆடி எஸ்.கியூ.7 ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

    ஆடி எஸ்.கியூ.7 காரின் முன்புறம் பெரிய சிங்கிள் ஃபிரேம் கிரில், வெர்டிக்கல் ஸ்லேட்களை கொண்டிருக்கிறது. இதன் எல்.இ.டி. ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்கள் மேம்படுத்தப்பட்டு புதிய வடிவமைப்பு வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் டெயில்கேட் மாற்றப்பட்டுள்ளது.

    புதிய காரில் 435 பி.ஹெச்.பி. டர்போ சார்ஜ்டு வி8 டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த கார் ஏழு பேர் சவுகரியமாக பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 4 லிட்டர் டர்போ வி8 ரக டீசல் என்ஜின் உள்ளது.

    ஆடி எஸ்.கியூ.7

    இந்த என்ஜின் 900 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை திறனை கொண்டது. வண்டியை ஸ்டார்ட் செய்து 4.8 வினாடிகளில் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தைத் தொட்டுவிடும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீ்ட்டர் வேகத்தை எட்டக்கூடியது.

    இதில் நான்கு சக்கரங்களும் (4 வீல் டிரைவ்) சுழற்சி விசையைக் கொண்டது. அனைத்து சக்கரங்களும் டிஸ்க் பிரேக்கை கொண்டவை. இப்போது இந்த மாடல் கார்கள் வெளிநாடுகளில் மட்டும் கிடைக்கிறது. இந்த மாடல் கார் அடுத்த ஆண்டு இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய ஆடி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய கார் வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.



    மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் தனது புதிய எம்.பி.வி. ரக காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஆறு பேர் பயணிக்கக்கூடிய வகையில் உருவாகியிருக்கும் புதிய கார் எக்ஸ்.எல்.6 என அழைக்கப்படுகிறது. வெளியீட்டிற்கு முன் புதிய காரின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

    புதிய மாருதி சுசுகி எக்ஸ்.எல். 6 இந்தியாவில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது. இந்த கார் மாருதியின் பிரபலமான எர்டிகா காரை சார்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. புதிய பிரீமியம் எம்.பி.வி. கார் இந்தியாவில் நெக்சா விற்பனையகங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.

    மாருதி சுசுகி எக்ஸ்.எல். 6 டீசர்

    ஆறு பேர் பயணிக்கக்கூடிய எக்ஸ்.எல். 6 அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச்களின் படி புதிய காரின் வெளிப்புறம் மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதை உணர்த்துகிறது. மேம்பட்ட முன்புற வடிவமைப்பு, புதிய கிரில், அப்டேட் செய்யப்பட்ட ஹெட்லேம்ப் கிளஸ்டர்கள், பிளாக் இன்சர்ட் மற்றும் புதிய எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள் வழங்கப்படுகின்றன.

    காரின் உள்புறம் கேபின், டேஷ்போர்டு பிளாக்டு-அவுட் செய்யப்பட்டு சில்வர் அக்சென்ட் வழங்கப்படுகிறது. மற்ற அம்சங்கள் எர்டிகா டாப்-எண்ட் மாடலில் உள்ளதை போன்று வழங்கப்படுகின்றன. 

    மாருதி சுசுகி எக்ஸ்.எல். 6 மாடலில் 1.5 லிட்டர் கே15-சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் வழங்கப்படுகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.
    மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் காரின் பி.எஸ். 6 வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    மாருதி சுசுகி நிறுவனம் தனது எர்டிகா பி.எஸ். 6 வெர்ஷனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. எர்டிகா பி.எஸ். 6 மாருதி சுசுகியின் புதிய மாடலாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து மாருதி நிறுவனத்தின் சியாஸ் பி.எஸ். 6 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன் டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் வழங்கப்படுகிறது. பி.எஸ். 6 தவிர புதிய காரில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என தெரிகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் சியாஸ் மாடல் அப்டேட் செய்யப்பட்டு ஒரு வருடமாகிவிட்டது.

