search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோமொபைல்

    சியாஸ்
    X
    சியாஸ்

    விரைவில் இந்தியா வரும் சியாஸ் பி.எஸ். 6

    மாருதி சுசுகி நிறுவனத்தின் சியாஸ் காரின் பி.எஸ். 6 வெர்ஷன் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.



    மாருதி சுசுகி நிறுவனம் தனது எர்டிகா பி.எஸ். 6 வெர்ஷனை சமீபத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. எர்டிகா பி.எஸ். 6 மாருதி சுசுகியின் புதிய மாடலாக இருக்கிறது. இதைத் தொடர்ந்து மாருதி நிறுவனத்தின் சியாஸ் பி.எஸ். 6 விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதன் டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 4-ஸ்பீடு ஆட்டோமேடிக் வழங்கப்படுகிறது. பி.எஸ். 6 தவிர புதிய காரில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என தெரிகிறது. தற்சமயம் விற்பனை செய்யப்படும் சியாஸ் மாடல் அப்டேட் செய்யப்பட்டு ஒரு வருடமாகிவிட்டது.

    புதிய சியாஸ் கார் ஒரு பெட்ரோல் மற்றும் இரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. எனினும், டீசல் என்ஜின் தயாரிப்பை மாருதி சுசுகி சமீபத்தில் நிறுத்தியது. பி.எஸ். 6 பெட்ரோல் மாடலில் மேம்பட்ட என்ஜின் வழங்கப்படுகிறது. 

    சியாஸ்

    மற்றப்படி காரின் வடிவமைப்பு மற்றும் தோற்றத்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படாது. இந்த கார் மாருதி நெக்சா விற்பனையகங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

    சியாஸ் டாப்-என்ட் மாடலில் ஸ்மார்ட் பிளே தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, குரூஸ் கண்ட்ரோல் சிஸ்டம், லெதர் இருக்கைகள், 16-இன்ச் அலாய் வீல்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    மாருதி சுசுகி சியாஸ் மாடல் விலை தற்சமயம் ரூ. 8.19 லட்சத்தில் துவங்கி டாப் எண்ட் மாடல் ரூ. 11.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பி.எஸ். 6 மாடல் விலை ரூ. 15,000 வரை அதிகமாக நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×