    புதிய சியாஸ் கார் ஒரு பெட்ரோல் மற்றும் இரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனினும், டீசல் என்ஜின் தயாரிப்பை மாருதி சுசுகி சமீபத்தில் நிறுத்தியது. பி.எஸ். 6 பெட்ரோல் மாடலில் மேம்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. 

    சியாஸ்

    மற்றப்படி காரின் வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது. இந்த கார் மாருதி நெக்சா விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    சியாஸ் டாப்-என்ட் மாடலில் ஸ்மார்ட் பிளே தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம், லெதர் இருக்கைகள், 16-இன்ச் அலாய் வீல்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகி சியாஸ் மாடல் விலை தற்சமயம் ரூ. 8.19 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 11.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பி.எஸ். 6 மாடல் விலை ரூ. 15,000 வரை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது ஹேரியர் காரின் ஆல்-பிளாக் எடிஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



    டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹேரியர் எஸ்.யு.வி. தொடர்ந்து அப்டேட் செய்யப்பட்டு அடிக்கடி புதுப்புது அம்சங்களை பெற்று வருகிறது. அந்த வரிசையில் டாடா மோட்டார்ஸ் தனது ஹேரியர் எஸ்.யு.வி. காரின் ஆல்-பிளாக் எடிஷனை அறிமுகம் செய்ய இருக்கிறது.

    டாடா ஹேரியர் பிளாக் எடிஷன் கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது ஹேரியர் காருக்கு மேற்கொள்ளப்படும் இரண்டாவது அப்டேட் ஆகும். முன்னதாக காரின் வெளிப்புறத்தில் டூயல்-டோன் ஃபினிஷ் செய்யப்பட்டது. டூயல்-டோன் ஃபினிஷ் வேரியண்ட் சமீபத்தில் 10,000 யூனிட்கள் விற்பனையை கடந்ததாக டாடா மோட்டார்ஸ் அறிவித்தது.

    டாடா ஹேரியர் ஆல்-பிளாக் ஸ்பை படம்

    புதிய கருப்பு நிறத்தில் எஸ்.யு.வி. பார்க்க அழகாக காட்சியளிக்கிறது. இத்துடன் 17-இன்ச் அலாய் வீல்கள், முன்புறம் மற்றும் பின்புறங்களில் பிளாக்டு-அவுட் ஸ்கிட் பிளேட் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. காரின் உள்புறத்திலும் ஆல்-பிளாக் தீம் செய்யப்பட்டுள்ளது.

    காரின் உள்புறம் பிரவுன் நிற இருக்கைகளும் புதிய காரில் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இத்துடன் டேஷ்போர்டில் உள்ள ஃபாக்ஸ் மர பேனலும் சாம்பல் நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. புதிய ஆல்-பிளாக் தவிர ஹேரியர் கார் அட்லஸ் பிளாக், கலிஸ்டோ காப்பர், தெர்மிஸ்டோ கோல்டு, ஆர்கஸ் வைட், டெலிஸ்டோ கிரே மற்றும் ஏரியல் சில்வர் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

    டாடா ஹேரியர் கார் 2.0 லிட்டர் க்ரியோடெக் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் ஜீப் காம்பஸ் மாடலிலும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த என்ஜின் 140 பி.ஹெச்.பி. பவர், 350 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.

    புகைப்படம் நன்றி: AutocarIndia
    மாருதி சுசுகி நிறுவனம் இந்தியாவில் எர்டிகா பி.எஸ். 6 பெட்ரோல் என்ஜின் கொண்ட வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது.



    மாருதி சுசுகி நிறுவன வாகனங்கள் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பி.எஸ். 6 புகை விதிகள் ஏப்ரல் 1, 2020 முதல் அமலாகிறது. இதன்காரணமாக மாருதி சுசுகி தனது ஆல்டோ, வேகன்ஆர், ஸ்விஃப்ட், பலேனோ மற்றும் டிசையர் போன்ற கார்களை ஏற்கனவே பி.எஸ். 6 தரத்திற்கு அப்டேட் செய்துவிட்டது.

    அந்த வரிசையில் தற்சமயம் பி.எஸ். 6 எர்டிகா எம்.பி.வி. கார் இணைந்துள்ளது. மாருதி எர்டிகா பி.எஸ். 6 மாடல் துவக்க விலை ரூ. 7.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என துவங்கி டாப் எண்ட் மாடல் விலை ரூ. 10.05 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    மாருதி எர்டிகா உள்புறம்

    மாருதி சுசுகி எர்டிகா பி.எஸ். மாடலிலும் 1.5 லிட்டர் K15 சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் மாருதி சுசுகியின் SHVS மைல்டு-ஹைப்ரிட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 104 பி.ஹெச்.பி. பவர், 138 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 4-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டெர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் உடன் வருகிறது.

    பி.எஸ். 6 அப்டேட் தவிர எர்டிகா காரில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. முன்னதாக மாருதி சுசுகி நிறுவனம் எர்டிகா சி.என்.ஜி. வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இது ஃபேக்ட்ரி-ஃபிட் செய்யப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட முதல் எம்.பி.வி. கார் என்ற பெருமையை இது பெற்றுள்ளது. இதன் துவக்க விலை ரூ. 8.82 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    இதுதவிர மாருதி சுசுகி நிறுவனம் ஆறு பேர் பயணிக்கக்கூடிய எம்.பி.வி. கார் ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. புதிய பிரீமியம் எம்.பி.வி. கார் XL6 எனும் பெயரில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இதன் விற்பனை ஆக்ஸ்ட் 21 ஆம் தேதி துவங்கும் என தெரிகிறது.
    போர்ஷ் இந்தியா நிறுவனம் 2019 மசான் ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.



    போர்ஷ் இந்தியா நிறுவனம் 2019 மசான் ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2019 போர்ஷ் மசான் ஃபேஸ்லிஃப்ட் மசான் மற்றும் மசான் எஸ் என இரண்டு வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

    போர்ஷ் மசான் ஸ்டான்டர்டு மாடல் ரூ. 69.98 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உயர் ரக மசான் எஸ் மாடல் ரூ. 85.03 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய காருக்கான முன்பதிவுகள் ஜூன் மாதம் துவங்கிய நிலையில், இவற்றின் விநியோகம் வரும் வாரங்களில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2019 போர்ஷ் மசான் ஃபேஸ்லிஃப்ட் மாடல்: மியாமி புளு, மேம்பா கிரீன் மெட்டாலிக், டோலோமைட் சில்வர் மெட்டாலிக் மற்றும் கிரேயான் என நான்கு வித நிறங்களில் கிடைக்கிறது. ஃபேஸ்லிஃப்ட் எஸ்.யு.வி. 20-இன்ச் வீல், 21 இன்ச் வீல் என இருவித ஆபர்ஷன்களில் கிடைக்கிறது. இவற்றை கஸ்டமைஸ் செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

    2019 போர்ஷ் மசான் ஃபேஸ்லிஃப்ட்

    புதிய 2019 போர்ஷ் மசான் ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உள்புறம்: 11-இன்ச் தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் போர்ஷ் கம்யூனிகேஷன் மேனேஜ்மென்ட் மற்றும் கனெக்ட் பிளஸ் மாட்யூல் வழங்கப்பட்டுள்ளது.

    2019 போர்ஷ் மசான் ஸ்டான்டர்டு மாடலில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட இன்-லைன் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 245 பி.ஹெச்.பி. பவர், 370 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. மசான் எஸ் மாடலில் 3.0 லிட்டர் ட்வின் டர்போ வி6 என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. 

    இந்த எனி்ஜின் 348 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 7-ஸ்பீடு பி.டி.கே. ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் கொண்டிருக்கிறது.
    இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் விரைவில் இங்கு ஜெனிசிஸ் பிராண்டு கார்களை அறிமுகம் செய்ய இருக்கிறது.
    சென்னையில் ஆலை அமைத்து செயல்பட்டு வரும் கொரிய நிறுவனமான ஹூண்டாய், சர்வதேச அளவில் பிரபலமாக இருக்கும் தனது ஜெனிசிஸ் பிராண்டு கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த பிரிவில் எஸ்.யு.வி. மாடலை முதலில் அறிமுகம் செய்ய அந்நிறுவனம் தீவிரமாக இருக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனத்தின் சொகுசு கார்கள் அனைத்துமே ‘ஜெனிசிஸ்’ என்ற பெயரில் தயாரிக்கப்படுகின்றன. தற்போது சர்வதேச அளவில் ஜி70, ஜி80 மற்றும் ஜி90 ரக செடான் கார்கள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன. விரைவிலேயே இப்பிரிவு 2 மாடல் எஸ்.யு.வி. கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதில் முதல் மாடல் ஜி.வி 80 என்ற பெயரில் வெளியாகிறது. மற்றொன்று ஜி.வி 70 என்ற பெயரில் தயாராகிறது.

    இந்திய சந்தையில் எஸ்.யு.வி. மாடல்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதைத் தொடர்ந்து ஹூண்டாய் நிறுவனம் ஜெனிசிஸ் பிராண்டில் எஸ்.யு.வி. மாடலையே அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இத்தகைய மாடல்கள் பெரும்பாலும் சி.கே.டி. மூலமாக அதாவது முழுவதும் அசெம்பிள் செய்யப்பட்ட காராக இறக்குமதி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

    ஜெனிசிஸ் ஜி.வி 80

    தற்போதைக்கு ஜி.வி 80 மாடல் கார்கள் அனைத்துமே வெளிநாடுகளுக்கென தயாரிக்கப்படுவதால், இவை அனைத்துமே இடது பக்க ஸ்டீரிங் கொண்டவையாக உள்ளன. இந்தியாவுக்காக இறக்குமதி செய்யப்படும்போது, ஸ்டீரிங் பகுதியில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

    ஜி.வி70 கார் ஹூண்டாய் டக்சன் மாடலின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருப்பதால் இதில் வலதுபக்க ஸ்டீரிங் கொண்ட கார்கள் உள்ளன. எனவே ஜி.வி70 மாடலை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து எவ்வித மாற்றமும் செய்யாமல் விற்பனை செய்யலாம். விரைவிலேயே இந்திய சாலைகளில் ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் எஸ்.யு.வி.க்கள் வலம் வரும் என எதிர்பார்க்கலாம்.
    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் பி.எஸ். 6 பொலிரோ பவர் பிளஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ பவர் பிளஸ் மாடல் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு பொருந்தும் வகையில் தயாராகிவிட்டதாக அறிவித்துள்ளது. இந்நிலையில், புதிய கார் பி.எஸ். 6 தொழில்நுட்பத்தை அங்கீகரிக்கும் சர்வதேச ஆட்டோமோடிவ் தொழில்நுட்ப மையத்தின் சான்றை பெற்றிருக்கிறது.

    பி.எஸ். 6 பொலிரோ பவர் பிளஸ் மாடல் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பாபர்க்கப்படுகிறது. பொலிரோ எஸ்.யு.வி. தவிர மஹிந்திராவின் மற்ற மாடல்களுக்கும் பி.எஸ். 6 அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. பொலிரோ பவர் பிளஸ் மாடலில் பி.எஸ். 6 மட்டுமின்றி இதர பாதுகாப்பு உபகரணங்கள் பற்றியும் மஹிந்திரா அறிவித்துள்ளது.

    அந்த வகையில் பி.எஸ். 6 பொலிரோ பவர் பிளஸ் மாடலில் ஏர்பேக், ஹை-ஸ்பீடு அலெர்ட் சிஸ்டம், சீட்பெல்ட் ரிமைன்டர், சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களுக்கு மேனுவல் ஒவர்ரைடு வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இத்துடன் ஏ.பி.எஸ்., ஆண்டி-கிளேர் IRVM, டிஜிட்டல் இம்மொபைலைசர், முன்புறம் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.

    பொலிரோ பவர் பிளஸ்

    சமீபத்தில் ஏ.பி.எஸ். வசதி கொண்ட பொலிரோ பவர் பிளஸ் கார் இந்தியாவில் ரூ. 7.56 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. பொலிரோ பவர் பிளஸ் மாடலில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 70 பி.ஹெச்.பி. பவர் 195 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    பொலிரோ ஸ்டான்டர்டு மாடலில் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 63 பி.ஹெச்.பி. பவர், 195 என்.எம். டார்க் செயல்திறன் மற்றும் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டிருக்கிறது.
    ஜாகுவார் நிறுவனம் ஜெ-பேஸ் என்ற பெயரில் புதிய எஸ்.யு.வி. மாடலை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.



    ஜாகுவார் நிறுவனம் ஜெ-பேஸ் என்ற பெயரில் புதிய எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. அறிமுகமானதும் இது ஜாகுவார் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது. இது ஏற்கனவே விற்பனையாகும் எஃப்-பேஸ் மாடலை விட மேம்பட்டிருக்கும்.

    புதிய ஜாகுவார் ஜெ பேஸ் மாடல் MLA பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. ஜாகுவார் நிறுவனம் தனது எஃப்-பேஸ் எஸ்.யு.வி. மாடலை 2015 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து, 2016 இல் இதன் உற்பத்தி பணிகள் துவங்கப்பட்டது. அன்று முதல் ஜாகுவார் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக எஃப்-பேஸ் இருக்கிறது.

    ஜாகுவார் ஐ பேஸ்

    பின் 2018 இல் ஜாகுவார் நிறுவனம் ஐ பேஸ் எனும் மாடலை அறிமுகம் செய்தது. ஐ பேஸ் கார் முற்றிலும் எலெக்ட்ரிக் திறன் மூலம் இயங்கும் ஐந்து கதவுகள் கொண்ட எஸ்.யு.வி. ஆகும். இந்நிலையில், ஜாகுவார் தனது ஜெ பேஸ் காரை உருவாக்கி வருவதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    புதிய ஜாகுவார் ஜெ பேஸ் கார் பல்வேறு பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதில் ஒன்று எலெக்ட்ரிக் பவர்டிரெயின் என்றும் தெரிகிறது. 2020 ஆம் ஆண்டு முதல் ஜாகுவார் அறிமுகம் செய்யும் கார்களில் நிச்சயம் ஒரு எலெக்ட்ரிக் வேரியண்ட் இருக்கும் என ஜாகுவார் அறிவித்திருந்தது.

    அந்த வகையில் ஜாகுவார் ஜெ பேஸ் மாடலும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் கொண்டிருப்பது உறுதியாகியுள்ளது. வரும் ஆண்டுகளில் ஜாகுவார் நிறுவனம் மைல்டு-ஹைப்ரிட், ஃபுல்- ஹைப்ரிட், பிளக்-இன் ஹைப்ரிட், பியூர் எலெக்ட்ரிக் வாகனங்களை ஜாகுவார் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம்.
    பி.எம்.டபுள்யூ. நிறுவனத்தின் புத்தம் புதிய எக்ஸ்7 கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் விவரங்களை பார்ப்போம்.



    பி.எம்.டபுள்யூ. நிறுவனம் இந்தியாவில் புத்தம் புதிய எக்ஸ்7 காரை அறிமுகம் செய்தது. புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 கார் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகையில், இந்த கார் தற்சமயம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    இந்தியாவில் புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 விலை ரூ. 98.90 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் எக்ஸ்டிரைவ் 40ஐ மற்றும் எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. சிக்னேச்சர் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 கார் எக்ஸ்5 எஸ்.யு.வி. மாடலுக்கு அடுத்த வேரியண்ட்டாக அறிமுகமாகியுள்ளது. இத்துடன் 7 பேர் அமரக்கூடிய முதல் பி.எம்.டபுள்யூ. வாகனமாக புதிய எக்ஸ்7 இருக்கிறது. புதிய ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. சி.கே.டி. முறையில் இந்திய சந்தையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

    பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7

    புதிய பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 எக்ஸ்டிரைவ் 40ஐ மாடலில் 3.0 லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் ட்வின் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 335 பி.ஹெச்.பி. பவர், 450 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. பி.எம்.டபுள்யூ. எக்ஸ்டிரைவ் 30டி டி.பி.இ. சிக்னேச்சர் எடிஷனில் 3.0 லிட்டர் இன்-லைன் 6-சிலிண்டர் ட்வின் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 260 பி.ஹெச்.பி. பவர், 620 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இரு என்ஜின்களும் 8-ஸ்பீடு ஸ்டெப்டிரானிக் ஆட்டோமேட்டெட் கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது.
    ×